Sunday, February 27, 2011

ஜோதிடத்தில் என்ன வகையான புண்ணியங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது?

ஜோதிடத்தில் என்ன வகையான புண்ணியங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது? எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.
அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.
இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
என்னிடம் ஜோதிடம் பார்க்க வரும் சிலரது ஜாதகங்களைப் பார்க்கும் போது லக்னாதிபதி கெட்டுப் போய் இருப்பார். எந்தவித யோக பலனும் இருக்காது. ஆனால் பூர்வ புண்ணியாதிபதி மட்டும் மிகச் சிறப்பாக இருப்பார். அதன் காரணமாக அவர்களின் வாழ்வில் பெரிய ஏற்றம் இல்லாவிடிலும் எந்தக் குறையும் இருக்காது.

No comments:

Post a Comment