Monday, November 14, 2011

ராமகிருஷ்ணர் கண்ட காட்சி

கங்கைக்கரையில் அமைந்த புனித தலம் காசி. தீபாவளி நாளில் இங்கு நீராடுவது சிறப்பு.
கங்கைக்கரையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. கட்டம் என்றால் " "படித்துறை' . இதில் மணிகர்ணிகா கட்டம் முக்கிய படித்துறை. மணிகர்ணிகா என்றால் "காதணி' என்று பொருள். சிவபார்வதி, இங்கு நீராடியபோது, சிவபெருமானின் காதணி, இவ்விடத்தில் விழுந்ததால், மணிகர்ணிகா கட்டம் எனப்படுகிறது. இப்படித்துறையில் ராமகிருஷ்ணபரமஹம்சர் ஒரு தெய்வீகக் காட்சியைக் கண்டார். "" மணிகர்ணிகா கரையில் பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. வெண்ணிற ஜடாமுடியுடன் அங்கு வந்த சிவபெருமான் தாரகமந்திரத்தை இறந்தவர்களின் காதில் ஓதினார். மறுபுறம் கருணையுடன் ஜகன்மாதாவும் உயிர்களைப் பிணித்திருக்கும் தளைகளை நீக்கி அருளினாள். பாக்கியம் பெற்ற அவ்வுயிர்கள் மோட்சகதியை அடைந்தன,'' என்று தன் அனுபவத்தைக் கூறினார். மணிகர்ணிகாவில் நீராடி, கங்கை தீர்த்தத்தை விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய எடுத்துச் செல்வர்.

No comments:

Post a Comment