Saturday, October 26, 2013

உணரவே வேண்டியது

உணரவே வேண்டியது.

செட்டியார் தன் சொத்துக்களை கணக்கு பார்த்து விட்டு, ஏக்கத்துடன் "எட்டு கோடி!" யென பெருமூச்சு விட்டார். அவ்வளவுதான் மார்பு வலிக்க..! எதிரே எமன் தோன்றி.., "ம்... புறப்படு..!" என்றான்.
செட்டியார் அழுது புரண்டு "தன் சொத்து அனைத்தையும் தருகிறேன். என்னை இன்னும் சிறிதுகாலம் வாழவிடு..!" என் பந்தங்களையாவது ஒரு முறை காண விடு..!" என கதறினார். எமன் சிரித்து விட்டு, "உனக்கு இருப்பது இரண்டே வினாடிகள் தான். எதுவேண்டுமானாலும் செய்துகொள்..!" என்றான். உடனே செட்டியார் அவசரமாய் இப்படி எழுதினார்.. "இதை படிப்பவர்கள் உணரவே வேண்டியது என்ன என்றால். எட்டுகோடியிருந்தும்.. அதைவைத்து ஒரு நாழிகையைகூட என்னால் வாங்க முடியவில்லை.."

இதைதான் புத்தர் அழகாக சொன்னார். "இது என் நிலம்.., இவர்கள் என் பிள்ளைகள்.. என்பதெல்லாம்.. தானே தனக்கு சொந்தம் இல்லையென்று உணராத முட்டாளின் வார்த்தைகள் என்று.

No comments:

Post a Comment