Monday, March 21, 2011

அலிகள், அரவாணர்க‌ள் ‌பிற‌ப்பை க‌ணி‌க்க இயலுமா?

அலிகள், அரவாணர்க‌ள் ‌பிற‌ப்பை க‌ணி‌க்க இயலுமா?

பிறப்பிற்கான இடம் 5ம் இடம். ஒரு பெண்ணின் 5வது இடத்தைப் பார்க்க வேண்டும். அதுதான் பூர்வ புண்ணிய ஸ்தானம். 5ம் இடமும் 7ம் இடமும் முக்கியமானது. புதனையும் சனியையும் அலி கிரகம் என்று சொல்லலாம். ஆனால் அது எங்கு இருந்தாலும் அலி கிரகம் என்று சொல்லக் கூடாது.
சூரியனுக்கு மிகக் குறுகிய பாதையில் இருந்தால் அலித் தன்மை அதிகரிக்கும். சூரியனை விட்டு விலகி சுப நட்சத்திரத்தில் உட்கார்ந்திருந்தால் அலித் தன்மை விட்டு சுபத்தன்மை அளிக்கலாம்.
வரன் ஜாதகத்திலும் 5அம் இடத்தில் அலி கிரகம். பெண்ணின் ஜாதகத்திலும் 5க்கு உரிய கிரகம் வலுவிழந்து அலி கிரகத்துடன் சேர்ந்து காணப்ப‌ட்டா‌ல் அவ‌ர்களு‌க்கு குழந்தை பிறக்காது. அப்படி குழந்தை பிறந்தால் அ‌க்குழ‌ந்தை அலித்தன்மை உடையதாக இருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இதேப்போன்று ஒரு மணமக்களுக்கு ஜாதகத்தைப் பார்த்து அலிப் பிள்ளைகள்தான் பிறக்கும் என்று கணி‌த்து கூ‌றினே‌‌ன். அதையும் மீறி அவர்கள் திருமணம் நடந்தது. அவர்களுக்குப் பிறந்த 3 பிள்ளைகளுமே அலித்தன்மை உடையதாக இரு‌ந்தது. அவர்களை 2004ல் நான் சந்தித்தேன். அவர்கள் மிகவும் வரு‌த்த‌த்துட‌ன் எ‌ன்‌னிட‌ம் பே‌சினா‌ர்க‌ள்.
விந்தணுக்கள் குழந்தை பாக்கியத்தை அளிக்கும். பொதுவாக விந்தணுக்கள் வெள்ளை நிறம். ஆனால் விந்தணுக்கள் நிறம் மாறுபடும். பெரிய ‌நிற மாற்றமல்ல மெல்லிய மாற்றம்தான். நீர்த்த தன்மை உள்ள விந்தணுக்களும் உள்ளன, அவை அரவாணிப் பிள்ளைகளைப் பெற்றுத்தரும்
அதனை‌த்தா‌ன் த‌ற்போது, குரோமோசோன்களின் எண்ணிக்கை மாறுபட்டால் பாலினத்தன்மை மாறுபடுகிறது என்று தற்போது அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதாவது குரேமோசோம்களின் எண்ணிக்கை 60, 40 விழுக்காடுதான் இருக்கிறது என்று தற்போது ஆராய்ந்து கூறுகிறார்கள். இது ஜீன்களின் குறைபாடு, அதை எதுவும் செய்ய முடியாது எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் கை‌விடு‌கிறா‌ர்க‌ள். இதுபோ‌ன்று நீர்ப்பு தன்மை கொண்ட ஜாதகங்களை வேண்டாம் என்று சொல்கிறோம்.பொருத்தங்கள் பார்க்கும்போது சமூக அந்தஸ்து, ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தாம்பத்திய வாழ்க்கை, குழந்தை பாக்கியம், அன்யோன்யம், பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து திருமணம் நிச்சயிக்க வேண்டும்.
ச‌ரியான முறை‌யி‌ல் ஜாதக‌ம் பா‌ர்‌த்து ‌திருமண‌ம் செ‌ய்தா‌ல் அ‌லி, அரவா‌ணிக‌ளி‌ன் ‌பிற‌ப்பை‌த் தவிர்க்க முடியும்.
சுவஷ்வ நாடியில் த‌ம்ப‌திக‌ள் கூடினா‌ல் இது போன்ற பிள்ளைகள் பிறக்கும் என்று கூறப்படுகிறதே?
இதுபற்றி திருமூலர் தனது நூல்களில் கூறியுள்ளார். எப்படி புனர வேண்டும், எந்த நாளில் புணர வேண்டும் என்பதை கூறியுள்ளார். அவர் சித்தர் என்றாலும் புணர்வது குறித்து விரிவாக அளித்துள்ளார். அதேப்போல பல சித்தர்கள், ரிஷ‌ி தத்துவம், முனி தத்துவம் என பெண்களை ஐந்து பிரிவுகளாகப் பிரித்து இந்த தத்துவப் பெண்கள் இந்த தத்துவ ஆணுடன் சேர வேண்டும் என்று அன்றைய காலத்திலேயே பிரித்து வைத்திருக்கிறார்கள்.காற்றோட்டம் சூரியக் கலை, சந்திரக்கலை, பின் கலை, மு‌ன்கலை எ‌ன்பது நமது மூ‌ச்சு‌த் த‌ன்மையாகு‌ம். நம்மை ஆளும் கிரகத்தின் தன்மையைப் பொறுத்துத்தான் நாம் மூச்சு விடும்தன்மை அமையும். நமது லக்னத்தில் செவ்வாய் இருந்தால் அது ஒரு நெருப்பு கிரகம். லக்னத்தில் சூரியன் அமர்ந்திருந்தால் அப்போது சூரியக் கலை ஓங்கி இருக்கும், சூரிய நாடி அதிகரிக்கும். ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு மாதிரி, அதுவும் கிரகத்தின் அடிப்படையில் அமையு‌ம். பித்த நாடி, பித்த சாரீரம், உஷ்ண நாடி என அனைத்துமே கிரகங்களின் அடிப்படையில்தான் அமைகின்றன.
6 ஆம் இடம் ரோக ஸ்தானம், அந்த இடத்தில் கிரகம் வலுவாக இருந்தால் அதற்கேற்ற நோய் வரும். எல்லாமே கிரகங்களின் அடிப்படையாக வைத்தே அமையு‌ம். அலி கிரகம் வலுவாக இருக்கும்போது அவர்களது மூச்சுக்காற்று அப்படித்தான் இருக்கும். மேலும் மற்ற நேரங்களில் அவர்களது மூச்சுக்காற்றில் சூரிய கலை, தென்கலை என இருந்தாலும், அவர்கள் புணர்ந்து உயிரணு வெளியேறும்போது அவர்களது மூச்சுக்கலையில் ஒரு பின்னம் ஏற்படும். அது ஒரு சக்தி வெளிப்பபாடு. விந்தணு வெளிப்பாடு நிறைவுக்கான காரியம். அப்போது அவர்களது உடல்நிலை நாடி நடுநிலை வகிக்கும். ஒரு ப‌க்கமு‌ம் இ‌ல்லாம‌ல் இர‌ண்டு நாடியு‌ம் இணை‌ந்த ஒரு பின்னல் ஏற்படும். அதனா‌ல் அ‌லி‌க் குழ‌ந்தைக‌ள் ‌‌பிற‌க்க வா‌ய்‌ப்பு அமை‌கிறது. அலி கிரகங்களின் வலிமை அதிகரிக்கும்போது தான் ஹோமோசெக்ஸ் அதிகரிக்கும். மாற்று இனத்தாரை திருப்திப்படுத்த முடியாது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதனால் ஓரின சேர்க்கையின் மீது ஆர்வம் போகும்.அதுபோன்ற ஜாதகங்களும் நிறைய இருக்கின்றன. ஒருவரைப் பார்த்தால் ஆண்மகனுக்கான அனைத்து அம்சங்களும் இருக்கும். ஆனால் அவர் தாம்பத்தியத்தில் பலவீனமாக இருப்பார். அல்லது அவருக்கு அலி குழந்தை பிறக்கும். அது அவரது ஜாதகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

