Tuesday, June 9, 2015

பரிகாரம் என்றால் என்ன.

பரிகாரம் என்றால் என்ன.
நிறையே பேர் , ஏன், சில ஜோதிடர்களே, பரிகாரம் என்பது பொய் என்று சொல்லுகிறார்கள். இவர்கள் எல்லாரும் ஜோதிடர்களே கிடையாது .
அந்த காலத்தில் , முனிவர்களே சொல்லி இருக்கிறார்கள். கிடையாது என்று சொல்ல நமக்கு அப்படி என்ன மூளை இருக்கிறதா என்ன . இல்லையே./
அதாவது, எந்த படிப்புக்கும், அதற்க்கு உண்டான, புத்தி, திறன், இருக்கவேண்டும். இது இல்லை என்றால் அந்த படிப்பு நமக்கு புரியாதுதானே.
நமக்கு புரியவில்லை என்பதால், அந்த படிப்பே பொய் என்று சொல்லிவிடமுடியுமா. உதாரணம். மருத்துவம் ,கணக்கர் போன்ற பெரிய படிப்புகள்.
அதுபோல்தான் சாஸ்திரம் என்பதும் ஒரு மிகபெரிய படிப்பு .அதற்க்கு ஒரு மூளை வேண்டும். அது இல்லாமல் அதை நாம் படிக்கவே முடியாது. இதை மட்டும் யாரும் ஒத்துக்கொள்வதில்லை.
பரிகாரம் என்றால் என்ன . மருத்துவம் என்றால் என்ன .
அறிவியல் ரீதியாக பார்க்கப்படும் மருத்துவராலேயே 
மாத்திரைகளை கொடுத்து,. அறுவை சிகிச்சை செய்தும், காப்பாத்த முடிவதில்லை . அப்போது இது பொய்தானே . உண்மை என்றால், யாரும் சாகக்கூடாதுதானே. அப்போது , மருத்துவர் ஏமாத்துகிறார் என்று ஒரே வரியில் சொல்லிவிடமுடியுமா.முடியாது. ஏன் என்றால் ,இது நோயாளியின் தலைவிதி என்று சொல்லிவிடுவோம்.
வலி வந்தால் செத்துவிடமாட்டோமே.வலியை பொறுத்துக்கொண்டால், மாத்திரை தேவை இல்லை .
பொருக்கமுடியாததால்தான், நாம் மருத்துவரிடம் செல்கிறோம்.
மாத்திரை மட்டும் டெம்பரவரி relief அவ்வளவுதான். மறுபடி வருகிறதே . இதற்க்கு என்ன பதில்
அப்போ , தெய்வம், கர்மா,போன்றவைகளை நாம் பார்க்கவேண்டும்.
அதுபோல்தான் , கஷ்டம் வந்தால், தாங்கிக்கொள்ளுங்கள் .கோயில் போகாதீர்கள்.ஹோமம் செய்யாதீர்கள்.கடவுளை நொந்து கொள்ளதீர்கள்.
தாங்கமுடியவில்லைஎன்றால், கோயில் செல்லுங்கள், ஹோமம் செய்யுங்கள்.தானம் தர்மம் செய்யுங்கள்.
பலன் இல்லையே, என்றால்,மாத்திரை சாப்பிட்டும் வலி போகவில்லையே, இதற்க்கு நீங்கள் பதில் சொன்னால், பிறகு நான் உங்களுக்கு பதில் சொல்லுகிறேன்.
ஆகவே, பரிகாரம் உண்மை, சத்தியம்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, எமாத்துபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

No comments:

Post a Comment