Monday, May 23, 2016

எது தானம் - எது தர்மம் கீதையில் விளக்கம் தருகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

>> எது தானம் - எது தர்மம் கீதையில் விளக்கம் தருகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ...<<
பாரதப் போரில் மிகப் பெரிய கொடையாளி கர்ணனின் உயிர் பிரியாமல் காத்தது அவர் செய்த தான தர்மங்கள், ஆனால் விதிப்படி உயிர் பிரிந்தால்தான் அவரின் தேகம் சாந்தியடைந்து அவரின் உயிர் இறைவனை சரணடையும் என்பதால் அவரின் உயிரை போக்க கண்ணனே அந்தனர் வேடத்தில் வந்து கர்ணன் செய்த புண்ணியங்களை தானம் பெற்றார். கண்ணன் அருளால் கர்ணன் மோட்சத்தை அடைந்தார்.
இதுகுறித்து சூரியதேவன் கண்ணனிடம் தானம் தர்மம் இவற்றிற்கு உள்ள வித்தியாசத்தை விளக்குமாறு வேண்டிக் கொண்டதன் பேரில் கண்ணன் கூறிய தான தர்ம உரைதான் கீழே உள்ளது.
தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....
ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.
கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.
எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா என்றார் கண்ணன்.

No comments:

Post a Comment