Sunday, May 17, 2015

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவதும் ஏன்? எதற்கு?

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவதும் ஏன்? எதற்கு?
கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவ தும் ஏன்? ஓர் அரியதொரு விளக்க‍ம்
சங்கு உருவானதால் சங்கொலி அதர்மத்தின் அழிவை யும், தர்மத்தின் வெற்றியையும் காட்டுகிறது. சங்கு பிறந்த கதைக் கேற்ப சங்கை நம் காதருகில் வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் ஓசையை நம்மால் கேட் க முடியும்.
வேதங்களின் பொருளான ஓ ம்கார மந்திரத்தைத் தருவதா லும், தர்மத்தை நிலைநாட் டும் பொருளைத் தருவதாலு ம் பூஜையறையில் இறைவ ன் முன்பு வைத்து வணங்கப் படும் அளவு சங்கிற்கு சிறப்பு உண்டு. மங்கலகரமான பூ ஜை நேரங்களில் அமங்கல மான வார்த்தைகளோ, பேச்சுக்களோ பக்தர்களின் காதில் விழு ந்து பக்தி மனோபாவத்தைக் குறைத்து விடாதிருக்கவும் சங்கு ஊதுவது உதவுகிறது.
மேலும் சங்கு ஊதுவது ஆன்மி க ரீதியாக அல்லாமல், ஆரோக் கிய ரீதியாகவும் உதவுகிறது. சங்கு ஊதும் போது நாதமானது மூலாதாரத்தில் இருந்து எழுகி றது. அதனால் சங்கு ஊதுவதன் மூலம் மூலாதார சக்ரா நன்றா க செயலாக்கம் பெறுகிறது.
மேலும் சங்கு ஊதுவதினால் மூச்சு ஆழப்பட்டு, நுரையீரல் செய ல்படுவதும் சீராகிறது. சங்கி ற்கு உடலைப் பாதிக்கும் நுண்கிருமி களை அழிக்கும் தன்மை உள்ளது என்று நம் முன்னோர் நம்பி னார்கள். அதனால் தான் தீர்த்தம் சங் கில் தரப்படுவது விசேஷமா கக் கருதப்பட்டது. குழந்தை களுக்கும் அக்காலத்தில் மருந்தையும், பாலையும் சங்கில் ஊற்றித் தரும் வழ க்கம் நம் வீடுகளில் இருந்தது.
கோயில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது மணி அடிப் பதும் கூட சங்கு ஊதுவதைப் போன்றே மங்கல ஒலியா கக் கருத ப்படுகிறது. மணி அடிக்கும் போதும் ஓம்கார ஒலி ஒலிக்கிறது. பூஜை நே ரங்களில் தெய்வீகசூழ் நி லைக்குப் பொருந்தாத ஓசை களை மூழ்கடித்து இறைவ னிடம் மனம் லயிக்க மணி அடிப்பதும் உதவுகிறது.
கோயில்களில் பெரிய பெரிய மணிகள் தொங்க விடப்பட்டிருப் பதை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றை அடிப்பதில் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆர்வம் காட்டு வதுண்டு. அந்த மணிகளை அடிப்பதன் காரணம் குறித்து சிலர் தான்தோன்றி த்தனமாக ஏதே தோ சொல்வது உண்டு. இறைவனை உறக்கத்தில் இருந்து எழுப்பு வதற்காக மணி அடிப்பதாகவும், தங்கள் வருகையை இறைவனு க்குத் தெரியப்படுத்துவதற்காக மணி அடிப்ப தாகவும் சிலர் அறி யாமையால் சொல் வதுண்டு. எழுப்பி தெரியப்படுத்த வே ண்டிய அவசியம் இறைவனுக்கு இல் லை. மணி அடிப்பது அறியாமை உறக்க த்தில் ஆழ்ந்து கிடக்கிற நம்மை அதில் இருந்து தட்டி எழுப்பத்தான். அந்த ஓங் கார ஒலியைக் கேட்டவுடன் இறையுண ர்வு எழும்பி நம் மனதினை ஒருநிலைப்படுத்த நாம் செய்யும் ஆய த்தம் தான் மணியை அடிப்பதன் உண்மைப் பொருள்.
பண்டைய காலங்களில் ஒவ் வொரு கிராமத்திலும் ஒரு பிரதான கோயில் இருக்கும். இறைவனுக்குச் செய்யப்ப டும் பூஜைகளின் போது கோ யில்களில் இருக்கும் பெரிய மணிகள் அடிக்கப்படும், சங்கு ஊதப்படும். அந்த ஒலி அந்தக் கிராமம் முழுவதும் கேட்கும். பூஜையில் கலந்து கொள்ள ஆலயத்திற்கு நேரி ல் செல்லும் சூழ் நிலை எல்லோருக்கும் இருக்கும் என்று சொல் ல முடியாது. வே லை உள்ளவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் போன்றவர்கள் பூஜையில் பங்கேற்க முடியாது.
கோயில் மணியின் பலத்த ஒலியும், சங்கொலியும் கேட் கும் போது வேலை செய்பவர் கள் தங்கள் வேலையை அப் படியே நிறுத்தி விட்டு தாங்க ள் இருக்கும் இடத்திலேயே இறைவனை கண நேரம் தொ ழுவார்கள். அதே போல் உடல் நலம் குன்றியவர்களும் அந்த நேர த்தில் வீட்டில் இருந்தபடியே கண நேரம் இறைவனை வணங் குவார்கள். இப்படி மானசீகமாக இருக்கும் இடத்திலேயே இறைவ னைத் தொழும் மங்கலமான சூழ் நிலையை மணிஒலியும், சங் கொலியும் ஏற்படுத்தித் தந்திருக் கிறது. ஊருக்கே கேட்கும் வண் ணம் பெரிய பெரிய ஆலய மணிக ளை அடிப்பதன் உள்ளார் ந்த இந்த அர்த்தம் மிக உன்னதமானது.
கிராமமானாலும் நகரமானாலும் நீங்கள் இப்படிக்கோயில் மணி யோசையும், சங்கொலியும் கேட் க நேர்ந்தால் மேலே சொன்ன காரணத்தை நினைவு கொள்ளு ங்கள். இறைவனை நினைக்க ஒரு நல்ல சந்தர்ப்பமாக அதை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடமே கோயில். அந்த மணியோசையும், சங்கொ லியும் உங்களுக்காகவே ஒலிக் கின்றன. எல்லாவற்றையும் ஒரு கணம் ஒதுக்கி வைத்து விட்டு எல்லாம் வல்ல இறைவனை ஒரு கணம் மானசீகமாக வணங்குங் கள். எத்தனையோ விதங்களில் நேரத்தை நாம் வீணாக்குகிறோ ம். அப்படி இருக்கையில் அந்த ஒரு கணத்தில் மனதை இறைவ னிடம் திருப்புவதால் நம் நேரம் பெரிதாக வீணாகி விடப் போவ தில்லை. மாறாக கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கிப் பெறும் பெரும்பயனை நாம் அந்தக் கணத்தில் பெற்று விடுகிறோ ம் என்பதை நினைவில் வையுங்கள்

No comments:

Post a Comment