Friday, December 20, 2013

பலவீனமானவர்களின் சொத்தல்ல கோபம் ..

பலவீனமானவர்களின் சொத்தல்ல கோபம் ..

உணர்வுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் சொத்தே கோபம் !!!
பாதகம் செய்பவர்களிடம் பாரதி கொண்ட கோபம் !!
இரணியன் மீது நரசிம்மம் கொண்ட கோபம் !!...

திண்ணை வீரர்களின் சொத்தல்ல கோபம் ; சினம் கொண்டு களம் சாடிய சிங்கங்களின் சொத்தே கோபம் !!!

தாயை பழித்தவனை தட்டி கேட்கும் மகனின் சொத்து கோபம் !
தாயகத்தை பழித்தவனை விட்டு வைக்காத தேசபக்தனின் சொத்தே கோபம் !

முரட்டுத்தனத்தின் அடையாளம் அல்ல கோபம் ! முரண்பாட்டின் விடி வெள்ளி கோபம் !!!

அன்பும் அரவணைப்பும் நிராகரிக்க படும் இடங்களில் அடிமை விலங்கை உடைத்தெறியும்
கோடாலி கோபம் !!! கோடான கோடியர்களின் கோபம் !!!

தாயை பழித்தவனை தாய் தடுத்தால் விட்டு விடு; தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே
என்று சொன்னார் பாரதி தாசன்

தாயை பழித்தவனை தாய் தடுத்தால் விட்டு விடு ; தாயகத்தை பழித்தவன் தகப்பன் என்றாலும் விடாதே
என்று உரக்கச்சொல் உலகத்திற்கு நீ !

பாரத தேசத்தை தாய் போல் மதிக்கும் ஒவ்வொரு இந்தியனின் சொத்து கோபம் ..

தேச பக்தி கொண்ட ஒவ்வொரு இளைஞர்களிடமும் இந்த கோபம் பரசுராமன் ரூபத்தில் வாழ்கிறான்! தேச துரோகிகளை கண்டால் சினம் கொண்டு பாய்ந்திடுவான்!!

No comments:

Post a Comment