Friday, September 27, 2013

இந்த உடம்பை மும்மலக் குற்றம் உடையது என்று எண்ணி இருந்தேன்.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.
...
- திருமந்திரம்

இந்த உடம்பைப் பற்றி எனது ஆசான் மகான் நந்தீசர் உபதேசிக்கும் வரையில் இந்த உடம்பை மும்மலக் குற்றம் உடையது என்றும் நரை, திரை, பிணி மூப்பிற்கு உட்பட்டது என்றும் குற்றமுள்ளதாகவும் எண்ணி இருந்தேன்.

மகான் நந்தீசர் ஆசியால் ஏழு திரைகளும் நீங்கி சுழிமுனைக்கதவு திறக்கக் கண்டேன். அதன்பின் ஜோதியும் கண்டேன். குருநாதன் ஆசியால் மெய்ப்பொருளையும் கண்டேன். அதன் பயனாய் முக்திக்கு முதல்வனாகிய சிவபெருமான் கோயிலாகிய என்னுடம்பினுள்ளே இருப்பதையும் அறிந்து கொண்டேன் என மகான் திருமூலதேவர் தான் பெற்ற அனைத்தையும் தனது குருநாதர் ஆசியால் தன பெற்றேன் என கூறுகிறார்.

No comments:

Post a Comment