Wednesday, September 26, 2012

விபூதி அணியும் முறை

பத்தியொடு சிவசிவா என்று திரு நீற்றைப் பரிந்து கையால் எடுத்துப் பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியோடு பருத்த புயமீதில் ஒழுக நித்தமூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற நினைவாய்த் தரிப்பவர்க்கு நீடு வினை அணுகாது தேக பரி சுத்தமாம் நீங்காமல் நிமலன் அங்கே சித்தியோடு நித்தம் விளையாடுவன் முகத்திலே தாண்டவம் செய்யும் திரு சஞ்சலம் வராது பரகதி உதவும் இவரையே சத்தியம் சிவம் என்னலாம் மத்தினிய மேருஎன வைத்து அமுதினைக் கடையு(ம்) மால்மருகனான முருகா மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே விபூதியை எப்படித் தரிக்க வேண்டும்? நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவ சிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் தரித்தல் வேண்டும். இப்படியன்றி, நடுவிரல் ஆழி விரல்களினால் இடப்பக்கந் தொடுத்திழுத்துப் பெருவிரலினால் வலப்பக்கந் தொடுத்திழுத்துத் தரித்தலுமாகும். வாயை அங்காந்து கொண்டும் தலை நடுங்கிக் கொண்டும் கவிழ்ந்து கொண்டும் தரிக்கலாகாது. ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனும் தரிக்கலாகாது எவ்வெவர் முன் விபூதி தரிக்கலாகாது? சண்டாளர் முன்னும், பாவிகள் முன்னும், அசுத்த நிலத்தும், வழி நடக்கும் போதும், கிடக்கும் போதும் தரிக்கலாகாது. ஆசாரியராயினும், சிவனடியாராயினும் விபூதி தந்தால் எப்படி வாங்கித் தரித்தல் வேண்டும்? மூன்று தரமாயினும் ஐந்து தரமாயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கித் தரித்துக்கொண்டு, முன்போல் மீண்டும் நமஸ்கரித்தல் வேண்டும். எப்படிப்பட்ட விபூதி தரிக்கலாகாது? ஒரு கையால் வாங்கிய விபூதியும் விலைக்குக் கொண்ட விபூதியும் சிவதீட்க்ஷையில்லாதார் தந்த விபூதியும் தரிக்கலாகாது. சுவாமி முன்னும், சிவாக்கினி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்? முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.

No comments:

Post a Comment