இரட்டை குழந்தைகள் பிறக்கின்றனவே. அவற்றுக்கு ஒரே ஜாதகங்கள் இருக்குமா?

இரட்டை குழந்தைகள் பிறக்கின்றனவே. அவற்றுக்கு ஒரே ஜாதகங்கள் இருக்குமா? அல்லது லேசாக வேறுபடுமா?இரட்டை குழந்தைகளுக்கு ஒரே ராசிக் கட்டம் அமையும். ஆயினும். பாவம், சப்தாம்சம், அஷ்டாம்சம், நவாம்சம் ஆகியன மாறுபடும்.

இரட்டை குழந்தைகளுக்கு ஒரே ராசிக் கட்டம் அமையும். ஆயினும். பாவம், சப்தாம்சம், அஷ்டாம்சம், நவாம்சம் ஆகியன மாறுபடும்.
அஷ்ட வர்க்க பரல்களைப் பார்க்கும்போதும் இரு பிள்ளைகளுக்கும் பரல்களின் எண்ணிக்கை வித்தியாசப்படும்.
அதனால்தான் ஒத்த உருவமுள்ள இரட்டையர்களாக இருப்பினும் கல்வி, குணம், அவர்களுக்கு ஏற்படும் நோயின் தன்மை, வாழ்க்கைத் துணை அமைதல், குழந்தை பிறப்பு, ஆயுள் ஆகியன மாறுபடும்.
ராசிக்கட்டத்தில் ஒரே லக்னம், ஒரே நட்சத்திரம், ஒரே ராசி அமைவதால் அவர்களுக்கு ஒத்த இயல்புகள் சார்புத் தன்மை, உதாரணத்திற்கு... அவளுக்கு 2 இட்லின்னா எனக்கும் 2 இட்லி போதும், அவளுக்கு எடுத்த அதே நிற ஆடையை எனக்கும் எடுத்துக் கொடு என்பது போன்ற ஒரே மாதிரியான பிரியங்களைப் பார்க்கலாம்.
10 மணி 1 நிமிடத்திற்கு முதல் குழந்தையும், 10 மணி 03 நிமிடத்திற்கு இரண்டாவது குழந்தையும் பிறக்கின்றன. இந்த இரண்டு நிமிட இடைவெளியைத்தான் ராசிக் கட்டத்தை உடைத்து மிகத் துல்லியமாக அந்த சப்தாம்சம், நவாம்சம், அஷ்டாம்சம் என கணக்கிட்டு பலன்கள் கூறுகிறோம்.

