Saturday, May 16, 2015

வால்மீகி ராமாயணம் பற்றிய ஒரு தகவல் .....

வால்மீகி ராமாயணம் பற்றிய ஒரு தகவல் .....
வால்மீகி ராமாயணத்தில் மொத்தம் ஏழு காண்டங்கள்.
பால காண்டம்,அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம்,சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்திர காண்டம் எனப்படும்.
பால காண்டத்திலே, ராமரின் பிறப்பும், திருமணமும் வருகிறது.
அயோத்யா காண்டத்தில், திருமணத்துக்கு பிறகு வாழ்ந்த நாட்கள்,உடன் பாட்டாபிஷேகம் ஏற்பாடு ஆகி, மந்தரையினால் நின்று போவது, உடன் காட்டுக்கு புறப்படுதல்,
ஆரண்ய காண்டத்தில், தண்டகாரண்யம் என்று சொல்லகூடிய அடர்ந்த காட்டு பகுதியில் வாழ்க்கை
சுந்தர காண்டத்தில், ஹனுமான் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு , சீதையை தேடி கண்டேன் சீதையை என்று வந்து சொல்லுதல்.
யுத்த காண்டத்தில் ராவணன் அழிதல்,
இதுவரைக்கும்தான் நாம் பாராயணம் செய்கிறோம். குடும்ப நலனுக்காக.
யாருக்கு முக்தி தேவையோ அவர்கள் உத்திர காண்டத்தையும் சேர்த்து படிப்பது வழக்கம்.
அது சரி, இவ்வளவும், பதிமூன்று வயதில் திருமணம், 25 வயதில், தண்டகாரண்யம்.39 வயதில் பட்டாபிஷேகம். பிறகு ராஜிய பரிபாலனம் செய்து 110 வயதில் வைகுண்டம், என்று சொல்லுகிற இந்த சரித்திரத்தில்,
நமக்கு நல்லது நடக்க நாம் பெரும்பாலும் படிப்பது, சுந்தர காண்டம்தான்.
ராமரின் 110 வருடத்தில், வனவாசம் 14 வருடங்கள்.
இப்படி சொல்லுகிறோம் அல்லவா, அப்போது ராமாயணத்தில், சுந்தர காண்டம் என்கிற பகுதிகளின் கால அளவு என்ன என்று கவனித்தால் .....
ராமேஸ்வரத்தில் இருந்து கந்தமாதன பர்வதத்தில் இருந்து புறப்பட்டு, அசோகவனத்தில் சீதையை கண்டு, பிறகு இலங்கையை கொஞ்சம் அழித்து, திரும்ப ராமேஸ்வரம் வந்து, கண்டேன் சீதையை, என்கிற வரைக்கும் சுந்தர காண்டம் என்று சொல்லபடுகிறது .
இதன் கால அளவு, அதாவது ராமரின் வாழ்க்கையில், ராமாயணத்தில் உள்ள 7 காண்டங்களில்., மொத்தம் 110 வருடத்தில், தண்டகாரண்யம் என்று சொல்லுகிற வன வாசம் 14 வருடத்தில், இந்த சுந்தர காண்டம் என்பது வெறும் இரண்டு நாட்களே ஆகும்
இந்த பாராயணம்தான் நமக்கு அனைத்தையும் தருகிறது.
நன்றி .....

No comments:

Post a Comment