Sunday, August 24, 2014

வாஸ்து சாஸ்திரம் - சிறப்புக் குறிப்புகள்

வாஸ்து சாஸ்திரம் - சிறப்புக் குறிப்புகள்

1.வீட்டிற்கு வரும் வுருந்தினர்களையும், உறவினர்களையும் வீட்டின் வடமேற்கு மூலையில் உள்ள அறையி தங்குமாறு செய்யவேண்டும்.

2.மாணவர்கள் தங்களது தேர்வுகளில் நல்ல மார்க்குகள் பெற்றுப் படிப்பில் சிறந்து விளங்குவதற்கும், படிக்குல்போதும், பேசும் போதும் தவிர மற்ற வேளைகளில் எல்லாம் கிழக்கு நோக்கியே உட்காருங்கள். அப்போது உங்கள் மூளை உற்சாகம் அடையும். சிந்தலையில் தெளிவும்,திறமையும் கூடும். வடக்கு நோக்கியும் வேலைகளில் ஈடுபடலாம். தெற்கு, மேற்குத் திசைகளைத் தவிர்த்து விட வேண்டும்.

3.நகை, பணம், விலையுயர்ந்த கற்கள் வைக்கும் பெட்டகத்தை, அலமாரியைத் தென்மேற்கு (கன்னி மூலை) அறையில் தென்மேற்கு மூலையில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைக்க வேண்டும் அவை நீங்காமல் நிலைத்திருக்கும்.

4.உடல்நலக்குறைவு உள்ளவர்களை வீட்டின் தென்மேற்கு அறையில் படுக்கை அமைத்து தெற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கும்படிசெய்து வந்தால், உடல்நலம் விரைவில் குணமாகிவிடும். ஆயுள் பலம் பெருகும்.

5.கடன்கள் தீரவேண்டுமானால், சந்திர கிரகணம், சூரிய கிரகணம் கூடிவரும் நாட்களில் கிரகண உச்ச நேரம் (மத்தியில்) முடிந்து, கிரகணம் நீங்கிக் கொண்டிருக்கும்வேளையில் முடிந்தளவு ஒரு தொகை (ஒரு ரூபாய்கூட இருக்கலாம்) கொடுத்துவிட்டால், அந்தக் கடன்கள் விரைவில் தீர்ந்து விடும். முடியவில்லை என்றால் அவர் பெயரில் பணம் வரவு எழதி, தனியாக வைத்துக் கொள்ளவும். பாங்க் மற்றும் தனியார் கடன்கள் வாங்கியிருந்தாலும் இதைப் பின்பற்றலாம்.

6.வாழ்க்கையில் வெற்றி பெறவிரும்புபோர் அனைவரும் வடக்கையும், கிழக்கையும்தங்கள் வலக்கையாகவும், இடக்கையாகவும் எப்போதும் உபயோகப்படுத்தப் பழ்கிக் கொள்ள வேண்டும்.

7.வீட்டிலும், அலுவலகத்திலும், வியாபார ஸ்தாபனங்களிலும் வடக்கௌப் பார்ததே உட்காருங்கள். அல்லது கிழக்கைப் பார்த்து உட்கார்ந்து வேலையினைத் தொடருங்கள். உற்சாகமும், தெளிவும் கிடைத்துக் காரியங்கள் சிறப்பாக நடைபெறும்.

8.வழக்காடு மன்றத்தில் வக்கீல்கூட வடக்கு நோக்கி நின்றே வாதாட வேண்டும். சாப்பிடும்போது மட்டூம் வடக்கி நோக்கிச் சாப்பிடக் கூடாது. மற்ற காரியங்களுக்கு வடக்குல், கிழக்கும் மிகச் சிறந்தவை.

9.வீட்டின் ஈசான்ய மூலை (வடகிழக்கு) ஈரமாக எப்போதும் இருக்கவேண்டும். கிணறு, போர் (bore)தொட்டி போன்றவை ஈசான்யத்தில் அமைக்கவேண்டும். அதில் தண்ணீர் சிறிதளவாவது இருக்க வேண்டும். அபோது தான் வீட்டில் பணப்புழக்கம் அதாவது பணம் (பசை) இருந்து கொண்டே இருக்கும்.

10.வீட்டின் மேற்குப்புறம் குறைந்த அளவு காலியிடம் இருந்தால் (கிழக்கு, வடக்கை விட) உங்கள் கணவர் காலாகாலத்தில் வீட்டிற்குத் திரும்புவார். அதிகமாக இருந்தால் தாமதமாகத்தான் வீட்டிற்குத் திரும்புவார்.

