Monday, January 28, 2013

கடவுளை பற்றிய கருத்து

கடவுளை பற்றிய கருத்து ……
மதம் என்பது வளர்ச்சி பற்றியது என்பதை உணர வேண்டும் ; அது வெறும் பொருளற்ற பிதற்றல்கள் அல்ல . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு மனிதன் கடவுளை கண்டான். புதரில் கடவுளை கண்டார் மோசஸ். மோசஸ் கடவுளை கண்ட போது என்ன செய்தாரோ, அது உங்களை காப்பாற்றுமா ? ஒருவன் கடவுளை கண்டது, உங்களை உற்சாகம் படுத்தி அவ்வாறு செய்யும் படி துண்டலாம் , அதருக்கும் மேலாக அது உங்களுக்கு உதவி செய்யாது. முன்னோர்களின் உதாரனகளுடைய முழுப்பயனும் அவ்வளவுதான் . அதருக்கு மேல் ஒன்றுமில்லை. செல்லும் வழியிலுள்ள கைகட்டிய கம்பங்கள் அவை . ஒருவன் உண்டால் இன்னொருவனின் பசி தீராது. ஒருவன் கடவுளை காண்பது மற்றொரு மனிதனைக் காபற்றாது. உங்களுக்கு நீங்களே கடவுளை காண வேண்டும். இப்போது சண்டை எல்லாம் கடவுளுக்கு ஒரு உடலில் முன்று தலைகளா அல்லது ஆறு தலைகளா என்பது பற்றியே ! ஆனால் நீங்கள் கடவுளை கண்டதுண்டா என்றால் இல்லை ; காண முடியும் என்று நம்புவதும் இல்லை. நாம் எவ்வளவு மதிகெட்ட முட்டாள்கள் ! நிச்சியமாக பைதியகாரர்களே.
கடவுள் என்று ஒருவர் உண்டானால் , அவர் உங்கள் கடவுளாகவும் என் கடவுளாகவும் இருக்க வேண்டும் என்பது இந்தியாவில் தொண்டுதொட்டு வரும் கருத்து. சூரியன் யாருக்கு சொந்தம் ? அம்புலி மாமா எல்லாருக்கும் மாமா என்கிரிகள் . கடவுள் ஒருவர் உண்டானால் , நீங்கள் அவரை பார்க்க முடிய வேண்டும் . இல்லாவிட்டால் அவர் எப்படியாவது போகட்டும் !
கடவுள் ஒருவர் இருக்கிறார் , அவர் எங்கும் நிறைந்துள்ளார் என்று நீங்கள் எல்லாரும் சொல்கிறீர்களே , எங்கும் நிறைத்திருக்கிறார் பற்றி உங்கள் கருத்து என்ன ?சற்று கண்களை மூடிக்கொண்டு சிந்தியுங்கள். அது என்ன என்பதை எனக்கு கூறுங்கள். உங்கள் சிந்தனையில் விரிவதுதான் என்ன ? ஏற்கனவே நீங்கள் கண்ட பரந்த கடல் அல்லது விரிந்த நீல வானம் , அல்லது அகன்ற புல்வெளி அல்லது இவைபோன்ற வேறு எதோ ஒன்று , அப்படிதானே ? இதுதான் எங்கும் நிறைந்தவர் என்பதற்கு நீங்கள் சொல்லும் பொருளானால் அது பயனற்றது, நீங்கள் அதன் பொருளை உணரவே இல்லை. இறைவனின் மற்ற குணங்களும் அப்படிதான். அவர் எல்லாம் வல்லவர் , எல்லாம் அறிந்தவர் என்று கூறும் பொது நாம் என்ன புரிந்துகொள்கிறோம் ? எதுவும் இல்லை . மதம் என்பது அநுபூதி. இறைவனை பற்றிய உங்கள் கருத்தை நீங்கள் அனுபூதியில் அறியும்போதுதான் நீங்கள் இறைவனை வழிபடுகிரிகள் என்று கூறுவேன். அதை அடையாதவரை , நீங்கள் அந்தச் சொற்களிலுள்ள எழுத்துக்களை எழுத்துகுட்டி படிக்க தெரிந்தவர்கள் அவ்வளதான்.
இந்த அனுபூதி நிலையை அடைய , நாம் கண்ணுக்கு புலனாகின்றவை வாயிலாக செல்ல வேண்டும். குழந்தைகள் எண்ணிக்கை கற்கும் போது முதலில் புறபொருட்களின் மூலம் தான் ஆரம்பிக்கிறது , பிறகு தான் மனத்தாலேயே செய்ய கற்றுக்கொள்கிறது. ஒரு குழந்தையிடம் 5 * 2 = 10 என்று கூறினால் அதருக்கு ஏதும் புரியாது. ஆனால் பத்து பொருட்களை கொடுத்து , அது எப்படி என்பதை காட்டி விளக்கினால் புரிந்து கொள்ளும். இது நிதானமான நீண்ட பாதை இங்கு நாம் எல்லாரும் குழந்தைகள். நாம் வயது முதிந்தவர்கள் இருக்கலாம் , உலகிலுள்ள எல்லாம் நூல்களை படித்திருக்கலாம்; ஆனால் ஆன்மிக துறையில் நாம் எல்லாரும் குழந்தைகளே. கொள்கைகள் , தத்துவங்கள் , அற கோட்பாடுகள் எல்லாவற்றையும் எவ்வளவுதான் உங்கள் மூளைக்குள் திணித்தாலும் அவற்றால் பெரிதாக பலன் ஒன்றும் இல்லை. நீங்கள் யார் , அனுபூதியில் என்ன உணர்திருகிரிகள் ? இவைதான் பயனுள்ளவை , சாரமனவை. ஆனால் நாம் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அறிதிருக்கிறோம் , அனுபூதியில் எதையும் உணரவில்லை .
சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் . மதம் என்பது மிருகத்தை மனிதனாக்கும், மனிதனை கடவுளாக்கும்.
—சுவாமி விவேகானந்தா

No comments:

Post a Comment