Thursday, August 22, 2013

இரண்டில் ஒன்றைக் கழி!

லோகம் என்று இருந்தால் அதில் எல்லாமே நல்லதாக இல்லாமல் கெட்டதும் இருக்கத்தான் செய்யும். லோகம் தோன்றிய நாள் முதலாக இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. நாம வாழுகிற பூலோகத்துக்கு மிச்ரலோகம் என்று பெயர். அப்படி என்றால் கலப்பு உலகம். என்ன கலப்பு என்றால் நல்லதும், கெட்டதும் கலந்து இருப்பது தான்.  தேவலோகத்தில் எல்லாம் நல்லதே. அசுரலோகத்தில் எல்லாம் கெட்டதே. மநுஷ்யர்களான நம்முடைய இந்த லோகத்திலோ இரண்டும் கலந்து மிச்ரமாயிருக்கிறது. அப்படித்தான் ஈசுவர நியதி. ஆனாலும், இதில் நல்லதை விடக் கெட்டது ரொம்ப ஜாஸ்தியாகி விட்டால், நாம் அந்தக் கெடுதலிலேயே அழுந்தி அழுக்காகி விட்டால், நம் லட்சியமான நிஜத்தை அடைய முடியாமல் போய்விடும். அப்படி ஆகுமாறு விடப்படாது. கலியில் கெட்டது ஜாஸ்தியாய் இருக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. அப்படிசொன்னதால் இங்கே முழுக்கக் கெடுதலே வியாபித்து நல்லது எடுபட்டே போய்விடும் என்று அர்த்தமில்லை. ஏனென்றால், அப்போது கலப்பு லோகம் என்ற இதன் பேரே பொய்யாகி இது அசுரலோகம் ஆகிவிடும். தற்காலத்தில் ஆகியிருப்பது போல், இந்த அளவுக்கு கீழே போய்விடுவதற்கு நாம் இடம் தரப்படாது. அதற்கு நல்லதை விருத்தி செய்து கெட்டதைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். -சொல்கிறார் பெரியவர்

No comments:

Post a Comment