Friday, January 28, 2011

கீதை கூறும் ஆன்மீகம்

கீதை கூறும் ஆன்மீகம்

வேதங்களின் உதாணரமான உபநிடதம், பகவத் கீதை, மகாபாரதம், இராமயாணம்,முக்கியமாகக் கருதப்படுகிறது. இவற்றுள் பகவத்கீதை என்ற புகழ் வாய்ந்த பகுதி மகாபாரத்தில் உள்ளது. குருசேத்திரப் போர்க்களத்தில் பாண்டவர்-கெளரவ அணிகளுக்கிடையில் போர் மூளவிருந்த சூழலில் பாண்டவ வீரனான அர்ச்சுனன் உறவு சார்ந்த உணர்வுகளால் பாதிக்கப்பட்டு மனம் சோர்ந்து உள்ளான். இந்நிலையில் ,சாரதியான கிருஷ்ணன் அவனது மனச்சோர்வுக்கான அடிப்படைகளை அகற்றும் வகையில் அறிவுரை புகட்டுகிறான். தனது உண்மையான தெய்வீகக் கோட்பாட்டை வழங்கி அதன் மூலம் அவனே போர் புரிவதற்கு நெறிப்படுத்துகிறான்.
மகாபாரதம் கதையமைப்பில் கதை என்ற பகுதி தரும் இது.
பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களில், அவைகள் ஆறு அத்தியாயங்களாய் மூன்றுபகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பகுதிகளிலும் தத்துவம், இதம், கடமை என விவரித்துள்ளது.
மூன்று காரணங்களால் இதை இணையற்று விளங்குகிறது.
அவை :
"அது உபதேசிக்கப்பட்ட இடம், சந்தர்ப்பம் "
"அந்த உபதேசத்தைப் பெற்ற நபரின் தகுதி "
" தனி நபரின் முயற்சிக்கு கீதை கொடுக்கும் முக்கியத்துவம் "
கீதையின் பிறப்பு, இதனை உபதேசிக்க தேர்தெடுத்த இடம் போர்களம் " போர் செய்ய மறுக்கும் அருச்சுனனுக்கு இது உபதேசிக்கப்படதுதான். ஆன்மீக விளக்கங்களும், வாதங்களும் நடைமுறையில் கடைப்பிடிக்க முடியாத, செயலுக்கு ஒத்துவராத வெறும் சொற்களே அல்லது வாதங்களோ அல்ல. அவை வாழ்க்கையோடு பின்னி பிணைந்தவை. ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறி முறைகள்.
பகவத் கீதை தர்ம சாஸ்திரமாக மட்டுமே விளங்குகிறது என்ரு பலரும் நினைத்துக்கொண்டு உள்ளனர். இது தவறான கருத்தாகும், எண்ணமாகும். பகவத் கீதை ஆன்மா உயர்வுக்கு காட்டியாக உள்ளது. மனிதன் சகல துக்கங்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், தொல்லைகளிருந்தும் விடுபடும் வழியினை, மார்க்கத்தினை போதிப்பதே, உபதேசிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
" கடவுளை நம்பினோர் கைவிடப்பார் " இதுவே பக்தி.
அவனை நம்பியோர் செய்யத்தக்கது எதற்கும் துயர்ப்படாமல், பயப்படாமல் இருத்தல்-
எதற்கும் ஐயறவு கொள்ளாதிருத்தல்.
" ஐயமுடையோன் மேன்மையடையான், நம்பியவன் மேன்மையும், மீட்சியும் அடைவான்"
மேன்மையும்-மீட்சியும், மோட்சத்தையும் கூறும் பகவத் கீதை பலர் கொலை நூலாகக் கருதுவார். துரியோதனையும், அவனைச் சார்ந்தோரையும் கொல்லும்படி அர்ச்சுனனைத் தூண்டுவதற்கு இந்தப் பதினெட்டு அத்தியாயங்களும் கிருஷ்ணனால் கூறப்படுவதால் அத்தகைய கருத்து நிலவுகிறது.
உண்மையில் பகவத் கீதையின் உட்கருத்து ஆன்மாக்களை இறைவனது துணையுடன் காமக் குரோதங்களை நீங்கி ஆன்மீகத்தை அடைய வேண்டும் என்பதே. துரியோதனன் முதலானவர்கள் காமம், குரோதம், சோம்பல், மடமை, அகங்காரம், மறதி, கவலை, துயரம், ஐயம்
போன்ற பாவ சிந்தனை உள்ளவர்கள்.
அர்சுனன் : ஜீவாத்மா [ஆத்மா]
கிருஷ்ணன் : பரமாத்மா.
இதுவே கீதையின் உட்கருத்து. இந்த உட்பொருளை அறியாதவர்கள் கீதையை ஒருபோதும் விளங்கிக்கொள்ள மாட்டார்கள்.
அதேபோல் , பகவத் கீதை சந்நியாச அல்லது துறவற நூலன்று.
வீடு, மனைவி, மக்கள், சுற்றத்தை துறந்துவிட்டு சந்நியாச வாழ்க்கை, துறவற நெறியில்செல்லும்படி கீதை கூறவில்லை. அது கடமையை வலியுறுத்துகிறது.
" ஒவ்வொருவரும் தங்களுக்கு வாழ்வில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளைச் சரிவர செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம் " என்ற கொள்கையை மிக அழுத்தமாக உபதேசிக்கிறது தன்கடமை செய்யாது நிலைகுலைந்து போன அர்ச்சுனனுக்கு அவனது கடமையினை தர்மத்தினை மிகத் தெளிவாக,"அர்ச்சுனா, சத்திரியான நீ உன் கடமையான
போரைச் செய் " என கிருஷ்ண பரமாத்மா வலியுறுத்துகிறான்.
இது போன்றே நமக்கும் வாழ்க்கைப் போர் உள்ளது. நாம் வாழ்க்கையில் பல தடவைகள் சோம்பலாலும், கோழைத்தனத்தாலும் கடமைகளிலிருந்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.
"அர்ச்சுனா எழுந்திரு ! இந்த மனத்தளர்ச்சியை, இந்த பலவீனத்தை ஒழி,
எழுந்து நின்று போர் செய்..." என்று கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுன்னுக்குக் கூறும் இவ்வார்த்தை மிகவும் பொருத்தமாக நிறைந்து காணப்படுகிறது. வாழ்க்கை கடமைகளைச்செய்துகொண்டு வாழ்வதற்குரியது ; துறப்பதற்குரியது அன்று என்பது இதன் பொருள்.
கீதையில் தனிச்சிறப்புடன் விளக்கும் இன்னொரு கொள்கை " பற்றின்மை "
என்பதாகும்." கடமைக்காகவே செய்யப்படும் கடமையே வினைத் தளையைப் போக்கும் "என்பதாகும். எல்லா செயல்களையும் கடவுளுக்கு என்று சமர்ப்பித்துவிட்டு பற்றுதல் இன்றி எவன் தொழில் செய்கிறானோ அவன் பக்கம் நான் இருப்பேன். ஒருவனுக்கு பற்றின்மை ஏற்படும்போது அவனுக்கு ஏனையோரின் பொறாமையும், சஞ்சலமும் கொள்ள வழியில்லை.தன் செயலுக்கு இடையூறாக நிற்குமென்ற எண்ணத்தால் அவன் பிற உயிர்களுடன் முரண்படவும் மாட்டான்.
"சமுதாயத்தின் ஒட்டு மொத்த நலனுக்கா தனிமனிதன்
தன்னை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்...."
கீதையின் தொனிப்பொருள், சாரம், உட்பொருள் இதுதான். இதன் 18 அத்தியாயங்களில்அமைந்த 700 சுலோங்கங்களும் இதன் விரியுரைகளே. அப்படி அமைய வேண்டிய மனப்பக்குவம் என்ற வகையில் கீதை , " பலனில் பற்று வைக்காத செயல் திறன் " .
இது செயலில் துறவு என்பது பற்றிப் பேசுகிறது.
இவ்வாறான பற்றின்மை செயல் ஊக்கத்தைப் பாதிக்காலாது என்பதைச் சுட்டுவதற்காக கடமை உணர்வு வற்புறுத்தப்படுகிறது. கடமையில் உணர்ச்சிபூர்வமாக ஈடுபடுவதை ' தியானம், பக்தி என்ற அணுகு முறையினை முன் வைக்கிறது,சுட்டிக்காட்டுகிறது.
" கல்வி கற்றோரிடமும் , சண்டாளாரிடமும் , மிருகத்திடமும் அறிஞர்கள் சமமான பார்வை உடையோர்..." [5-18] என்று கிருஷ்ணன் கூறுகிறான்.
கண்ணபிரான் மனிதருள் சாதிவேற்றுமை, அறிவுவேற்றுமை , பிரிவு வேற்றுமை போன்றவைகள் ஏற்படக்கூடாது என்றும், எல்லா உயிர்களூள்ளும் எவ்வித வேற்றுமையும் இல்லை எனக் கூறுகிறார். வேற்றுமை உள்ள இடத்தில் பயமுண்டு, பத்துண்டு, மரணமுண்டு ஏற்றத் தாழ்வு பற்றிய நினைப்புள்ளவர்கள் என்றும் துக்கங்களிலிருந்து விலகமாட்டார்கள். எனவே எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே 'ஆன்ம ' ஈடேற்றத்துக்கு உரிய வழியாகும்.
ஆன்ம ஈடேற்றம் அடைய விரும்புவனுக்கு முக்கியமான சாதனம், அவனது சொந்தமனமாகும்.
"... தன்னைத் தானே வென்றவன் தனக்குத் தானே நண்பன்..."
"... தன்னைத் தானே ஆளாதவன் தனக்கு தானே பகைவன்..."
"... ஒருவன் தனக்குத் தானே நண்பன்; தானே தனக்கு பகைவன்..."
"... உள்ளப் பகையே பகை; புறப்பகை பகையன்று..."
இக்கருத்து மனித வாழ்க்கையில் முக்கியமானது.
எந்த உயிர் பிராணிக்கும் இம்சை, தொல்லை செய்வோர் உண்மையானஅன்புடையர் அல்ல. உண்மையான பக்தராகமாட்டார்; எந்த ஜீவனையும் கண்டு வெறுப்பு அடைபவர்கள்
ஈசனுடைய மெய் அன்பினை பெறமாட்டார்கள். கொல்லாமையே முக்கிய தர்மம் என்பது கொள்கையாகும்.
பிறருக்கு தீங்கு இழைக்கும் பொருட்டு அவரை வெறுத்துக் கொண்டும் பகைத்துக் கொண்டும் இருப்பவர்கள் இறுதியில் தாமே அழிந்துவிடுவர் என்று கீதையில் கூறப்படும் கருத்து சிந்திக்கத் தக்கது , எண்ணி செயல்படத்தக்கது.
இவ்வாறு சிந்திக்கும் போது கீதை கூறும் வாழ்வியலானது காலம், இடம், சமூகம்,ஆகிய எல்லைகளைக் கடந்தாகவும் பல நிலைப்பட்ட பிரச்சைனைகளுடன் தொடர்புப்படுத்தி அமைந்துள்ளதை காணலாம்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கலாச்சாரமுடைய ஒரு காலக் கட்டத்தில் முன் வைக்கப்பட்ட கீதை , வாழ்வியல் நோக்கமானது. காலந்தோறும் பேணப்பட்டு வந்துள்ளமையையும் வெவ்வேறு அடிப்படைகளில் புரிந்து கொள்ளப் பட்டமையையும் வரலாறு உணர்த்தும்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் மகாத்மா காந்தி முதல், வேறு சிலர் பலரும் கீதையின் நோக்கத்துக்கு ஏற்ப அணுகியுள்ளனர் அதனை வழி காட்டியாகவும் கொண்டு பலரும் சிந்தித்து சிறந்துள்ளனர். பாரதியார் முதல்  கண்ணதாசன் வரை சிந்தித்துள்ளனர்.





No comments:

Post a Comment