Wednesday, May 18, 2011

சல்லடையா? முறமா?

சல்லடையா? முறமா?

சுவாமி சுகபோதானந்தா

பல ஆண்டு காலம் பயின்றுவிட்டுத் தனது குருகுலத்திலிருந்து

வெளியுலகுக்குச் செல்லும் மாணவன் ஒருவனைப் பார்த்து

அந்த குரு சொன்னார்:

“நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!”

இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

சல்லடை நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு,

தேவையில்லாத கசடுகளையும் கல்லையும் மண்ணையும்,

தான் வைத்துக் கொள்ளும்.

முறமோ, பதர், கல், மண் ஆகியவற்றை கீழே தள்ளிவிட்டு

நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும்!

நீங்கள் யார்? சல்லடையா? முறமா?

ஹரி ஓம்!

No comments:

Post a Comment