Tuesday, November 17, 2015

ஓதுவார்" என்போர்? விளக்கம்:

ஓதுவார்" என்போர்? விளக்கம்:
ஓதுதல் எனில் படித்தல், வாசித்தல் என்று பொருள். அவ்வாறு ஆலயத்தில் ஓதுபவர் ஓதுவார் ஆகிறார். இவர்கள் சிவன் கோவில்களில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற திருமுறைத் துதிகளை இசையோடு ஓதுபவர் (பாடுபவர்). இந்த சேவையில் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட இறைத்தொண்டர்கள். சைவவேளாளர் குலத்தவர்களே ஓதுவார்களாயினர். முற்காலத்தில் அரசர்கள் ஓதுவார்களுக்கு நிலம் அளித்து ஆதரித்தனர். பல தலைமுறைகளாக ஓதுவார்கள் திருமுறைப் பண்களை சிவன் கோயில்களில் பாடி வந்தனர். காலப்போக்கில் இந்‌நிலை மாறி ஓதுவார் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே தமிழக அரசு சென்னை மற்றும் பழநியில் ஓதுவார் பயிற்சி மையங்‌களைத் துவங்கியது. இம் மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையும் மிகக் குறைவே...

No comments:

Post a Comment