Monday, April 15, 2013

சித்ரகுப்தனை ஏன் வழிபட வேண்டும்


சித்தரகுப்த வழிபாடு

"சித்திரைப் பாவையே உன்றன் வருகையால்
தரணி செழிக்க வேண்டும்!
செகமே வளம் பெற நன்மழை பெய்தென்றும்
தீமைகள் நீங்க வேண்டும்''

சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் பவுர்ணமியானது எமதர்மனின் கணக்காளரான சித்ரகுப்தருக்கு மிகவும் புனிதமானது"சித்ரகுப்த'' என்ற வடமொழிச் சொல்லுக்கு `மறைந்துள்ள படம்' என்பது பொருள்.சித்திரகுப்தன் நமது பாப புண்ணியங்களைக் கணக்கிடும் ஒரு தேவன்.

சித்ரகுப்தனைத் திருப்தி செய்வதற்காக விரதம் இருந்து சித்ரகுப்தரை வழிபட வேண்டும்.அன்றைய தினம் சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு நடத்தப் படும். வாசனைப் பொருட்கள் கலந்த சாதம் கலக்கப்பட்டு நிவேத னம் செய்யப்பட்டுப் பின் பிரசாதமாக விநியோகிக்கப்படும். இறுதியில் அக்கினி வழிபாடு செய்யப்படும்.

வழிபடும் முறை:

கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி சித்ரகுப்தனைத் தியானிக்க வேண்டும்.

"சித்திர குப்தம் மஹா ப்ராக்ஞம்
லேகனிபத்ர தாரிணம்
சித்ர ரத்னாம்பரதரம்
மத்யஸ்தம் ஸர்வதேஹினாம்''

பிறகு தீப தூபம் காட்டி, ஏழை எளியவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.விரத நாளில் பசுவின் பால், பசுவின் மோர் சாப்பிடக் கூடாது. எருமைப் பால் உபயோகிக்கலாம். உப்பு சேர்க்கக் கூடாது. பாசிப் பருப்புப் பாயாசம் செய்து அதில் எருமைப் பாலை விட்டு நிவேதனம் செய்யலாம்.

பலன்கள்......

1. சித்திர குப்தரைப் பிரார்த்திப்பதால் அவர் நம் பாவங்களைப் பொருத்தருள்வார்.

2. ஒவ்வொரு வருடத்தின் முதலாவது பவுர்ணமியன்று செய்யப்படும் இந்த வழிபாட்டின் மானசீகமான பலன், இந்த பூவுலகில் நம் ஒவ்வொருவருடைய செயல்களையும் இடை விடாமல் கண்காணிக்கும் ஒரு மேலான சக்தி இருக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுவதாகும்.

3. ஒவ்வாருவர் தோளிலும் சித்திரகுப்தர்கள் அமர்ந்திருக் கிறார்கள் என்ற எண்ணம் உருவானதற்கு காரணம் நாம் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்று தூண்டுவதற்காகவேயாகும்.

4. தானம் செய்வதால் இறையருள் கிட்டும்.

5. குற்றால மலையில் அருவியாய் விழுந்து அழகு நடைபோடும் நதியின் பெயர் சித்திர நதியாகும். சித்ரா பவுர்ணமி அன்று இங்கு நீராடினால் புண்ணியம் சேரும்.

சித்திரகுப்தன் என்பவர் எமதர்ம ராஜனின் கணக்குப்பிள்ளையாவார். இவர் பிரம்மதேவனின் உடலிலிருந்து சித்ரா பவுர்ணமி தினத்தில் தோன்றியதால் இவருக்கு சித்ரகுப்தன் என்று பெயர் ஏற்பட்டது. இவர் எமதர்மனின் சபையில் இருந்து சகல ஜீவராசிகளின் பாவ, புண்ணியக் கணக்குகளை எழுதுவதை கடமையாக கொண்டுள்ளார்.

பிரம்மதேவன் இவருக்கு இப்பணியை வரையறுத்தார். ஜீவனின் மரண காலத்தில் சித்ரகுப்தன் கொடுக்கும் பாவ புண்ணியக் கணக்கின் முடிவை வைத்தே எமதர்மன் ஜீவனுக்கு தண்டனை அளிப்பதும், பிரம்மா அதன் தலையில் எழுதுவதும் அமையும். ஆகவே சித்ரகுப்தரை தொழவேண்டியது மிக, மிக அவசியமாகிறது.