அஷ்ட வர்க்க பரல்களைப் பார்க்கும்போதும் இரு பிள்ளைகளுக்கும் பரல்களின் எண்ணிக்கை வித்தியாசப்படும்.
அதனால்தான் ஒத்த உருவமுள்ள இரட்டையர்களாக இருப்பினும் கல்வி, குணம், அவர்களுக்கு ஏற்படும் நோயின் தன்மை, வாழ்க்கைத் துணை அமைதல், குழந்தை பிறப்பு, ஆயுள் ஆகியன மாறுபடும்.
ராசிக்கட்டத்தில் ஒரே லக்னம், ஒரே நட்சத்திரம், ஒரே ராசி அமைவதால் அவர்களுக்கு ஒத்த இயல்புகள் சார்புத் தன்மை, உதாரணத்திற்கு... அவளுக்கு 2 இட்லின்னா எனக்கும் 2 இட்லி போதும், அவளுக்கு எடுத்த அதே நிற ஆடையை எனக்கும் எடுத்துக் கொடு என்பது போன்ற ஒரே மாதிரியான பிரியங்களைப் பார்க்கலாம்.
10 மணி 1 நிமிடத்திற்கு முதல் குழந்தையும், 10 மணி 03 நிமிடத்திற்கு இரண்டாவது குழந்தையும் பிறக்கின்றன. இந்த இரண்டு நிமிட இடைவெளியைத்தான் ராசிக் கட்டத்தை உடைத்து மிகத் துல்லியமாக அந்த சப்தாம்சம், நவாம்சம், அஷ்டாம்சம் என கணக்கிட்டு பலன்கள் கூறுகிறோம்.

இரண்டாவது திருமணம் பற்றி ஜாதகத்தில் அறியமுடியுமா?

இரண்டாவது திருமணம் பற்றி ஜாதகத்தில் அறியமுடியுமா?

சுக்கிர நாடி என்ற நூலில் இதுபற்றி அதிகம் கூறப்பட்டிருக்கிறது. திருமண சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் சுக்கிரநாடிதான் அடிப்படை நூலாகும்.
அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் 7ஆம் இடம் வாழ்க்கைத் துணைக்கான இடம். 8ஆம் இடத்தையும் பார்க்க வேண்டும். ஏழிற்குரிய கிரகம் பலமாக இருக்க வேண்டும். ஏழிற்குரிய கிரகம் எத்தனை கிரகங்களுடன் சேர்ந்திருக்குமோ அத்தனை தாரம் அவனுக்கு என்று சொல்லப்படுகிறது.
மேலும், இருவருக்குமே ஜாதகப் பொருத்தம் பார்த்து ஒரே தாரம்தான் என்று கணித்திருந்தாலும், திருமண வைபவம் நடக்கக்கூடிய நாள் மோசமான நாள் அல்லது மோசமான யோகம் கூடிய நாளில் தாலிக்கட்டினால் இரண்டாவது தாலி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஒரு சில ஜாதகத்தில் இரண்டாம் திருமணம் இல்லவே இல்லை என்று சொல்லப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு இரண்டாம் தாரம் ஏற்படும். அதற்குக் காரணம் அவர் முதல் தாலி கட்டிய நாள் அப்படி அமைந்திருக்கும்.மோசமான தசையில், அதாவது ஏழாம் இடத்தில் கேது அமர்ந்து கேது தசை நடந்தால் மனைவி திடீர் விபத்தில் மரணமடைதல், கருத்து வேறுபாட்டால் பிரிதல் போன்றவை நிகழும்.
பாவ கிரகங்கள் கோச்சார ரீதியாக வந்து போகும். பாவ கிரகங்கள் இரண்டாம் தாரத்தை ஏற்படுத்திவிட்டுப் போகும்.
ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் இரண்டாம் தாரம் சாதாரணமாகிவிட்டது. ஏனெனனில் இப்போதெல்லாம் செவ்வாய் தோஷம், களத்ர தோஷத்துடன்தான் நிறைய பிள்ளைகள் பிறக்கிறார்கள்.
அதாவது ஜோதிடத்தில் பார்க்கும்போது 4 ஆம் இடம் நடத்தையைத் தீர்மானிக்கும். 4 ஆம் இடத்தில் பாவ கிரகம் இருக்கும். அதை வைத்து அவர் ஒழுங்கீனமானவர் என்று தீர்மானிக்க இயலாது. 4 ஆம் அந்த வீட்டிற்குரிய கிரகம் நன்றாக இருந்தால் அவரை ஒழுக்கமானவர் என்று தீர்மானிக்கலாம்

எலுமிச்சை ஜீவ கனி

எலுமிச்சை ஜீவ கனி : அதனால்தான் பலியிடுகிறோம்!

கனிகளில் பறித்த பின்னும் ஜீவனுடன் இருப்பது எலுமிச்சைதான். நமது பண்பாட்டு ரீதியான பழக்க வழக்கங்களில் உள்ள அர்த்தங்களை விவரித்த வித்யாதரன், எலுமிச்சையின் குணங்களையும், அதனைப் பயன்படுத்துவதில் உள்ள ரகசியங்களையும் விளக்கினார்.
"மஞ்சள் மங்களகரமான நிறம். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு கொள்முதல் செய்ய வேண்டிய பொருட்களில் பட்டியலைத் தயாரிக்கும் பொழுதும், புத்தாடை புனையும் பொழுதும், நிச்சயதார்த்தம் செய்து எழுதும் ஓலையிலும் ஒரு ஓரத்தில் அல்லது 4 ஓரத்திலும் மஞ்சளைத் தடவுகின்றோம். ஏனெனில் அது மங்களமானது. மஞ்சள் நிறமே நேர்மறையான எண்ணங்களைத் தூண்டக்கூடியது. அந்த நிறத்தில்தான் எலுமிச்சை உள்ளது. வேதங்களில் அதர்வன வேதத்தில் முதலில் தேவதைகள், அதிதேவதைகள் ஆகியவற்றிற்கு பரிகாரப் பூஜைகள் செய்யும் போது எலுமிச்சைப் பழத்தை பலியிடுவது வழக்கம். அதற்குக் காரணம், அந்தப் பழம் ஜீவனுள்ளதாக கருதப்படுகிறது. ஜீவன் உடையதைதானே பலியிட முடியும். அறிவியலபடி எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இந்த சிட்ரிக் அமிலம் கிருமி நாசினி. பித்தம், கபம் போன்றவற்றையெல்லாம் நீக்கக்கூடியது. இந்தப் பழத்தில் இருந்து வீசக்கூடிய வாசமே குதூகலமான சூழலை உருவாக்கவல்லது. எலுமிச்சைக் கன்று, மரம் ஒரு வீட்டில் இருந்தால் வைத்தியரிடம் செல்ல வேண்டிய தேவையில்லை, வாஸ்து பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை என்று முன்னோர்கள் கூறுவார்கள்.
இந்த அளவிற்கு மருத்துவ குணமும், வீடு கட்டியிருக்கும் மனை, வீடு அமைந்திருக்கும் மனை மற்றும் கட்டட அமைப்புகளில் உள்ள குறைகளை நீக்கும் சக்தி எலுமிச்சைக்கு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

