Monday, August 25, 2014

ஜபம் செய்யும்போது ஆஸனம் முக்கியத்துவம் பெறுகிறது

ஆஸனம்
மேலும் ஜபம் செய்யும்போது இன்ன ஆஸனம் இட்டு அமர்ந்து ஜபம் செய்ய வேண்டும் என்று ப்ரஹமாண்ட புராணம் வலியுறுத்துகிறது,
காம்யார்த்தம் கம்பலம்சைவ
ச்ரேஷ்ட்டம் ச ரக்த கம்பலம்
குசாஸனே மந்த்ரஸித்தி;
நாத்ர கார்யா விசக்ஷணா--என்கிறது
அதாவது இருக்கையும் ஜப காலத்தில் முக்கியத்துவம் பெறுகிறது ஆஸனமில்லாம் ஜபம் செய்யக் கூடாது மற்றவர் போட்டு இருக்கும் ஆஸனத்தில் அமர்ந்து செய்யக் கூடாது
 
1,பூமியில் அமர்ந்து ஜபம் செய்தால்-துக்கம் ஸம்பவிக்கும்
2,மூங்கிலாஸனத்தில் அமர்ந்தால் -நோய் விலகும்
3,கல்லிலமர்ந்து செய்தால்-நோய் உண்டாகும்
4,ஒட்டை மணையில் அமர்ந்து செய்தால்-துரதிர்ஷ்டம் நேரிடும்
5,புல்லிலமர்ந்து செய்தால்-செல்வமும்,புகழும் அழியும்
6,இலைகளில் அமர்ந்து செய்தால் -சித்தப் பிரமை வரும்
எனவே இங்கு ப்ரஹ்மாண்ட புராணப்படி-இஷ்டத்தை உத்தேசித்துச்
செய்யக்கூடிய செயல்களில்;
7,கம்பளி ஆஸனமே சிறப்புடையது அதிலும் சிவப்புக் கம்பளம்
மிகவும் சிறந்ததாகும் ,ஸர்வ ஸித்தி தரும்
8,தர்ப்பை போட்டு அமர்ந்து ஜபம் செய்தால் கட்டாயம் ஜ்ஞான ஸித்தி எற்படும் அறியவும்

No comments:

Post a Comment