Saturday, February 18, 2012

எது புண்ணியம்?

எல்லோருக்கும் பேராசை வந்துவிட்டது.செல்போன்,இணையம்,வேகமான வாழ்க்கை,உலக மயமாக்கல் இவற்றின் விளைவுகள்தான் மணவிலக்குகள்,பணத்துக்காக விபச்சாரம் கூட செய்வது.ஏமாற்றிப்பிழைப்பது,
முடிந்தவரையிலும் யாருக்கும் தீங்குதராமல் வாழப்பழகுங்கள்;
முடிந்தவரையிலும் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு வாழ்க்கைப்பாதையை ஓட்டப்பாருங்கள்;
முடிந்தவரையிலும் அன்னதானம், மந்திரங்களை ஜபித்தல்,ஆடை தானம் செய்தல்,திரு வண்ணாமலையில் கிரிவலம் செல்லுதல்,பக்கத்துவீட்டினருக்கு தொந்தரவு தராமலிருத்தல், பிறருக்கு பிரதிபலன் இல்லாமல் உதவுதல்,பிறரது மனம் நோகாமல் பேசுதல் என்று வாழ்ந்தாலே போதுமானது.
மாமியார்கள் தனது மகனையும் மருமகளையும் பிரித்துவைத்து வாழ்வது மஹாபாவம்;
பல மாமியார்கள் தனது மகளைத் திருமணம் செய்வித்து, வேண்டுமென்றே தனது மருமகனிடமிருந்து பிரித்து, (பெற்ற மகளையே) விபச்சாரத்திற்கு தள்ளும் கொடூரம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
ஜோதிடர்களாக இருப்பவர்கள் மற்றவர்களின் ஜோதிட அந்தரங்கங்களை ஒருபோதும் வெளிப்படுத்தக்கூடாது.ஜோதிட ஆய்விற்கு பெயர்,ஊர் சொல்லாமல் மட்டும் பயன் படுத்திக்கொள்ளலாம்.
கோவில்,ஆன்மீகம்,அறக்கட்டளை,கோவில்களில் அரசுப்பணியில் இருப்போர் சர்வ ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் 16 தலைமுறைகள் பாதிக்கப்படும்.எச்சரிக்கை!

No comments:

Post a Comment