Tuesday, September 16, 2014

விநாயகரிடம் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வணங்கும்போது 21 அல்லது 108 முறை வலம் வந்து வணங்குவது மரபு

விநாயகர் முன் நின்று தலையில் குட்டிக் கொள்வது, தோப்புக்கரணம் இடுவது, சிதறு தேங்காய் போடுவது, அர்ச்சனை செய்வது, மோதகம் படைப்பது போன்ற தனித்தன்மை மிக்க வழிபாட்டுமுறைகள் பல இருக்கின்றன. இதையெல்லாம் விட விசேஷமான வழிபாடு விநாயகரை வலம் வருவது தான். ஏனென்றால், அவரே இதை விருப்பத்தோடு செய்திருக்கிறார். கனிக்கான போட்டியில், அம்மையப்பரே உலகம் என்று பெற்றோரை வலம் வந்து வணங்கினார். பொதுவாக கோயில்களில் மூன்று முறை வலம் வருவது வழக்கம். ஆனால், விநாயகரிடம் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வணங்கும்போது 21 அல்லது 108 முறை வலம் வந்து வணங்குவது மரபு

No comments:

Post a Comment