Wednesday, April 20, 2011

.திருமணப்பந்தலில் வாழை மரம் கட்டுவது ஏன்?

திருமணப்பந்தலில் வாழை மரம் கட்டுவது ஏன்?

திருமணப்பந்தலில் மட்டுமல்லாது சுப காரியங்கள் நடக்கும் அனைத்து இடங்களிலும் வாழைமரம் கட்டுவது ஐதீகம்.  
இது பற்றி சில சுவையான தகவல்கள் :

தம்பதியர் தியாகம்
முக்கனிகளுல் ஒன்றான வாழை எல்லா காலங்களிலும் கிடைக்கும் கனி. மற்ற இரண்டு கனிகளின் மரங்களை விட வாழை மரம் அதிக பயன்தரக்கூடியது.வாழை, தன்னை அழித்துக் கொண்டு, பிறருக்கு கனி தரும். இதுபோல், தம்பதியர் ஒருவருக்கொருவர், தங்கள் உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக வாழை மரம் உள்ளது. குடும்ப விருத்திக்காகவும், வாழை மரத்தை கட்டுவதுண்டு.

வாழையடி வாழை

வாழையின் இலை, காய், பூ, பட்டை, தண்டு, நார் என அனைத்தும் பயன்தரக்கூடியது. சில பகுதிகள் மருந்தாகவும் பயன்தரக்கூடியது. ஏனைய மரங்களில் இருந்து ஒரு வகையில் வாழை வித்தியாசமானது. ஒரு வாழையை நட்டால் போதும் வாழையடி வாழையாக அதன் குலம் தலைக்கும்.

பெரியோர் வாழ்த்து

மனிதன் தலைமை பெறவேண்டும், தன்னைச்சார்ந்திருப்பவர்களுக்கு பலவகைகளிலும் பயன்தரவேண்டும் என்றும் அவன் குலம் வழி வழியாக தழைக்கவும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் சுபகாரியப்பந்தலில் வாழை மரம் கட்டுகின்றனர். மணமக்களை ஆல் போல தழைத்து அருகு போல் வேரோட வேண்டும் என்று வாழ்த்தும் நெஞ்சத்தின் புலப்பாடகத்தான் வாழைமரம் கட்டுவதை கருத வேண்டும்.

No comments:

Post a Comment