கனிகளின் அரசன் என்று எலுமிச்சையை சொல்லலாம். அதனால்தான் பிரபலமானவர்களைப் பார்க்கும் போது மரியாதை நிமித்தமாக இந்தக் கனியைத் தருவது வழமை. நோயுற்றவர்களைக் காணச் செல்லும் போதும், நோயுற்றவரிடம் காணச் செல்பவர்கள் எலுமிச்சையை அளித்து நலம் விசாரிப்பது பழக்கத்தில் உள்ளது. இதில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன.
நோய்வாய்பட்டவரிடம் இருந்து எதுவும் பார்க்க வருபவரிடம் தொற்றாது. அதே நேரத்தில் நோயுற்றவர் குணமாகவும் எலுமிச்சை உதவும். எனவேதான், அந்தப் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
எலுமிச்சை ஜீவ கனி மட்டுமல்ல. வெற்றிக் கனியுமாகும். அந்தக் காலத்தில் அரசர்கள் எதிரி நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் முன்பாக காவல் தெய்வம், எல்லைத் தெய்வம் சம்கார தெய்வங்களை எலுமிச்சை மாலை அணிவித்து, அந்த தெய்வங்கள் முன்பாக நின்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்பிறகு தங்களது படைகளை வழி நடத்திச் செல்வார்கள். போரில் வாகை சூடி திரும்பி வந்த பின்பு மீண்டும் எலுமிச்சை மாலை சூடி வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தது.
பில்லி, சூனியம், மாந்திரீகம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கும் காளி அம்மனுக்கு எலுமிச்சை மாலை சூடி வணங்கி வழிபடுவதை திருவக்கரை வக்கிர காளியம்மன், பட்டீஸ்வரம் துர்கையம்மன் உள்ளிட்ட பல முக்கிய ஆலய வழிபாடுகளில் பிராதானமாக அமைந்துள்ளதைக் காணலாம்.

திடீரென்று சிலர் நோய்வாய் படுகிறார்கள்.இதற்கு கிரக அமைப்புகள் காரணமா?

 திடீரென்று சிலர் நோய்வாய் படுகிறார்கள். இதுவரைக்கும் ஒன்றுமில்லாமல்தான் இருந்தது, திடீரென்று வந்துவிட்டது என்றெல்லாம் சொல்கிறார்களே இதற்கு கிரக அமைப்புகள் காரணமா? இதனை எப்படி முன்னறிவது?

திடீர் நோய்வாய்ப்படுவது என்பதற்கு ஒரு காம்பினேஷன் இருக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ஒரே வீட்டில், 7வது, 8வது, 2வது வீடோ ஏதோ ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாவ கிரகங்கள் இருந்தால் திடீர் நோய்வாய்ப் படுதல், திடீர் இறப்பு போன்றெல்லாம் ஏற்படும். குறிப்பாக பார்க்கும் போது சனி செவ்வாய் இராகு, சனி செவ்வாய் கேது போன்ற காம்பினேஷனில் உள்ளவர்கள் திடீரென்று பாதிக்கப்படுகிறார்கள். ஒரே வாரத்தில் எல்லாமே முடிந்துவிட்டது என்று சொல்வார்களே அந்த மாதிரி ஏற்படும். இதுபோல இரண்டு மூன்று பாவ கிரகங்கள் இருக்கிறவர்கள், குறிப்பிட்ட தசா புத்தி வரும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
சனி செவ்வாய் இராகு, சனி செவ்வாய் கேது, சந்திரன் இராகு, சந்திரன் சனி இராகு, சந்திரன் சனி கேது போன்ற காம்பினேஷனில் உள்ளவர்களெல்லாம் உஷாராகவே இருக்க வேண்டும். தங்களுடைய உடம்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதுமட்டுமில்லாமல், குறிப்பிட்ட தசா புத்தி வரும்போது பயணம், வெளி உணவு தவிர்த்தல் போன்று உஷாராக இருந்தால் நன்றாக இருக்கும்.

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் -
ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுதான் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று ஆகிவிட்டது.

நம் நாட்டில் சித்த வைத்தியம்தான் சிறப்பாகவும், சீராகவும் இருந்து வந்தது. அதை அடிப்படையாகவு‌ம் வைத்தியர்களை மன‌தி‌ல் வை‌த்து‌ம் சொல்லப்பட்டதுதா‌ன் இது.
வைத்தியன் என்பவர் குறைந்தபட்சம் 50,000 வேர், செடி, கொடிகளை எடுத்து இலைகளைப் பறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும். அதுபோல, குறை‌ந்தப‌ட்ச‌ம் ஆயிரம் வேரையாவது கொன்றிருந்தால்தா‌ன் அரை வைத்தியனாகவாவது ஆகியிருக்க முடியும் என்ற அடிப்படையில் சொன்னதுதான் இந்தப் பழமொழி.

