Friday, January 28, 2011

இந்து மதத்தில் கங்கை

இந்து மதத்தில் கங்கை

இந்து மதத்தில் கங்கை மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆறு இந்துக்களால் கடவுளாகப் போற்றப்படுகிறது. கங்கையில் குளித்தால் செய்த பாவங்கள் எல்லாம் விலகிவிடும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வரும் இந்துக்கள், இறந்துபோன தங்கள் உறவினர்களின் சாம்பலை கங்கையில் கரைக்கின்றனர். இதனால் இறந்தவர் சொர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கையாகும். ஹரித்வார், காசி போன்ற முக்கியமான இந்துத் தலங்கள் கங்கையாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன. இந்து நூலக்ளின்படி, கங்கை முருகனின் வளர்ப்புத் தாயாகவும் விளங்கி இருக்கிறது. மகாபாரதத்தில் வரும் பீஷ்மர் கங்கை ஆற்றின் மகன் ஆவார்.

No comments:

Post a Comment