Monday, May 18, 2015

கண்ணன் சாரதியானதிற்கு காரணம்

கண்ணன் சாரதியானதிற்கு காரணம்


போருக்கு ஆயத்தனமான இரு அணீயினரும் போர்தான் என்று தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டார்கள்.அவர்கள் தங்களுக்கு உதவியாகப் பக்க பலமாக பல உறவினர்களையும்அன்பர்களையும்நண்பர்களையும் ,அபிமானிகளையும்,ஆதரவாளர்களையும்,சிற்றரசர் பேரரசர் போன்றவர்களையும் பலதரப்பட்ட வீரர்களையும் திரட்டிக்  கொண்டார்கள்.
போருக்கு வேன்டிய கஷரத துரக பதாதி ( யானை தேர்குதிரை,கலாள்) படைகளும் மற்றுமக்கால முறைப்படி தேவைப்படும் படைக்கலன்களான அம்புவில்லு ஈட்டிவாள்,சூலம்,வேல்பறைகள்( மேளங்கள்) சங்குகள்ஊதுகுழல்கள் யாவும் திரட்டி விட்டார்கள்.திகதி,நாள்நேரம் யாவும் முற்றாகி விட்டது.போர்ப்பிரகடனமும் ( பிரசித்தம்)செய்யப்படுகின்றது.
ஆனால் 56 தேசத்திற்கு அதிபதியான கண்ணபிரானனின் உதவியைக்கேட்டு எதிரிகளான இருவரும்  ஒருவரயொருவர் அறிந்து கொள்ளாமல் செல்லுகின்றார்கள்.ஆனால் இருவரும் ஒரே சமயத்தில் புறப்பட்டு முன்பின்னாக செல்கிறார்கள்.துரியோதனன் முன்னும் அர்ச்சுனன் தாமதமாய் பின்னரும் சென்றார்கள்.
அச்சமயம்  ஸ்ரீகிருஷ்ணர் உறங்கி கொண்டிருந்தார் .முதலில் சென்ற துரியோதனன் அகம்பாவத்துடன் கண்ணனின் தலைமாட்டருகில் ஆசனத்தில் அமர்ந்திருந்தான்.பிந்திச் சென்ற அர்ச்சுனன் கண்ணனின் காலருகில் கைகூப்பையபடியே அமைதியாக அடக்கமாக நின்றான்.
ஸ்ரீகிருஷ்ணர் கண் விழித்தமும் தன் கால்மாட்டில் நின்ற அர்ச்சுனனை முதலில் பார்த்து புன்னகையோடு அவனுக்கு நல்வரவு கூறினார்.அதேசமயம் பின்னுக்கு திரும்பியவர் தலைமாட்டில் துரியோதனன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த்தைக் கண்டு அவனையும் வரவேற்று உபசரித்தார்.
பாண்டவர்களுக்கும் தங்களுக்கும் போர் தொடங்க முடிவாகிவிட்டது.என்ற விபரத்தை கூறிய துரியோதனன் தான் முதலில் வந்திருப்பதாகவும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டினான்.அப்படியாஆனால் நான் கண் விழித்தும் முதலில் அர்ச்சுனனைத்தான் கண்டேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் இருவரும் சமமே.அனாலும் பரிசுகள் வழங்கும் போது சிறியவர்களுக்குத்தான் முதலில் வழங்குவது வழக்கம்.அதுவே முறை என்று கூறிய ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனைப் பார்த்து அர்ச்சுனா! எனது பெரிய சேனை ஒருபுறம் இருக்கும் .மறுபுறம் நான் தனியாகவும் ஆயுதம்  எதுவும் எதுவும் எடுக்காத நிராயுதபாணியாகவும் இருப்பேன்.இந்த இரண்டில் எதை நீ விரும்புகிறாய் என்பதைக் கூறவேண்டும் என்றார்.
இதைக்கேட்ட அர்ச்சுனன் ஆயுதம்
 ஏந்தாத நிராயுத பாணியாக நீர் மட்டும் என் பக்கம் இருந்தால் போதும் என்றான்.துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணருடைய பெரும் சேனைகளையே கேட்டுப் பெற்றான் பெருமகிழ்ச்சியோடு சென்றான்.அதே சமயம் கிருஷ்ணர் அர்ச்சுனா!” எனது பெரும் சேனைப்பலத்தை விட்டு விட்டு  ஏன் இந்த தீர்மானத்திற்கு வந்தாய்என்று கேட்டார்.கிருஷ்ணா! நீர் நிராயுதபாணியாய் ஆயுதம் எதுவுமே ஏந்தாமல் எனக்கருகே தேரோட்டியாய் இருந்து நான் வெற்றி பெற வேண்டும்.என்னுடைய இந்த விருப்பத்தை நீர் நிறைவேற்றினால் அதுவே போதும் என்றான்.அவன் விருப்பப்படியே ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு ( பார்த்தனுக்கு) தேரோட்டியாக இணங்கிச் செயல்பட்டார்.இதுவே கண்ணன் சாரதியானதிற்கு காரணம்

No comments:

Post a Comment