Monday, October 1, 2012

புராதான பழைய கோயில்களை பராமரிக்கும் முறை

புராதன சின்னங்களான கோவில்களில்செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை : பண்டைய காலத்து முறையை மதியுங்கள் அக்காலத்து கலைஞர்கள், சிற்பிகள் மிகுந்த பக்தியுடனும், கலை நுணுக்கத்துடனும் கோவில்கள் எழுப்பியுள்ளனர். நம்மைவிட குறைந்த பொருளுதவியும், வசதிகளும், தொழில்நுட்பமே இருந்தாலும், நம்மைவிட அதிக கவனம் செலுத்தி அவற்றை எழுப்பியுள்ளனர் அவர்களது உழைப்பை நாம் உதாசீனப்படுத்தக்கூடாது. எனவே முன்னர் காலத்து சின்னங்களை சீர்செய்ய பிரிக்குமுன், அவர்களதுகஷ்டங்களை உணருங்கள். பண்டை காலத்தில் என்ன பொருட்கள் உபயோகித்தனரோ, அவற்றையேஉபயோகியுங்கள். (வெல்லம், கடுக்காய், வச்சிரம், மூலிகைகள் கலவைகள்கொண்டு கட்டப்படும் கோவில்கள், சுமார் 1000 ஆண்டுகள் நிலைத்துள்ளன.ஆனால், சிமெண்ட் கட்டிடங்கள் அதிகபட்சமாக 100-200 ஆண்டுகளேதாக்குப் பிடிக்கும். சுவற்றில், மதில்களில், கோபுரங்களில், எந்த கட்டுமானங்கள் மீதும், சிறிய செடிகள், மரங்கள் கொடிகளை வளரவிடாதீர்கள். இவை கோவில்களை ஆட்டம் காண வைக்கும் கொடிய வில்லன்கள்! மாதம் ஒருமுறை களைகளை கண்டறிந்து, களையுங்கள்! பழைய கற்களை அகற்றி செடிகளை நீக்குகையில், அதிக கவனம் தேவை. மழைக்குப் பின் தான், களைகள் அதிகம் வளரும். மழை காலங்களில் பழையசுவர்கள், கோவில்களில் ஏறுகையில், கவனம் தேவை. கவனக் குறைவால்,அவை சரிந்து விடலாம்! வேரோடு களைய முடியவில்லை என்றால், மரக்கொல்லிகளை உபயோகியுங்கள். இடுக்குகள், வேர் அறுத்த குழிகளை நல்ல சுண்ணாம்பு சுதை கரைசலினால் பூசி, மூடிவிடுங்கள்.

No comments:

Post a Comment