Monday, September 22, 2014

ராமர் சூரிய வம்சம் , கிருஷ்ணர் சந்திர வம்சம்.

ராமர் சூரிய வம்சம் , கிருஷ்ணர் சந்திர வம்சம்.
ராமர் பகல் பன்னிரண்டு மணிக்கு பிறந்தார்.
கிருஷ்ணர் இரவு பன்னிரண்டு மணிக்குபிரந்தார்.
ராமர் கடக லக்னம். கிருஷ்ணர் ரிஷப லக்னம்.
ராமர் புனர்பூச நட்சத்திரம், கடக ராசி.
கிருஷ்ணர் ரோகினி நட்சத்திரம், ரிஷப ராசி
இருவருக்கும் லக்னதிலேயே சந்திரன்.
ராமர் ஏகபத்தினிவிரதம் உடையவர்.
கிருஷ்ணர் இவரும் ஏகபத்தினி விரதம் உடையவர்தான்.
ராமர் கடவுளாக இருந்தாலும் தன்னை எந்த இடத்திலும் கடவுள் என்று காட்டிக்கொள்ளாமல், மனிதனை போல் வாழ்ந்துகாட்டினார்.
கிருஷ்ணர், எல்லா இடத்திலும், பரம்பொருள்தான் நமக்கு அனைத்தும் என்கின்றபடி தன்னை மறைத்துக்கொண்டு அதே நேரத்தில் வெளிபடுத்திக்கொண்டும் காண்பித்தார்.
ராமர் ராஜ வம்சத்தில் பிறந்தார். கிருஷ்ணர் யாதவகுலத்தில் அவதரித்தார்.
மக்களே, நீங்கள் கிருஷ்ணனை வணங்கி, ராமற்போல் வாழவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
இதற்காகவே வந்ததுதான், ராமயனமிம் பாகவதமும். இரண்டும் இரண்டு ரத்தினங்கள். யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது.

No comments:

Post a Comment