11.உங்கள் கணவருக்கும், உறவிமர்களுக்கும் சேலைச் சுமை குறைந்து, உத்தியோக உயர்வு கிடைக்க வேண்டுமானால் வீட்டின் மேற்குப் பாகத்தில் முதல் மாடி கட்டிக் கொள்ள வேண்டும்.


12.ஒரு வீட்டைக் கட்டியபின்பு அதைப் பாகம் பண்ணக் கூடாது. தனித்தனி வீடுகளாகக் கட்டி அதைப் பிரித்துக் கொள்ளலாம்.


13.தந்தையின் வீட்டைப் பாகப் பிரிவினை செய்யும்போது மூத்தவர்களுக்கு மேற்குப் பாகத்தையோ,தெற்குப் பகுதியையோ கொடுக்க வேண்டும். இளையவர்களுக்குல் கிழக்கு அல்லது வடக்குப் பகுதிகளில் கொடுக்க வேண்டும்.

14.காம்பவுன்ட் சுவர்கள் கட்டிய பின்பு கிரகப் பிரவேசம் செய்வது மிகவும் சிறப்புத் தரும். ஆனால் வசதியில்லாதவர்கள்,தங்களது வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து குடி யேறிய பின்பு, எவ்வளவு சீக்கிரம் காம்பவுண்ட்சுவரினைக் கட்டமுடியுமோ கட்டிவிட வேண்டும். சுற்றுப்புறத்தில் உள்ள தோசங்கலி நீக்கிப் பந்துக்களை நம்மிடம் உறவு கொள்ள வைக்கும்.

15.தொழிலுக்கு முக்கியமானது கிழக்குத் திசை. எனவே, கிழக்கில் காலியிடம் இருந்தால், நாம் செய்யும் தொழில் வியாபாரம் நல்ல முறையில் இருக்கும். கிழக்கினை அடைத்து விடக் கூடாது.

16.வீட்டிற்கு அருகில் கோவில்கள் 150அடிக்கு மேல் இருந்தால் தோசங்கள் இல்லை. கோபுரத்தின் நிழல் வீட்டின் மேல் விழக் கூடாது.

17.வீட்டிற்கு மேற்கு, தெற்கில் காலியிடம் அதிகம் இருந்தால், கடன் தொல்லைகள் அதிகமேற்படும். அதே போன்று கிழக்கும்,வடக்கும் மற்றதிசைகளைவிட உயரமாக இருந்தாலும்,கடன் தொல்லை, குழந்தைகள் பிரச்சனை, தொழிலில் முடக்கம் உருவாகும்.

18.ஈசான்ய திசையில் இள்ள காம்பவுண்ட் சுவரினை எக்கரணம்கொண்டும் வளைக்கக் கூடாது. அது குழந்தைகளுக்குக் கண்டத்தை உண்டாக்கும். தலைவ்னின் வளர்ச்சியையும் பாதிக்கும்.

19.வீட்டின் அருகில் வளர்க்க வேண்டிய மரங்கள் மாமரம், வாழை மரம், வேப்பமரம், எலுமிச்சை, மல்லிகைப் பூச்செடி போன்றவை. இவை மனதிற்கு உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுப்பதன்றி, விஷக்காற்றுகளைத் த்டுத்து உதவி செய்யும்.

20.வில்வமரம், அகத்திச் செடி, மிளகு, இலுப்பை மர்ம்,அவுரி,பனைமரம். எருக்கு,எட்டிமரம் போன்றவை வளர்க்ககூடாது. லட்சுமி கடாட்வத்தைக் குறைத்தி விடும்.

21.மேற்குத் திக்கிலுள்ள சுவர் வெடிக்குமானால் வர்த்தகத்தில் நஷ்டமடைவான். உடொஅக்கமாகக் கட்டடச்சுவர் விழுமானால் வீட்டுச் சொந்தக்காரன் நாசமடைவான்.

22.கட்டும்போது வெளிப்பக்கமாகச் சுவர் இடிந்து விழ, திருடர்களால் கொள்ளை அடிக்கப்படுவார்கள்.

23.குடியிருக்கும் வீடுகளின் மேல் கோவில் கோபுரத்தினுடைய நிழல் விழுமானால், அந்த வீட்டில் வசிப்பவர்கள் நசித்துப் போவார்கள்.