பூஜை முறை:- சித்ரகுப்தனை வேண்டி பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பவுர்ணமி தினத்தில் இல்லத்தில் மாக்கோலம் போடுவார்கள். அதன் ஒரு பகுதியில் சித்திரகுப்தனை போலவே கோலம் போடுவார்கள். அருகில் ஏடும் எழுத்தாணியும் வைப்பார்கள். விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்வார்கள். வெண் பொங்கல் இடுவதும் உண்டு.

இட்ட பொங்கலுடன் இனிப்பு கொழுக்கட்டை, மாங்காய் தட்டைப்பயறு குழம்பு இவைகளுடன், நீர், மோர், பழங்கள், கண் திறந்த இளநீர், பானம் இவைகளை வைத்து படைப்பார்கள். பலகாரங்களும் செய்து வைக்கலாம்.இவைகளை வைத்து படைத்து மதியத்திற்கு விரதம் இருப்பவர்கள் இவ்வுணவையே உட்கொள்வார்கள்.

சித்திர புத்திர நாயனார் கதை புராணம் ஆகியவற்றை படிப்பார்கள். காலையில் கோவிலுக்கு சென்று பிள்ளையார், நந்தி, சிவபெருமான் மூன்று தெய்வங்களுக்கும் அர்ச்சனை செய்து கொண்டு வருவார்கள். விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்தவுடன் பசுவுக்கு வெல்லம் கலந்த பச்சரிசி வைப்பார்கள். ஒரு வேளை தான் உணவு உட்கொள்ள வேண்டும்.

பலன்:-சித்திரபுத்திர நாயனார் நம் கணக்குகளை வைத்திருக்கும் கணக்குப்பிள்ளை என்பதை முன்பே அறிந்தோம். இவ்விரதத்தால் அவர் மனம் மகிழ்ந்து நம் பாவக்கணக்குகளை குறைப்பார். இதனால் நமக்கு நற்கதி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இது இதிகாச புராணங்களால் வரையறுக்கப்பெற்ற முறையாகும்.

சித்திரபுத்திர நாயனார் விரதத்தால் நமக்கு பாவம் செய்யும் மனப்பான்மையே மறைந்துவிடும்.மேலும் இவ்விரதம் இருப்பவர்களுக்கு எமபயம் கிடையாது எனக் கூறுகிறார்கள். அன்று பசும்பால், பசுமோர் சாப்பிடக்கூடாது. உப்பில்லாமல் சாப்பிடவும். எருமைப்பாலில் பயத்தம் பருப்பு பாயசம் அல்லது சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.

சித்திரகுப்தனிடம் மலையளவு பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்ளும்படி பிரார்த்திப்பார்கள். சிலர் உன்னுடன் பிறக்கவில்லை. உன் மனைவியுடன் பிறந்தேன் என்று பிரார்த்திப்பார்கள். சித்ரகுப்த பூஜை புத்தகத்தை பார்த்து பூஜை செய்யலாம். இதை ஆடவர்களும் செய்வதுண்டு.


மறுமையில் நன்மை வேண்டுபவர்கள், மீண்டும் பிறவாமை வேண்டுபவர்கள், பிறப்பில் துன்பமிலா நற்பிறவி வேண்டும் என்பவர்கள் இந்த விரதத்தை அவசியம் கைக்கொள்ள வேண்டும். சித்திரகுப்த பூஜை செய்ய விரும்புபவர்கள் சித்ராபௌர்ணமி அன்று பூஜை செய்யலாம். அன்று உபவாசமிருந்து பூஜை செய்ய வேண்டும்.
சித்திரகுப்த விரதம் இருப்பவர்கள் சித்ரா பௌர்ணமியன்று விரதம் இருந்து, அடுத்த சித்ரா பௌர்ணமி அன்று விரதம் பூர்த்தி செய்வார்கள். அன்று பலரையும் அழைத்து சமார்தனை எனப்படும் அன்னதானம் அளிப்பார்கள். சித்திரகுப்த பூஜை செய்பவர்கள் ஆண்டில் ஒரு நாள் செய்வர். விரதமிருப்பவர் ஆயினும் சரி, பூஜை செய்பவராயினும் சரி அன்று அதிகாலை நீராடி விட்டு உபவாசம் இருக்க வேண்டும்.
(சிலர் சித்திர புத்திரர் கதை நூலை வாங்கி வந்து பூஜையில் அமர்ந்து படிப்பார்கள்). சித்திரகுப்தருக்கு பிரியமானவையாக சித்ரான்னம், தயிர் சாதம், தேங்காய் சாதம், உளுந்து வடை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். கோவில்களில் சித்திரகுப்தருக்கென்று தனியாக சிறு சந்நிதி எழுப்பியிருப்பர். உபவாசநாள் அன்று மாலை கோவிலுக்கு சென்று கற்பூர ஆரத்தி காட்டி வணங்கி வழிபாடு செய்வது நலம்.
சித்ரகுப்தன் படியளப்பு.......
சித்ரா பவுர்ணமி அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியும் (கொப்பி-பேனா) வைத்து, ஒரு பேப்பரில் "சித்திர குப்தன் படியளப்பு'' என்று எழுதி வைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை ஒரு தலை வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும்.
படையலுடன் மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், பருப்புகள், தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும். தொடர்ந்து தேங்காய் உடைத்து தீப ஆராதனை காட்டி வழிபட்டு பொங்கலை எல்லோருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டும்.
இந்த வழிபாட்டின்போது ''சித்ரா குதம் மஹா ப்ராக்ஜம் லேகணீ பத்ர தாரிணம் சித்ர ரத்னாம் பரதாரம் மத்யஸ்தம் சர்வ தேஹினாம்'' என்ற மந்திரத்தைக் கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
 