Friday, March 11, 2011

விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் போன்ற நட்சத்திரங்கள் குடும்பத்திற்கு ஆகாதா?

விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் போன்ற நட்சத்திரங்கள் குடும்பத்திற்கு ஆகாதா?
ஒரு ஆணுக்கு திருமணம் செய்யும் போது விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் போன்ற நட்சத்திரங்களை காரணமின்றி சில குடும்பங்கள் தவிர்க்கின்றன. காரணம் கேட்டால் விசாகம் கொழுந்தனாருக்கு ஆகாது; ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது; கேட்டை, மூலம் போன்றவை மாமனாருக்கு ஆகாது என சில ஜோதிடர்கள் தெரிவித்ததாக கூறுகின்றனர். உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட நட்சத்திரப் பெண்ணால், புகுந்த வீட்டினருக்கு பாதிப்பு ஏற்படுமா? ஜோதிடத்தில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா?
பதில்: ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தைப் பற்றி உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ எந்தஒரு ஜோதிட நூலிலும் குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் போன்ற உவமைகள் ஜோதிடத்தில் எங்கும் கூறப்படவே இல்லை. மூலம் நட்சத்திரத்தைப் பொறுத்தவரை ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதாவது ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் அரசு, அரசு தொடர்பானவர்களுக்கு நெருக்கமாக இருப்பார்கள்; மூலம் 4ஆம் பாதத்தில் (பின் மூலம்) பிறப்பவர்கள் எதிரிகளை நிர்மூலமாக்குவார்கள் என்பதே அதன் பொருள். இதேபோல் ஆயில்யம் நட்சத்திரப் பெண்ணைக் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால், மாமியாருக்கு ஆகாது என்று கூறுவதும் மிகத் தவறானது. இதுபற்றியும் பண்டைய கால நூல்களில் கூறப்படவில்லை. இது விசாகம், மூலம், கேட்டை ஆகியவற்றுக்கும் பொருந்தும்.
இதுமட்டுமின்றி, மகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆள்வார்; பரணி தரணியை ஆளும் என்பது போன்ற உவமைகளையும் சிலர் காலப்போக்கில் கூறிவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் பண்டைய ஜோதிடம் எந்த ஒரு நட்சத்திரத்தையும் தாக்கியோ அல்லது தூக்கியோ கூறவில்லை.
எனவே, நட்சத்திரத்தை மட்டும் பார்த்து ஒரு பெண்ணின் ஜாதகத்தை மாப்பிள்ளை வீட்டார் வேண்டாம் என்றும் கூறுவது கூடாது; இது பெண் வீட்டாருக்கும் பொருந்தும். மாறாக, சம்பந்தப்பட்ட பெண்/ஆணின் ஜாதகத்தில் மாமனார், மாமியார், இதர உறவுகளைக் குறிக்கும் இடம்/கிரகங்களின் நிலை எப்படி இருக்கிறது என ஜோதிடப்படி ஆராய்ந்த பின்னரே அந்த வரனைத் தவிர்க்க வேண்டும்.அசைவ உணவுப் பிரியர்கள் திடீரென சைவத்திற்கு மாறுவது ஏன்

அசைவ உணவுப் பிரியர்கள் திடீரென சைவத்திற்கு மாறுவது ஏன்? அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர் திடீரென சைவப் பிரியராக மாறுவதற்கும், பிறந்தது முதலே சைவ உணவை மட்டும் சாப்பிட்டு ஆச்சாரமான குடும்பத்தில் வளர்ந்த ஒருவர் அசைவப் பிரியராக மாறுவதற்கும் கிரகங்களின் ஆதிக்கமே காரணம்.
மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதி சனி ஆவார். அவரது மகனின் ஜாதகத்தில் சனி 4வது இடத்தில் அமர்ந்துள்ளார். பொதுவாக ஒருவரது உணவுப் பழக்கம், நடத்தை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைக் குறிப்பது 4ஆம் இடமாகும். அந்த 4ஆம் இடத்தில் பாதகாதிபதி அமர்ந்ததால், அவரது (சனி) தசை துவங்கியது  நடத்தையில் (உணவுப் பழக்கம்) மாற்றம் ஏற்பட்டுள்ளது.எனவே, பாதகாதிபதி தசை வரும் காலத்தில் பிள்ளைகளின் நடத்தையை (உணவுப் பழக்கம், ஒழுக்கம் உள்ளிட்டவை) கண்காணிக்க வேண்டும். அவர்கள் தீய பாதையில் சென்றால் உடனடியாக நல்வழிப்படுத்த வேண்டும்.

ஒருவரின் ராசிக்கும் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உண்டா?