24.வாசம் செய்யும் வீட்டில் திடீரென்று கிழூக்குச் சுவரில் வெடிப்பு உண்டானால்-அந்த வீட்டில் வசிப்பவர்கள் தரித்திர தசையடைவார்கள்.

25.தெற்கில் உள்ள சுவர்களில் வெடிப்புக் கண்டால் அந்த வீட்டில் யாராவது மரணமடைவார்கள்.

26.வடக்கில் உள்ள சுவரில் வெடிப்பு உண்டானால் திடீர் விரையங்கள் உண்டாகும்.

27.வீடுகளுக்குத் தாழ்வாரம் ஜந்தரை அடிக்குக் குறையாமல் அமைக்க வேண்டும்.

28.வீட்டிற்குத் தலைவாயில் வைக்கும்போதும், மற்ற பிரதான இடங்களில் வாசல்கள் வைக்கும்போதும் பலிசுற்று பூசணிக்காயைச் சுற்றிய பின்பு, அவ்விடத்தில் தானே உடைக்கச் செய்யாமல், வேறு ஒருவரிடம் (வேலைக்காரர்) கொடுத்து, சற்றுத் தூரத்தில் கொண்டு போய் உடைக்கவேண்டும். அப்படிப் போடுபவர் அன்று ஒரு நாள் மட்டும் வீட்டுச் சொந்தக்காரரைப் பார்க்கக் கூடாது.

29.குடியிருப்பதற்காகக் கருங்கல்லில் கட்டடங்கள், வீடுகள் கட்டக்கூடாது.அது குடும்பத்தில் பல பிரச்சனைகளைக் கொடுத்துக் குடும்பத்தின் நிம்மதியைக் குலைத்து விடும். அதே போன்று வீட்டின் முன்புறத்தில் காட்சிக்காக (Elevation) கருங்கற்களால் கட்டக் கூடாது.

30.ஏற்கனவே இடம் அல்லது வீடு வைத்திருப்பவர்கள் தங்கள்வீட்டை ஒட்டியோ அல்லது இடத்தை ஒட்டியோ உள்ள வடக்கு அல்லது கிழக்கில் உள்ள வீடு, மனை வாங்கலாம். தெற்கு, மேற்கு கூடாது.

31.வீடுகள்-எந்தத் திசையில் வாசல் இருந்தாலும், வெளியில் இருக்கும் ரோடு மட்டத்தை விட வீட்டுத் தளம் உயரமாக இருக்க வேண்டும்.

32.பிரதான வாசற்காலை விட மற்ற உள்வாசற்கால்கள் கொஞ்சம் சிறிதாக உள்ளடக்கமாக இருக்க வேண்டும்.

33.கடைக்கு ர்திரிலும், வீட்டிற்கு எதிரிலும் பெரிய மரம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதை அகற்ற வேண்டும். முடியாது என்றால் மரத்திற்கு எதிராக (வீட்டில்) ஒரு பெரிய கண்ணாடி வைத்து மரத்தின் நிழ்ல் தெரியும்படி செய்தால் தோசம் ஓரளவுக்கு நிவர்த்தியாகி விடும்.

34.வீட்டின் கழிவு நீர் ஈசான்யத்தில் வெளியேற வேண்டும். இல்லையெனில் கழிவுநீர் ஈசான்யத்தில் ஒரு சின்னத் தொட்டியில் விழ்மாறு செய்து, பின்பு அங்கிருந்து தனியே வாட்டம் கொடுத்து மற்ற திசைகளில் கொண்டு செல்ல வேண்டும்.

35.ஒரு கதவுக்கு இரண்டு ஜன்னல்கள் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். கட்டடம் கட்டுவதற்காக பில்லர்கள் (கான்கிரீட் தூண்கள்) மற்றும் பீல்கள் அமைக்கும்போதும் இரட்டைப் படை எண்களிலேயே அமைக்க வேண்டும்.கதவை ராஜா என்றும், அருகில் உள்ள இரண்டு ஜன்னல்களை மந்திரிகள் என்றும் கூறுவர்.
 
வாஸ்து சாஸ்திரம்
முக்கிய பலன்கள்

1.மேற்குத் திசை உயரமாகவும், கிழக்குத்திசை பள்ளமாகவும் இருந்தால் செல்வந்தராக்கி விடும்.

2.கிழக்கு மேடாகவும், மேற்கு பள்ளமாகவும் இருந்தால், ஏழையாக்கி விடும். தரித்திரம் ஏற்படும்.

3.வடக்கு மேடாகவும், தெற்கு பள்ளமாகவும் இருந்தால், வீட்டுத் தலைவனுக்கு மிகத் தீயதைக் கொடுக்கும். கண்டங்கள் ஏற்படும்.

