Tuesday, November 18, 2014

ஆசமனம்

ஆசமனம்
ஆசமனம் என்பதற்கு அகராதியில்  கர்மானுஷ்டானத்தின் ஆரம்பத்திலும்,முடிவிலும், சிறு துளிகலாக மூன்று முறை மந்திரங்களுடன் கூடிய ஜலத்தை (வலது உள்ளங்கையினால்) பருகுதல்-sipping drops of water, thrice (with mantras) before and after religious ceremonies (from palm of right hand) என்று பொருள் உள்ளது.
ஆசமனம் என்பது உள்ளத்தையும்,வாக்கையும் தூய்மைபடுத்தும் செயலாகும். பல்வேறு நற்செயல்களுக்கு முன்னும்,பின்னும் இதை
செய்வர். கை, கால்களை கழுவுதல், குளித்தல் இவை உடல் தூய்மைக்காக செய்வதாகும்.ஆசமனம் என்பது உள்ளத் தூய்மைக்காக செய்வதாகும்.
ஆசமனம் எப்படி செய்வது?

வலது கையை பசுவின் காதுபோல் கோகர்ண முத்திரை செய்து கொண்டு, அதில் உளுந்து மூழ்குமளவிற்கு ஜலம் எடுத்துக்கொண்டு, பிறகு சுண்டு விரலையும் கட்டை விரலையும் நீக்கி கையை குவித்துக் கொண்டு உறிஞ்சுகின்றபோது ஒலி எழாமல்,கைகள் உதட்டின் மீது படாமல் நீர் பருகுவதே ஆசமனம் எனப்படும். இவ்வாறு 3 முறை மந்திரம் கூறி நீர் பருக வேண்டும்.பிறகு உதடுகளை வலதுகை பெருவிரலின் அடியால் இரண்டு தடவை துடைத்து, பின் கட்டை விரல் தவிர நான்கு விரல்களாலும் துடைக்கவேண்டும்.

No comments:

Post a Comment