Thursday, February 7, 2013

திருப்பாணாழ்வார்

திருச்சி உறையூரில் வசித்த பாணர் ஒருவர், ஸ்ரீரங்கத்தில் துயிலும் ரங்கநாதனையே எப்போதும் சிந்திபார். யாழ் மீட்டிபண் இசைத்துப் பாடுவார். ஸ்ரீரங்கத்தில் நுழையும் போது, "ஐயோ! என் கால் இந்த புண்ணிய பூமியில் படுமே. அந்தளவுக்கு என் கால்களுக்கு தகுதியில்லையே!'' என்று உருகுவார்.
ஒருநாள், ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து லோகசாரங்க முனிவர் என்பவர் தீர்த்தக் கைங்கர்யத்திற்காக (அபிஷேகநீர் எடுக்க) காவிரிக்குப் புறப்பட்டார். செல்லும் வழியில் பாணர் நின்று கொண்டிருந்தார். அவரைக் கண்ட லோகசாரங்கர், "என்னைத் தீண்டி விடாதே! தூரப்போ!' என்று திட்டி விரட்டினார். பயந்து போன பாணரும் செய்வதறியாமல் விலகி நின்றார்.
காவிரிநீரை முகர்ந்த பிறகு லோகசாரங்கர் கோயிலுக்குள் வந்தார். ரங்கநாதர் சந்நிதிக் கதவுகள் மூடப்பட்டிருந்தன. திறக்க முயன்றும் முடியவில்லை. திகைப்புடன் வீட்டிற்கு சென்றார். தூக்கத்தில் ஆழ்ந்தார். அடியார்களைப் பழித்தால் அரங்கனால் பொறுக்க முடியுமா? அன்றிரவே ரங்கநாதர், லோகசாரங்கரின் கனவில் தோன்றி, ""நீர் காவிரிக்கரையில் கண்ட நம் பாணரை, உமது தோள்களில் சுமந்து கொண்டு நமது சந்நிதிக்கு எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வாரும்!'' என்று கட்டளையிட்டார்.
லோகசாரங்கர் திடுக்கிட்டு எழுந்து பாணரைத் தேடி ஓடினார்.
ரங்கநாதனின் உத்தரவைப் பணிவுடன் தெரிவித்தார்.
பாணருக்கு இதுகேட்டு எல்லையில்லா ஆனந்தம். பாணரைத் தோள்களில் தாங்கியபடி கோயிலுக்கு வந்தார் லோகசாரங்கர். அங்கு அவர் அரங்கன் என்னும் "அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே,'' என்று உள்ளம் உருகிப் பாடினார். பெருமானின் அழகில் லயித்து, "அமலனாதிப்பிரான்' என்று பத்து பாசுரங்களைப் பாடினார்.
அன்றுமுதல் அவருக்கு "திருப்பாணாழ்வார்' என பெயர் உண்டானது. லோகசாரங்க முனிவர் சுமந்து வந்ததால் "முனி வாகனர்' என்றும் அழைக்கப்பட்டார். திருப்பாணாழ்வார் மந்திர உபதேசம் பெற்று அரங்கனையே தன் உயிராக எண்ணி வாழ்ந்து மோட்சம் அடைந்தார். கருடன், கந்தர்வர், கின்னரர், சனகாதி முனிவர்கள் புடைசூழ வைகுண்டம் அடைந்து பெருமாளுடன்

No comments:

Post a Comment