Sunday, May 1, 2016

மரணம் என்னும் அச்சத்தை போக்குவது எது?

மரணம் என்னும்
அச்சத்தை போக்குவது எது?
பூவுலகத்தில் தோன்றும் அத்தனை உயிர்களுக்கும் பொதுவானது மரணம். பிறப்பது அனைத்தும் இறக்கத்தான் வேண்டும். இதுதான் இயற்கையின் நியதி. தவிர்க்க இயலாத ஒரு நிகழ்வு என்று உணர்த்தும் மரணத்தை எண்ணி அஞ்சாத உயிர்களும் இல்லை, இந்த அச்சத்தைப் போக்கவல்லது இறையருள் ஒன்றுதான். இதனையே அபிராமி பட்டர்.....
வவ்விய பாகத்து இறைவரும்
நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை
ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல்
வரும்போது-வெளி நிற்கவே. என்கிறார்.
அபிராமி அந்தாதி
அபிராமி அன்னையே!
உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும்,
உங்கள் திருமணக் கோலத்துடனும்,
என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து, என் உயிரைக் எடுத்து செல்ல என் மேல் கோபமாக வரும் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும் அன்னை அபிராமி தாயே.

No comments:

Post a Comment