Saturday, April 19, 2014

மெளனமாக இருப்பவர்களின் பலம், திறன் என்ன என்பதை ஒருபோதும் மதிப்பிடவே முடியாது.

கூக்குரலின் இயலாமை.
-----------------------------------
முதன்முறையாக கழுகுகுஞ்சு இரையாக வாத்துகுஞ்சை தூக்கி வந்து விட்டு தனது தாயிடம் "இந்த குஞ்சை நான் கவ்வியபோது அதன் தாய் தன் குஞ்சை காப்பாற்ற முயற்சி செய்தாள். முடியாத போது மெளனமாக இருந்து விட்டாள்" என்றது. "அந்த வாத்தைப் பகைக்க வேண்டாம். இதை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு, வேறு இரை தேடி வா..!" என்றது தாய் கழுகு.
...
குஞ்கு மறுபடி ஒரு கோழிக்குஞ்சை கொண்டு வந்து விட்டு "அம்மா.., கோழி என்னை எகிறி எகிறித் துரத்தப் பார்த்தது. முடியாது போக எனக்கு ஏகப்பட்ட சாபம் கொடுத்தது. பேசாமல் விட்டுவிட்டு வந்து விடலாமா என்றுகூட யோசித்தேன்" என்றது. "அந்த கோழியால் பிரச்சனை இருக்காது. இதை நீ சாப்பிடலாம்..!" என்றது தாய்க்கழுகு.
கூக்குரல் போடுபவர்கள் தங்களின் இயலாமையை விரைவாகவே வெளிக்காட்டி விடுகிறார்கள். தன்னை பற்றி இரைச்சலாக சொல்லி கொள்ளாது மெளனமாக இருப்பவர்களின் பலம், திறன் என்ன என்பதை ஒருபோதும் மதிப்பிடவே முடியாது.
-ஈஷாப்கதை.

No comments:

Post a Comment