Sunday, March 9, 2014

அதர்மத்தை விட்டு விலகி, தர்மத்தைக் காப்பது தான் உயர்ந்த தர்மம் என்கிறது சாஸ்திரம்

ராவணன் சீதையை விரும்புவது தவறு என்பதை, ராவணன் மகன் இந்திரஜித், தம்பி கும்பகர்ணன் ஆகியோரும் அறிந்திருந்தனர். கும்பகர்ணன் அண்ணனைக் கண்டித்து அறிவுரையும் சொன்னான். ஆனால், "செஞ்சோற்றுக் கடன்' எனச் சொல்லி அண்ணனுக்காக போரில் உயிர் விட்டான். "உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பது தானே தர்மம். ஆனால், ராவணனின் இன்னொரு தம்பி விபீஷணன், ராமனிடம் சரணடைந்ததோடு, "அண்ணனின் உயிர்நிலை மார்பில் தான் இருக்கிறது. அங்கு பாணத்தை செலுத்தினால், உயிர் நீங்கும்' என்பதைத் தெரிவித்தான். அதனால், தர்மத்திற்குப் புறம்பாக விபீஷணன் நடந்ததாக சிலர் கருதுவர். ஆனால், அதர்மத்தை விட்டு விலகி, தர்மத்தைக் காப்பது தான் உயர்ந்த தர்மம் என்கிறது சாஸ்திரம்.

1 comment: