Saturday, January 29, 2011

சண்டேஸ்வரர்

சண்டேஸ்வரர்
பசு மேய்ப்பவன் பசுவைக் கோலால் அடிப்பதைக் கண்டு மனம் பொறுக்காது மேய்ப்பவனை விலக்கி தானே அப்பசுக்களை மேய்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பசுவினை மேய்க்கும் காலத்தில் அப்பசுக்கள் தாமாகச் சொரிந்த பாலைக்கொண்டு சிவலிங்கப்பெருமானுக்கு அபிஷேகம் புரிந்து வழிபடலானார். இச் செயலைப் பாதகச் செயல் எனக் கருதிய தந்தையர் உண்மையை அறியாது அப்பாற்குடத்தைக் காலால் இடறினார். அவ் வேளை விசாரசருமர் தன் சிவபூசைக்கு இடையூறு செய்தவர் காலை சிறு தடியால் அடிக்க அது மழுவாகித் தந்தையின் காலைத்துண்டித்தது.

தந்தையாக இருந்தும் சிவபூசைக்கு இடையூறு செய்தவரைத் தண்டித்த உறுதி கண்ட சிவன் இருவருக்கும் அருள் புரிந்து விசாரசருமருக்கு சிவ வழிபாட்டின் பயன் நல்கும் சண்டேஸ்வரர் பதவியைக் கொடுத்தார். இன்று சிவாலயங்களில் சிவவழிபாட்டின் பயனைத் தரும் தெய்வமாகச் சண்டேஸ்வரர் விளங்குகின்றர்

No comments:

Post a Comment