4.தெற்கு உயரமாகவும், வடக்கு பள்ளமாகவும் இருந்தால், செல்வ வளர்ச்சியைக் கொடுக்கும்.

5.ஈசான்யம் உயரமாகவும், கன்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், பல துயரங்களில் ஆழ்த்தி விடும். சந்ததிகளுக்குக் கண்டங்கள் உண்டாகும்.

6.அக்னி மூலை மேடாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால், நல்லவை நடக்கும். பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும்.

7.வாயு மூலை மேடாகவும், அக்னி மூலை பள்ளமாவும் இருந்தால், அவ்வீட்டில் தீ விபத்து, திருட்டு போன்றவை ஏற்படும்.

8.கன்னி மூலை உயரமாகவும், ஈசான்யம் பள்ளமாகவும் இருந்தால், மிக்கசெல்வ வளர்ச்சியும், புகழும் உண்டாகும். ஆரோக்கியம் கூடும்.

9.கிழ்க்கு, அக்னி மூலை ஆகியவை உயரமாகவும், வாயு மூலையும் மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், துயரத்திலும், சிக்கலிலும் ஆழ்த்தி விடும்.

10.அக்னி மூலையும், தெற்கும் உயரமாகவும், வாயு மூலையும், வடக்கும் பள்ளாமாகவும் இருந்தால் பல வகை லாபங்கள் ஏற்படும்.

11.தெற்கும் தென்மேற்கும் உயரமாகவும், வடக்கும், ஈசான்யமும் பள்ளாமாகவும் ஆனால் அவ்வீட்டில் இருப்பவரை லட்சாதிப்துயாக்கி விடும். நீண்டாஆயுள், சந்தாம விருத்தி ஏற்படும்.

12.தென்மேற்கும் (கன்னி) மேற்கும் உயரமாகவும் இருந்தால் பல வழிகளில் நன்மைகள் உண்டாகும்.

13.வாயு மூலையும், மேற்கும் உயர்ந்து, அக்னி மூலையும் கிழக்கும் தாழ்ந்து இருந்தாலும், பகைவரையும் துயரத்தையும் ஏற்ப்டுத்தும். தீ அபாயங்களை ஏற்படுத்த்ய்ம்.

14.வடக்கும், வடமேற்கும் உயர்ந்தும், தெற்கும், அக்னி மூலையும் பள்ளமாகவும் இருந்தால் நோய்கள் வாட்டும். நீண்டகால வியாதிகள் தோன்றும்.

15.வடக்கும், வடமேற்கும் உயர்ந்தும், தெற்கும் தென்மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், தீய நடவடிக்கையில் ஈடுபடுத்தி விடும். சிறைத் தண்டனை கிடைக்க நேரிடும்.

16.கிழக்கும், ஈசான்யமும் உயரமாகவும்,மேற்கும், தென்மேற்கும் பள்ளமாவும் இருந்தால் சந்ததி விருத்தி கிடையாது. இருந்தானும், நோய்களில் ஆழ்த்தி விடும்.

17.கன்னி மூலை, வாயு மூலை மற்றும் ஈசாக்ய மூலை மூன்றும் உயரமாகவும் அக்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், தீ விபத்தினால் பல இழப்புகள் ஏற்படும். கொடுமையான பலன்கள் கொடுக்கும்.

18.மேற்கும், கன்னி மூலை, அக்னி மூலையும் உயரமாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால் தரித்திரராவார். நோய்களை ஏற்படுத்தும்.

19.ஈசான்யத் திசையும், அக்னி மூலையும், கன்னி மூலையும் உயரமாகவும். மேற்குவாயு மூலை பள்ளமாகவும் இருந்தால் மிகத் தீய பலன் களை ஏற்படுத்தும்.

20.அக்னி மூலை உயர்ந்தும் மற்ற அனைத்து மூலைகமள், திசைகள் பள்ளமாகவும் இருந்தால்,செல்வ வளர்ச்சியும், குடும்ப அமைதியும் ஏற்படும். பல நன்மைகள் ஏற்படும்.

21.கன்னி மூலை உயர்ந்து மற்ற அனைத்து மூலைகள், திசைகள் பள்ளமாகவும் இருந்தால், செல்வ வளர்ச்சியும், குடும்ப அமைதுயும் ஏற்படும். பல ந்ன்மௌகள் ஏற்படும்.


No comments:

Post a Comment