ஒருவரின் ராசிக்கும் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உண்டா? நாகரீகமான, படித்த மனிதர்கள் மத்தியிலும் உணவுக் கட்டுப்பாடு தொடர்பான விடயத்தில் தயக்கம் இருக்கிறது. எவ்வளவு சாப்பிடுவது என்பது முதல் எதைச் சாப்பிடுவது என்பது வரை இளைஞர்கள் மத்தியில் கூட குழப்பம் காணப்படுகிறது.
பண்டிகை தினங்களில் வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை அதிகளவில் சாப்பிடுவதற்கும் சிலர் தயக்கம் (சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கூட) காட்டுகின்றனர். இதற்கும் அவர்களின் ஜாதக அமைப்பிற்கும் தொடர்பு உள்ளதா?
பதில்: ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள 12 ராசிகளில், மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் அசை போடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே இரைப்பை வலுவானதாக இருக்கும். செரிமானத்துக்கு உதவும் நீர் சுரப்பிகளும் அதிகமாகச் சுரப்பதால் இவர்கள் நொறுக்குத் தீனி சாப்பிடுவதில் விருப்பமாக இருப்பார்கள்.
இதேபோல் மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் போஜனப் பிரியர்களாக இருப்பார்கள். ருசியாக சாப்பிடுவதை இவர்கள் விரும்புவர். மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் ஆவியில் வேக வைக்கும் உணவு வகைகளில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் மகரம், கும்ப ராசிக்காரர்கள் எண்ணெயில் பொறித்த உணவுகளை விரும்புவர்.கடகம், மீனம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் தயிர், மோர் மற்றும் அவற்றை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவர்.
மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் அதிகம் சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள். பசி நேரத்தில் கூட வயிற்றுக்கும், உடல் நலத்திற்கும் ஏற்ற உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுவர். எனினும், மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் மட்டும் போஜனப் பிரியர்களாக இருப்பர்.
புதனின் ராசிகளாக மிதுனமும், கன்னியும் வருவதால் அவர்கள் பார்த்து பார்த்துதான் சாப்பிடுபவர்களாக இருப்பர். குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னரே அடுத்த வேளை சாப்பாட்டை எடுத்துக் கொள்வர். எனவே, ஜோதிட ரீதியாகப் பார்க்கும் போது ஒருவரின் உணவுப் பழக்கமும், சுவை விருப்பமும் அவரது ராசியைப் பொறுத்தே அமையும். மேலும், உடல்வாகு, குடல்வாகு ஆகியவை லக்னாதிபதி, ராசிநாதன் ஆகியோரைப் பொறுத்து மாறுபடும்.மேஷம், ரிஷபம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் காரம் நிறைந்த உணவுகளை விரும்புவர். துலாம் ராசிக்காரர்கள் சூடாகச் சாப்பிடுவார்கள். கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிக சூட்டுடன் சாப்பிடுவர். மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் மிதமான சூட்டில் உணவு உட்கொள்வர். மீனம், தனுசு ராசிக்காரர்கள் முற்றிலும் சூடு இல்லாத ஜில்லென்ற நிலையில் உள்ள உணவுகளை விரும்புவர்.

உணவுக் கட்டுப்பாட்டுக்கும் ஒருவரின் கிரக அமைப்புக்கும் தொடர்பு உண்டா?

உணவுக் கட்டுப்பாட்டுக்கும் ஒருவரின் கிரக அமைப்புக்கும் தொடர்பு உண்டா?
அன்றாட வாழ்வில் சிலர் பாரபட்சம் பார்க்காமல் விரும்பியதை சாப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் குறிப்பிட்ட உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். இதுபற்றிக் கேட்டல், சர்க்கரை நோய் இருக்கிறது, ரத்த அழுத்தம் இருக்கிறது என்று பதிலளிக்கின்றனர்.
இது ஒருபுறம் என்றால், நோய் இல்லாத சில இளம் வயதினரும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பாதியளவு உப்பு, சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிடுகின்றனர். உணவு தொடர்பான அச்ச உணர்வுக்கும், அவரது ஜாதக அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா?
பதில்: ஜோதிடத்தில் ரத்தத்திற்கு உரிய கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு ராகு, சனி ஆகியவை பகையாகும். ஒரு சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்+சனி அல்லது செவ்வாய்+ராகு சேர்க்கை காணப்படும். இவர்களுக்கு செவ்வாய் தசை காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.அந்தக் காலத்தில் ரத்தத்தின் சேர்க்கையிலும் மாறுதல் காணப்படும். செவ்வாய்+சனி சேர்க்கை இருந்தால் ரத்தத்தில் இரும்புச் சத்து, கால்சியம் அதிகரிக்கும். எனவே, இதுபோன்ற கூட்டு கிரக சேர்க்கை பெற்றவர்கள் சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஏழரைச் சனி வந்தால் அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு குறைந்த அளவிலாவது ஏற்படும். இது ஏழரைச் சனிக்கு மட்டுமின்றி அஷ்டமச்சனி, சனி தசைக்கும் பொருந்தும். அதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் சொகுசாக வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து அதிகளவில் நடைபழக வேண்டும். சனி எளிமைக்கு உரிய கிரகம் என்பதே அதற்கு காரணம்.ஒரு சிலர் சிறு வயது முதலே வாகனத்தை அதிகம் பயன்படுத்துவர். 4 தெரு தள்ளி உள்ள மளிகை கடைக்கு கூட வாகனத்தில்தான் செல்வார்கள். அதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் சனியின் ஆதிக்கத்திற்கு உட்படும் போது நடைபயணம் செய்வதன் மூலமே சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும். ஒரு சிலர் சிறு வயதில் விரும்பியதைச் சாப்பிட்டாலும், குறிப்பிட்ட காலத்தில் உணவுக் கட்டுப்பாடு குறித்த பயம் வந்துவிடும். உதாரணமாக செவ்வாய்+சனி சேர்க்கை பெற்றுள்ளவர் குறிப்பிட்ட வயது வரை எதை வேண்டுமானாலும் சாப்பிடுவார். ஆனால் செவ்வாய் தசை துவங்கும் போது அவராகவே உணவுக் கட்டுப்பாட்டை துவக்குவார். இதற்கு காரணம் நோய் வந்துவிடும் என்ற பயம் மனதளவில் ஏற்படுவதுதான்.
இருதய கோளாறுகளுக்கு சூரியனும், சந்திரனும் பொறுப்பாகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் அவருக்கு இருதயக் கோளாறு ஏற்படாது. மாறாக, சந்திரனுக்கு பாவ கிரகங்களின் சேர்க்கை, கிரக யுத்தம் காணப்பட்டால் இருதயக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சந்திரனுக்கு 6,8,12இல் குரு இருந்தால் அதனை ஜோதிடத்தில் சகட யோகம் எனக் கூறுவர். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு இருதயக் கோளாறு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
குறிப்பிட்ட தசை வரும் போது தாமாகவே முன்வந்து உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொள்ளலாமா? அல்லது மருத்துவரின் ஆலோசனையைக் கேட்க வேண்டுமா?மேற்கூறிய கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட தசை நடக்கும் போது அவர்களாகவே மருத்துவரைத் தேடிச் செல்ல வேண்டிய நிலையை கிரகங்கள் உருவாக்கிவிடும் என்பதுதான் உண்மை. எனவே, கடுமையான/மோசமான தசா புக்தி நடைபெறும் போது உணவுக் கட்டுப்பாடு விடயத்தில் மருத்துவரின் அறிவுரைப்படி நடந்து கொள்வதே சிறந்தது. தேவைப்பட்டால் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

