Monday, October 1, 2012

ஸ்வஸ்திக்" சின்னம்

மருத்துவர்கள் பயன்படுத்தகூடிய சின்னம் ஸ்வஸ்திக் பாரத நாட்டில் மிகப் புராதன காலத்தொட்டே, எல்லா சுய மற்றும் மங்கல காரியங்களில் , ஸ்வஸ்திக் சின்னத்தை பயன்படுதிள்ளோம். மருத்துவ உலகத்திற்கு இந்த வடிவம் முக்கியமான பொருளைத் தருகிறது. ஆர்வேதத்தில் நான்கு முக்கிய அம்சங்கள் விளக்கப் படுகின்றன. 1. மருத்துவர் 2. நோயாளி 3. மருந்து 4. உதவியாளர் இந்த நான்கும் ஒருகிணைந்து மேன்மையோடு செயல் பட்டால் மருத்துவத்தின் வெற்றிக்கு உத்தரவாதம் கூறலாம் என்கிறது ஆயுர்வேதம் . ஆக ஸ்வஸ்திக் வடிவத்தில் உள்ள நான்கு கரங்களும் மேலே சொன்ன நான்கு அம்சங்களால் பிணைக்கப் பட்டுள்ளது இந்த சக்கரம் வலது புறமாக சுழல வேண்டும். ஸ்வஸ்திக் என்றால் நன்மை.'க ' என்றால் விளைவிப்பது என்று பொருள்படும். நவீன மருத்துவ விஞ்ஞானியான டாக்டர் ஹாட்மன்ட் அனர்சட் அவர்கள் 'ஆவேயன்டினா'என்னும் மின் அணுக்கருவி கொண்டு 'ஸ்வஸ்திக் ' வடிவத்தை ஆராய்ந்தார். அதன்படி ஒரு லட்சம் போவிஸ் அலகுகள் கொண்ட மின் சக்தி இந்த சின்னத்திலிருந்து வெளிப்படுவதாக பதிவு செய்துள்ளார் . அவர் செய்த ஆராய்ச்சில் மற்ற பல வடிவங்கள் அடங்கும் .அதன் விவரம் கீழே தரப்படுகிறது. சிரிக்கும் புத்தர் - 500 போவிஸ் அலகுகள் ரஷ்யாவின் சாவி - 1000 போவிஸ் அலகுகள் சிலுவை - 10,000 போவிஸ் அலகுகள் ஓம் - 70,000 போவிஸ் அலகுகள் சர்ச் மற்றும் மசூதி வளாகங்கள் -11 ,000 போவிஸ் அலகுகள் ஸ்வஸ்திக் (சிகப்பு பொட்டுகளுடன் பூஜை செய்யப்பட்டது )-1,00,000 போவிஸ் அலகுகள் . மேற்படி மின் சக்தி, நேர் மின் சக்தி அதாவது நல்ல விளைவுகள் ஏற்படுத்த கூடியவை எனவே இதை நமது மக்கள் எல்லா சுப காரியங்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் . பாரத சமுதாயத்தில் வீட்டு வாசல்கள் பொன் பொருட்கள் வைகுமிடங்கள் , பணப்பெட்டி இரும்பு கல்லாப்பெட்டி கணக்கு மற்றும் குறிப்பேடுகள் வழிபாட்டிடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் "ஸ்வஸ்திக்" சின்னத்தை பயன்படுத்தலாம்

No comments:

Post a Comment