மறுமையில் நன்மை வேண்டுபவர்கள், மீண்டும் பிறவாமை வேண்டுபவர்கள், பிறப்பில் துன்பமிலா நற்பிறவி வேண்டும் என்பவர்கள் இந்த விரதத்தை அவசியம் கைக்கொள்ள வேண்டும். சித்திரகுப்த பூஜை செய்ய விரும்புபவர்கள் சித்ராபௌர்ணமி அன்று பூஜை செய்யலாம். அன்று உபவாசமிருந்து பூஜை செய்ய வேண்டும்.
சித்திரகுப்த விரதம் இருப்பவர்கள் சித்ரா பௌர்ணமியன்று விரதம் இருந்து, அடுத்த சித்ரா பௌர்ணமி அன்று விரதம் பூர்த்தி செய்வார்கள். அன்று பலரையும் அழைத்து சமார்தனை எனப்படும் அன்னதானம் அளிப்பார்கள். சித்திரகுப்த பூஜை செய்பவர்கள் ஆண்டில் ஒரு நாள் செய்வர். விரதமிருப்பவர் ஆயினும் சரி, பூஜை செய்பவராயினும் சரி அன்று அதிகாலை நீராடி விட்டு உபவாசம் இருக்க வேண்டும்.
(சிலர் சித்திர புத்திரர் கதை நூலை வாங்கி வந்து பூஜையில் அமர்ந்து படிப்பார்கள்). சித்திரகுப்தருக்கு பிரியமானவையாக சித்ரான்னம், தயிர் சாதம், தேங்காய் சாதம், உளுந்து வடை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். கோவில்களில் சித்திரகுப்தருக்கென்று தனியாக சிறு சந்நிதி எழுப்பியிருப்பர். உபவாசநாள் அன்று மாலை கோவிலுக்கு சென்று கற்பூர ஆரத்தி காட்டி வணங்கி வழிபாடு செய்வது நலம்.
சித்ரகுப்தன் படியளப்பு.......
சித்ரா பவுர்ணமி அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியும் (கொப்பி-பேனா) வைத்து, ஒரு பேப்பரில் "சித்திர குப்தன் படியளப்பு'' என்று எழுதி வைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை ஒரு தலை வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும்.
படையலுடன் மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், பருப்புகள், தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும். தொடர்ந்து தேங்காய் உடைத்து தீப ஆராதனை காட்டி வழிபட்டு பொங்கலை எல்லோருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டும்.
இந்த வழிபாட்டின்போது ''சித்ரா குதம் மஹா ப்ராக்ஜம் லேகணீ பத்ர தாரிணம் சித்ர ரத்னாம் பரதாரம் மத்யஸ்தம் சர்வ தேஹினாம்'' என்ற மந்திரத்தைக் கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
 
சித்ரகுப்தர் ஸ்தோத்திர வழிபாடு
பார்வதி தேவி ஒருதடவை விளையாட்டாக ஓவியம் ஒன்று வரைந்தாள். அது மிகவும் அழகாக இருந்தது. உடனே பார்வதிதேவியின் தோழியர்கள் இதற்கு உயிர் கொடுங்கள் என்று வேண்டினர். அன்னை உமையாளும் தான் வரைந்த சித்திரத்திற்கு உயிர் ஊட்டினாள்.அது அழகான இளைஞனாக மாறியது.

