Monday, February 28, 2011

அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்று கூறுவது உண்மையா?

அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்று கூறுவது உண்மையா? ஆழ்மனதில் (நனவிழி மனம்) உள்ள நிறைவேறாத ஆசைகள் மற்றும் தேங்கிக் கிடக்கும் எண்ணங்களே கனவுகளாக வெளிப்படுவதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜோதிட ரீதியாக அதிகாலை என்பது சுக்ரோதய காலகட்டம் என்று கூறப்படுகிறது. இந்த கால கட்டத்தில் அதீத ஆற்றல் கிடைக்கும். அதிகாலை 3.40 முதல் சூரிய உதயம் வரையிலான காலத்தில் சுக்கிரனின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோம். இதனை பிரம்ம முகூர்த்தம் என்றும் கூறுவர். பிரம்ம முகூர்த்தத்தில் எந்தக் காரியத்தையும் துவக்கலாம்; அதற்கு நாள், நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை என்று முன்னோர்கள் கூறுவர்.
காமசூத்திர நூல்களிலும் இந்தக் காலகட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்ம முகூர்த்த காலத்தில் உருவாகும் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக, அறிவு நிறைந்தவர்களாக இருப்பர் எனக் கூறப்பட்டுள்ளது.
கனவுகளைப் பொறுத்தவரை சுக்கிரன் ஆதிக்க காலமான பிரம்ம முகூர்த்தத்தில் காணக் கூடிய கனவுகள் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. நல்ல கனவு, கெட்ட கனவு என இரண்டுக்குமே இது பொருந்தும்.

No comments:

Post a Comment