Thursday, August 27, 2015

இறைவன், "பால் நினைந்து ஊட்டு'பவராக இருக்கும் போது அவரிடம் வேண்டுதல் வைப்பது தேவையா?

இறைவன், "பால் நினைந்து ஊட்டு'பவராக இருக்கும் போது அவரிடம் வேண்டுதல் வைப்பது தேவையா?
இறைவன் கருணையாளராக இருக்கும் போது வேண்டுதல் வைப்பது தவறு தான். இதையே மாணிக்கவாசகர், "வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ' என்று குறிப்பிடுகிறார். இதை உணர்ந்தவர்கள் வேண்டுதல் எதுவும் வைக்க மாட்டார்கள். குழந்தை அழுவதற்கு முன் பாலூட்டும் தாயின் கருணையை, "பால் நினைந்து ஊட்டும் தாயினும்' என தாயையே இறைவனுக்கு உதாரணப்படுத்துகின்ற அளவுக்கு அவர் பெருமைப்படுகிறார். ஆனால், குழந்தைகள் இது புரியாமல் அழுகின்றன. அழத்தேவையில்லை. நாம் கேட்காமலேயே இறைவன் தருவான் என்ற உணர்வு வரும் வரை, வேண்டுதல் என்பது இருக்கும். இறையருளால் மனம் பக்குவப்படும் போது மாணிக்கவாசகரின் திருவாசகம் சாத்தியமாகி விடும்.

No comments:

Post a Comment