Friday, September 16, 2011

* மாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் அணியாமல் தங்கச் செயினில் அணியலாமா?முக்கியமான விழாக்களை பவுர்ணமி நாளில் கொண்டாடுவதன் நோக்கம் என்ன?

முக்கியமான விழாக்களை பவுர்ணமி நாளில் கொண்டாடுவதன் நோக்கம் என்ன?

பவுர்ணமியோடு சேரும் நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராக அமைந்திருப்பதை கவனிக்க வேண்டும். சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்திலும், இதுபோல 12 மாதங்களிலுமே பவுர்ணமி நாள் கூடி வருகிறது. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம் போன்றவை விழாக்களுக்கு உகந்தவையாக ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு பவுர்ணமிக்கும் சிறப்பான வரலாறு உண்டு. அந்தந்த கோயிலின் தல வரலாறுகளுக்கேற்ப- இப்படி உற்சவங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

* பூஜை அறையில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

எத்தனை வேண்டுமானாலும் ஏற்றலாம். பொதுவாக, இரண்டு குத்து விளக்குகளும் ஒரு குல தெய்வ காமாட்சி விளக்கும் ஏற்றுவதும் பழக்கம்.

* தியானம் செய்ய வேண்டும் என்ற ஆவல் என்னுள் இருக்கிறது. யாரை குருவாக ஏற்றுக் கொள்வது அல்லது நானே தியான முறையை பழகிக் கொள்ளலாமா?
தி.மகாராஜன், சின்னமனூர்
கண், காது, மூக்கு, வாய், மெய் எனும் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி அறிவை ஒரு நிலைப்படுத்தி அந்த அமைதியில் இறைவனைக் காண்பது தியானமாகும். இரண்டு வரிகளில் எழுதிவிட்டேன். ஆனால், இருநூறு ஆண்டுகள் ஆனாலும், குருநாதர் இல்லாத தியான நிலை கை கூடாது. தங்களுக்கு தெரிந்த பெரியவர்கள் மூலம் நல்ல குருநாதரை ஏற்றுக் கொள்ளுங்கள்.

* மாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் அணியாமல் தங்கச் செயினில் அணியலாமா?

தங்கசெயினில் தாலி அணியலாம். சாஸ்திரப்படி, "மாங்கல்ய தந்துனா' என்று மந்திரம் சொல்லி தாலி கட்டுகிறார்கள். "தந்து' என்றால் "மஞ்சள் கயிறு. தங்கச் செயினுடன் மஞ்சள் கயிறும் சேர்த்து அணிந்து கொண்டால் மங்களகரமாக இருக்கும்.

* மகாபாரத புத்தகம் வீட்டில் வைக்கக் கூடாது என்கிறார்களே! உண்மையா?
கே.ஆர்.முத்துசுவாமி, கோவை
புத்தகம் என்பதே படிப்பதற்காகத் தானே? அச்சிட்டு விற்பனைக்கு வந்திருக்கிறது என்றால் நாம் வாங்கி படித்துப் பயன் பெறத்தானே? மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்பார்கள். இப்பொக்கிஷத்தை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று எதற்காகக் கூறுகிறார்கள். பகுத்தறிவு என்று நாத்திகர்கள் சொல்கிறார்களே! உண்மையான பகுத்தறிவு என்பது இது போன்ற புரளிகளை நம்பாமலிருப்பது தான்.

* பூஜை நேரத்தில் மட்டும் விளக்கேற்றினால் போதுமா? அல்லது நாள் முழுவதும் ஏற்ற வேண்டுமா?

குத்துவிளக்குகளை பூஜை நேரத்தில் ஏற்றினால் போதும். காமாட்சி விளக்கு எனப்படும் குலதெய்வ விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருந்தால் நல்லது

No comments:

Post a Comment