சித்திரத்தில் இருந்து வந்ததால் சித்ர குப்தன் என்று பெயர் சூட்டினாள். பின் உலகைக் காக்கும் பரம்பொருளான சிவபெருமானிடம் சித்ரகுப்தனை அழைத்துச் சென்ற பார்வதிதேவி, நடந்தவற்றை விளக்கி சித்ரகுப்தனுக்கு ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டினாள்.

அந்தச் சமயத்தில் மரணத்திற்குப் பிறகு உயிர்களின் பாவபுண்ணிய கணக்கை ஆராய்ந்து சொல்ல, தனக்கு உதவியாக ஒருவர் வேண்டும் என்று எமலோகத்தின் அதிபதியான எமதர்ம ராஜன் இறைவனிடம் வேண்டினான். உடனே இறைவனும் சித்ர குப்தனை எமனின் உதவியாளனாக உயிர்களின் பாவ புன்னிய கணக்கை எழுதும் பொறுப்பை ஒப்படைத்தார்.

ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ புண்ணிய கணக்குகள் சித்ர குப்தனால் எழுதப்படுகிறது. எனவே சித்ரா பவுர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். சித்ரா பவுர்ணமி அன்று காலை விரதத்தை ஆரம்பித்து சித்ரா குப்தாய என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

மாலையில் பவுர்ணமி நிலவு உதயமானதும் சித்ரகுப்தனுக்குப் பூஜை செய்ய வேண்டும். பிறகு ஏழைகளுக்கு முடிந்த அளவிற்கு தானம் செய்ய வேண்டும். பேனா, பென்சில், நோட்டு இவற்றைப் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.பயத்தம் பருப்பு, எருமைப் பாலும் கலந்த பாயசத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பின் உப்பு சேர்க்காமல் ஆகாரம் உண்டு விரதமிருந்தால் சித்ரகுப்தன் மகிழ்ந்து நம் பாவ புண்ணிய கணக்கை எழுதும்போது புண்ணிய கணக்கை அதிகப்படுத்தியும் பாவத்தைக் குறைத்தும் எழுதுவார். இதனால் மரணத்திற்குப் பின் நாம் நரகவேதனையிலிருந்து விலகி இறைவன் வாசம் செய்யும் சொர்க்கத்தில் வாழலாம் என்பது நம்பிக்கை.

இதற்கு ஒரு புராண கதை உண்டு. சிறுவன் ஒருவன் படிப்பு வராமல் கெட்ட நண்பர்களோடு சேர்ந்து தவறான செயல்களில் ஈடுபட்டு முரடனாக மாறி இருந்தான். இதனால் வருத்தமடைந்த சிறுவனின் தாய் இறக்கும் தருவாயில் தன் மகனிடம் மகனே, ஒவ்வொரு, பவுர்ணமி அன்றும், சித்ர குப்தாய நம என்று சொல்லிக் கொண்டிரு.

முடிந்தால் சித்ரா பவுர்ணமி அன்று காலை முதல் மாலை வரை சொல். உனக்கு சித்ர குப்தனின் அருள் கிடைக்கும் என்று சொல்லி உயிரை விட்டாள்.அன்று முதல் சிறுவனும் தன் தாய் சொன்னதைப்போலவே செய்து வந்தான். வயது ஏற ஏற அவனிடம் தீய பழக்கங்களும் அதிகரித்தது. ஆனாலும் சித்ர குப்தன் பெயரைத் தொடர்ந்து விடாமல் உச்சரித்து வந்தான்.

இந்தச் செயலால் சித்ரகுப்தனும் உளம் மகிழ்ந்து அவனின் காலக் கணக்கைப் புரட்டிப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்தான்.அவன் மரணமடைய இன்னும் ஏழு நாட்களே பாக்கி இருந்தது. வாழ்நாளில் சித்ரகுப்தனாகிய தன் பெயரைச் சொன்னதைத் தவிர வேறு எந்தப் புண்ணிய காரியத்தையும் அவன் செய்திருக்கவில்லை.

இதனால் இரக்கம் கொண்ட சித்ரகுப்தன் அவன் கனவில் தோன்றி, முரடனே என் பெயரை உச்சரித்ததைத் தவிர வேறு எந்த நல்ல காரியங்களையும் நீ செய்யவில்லை. உனக்கு இன்னும் ஏழு நாட்களில் மரணம் நேரப்போகிறது. இதற்குள் உனக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு குளத்தை உண்டாக்கு.

