Saturday, June 6, 2015

தனித்துவம் வாய்ந்த யாகசம்ரக்ஷகர்கள். (வேள்விக்காப்பாளர்கள்)..


தனித்துவம் வாய்ந்த யாகசம்ரக்ஷகர்கள். (வேள்விக்காப்பாளர்கள்)..
இப்போதெல்லாம் தங்களை யாகசம்ரக்ஷகர்களாக பெருமையோடு அறிவித்துக் கொள்கின்ற பல நண்பர்கள் எனது முகநூலில் இருக்கிறார்கள்...
ஆனால், பொதுவில் சிலரிடம் யாகசம்ரக்ஷகர்களைக் காட்டிலும் யாகம் செய்கின்ற ஆச்சார்யர்களே உசத்தி என்கிறது மாதிரியான ஒரு மனோநிலை இருக்கிறது....
ஆனால், சிந்தித்து பார்க்கிற போது யாகசம்ரக்ஷகர்களின் பணியே யாகம் செவ்வனே நிகழ்வதற்கு ஆதாரசக்தியாக இருந்து வருகிறது.. அது இன்றைக்கு மட்டுமல்ல, இராமாயண காலத்திலேயே இது தான் நிலை...
விஸ்வாமித்ர மஹரிஷி தான் யாகம் செய்வதற்காக தசரதமஹாராஜனிடம் வேண்டிக் கொண்டு, ராமலக்ஷ்மணர்களை யாகசம்ரக்ஷகர்களாக அழைத்து சென்று சிறப்பாக யாகம் செய்தாக இதிஹாசம் பேசுகிறது...
ஆக, யாகம் செய்த விஸ்வாமித்ரரை அறியாத நாங்கள் எல்லாம் ஸ்ரீராமரை அறிந்திருக்கிறோம்.. அந்த யாகத்தை ரக்ஷிப்பதற்காக பகவான் ஸ்ரீராமர் செய்த வீரதீரச்செயலை சொல்லிச் சொல்லி மகிழ்கின்றோம்...
இன்றைக்கும் வயதிலும், அறிவிலும், ஆற்றலிலும் தலை சிறந்தவர்களாக விளங்கியும் தங்களை யாகசம்ரக்ஷகர்களாகவே வெளிப்படுத்தி தன்னலமற்றுப் பணி செய்யும் பெரியவர்களை நான் காணும் போதெல்லாம் வியக்கிறேன்... அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்..
ஆக, யாக சம்ரக்ஷகர்களாக இருப்பது பெருமையான விஷயம் என்பதை வெளிப்படுத்துவோம்... பகிர்ந்து கொள்வோம்...

No comments:

Post a Comment