Sunday, August 24, 2014

படுக்கைஅறை சாஸ்திரம்

{படுக்கைஅறை சாஸ்திரம்}

ஒரு வீட்டில் படுக்கை அறைகளை சயன சாஸ்திரப்படி கிழக்கு,மேற்கு,வடக்கு, வடகிழக்கு, ஆகிய திசைகளில் அமைப்பது உத்தமம் நான்கு திசைகளே கணவன்,மனைவி,இருவரும் சயனிப்பதற்க்கு உகந்த திசைகளாகும்

1) கிழக்கு,வடகிழக்கு ஆகிய திசைகளில் கணவன்,மனைவியர் சயனித்து அதன் மூலம் பிறக்கின்ற குழந்தைகளால்குடும்பத்துக்குப் பெருமை உண்டாகும்
2) மேற்கு திசையில் கணவன் மனைவி சயனித்து கருத்தரித்து பிறக்கின்ற குழந்தைகள் ஆணாயின் மெய்ஞ்ஞானியாய் இருந்து, அதன்பின் இருபத்தோரு தலை முறைவரையில் உண்டாகினறவர்களையும் பாவம் அணுகாத சக்திக்கு ஆளாக்க ஏதுவாகன், பெண்ணாயின் மகாபதி விரதாசிரோன்மனியாய் இருப்பாள்.
3) வடக்கு திசையில் கணவன் மனைவி இன்பன் சுகித்து அதன் மூலம் பிறக்கின்றகுழந்தைகள் இருபாலரின் எப்பாலராயினும் குபேர சம்பத்தோடும், தீர்க்க ஆயுளோடும் இருப்பார்கள் உகந்த திசைகள் அல்ல வீட்டினுள

தென்கிழக்கு,தெற்கு,தென்மேற்கு,வடமேற்கு ஆகிய இந்நான்கு திசைகள் கணவன் மனைவி சயனிப்பதற்கு தென்கிழக்கு திசையில் கணவன் மனைவியர் இன்பம் சுகித்து அதன் மூலம் பிறக்கின்ற குழந்தைகள் திருட்டு முதலிய கெட்ட செய்கைகளோடு இருப்பார் தெற்கு திசையில் இன்பம் சுகித்தால் பிறக்கின்ற குழந்தைகள் முடர்,குருரர், செவிடு முதலிய அங்கக் குறைகளோடுபிறப்பர், இது பரம்பரை பரம்பரையாகத் தொடரும் தென்மேற்கு திசையில் இன்பம் சுகித்தால் பிறக்கினற குழந்தைகள் ஆணாயின் ஒற்றனாகவும் .கோள் சொல்லித்திரிபவனாகவும், பெற்றோருக்கு கெட்ட பெயரை உண்டாக்கித் தருபவனாகவும், இருப்பார்கள் பெண்ணாயின் அவள் விலை மாதராக இருப்பாள் வடமேற்கு திசையில் கணவன் மனைவியர் சயனித்து இன்பம் சுகித்து அதன் மூலம் பிறக்கின்ற குழந்தைகள் மிகுந்த தரித்திரத்தை அடையும்
{பல்லியறை பதிக்கையறை} ஒருவனுக்குப் படுக்கையறையில் உண்டாகும் எண்ணங்களுக்கும், அவனுக்குப் பிறக்கும் பிறவிகளுக்கும் உள்ள சம்பந்தம் குறித்து அவைகளை இங்கே காண்போம் படுக்கையறையில் உயர்ந்த பரோபகார குணமும், நிறைந்த கல்வியையும் அழகுவாய்ந்த முன்னோர்களும் தைரியசாலிகள் ஸ்ரீயோகிகலும் கருணா மூர்த்திகலும் அழகிய படங்களும் மாட்டியிருக்க வேண்டுமே தவிர படுக்கையறையில் நுழைந்தவுடன் மனதிற்குச் சந்தோஷம், அன்பு,ஆதரவு, இனியமொழி, ஈகை உண்மையில் விருப்பம், நன்மையில் ஊக்கம்,எல்லோருக்கும் உதவி புரிவதில் ஆசை, நல்ல படிப்பில் விருப்பம்,சாந்தம்,ஜீவகாண்யம், கடவுளிடத்தில் அன்பு பரோபகாரத்திலேயே விருப்பம்,பொறுமை முதலிய உயர்ந்த குணங்களை உண்டாக்கும் படியான பலகாட்சிப் பொருட்களும், வாசனைத்
தைலம் திரவியங்களும் நிறைந்துகண்கொள்லாமனதைக் கவர்ந்து, ஆனந்தம் விளைவித்து மெய்மறக்கச்செய்வதாய் விளங்கவேண்டும் தேவதைகள் பள்ளியறை உள்ளவனம் அங்குள்ள தேவர்கலின் நடை,உடை பாவனைகளும்,ஞாபகத்திற்கு வருவதுபோல்,மேற்படி வேறுபொருள்களையும் காணும்பொழுது அவற்றைப் பின் தொடர்ந்தே நம் மனதில் பல எண்ணங்களும் அடுக்கடுக்காய்த் தோன்றிக் கொண்டே இருக்கும் அன்பு, வணக்கம், சத்தியம், தர்மம்,நியாய பரிபாலனம் நினைவுக்கு வருவது பிரத்யட்சம் அகியன கெட்ட ஆத்மாக்களின் படத்தைப் பார்த்தால் அவர்களைப் பற்றியதீஞ்செயல்களும், கொடுங்குணங்களுமே மனத்தில் தோன்றும், அவ்வாறு எது எதை நினைக்கின்றோமோ அவ்வித குணங்களே மனதில் பதியும் அப்பொழுது புணர்ச்சி செய்தால் அவ்வித குணங்களே கருவாய் அமைந்து அவ்வித குணங்களே கருவாய் அமைந்து அவ்வித குணங்களோடு கூடிய சந்ததிகளே நமக்கு உற்பத்தியாகும்.

No comments:

Post a Comment