அதில் ஒரு மாடு தண்ணீர் குடித்தாலே மூனே முக்கால் நாழிகை வரை உனக்குச் சொர்க்கத்தில் இடமுண்டு.மரணமடைந்ததும் உன்னிடம் எமன், மனிதனே உன் குளத்தில் ஒரு மாடு தண்ணீர் குடித்ததைத் தவிர வேறு எந்த நல்ல செயலும் உன்னுடைய புண்ணிய கணக்கில் இல்லை. எனவே, முதலில் சொர்க்கத்தில் சிறிது நேரம் இருந்து விட்டு பின் நிரந்தரமாக நரகத்தில் இருக்கலாம்.

என்ன சொல்கிறாய் என்று கேட்பார். நீயும் அதை ஏற்று சொர்க்கத்துக்குப் போகச் சம்மதிக்கிறேன் என்று சொல் என்று ஆலோசனை கூறி மறைந்தார்.முரடன் மறுநாளே குளம் ஒன்றை வெட்ட ஆரம்பித்தான். ஏழாவது நாளன்று குளத்தின் ஓரிடத்தில் சிறிய ஊற்று ஏற்பட்டது.முரடன் மகிழ்ச்சி அடைந்தான்.

ஒரு மாடு அந்த குளத்தில் இருந்த தண்ணீரைக் குடித்தது. சில நாட்கள் கழித்து முரடனின் உயிர் பிரிந்தது. அவன் எமனின் முன் விசாரணைக்காக நிறுத்தப்பட்டான். அப்போது எமன் சித்ர குப்தனை நோக்கி இந்த மானிடனின் பாவ புண்ணிய கணக்கைப் பற்றிச் சொல் என்றான்.சித்ரகுப்தனும் "இவன் பெரும்பாவம் செய்தவன் ஆனால் ஒரே ஒரு புண்ணியம் மட்டுமே செய்திருக்கிறான்.

சாகும் முன் ஒரு குளத்தை வெட்டியிருக்கிறான். அதில் ஒரு மாடு மட்டுமே தண்ணீர் குடித்திருக்கிறது'' என்றான்.இதைத்கேட்ட எமன் முரடனிடம் உனக்கு மூனே முக்கால் நாழிகை சொர்க்கத்தில் இடம் உண்டு. முதலில் சொர்க்க வாசம் அனுபவிக்கிறாயா அல்லது நரக வாசம் அனுபவிக்கிறாயா என்று கேட்டான்.

அந்த முரடனும் தனக்கு ஏற்கெனவே கனவில் சித்ரகுப்தன் கூறிய ஆலோசனைப்படி முதலில் சொர்க்க வாசமே வேண்டும் என்றான். இதற்கிடையே அவன் வெட்டிய குளத்தில் தண்ணீர் ஊற ஊற நிறைய மாடுகள் வந்து தண்ணீர் குடித்தன.

இதனால் அவனது புண்ணிய கணக்கும் ஏறிக்கொண்டே இருந்ததால் சொர்க்கத்திலேயே நிரந்தரமாகச் சுகமாக இருக்கலானான்.ஒரு முரடன் சித்ர குப்தனின் நாமாவைச் சொன்னதற்காக மட்டுமே சொர்க்கவாசம் அனுபவித்தான் என்றால் ஒவ்வொரு பவுர்ணமியிலும் சித்ரகுப்தனுக்கு விரதம் இருந்து அவரை வழிபட்டால் அளவு கடந்த புண்ணியம் கிடைக்கும்.
 

4 comments:

  1. தகவல்ளுக்கு நன்றி.
    மேலும் ஒரு தகவல் என்னவென்றால்,
    திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா நல்லூர் பஞ்சாயத்தில் சித்திரபுத்திரர் கோவில் அமைந்துள்ளது. இங்கும் சித்திரா பௌர்ணமியன்று சித்திர புத்திரர் கதை படித்தும் அன்னதானம் வளங்கியும் கொண்டாடப்படுகிறது. இங்கு உள்ள கோவில் பழமை வாய்ந்தது அல்ல. சில நூறு ஆண்டுகள் பழமை இருக்கும். மாதம் தோறும் கடைசி வெள்ளி கிழமையன்றும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    ReplyDelete
  2. காஞ்சிபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் சித்திர குப்தருக்கென்று தனிக்கோவிலுண்டு.

    ReplyDelete
  3. அனைவரும் தரிசித்தால் அனைத்தும் கிடைக்கும்

    ReplyDelete
  4. உடுமலை அடுத்த சாமிநாதபுரம்.பழநி மெயின் ரோட்டில் GVG Nagar மேற்கில் ராஜ அலங்காரம் பெற்று ஏடும் எழுத்தாணியும் கொண்டு ஶ்ரீ சித்திரகுப்தர் எழுந்தருளியுள்ளார்.

    ReplyDelete