Sunday, May 1, 2016

நாம் வணங்குவது வெறும் கல்லை அல்ல அறிவியலை

நாம் வணகுகின்ற மூலவருக்கு ஏன் அபிஷேகம் செய்ய வேண்டும்?
இந்த கேள்விக்கு விடை தெரிவதற்கு முன் நாம் ஒன்றை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவ்விசயம் எதுவெனில் நாம் வணங்குவது வெறும் கல்லை அல்ல அறிவியலை.
நம் முன்னோர்கள் கட்டிய ஆலயங்களை பற்றி ஆராய்ந்தால் ஒரு உண்மை தெரியவரும் அது யாதெனில் ஒவ்வொரு ஆலயமும் அமைய பெற்ற இடமானது ஒரு அறிவியல் சார்ந்த அல்லது அறிவியலுக்கு நேர்மாறான ஏதாவது ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்கும் எடுத்துக்காட்டாக திருநள்ளாறு, சிதம்பரம், போரூர் போன்ற இடங்களில் அமைய பெற்ற ஊர் மற்றும் ஆலயங்களை எடுத்துகொள்ளலாம்.
இவ்வாறு அமைய பெற்ற ஆலயங்களில் மூலவராக அமைக்கப்படும் சிலைகள் சாதாரண கல்லாக இருக்க வாய்ப்பு இல்லை. பெரும்பாலான கோவில்களின் மூலவர்கள் சிலாதோரணம், ஸ்படிகம், நவபாசனம், தசபாசனம், மாணிக்கம், மரகதம், ஐம்பொன், என்று இன்னும் கிடைபதற்கரிய பெயர் தெரியாத பலவிதமான பொருட்க்களால் செய்யப்பட்டவையே. அல்லது கதிர் வீச்சு சார்ந்த அறிவியல் உள்ள இடத்தில் மட்டுமே மூலஸ்தானம் அமைக்கப்படும்.
இப்படி அமைக்கப்பெற்ற மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் பொருள்களும் மாறுபடுவதை காணலாம். குறிப்பிட்ட இடத்தில் இருந்து தான் நீர் எடுத்து அபிஷேகம் செய்யப்படும். அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள் அதன் அருகில் உள்ள குளத்தில் கலக்கும் வண்ணம் அமைக்க பட்டு இருக்கும்.
இங்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படும் பொருள்களை கவனிக்க வேண்டும். பால், தயிர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி. இந்த பொருள்களின் பாயும் தன்மையானது ( மேல் இருந்து கீழே விழும் நேரம்) மாறுபட்டு இருக்கும். இப்படி மாறுபட்ட பாயும் தன்மை உடைய பொருட்களால் அபிஷேகம் செய்யும் பொழுது ஒவ்வொரு பொருளும் அந்த மூலவர் சிலையில் இருந்து வெவ்வேறு அளவிலான மருத்துவம் மற்றும் அறிவியல் சார்ந்த விசயங்களை தன்னுடன் சேர்த்து எடுத்து வருகிறது. இதனையே பிரசாதமாக நமக்கு வழங்கப்பட்டு நாம் உண்கிறோம்.
முன்னோர்கள் (சித்தர்கள்) குறிப்பிட்ட நோய்க்கு குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று குறிப்பிட்ட பொருளால் அபிஷேகம் செய்து குறிப்பிட்ட நாட்கள் அதனை பிரசாதமாக சாப்பிட்டால் நோய் தீரும் என சொல்ல நாம் கேட்டு இருக்கலாம்.
ஆனால் இன்று கால மாற்றாத்தினால் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
இது தெரியாத பல அறிவீலிகள் நாம் அபிஷேகம் என்ற பெயரில் அனைத்தையும் வினாக்குவதாக கேலி செய்துகொண்டு திரிகின்றன.
மீண்டும் சொல்கிறேன் நாம் வணங்குவது வெறும் கல்லை அல்ல அறிவியலை.
---ஓம் நமசிவாய

No comments:

Post a Comment