Thursday, September 18, 2014

முருகன் தமிழ்க் கடவுள்


.முருகன் தமிழ்க் கடவுள்.


முருகன் எனும் தமிழ் கடவுள் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவின் பல பகுதிகளிலும் சமிஸ்கிருத மொழிப் பெயரான கார்த்திகேயர், சுப்பிரமணியர் மற்றும் ஸ்கந்தன் என்றும் வணங்கப்பட்டு வந்துள்ளார். கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலுண்டு வளர்ந்ததால் கார்த்திகேயன் (வடநாட்டினர் அறிந்த பெயர் இதுவேயாகும்).


முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அறிவுறுத்தினான் என்பது வரலாறு. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான். சங்ககாலத்திற்கு முன்பிருந்தே குறிஞ்சிக் கடவுளான முருகன் தமிழ் மக்களை ஆண்டு வந்திருக்கின்றான். மலை மீது கோவில் கொண்டுள்ள  முருகன் தமிழர்களின் இதயத்தில் நீங்காத இடம் கொண்டு நிலை பெற்ற கடவுளாகும். தமிழகத்தில் பலர் ‘பரமகுரு’ என்றும் ‘குருநாதன்’ என்றும் முருகனை வணங்கி வருகின்றார்கள். உலகில் பல இடங்களில் முருக வழிபாடு தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்றது. முருக வழிபாடானது தமிழ் மக்களிடையே காணப்பட்ட மிகத் தொன்மையான வழிபாடாகும். சில காலங்களுக்கு முன் தமிழகத்திலே மேற்கொள்ளப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சிகளின் போது சேவற் சிலைகள், காவடிச் செதில்கள், வேல் என்பன காணப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.காவடி என்றாலே அது முருகனுக்கு மட்டும் உரியது

முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.

தேவர் மூவரின் பெயர்களின் முதலெழுத் துக்கள் சேர்ந்ததேமுருகஎன்ற திருநாமம்.
முகுந்தன்முதிருமால்
ருத்ரன்ருசிவன்
கமலோத்பவன்பிரம்மன்

''முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகனின் வரலாற்றைக் குறிக்கும் ஆறுபடை தலங்களும் தமிழகத்திலேயே உள்ளன. அவ்வையார், நக்கீரர், அருணகிரிநாதர் போன்ற அருளாளர்களின் தமிழ்ப்பாடல்களை கேட்டு மகிழ்ந்தவர் முருகன். அதனால், அவர் தமிழ்க்கடவுள் என்று போற்றப்படுகிறார்

தமிழ்க் கடவுள் என்பது முருகனையே! மொழிக்கு கடவுளான ஆறுமுகனுக்கு விழிகளோ பன்னிரண்டு. அருந்தமிழுக்கு உயிரெழுத்துக்களும் பன்னிரண்டு! முக்கண் சிவனின் மைந்தனுக்கு மூவாறு கண்கள். முத்தமிழ் மொழியின் மெய்யெ ழுத்துக்களும் மூவாறு (பதினெட்டு) அவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவாறாய் பகுக்கப்பட்டுள்ளன. முருகன் கை வேலாயுதம் ஒன்றே போல் தமிழில் ஒரே ஒரு ஆய்த எழுத்தும் உண்டு. பிற மொழி எதிலும் இல்லாத சிறப்பெழுத்து!

No comments:

Post a Comment