Tuesday, December 15, 2015

தேரின் அமைப்பு எதை குறிக்கிறது:

தேரின் அமைப்பு எதை குறிக்கிறது:
தேர் கோண வட்ட வடிவமாக இருக்கும். அதன் நடுவில் சாமியை வைப்பார்கள். கடவுள் நம் இதயத்தில் இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது. தேரின் அடியில் ஆறு சக்கரங்கள். இது நம் பிறப்பு குழந்தை பருவம், விடலைப் பருவம் , இளமைப் பருவம் முதுமைப் பருவம் என ஆறு பகுதிகளை குறிக்கிறது. பட்டரை என்ற மரத்தால் செய்த பாகம் இருக்கும். இதன் நான்கு அடிப்பக்கங்களிலும் பஞ்சபூத பொம்மைகள் முன் பக்கம் பார்த்த மாதிரி பட்டரயை தோள்களில் தாங்கிய மாதிரி இருக்கும். இது நம் உடம்பு மண், நெருப்பு, நீர், காற்றினால் ஆனது என்பதைக் குறிக்கும்.
நான்கு பக்கங்களிலும் இருக்கிற ஐந்து பூதங்கள் மொத்தம் இருபது. நம் உடம்பில் இருக்கிற ரோமம், நரம்பு , ரத்தம், சதை , எலும்பு, உமிழ்நீர், வியர்வை, சிறுநீர், மலம் ,தூக்கம், தாகம், பசி , ஓடுவது , நடப்பது, உட்காருவது, படுப்பது சோம்பல், உணர்ச்சி இவற்றைக் குறிக்கும்.
பட்டரையில் உள்ள நான்கு பக்கங்களுக்கு ஒரு பக்கத்திற்கு ஐந்தாக இருபது பட்டைகள் இருக்கும்.இது ஞான இந்திரியம்.ஐந்து காம இந்திரியம் ஐந்து ஆக பத்து. அதன் செயல்கள் பத்து என மொத்தம் இருபது. பட்டரை என்ற இந்த பகுதி ஐந்து அடுக்குகளைக் கொண்டது .இந்த ஐந்து அடுக்குகளின் வெளிப்பக்கங்களில் அறுபத்து நான்கு சிறு சிறு உருவங்களை செய்து வைத்தார்கள்.இடு அறுபத்து நன்கு கலைகளைக் குறிக்கும். பட்டரையின் மேல் மூன்று தட்டுகள் இருக்கும்.அடியில் உள்ள தட்டு எண்கோண வடிவத்திலும் மேல் உள்ள இரு தட்டுகள் சத்ர வடிவிலும் இருக்கும். எண்கோண தட்டு நம் உடம்பில் உள்ள கால் இரண்டு கை கண் மார்பு நெற்றி இவற்றைக் குறிக்கிறது.
இரண்டு சதுரமான தட்டுகளில் ஒரு உயிர்கள் நான்கு விதமான வழியில் உண்டாவதைக் குறிக்கிறது.அடுத்த தட்டு தெய்வீக நிலையை நாம் அடைவதற்கான படிக்கட்டுகளையும் குறிக்கிறது. பட்டரைக்கு மேல் மரத்தால் செய்த பதினாறு தூண்கள் இருக்கும்.இது நாடியைக் குறிக்கிறது.இதன் நடுவில் காலி இடம் .இதில் தான் சுவாமி சிலை .நம் இதயத்தில் தெய்வம் உள்ளதைக் குறிக்கும். இந்த தூண்களுக்கு மேல் மெல்லிசான சட்டங்களால் இணைத்து சேர்க்கப் பட்ட நான்கு சதுர அடுக்குகள் (நான்கு வேதங்கள்) வரிசையாக ஒன்றன் மேல் ஒன்றாக இருக்கும் .நான்காவது அடுக்கின் மேல் கலசம். (கலசம் தான் சகஸ்ராதார நாடி) அது மலர்ந்து தாமரைப் பூ மாதிரி கடைசியில் ஒரு நுனியில் சென்று முடியும். (மலர்வது எல்லாம் ஒன்றாக தோன்றி இறுதியில் ஒன்றுமில்லாமல் ஒரு முனையில் முடிவதைக் குறிக்கிறது.
தேரில் நான்கு பொம்மை குதிரைகள் தேரை இழுத்து செல்வது போல் இருக்கும்.அந்த நான்கு குதிரைகளின் கடிவாளம் பாகன் கையில் இருக்குமந்த நான்கு குதிரைகள் மனம், புத்தி, அகங்காரம், சித்தம் இவற்றைக் குறிக்கும்.கடிவாளங்கள் நம் அறிவு. பாகன் நம் மனசாட்சி.மனசாட்சிக்கு பயந்து அரிவாள் நாம் நான்கு குதிரைகளை நல்வழியில் ஓட்டி சென்றால் நம் ஆன்மா நல்வழிப்படும்.

No comments:

Post a Comment