Tuesday, February 10, 2015

பிரதட்சிணம் செய்வது எதற்காக?

பிரதட்சிணம் செய்வது எதற்காக?
நடுவிலே ஒரு புள்ளியை வரையாமல் நாம் வட்டம் ஒன்றை வரைய முடியுமா? வட்டம் வரைவதற்கு ஒரு புள்ளி வேண்டும் அல்லவா? அதுபோல், நம் வாழ்க்கைச் சக்கரம் சுழல்வதற்கு, கடவுள் என்ற ஒரு புள்ளி வேண்டும். அதை மையமாக வைத்தே நம் வாழ்க்கை இயங்குகிறது.
நம் வாழ்வின் ஆதாரமும் செயலும் கடவுள் என்ற புள்ளிதான்.
நம் தினசரி செயலின் ஆதாரமும், பணிகளின் மையமும் தெய்வமே என்பதை உணர்த்தத்தான், கடவுளை மையமாக வைத்து, நாம் ஆலயங்களில் சந்நிதியைச் சுற்றி வருகிறோம். கோயிலில் ஆண்டவன்தான் நம் மனத்திலிருந்து சரியான தொலைவில், அதாவது நமக்கு அருகில் இருக்கிறார் என்ற எண்ணத்தோடு சுற்றுகிறோம் அல்லவா?
வட்டத்தின் மையப் புள்ளியிலிருந்து வட்டத்தின் சுற்றளவில் எந்தப் புள்ளிக்கும் செல்லும் ஆரமானது ஒரே அளவாக இருக்கும். அதுபோல், நாம் கடவுளிடமிருந்து சமதூரத்திலேயே எங்கும் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதே இந்த பிரதட்சிணம்.

No comments:

Post a Comment