Friday, April 24, 2015

வேதத்திற்க்கும் வேதாந்திற்க்கும் என்ன தொடர்பு..?

வேதம் என்றால் அறிவு. அறிதல். என பொருள். இந்த உலகத்தில் நாம் காணும் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது அறிவு. வேதம் என்பது புத்தகமல்ல. அவைகள் என்றென்றும் இருக்கும் அறிவு.உதாரணமாக மின்சாரத்தை கண்டுபிடிக்கிறோம்.இது ஒரு வேதம்(அறிவு).இதை நாம்
கண்டுபிடிக்காவிட்டாலும் அது இருக்கும்.அதேபோல் இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் வேதத்திலிருந்து(அறிவிலிருந்து) வெளிப்பட்டது....இந்த கண்ணோட்டத்தில் தான் வேதத்தை பார்க்கவேண்டும்.

2.இன்றைய கண்டுபிடிப்புகள் முதல் பழைய காலங்களில் கண்டுபிடிக்கப்ட்டவை இனி கண்டுபிடிக்கப்பட வேண்டியவை அனைத்தும் வேதங்களே

3.இந்த வேதங்களை பழைய காலத்தில் தொகுத்து வைத்தார்கள்.அவையே ரிக்.யசூர் போன்ற வேததொகுப்புகள்....ஆனால் வேதங்கள் இவைகளுள் அடங்கிவிடுபவை அல்ல...வெளிநாட்டினரின் கண்டுபிடிப்புகள் உட்பட அனைத்தும் வேதங்களே...

4.வேதங்களின் சாரம் வேதாந்தம்....இந்த உலகத்தில் பலவிஷயங்களை பற்றி நாம் அறிகிறோம்..ஆனால் எதை அறிந்தால் இறைவனை அறியலாமோ எதை அறிந்தால் இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் ஒருக்கத்தையும் அறியமுடியுமோ அது தான் சிறப்பான அறிவு....அந்த சிறப்பான அறிவுக்கு வேதாந்தம் என்று பெயர்.

5.வேதங்கள் யாருக்கும் தனியுடமை அல்ல....அதேபோல் வேதந்த தத்துவமும் யாருக்கும் தனியுடமையல்ல...வேதாந்தத்தை கற்க சிறந்த புத்தகம் நமது மனம்....

No comments:

Post a Comment