Thursday, May 29, 2014

முருகனின் திருவடிகளில் கிடக்கின்ற பாம்பு நாம் புற்றுகளிலும் காடுகளிலும் காண்கின்ற சாதாரணப் பாம்பு அல்ல


திருச்சிற்றம்பலம்
இப்படித்தான் முருகனின் திருவடியில் கிடக்கின்ற பாம்பினைப் பார்த்து¢ சிலர் தவறாகப் புரிந்துக் கொள்கின்றனர். சிவப்பரம் பொருளான முர...ுகனின் திருவடிகளில் கிடக்கின்ற பாம்பு நாம் புற்றுகளிலும் காடுகளிலும் காண்கின்ற சாதாரணப் பாம்பு அல்ல! அது இறைவனை அறிகின்ற அறிவு அல்லது குண்டலினி என்பதின் உருவகம். அதாவது இறைவனை அறிகின்ற அறிவு அவன் திருவருளாலே பெறக் கூடியது என்பதனை அவன் திருவடியில் நம் முன்னோர்கள் வைத்துக் காட்டினார்கள். அறிவே இறைவனுக்கு ஒருவகையில் திருமேனியாய் அமைவதனால் அப்பாம்பினை இறைவனின் திருமேனியில் கச்சையாகவும் அணிகலனாகவும் அமைத்துக் காட்டினார்கள். எனவே பாம்பினை இறைவன் திருமேனியிலோ அல்லது திருவடியிலோ காணுகின்றபோது உயிர்கள் அறிவுபெற வேண்டும் என்கின்ற சிந்தனையே மேலோங்க வேண்டும் என்பது உண்மைச் சைவச் சான்றோரின் முடிவு.
இதனை அறியாது நம்மில் பலர் செத்துப் பிறக்கும் பாம்பினைக் கடவுளாகக் கொள்வது சைவக் கொள்கைக்கு முரணானதாகும். ஐந்தலை நாகம் கூட இறைவனுக்குப் பணியாற்றும் உயிர்வகையாகவே நம் சைவநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்மில் பலர் இறைவனை வழிபடாது இதுபோன்ற உயிர்வகைகளை இறைவனாக எண்ணி வழிபடுவதும் அவ்வைகயான வழிபாட்டிற்குத் துணைபோவதும் சிவநிந்தனையாகும். கரு, முட்டை, விதை, ழுழநு€வு போன்றவற்றிலிருந்து தோன்றும் எவ்வகையான உயிரினமும் கடவுள் ஆக முடியாது என்று சைவம் கூறுகின்றது. எனவே நம் குழந்தைகளுக்கு அறிவார்ந்த, உணமைச் சமயத்தைச் சொல்ல வேண்டியது நம் கடமையாகிறது. இதுவே நம் சமயத்தின் உண்மையையும் சரியான நெறியையும் நிலைநிறுத்தக் கூடியது. நாமே நம் சமயத்தினைக் கேலிக் கூத்தாக்கி மற்றவர் நம் சமயத்தை எள்ளி நகையாடா வண்ணம் காப்பது நம் கடமை. உண்மைச் சமயத்தை அறிந்து வாழ்வது உண்மைச் சைவர்களின் தலையாய கடமை

No comments:

Post a Comment