உணவுப் பழக்கம் மூலம் காமத்தைக் கட்டுப்படுத்த முடியுமா?

உணவுப் பழக்கம் மூலம் காமத்தைக் கட்டுப்படுத்த முடியுமா? உணவுப் பழக்கம் என்பது பல்வேறு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடிய விடயமாக நமது நாட்டில் கருதப்படுகிறது. உதாரணமாக, துறவிகள், பூசாரிகள், சன்னியாசிகள் ஆகியோர் சாத்வீக (உப்பு, காரம் இல்லாத) உணவுகளை உட்கொள்கின்றனர். அந்த உணவின் மூலம் உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தி கிடைக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், கடுமையான விரதப்போக்குடன் வாழக்கூடிய பூசாரிகள், சன்னியாசிகளில் ஒரு சிலர் காம லீலைகளில் ஈடுபட்டதாக சிக்கிக் கொள்கின்றனர். இது ஏன்?
பதில்: உடல் நலனை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உணவு திகழ்கிறது. ஆனால் உணவின் மூலமாக மட்டுமே ஒருவருக்கு காம எழுச்சி ஏற்படுவதில்லை. இந்த விடயத்தில் மனித மனத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி, ராசிநாதன் ஆகிய இரண்டின் நிலையையும் பார்க்க வேண்டும். லக்னாதிபதி, ராசிநாதன் ஆகிய இருவரும் நன்றாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அந்த கிரகங்களின் தசை நடக்கும் போது அவர்கள் பாதை மாறி காம லீலைகளில் ஈடுபட நேரிடும். எனவே, உணவுப் பழக்கத்தால் மட்டுமே காம இச்சையை குறைத்து விட முடியும் என்று எண்ணக் கூடாது.
வெங்காயம், பூண்டு, அசைவ உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்து பாதி உப்பு, பாதி காரத்தில் மட்டும் சாப்பிட்டால் காம இச்சை முற்றிலுமாக அடங்கிவிடாது. மனதைக் கட்டுப்படுத்துவதற்கும் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதற்கு மனோகாரகன் (சந்திரன்) ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். ஜோதிடத்தில் சந்திரனை பலவீனப்படுத்தும் கிரகங்களும் உள்ளன. அதுபோன்ற கிரகங்களின் தசை நடக்கும் போது சம்பந்தப்பட்டவர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இதேபோல் 3, 6, 8, 12க்கு உரியவர்களின் தசை நடக்கும் போது பொதுவாகவே காம இச்சை அதிகரிக்கும். அதுபோன்ற காலத்தில் சம்பந்தப்பட்டவர் தன்னை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அதை விடுத்து மனம் போன போக்கில் காம லீலைகளில் ஈடுபட்டால் சிறை தண்டனை, அவமானம் ஆகியவற்றை ஏற்க நேரிடும்.
காம இச்சை அடக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு, பொதுவான பரிகாரம் ஏதாவது உள்ளதா?
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பொதுவான பரிகாரம் என எதையும் கூற முடியாது. சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தை முழுமையாகப் பார்த்த பின்னரே அவருக்கான பரிகாரத்தைக் கூற முடியும்.
உதாரணமாக, 3, 6, 8, 12க்கு உரியவர்களின் தசை நடக்கும் போது அவருக்கு ஏழரைச் சனி நடந்தால், அவர் எப்படி வாழ்ந்தாலும் காம இச்சைகள் தொடர்பான விவகாரங்களில் சிக்கிக் கொள்வார்.ஒரு சிலர் சொந்த ஊரில் இருந்தால் தானே பிரச்சனை என்று மனதில் நினைத்துக் கொண்டு, அண்டை மாநிலத்திற்கும், அயல்நாடுகளுக்கும் சென்று தங்கள் இச்சைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் விதியிடம் இருந்து தப்பமுடியாது. மாறாக உடல்நலனைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் அவர்களுக்கு தண்டனையாகவே கருதப்படும்.எனவே, அதுபோன்ற மோசமான தசை நடக்கும் போது மனதை அடக்க தியானம் செய்வதே சிறந்தது என சில நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலையில் தியானம் என்றால் என்னவென்றே பலருக்கு தெரியவில்லை. அதுபோன்றவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம். உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகளின் மூலம் தனது வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம். தோட்டம் அமைக்கலாம், உளவாரப் பணிகளை மேற்கொள்ளலாம். இதனால் அவர்களுடைய உடலில் ஏற்படும் இச்சைகளும், மனதில் ஏற்படும் மாசுகளும் குறையும்/மறையும். ஒரு சிலர் ஆலயத்திற்கு உள்ளேயே தவறான காரியங்களில் ஈடுபடுகிறார்களே? என்று பலர் கேட்கலாம். எந்த வகையான உடல் உழைப்பும் இன்றி விதவிதமான உணவு வகைகளை உட்கொள்வதால் அவர்களுக்கு காமஇச்சை அதிகரித்து வழிதவறி இருக்கிறார்கள்.
எனவே, உடலை வருத்தி உழைத்து, ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் சில பணிகளை மேற்கொண்டால் மனம் தெளிவுபெறும். அதுமட்டுமின்றி காமம் நிலையானது அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதளவில் உணர வேண்டும். அதனை உணர முடியாதவர்கள் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சில பணிவிடைகளைச் செய்வதுடன், அவர்கள் படும் அவஸ்தைகளை பார்த்தால் உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவாகிவிடும்.

ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழிக்கு ஜோதிடத்துடன் தொடர்பு உள்ளதா?

ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழிக்கு ஜோதிடத்துடன் தொடர்பு உள்ளதா? ஜோதிடத்தில் கூட ஆணாதிக்க கிரகங்கள், பெண் ஆதிக்க கிரகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. குரு, செவ்வாய், சூரியன் ஆகியவை முழுமையான ஆணாதிக்க கிரகங்கள். சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் முழுமையான பெண் ஆதிக்க கிரகங்கள்.
ஒரு மனிதனின் (ஆண்/பெண்) ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் நன்றாக இருந்தால், அவர் வாழ்வில் நல்ல நிலைக்கு எளிதாக வந்துவிட முடியும். சந்திரன் மனோகாரகன் என்பதால், முடிவெடுக்கும் திறமையை இவரே நிர்ணயிக்கிறார். அதேபோல் சுக்கிரன் வசதி, வாய்ப்புகளை அளிக்கக் கூடியவர். அந்த வகையில் பார்த்தால், ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழி ஜோதிடத்திற்கும் பொருந்தும்.பொதுப்படையாகப் பார்த்தாலும், ஒரு வீட்டில் பெண்ணின் ஜாதகம் சிறப்பாக இருந்தால் அந்த குடும்பம் சீரும், சிறப்புமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சில பெண்களுக்கு குடும்ப ஸ்தானம் (2ஆம் இடம், வாக்கு ஸ்தானம்) நன்றாக இருக்கும். அதுபோன்ற அமைப்புடைய பெண்களை மருமகளாகத் தேர்வு செய்தால் மணமகன் குடும்பத்தினர் சிறப்பாக வாழலாம். வரன் பார்க்கத் துவங்குவதற்கு முன்பாக மகனின் ஜாதகத்தை என்னிடம் கொண்டு வரும் பெற்றோரில் பெரும்பாலானவர்கள் கூறும் கருத்து என்னவென்றால், “காசு, பணம் கொண்டு வரத் தேவையில்லை. இருக்கிற சொத்தை பராமரித்துக் கொண்டு, மகனையும், எங்களையும் அன்பாக கவனித்து, பாசமாக நாலு வார்த்தை பேசும் வகையில் மணப்பெண் அமையுமா?” என்பதுதான். அதுபோன்ற எதிர்ப்பார்ப்பு உள்ள பெற்றோர், பெண்ணின் ஜாதகத்தில் 2ஆம் இடம் சிறப்பாக இருக்கிறதா? எனப் பார்த்து, மகனுக்கு திருமணம் முடிக்க வேண்டும்.ஒருவரின் ஜாதகத்தில் (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்) லக்னாதிபதி நன்றாக இருந்தால் சுற்றி இருப்பவர்களை மதித்து நடப்பவர்களாகவும், மற்றவர் மனதை புண்படுத்தும் குணம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். இன்றைய அவசர உலகில் கூட தனது தாயை விட மனதளவில் முதிர்ச்சியடைந்த மகளை நான் பார்த்துள்ளேன். அதற்கு காரணம் அவர்கள் ஜாதகத்தில் லக்னாதிபதியும், 2ஆம் இடமும் சிறப்பான கிரக அமைப்பு பெற்றிருப்பதே. ஆறுக்கு உரியவனின் தசை, 8க்கு உரியவனின் தசை, பாதகாதிபதி தசை நடக்கும் போது தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதை சம்பந்தப்பட்ட பெண்கள் தவிர்க்க வேண்டும். அதுபோன்ற காலகட்டத்தில் யோகா, தியானம் போன்றவற்றிலும் பெண்கள் மனதை செலுத்தலாம்.
எனவே, நல்ல கிரக அமைப்பு உள்ள பெண்கள், மருமகளாக வந்த பின்னர் அந்த வீட்டின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை நடைமுறையில் நான் பார்த்துள்ளேன். பல வி.வி.ஐ.பி. வீடுகளில் உள்ள பெண்களும் இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார்கள். சம்பந்தப்பட்ட வி.வி.ஐ.பி.யின் ஜாதகத்தைப் பார்த்தால் ரொம்ப சுமாராக இருக்கும். அவரது கிரக அமைப்புகளால் இந்த உயரத்தை (வி.வி.ஐ.பி. அந்தஸ்து) எட்டியிருக்க முடியாது. ஆனால் அவரின் மனைவி ஜாதகம் மிகச் சிறப்பாக இருக்கும். மனைவியின் ஜாதகத்தில் கணவன் ஸ்தானம் நன்றாகவும், தொடர்ந்து யோக தசைகளும் நடப்பதால், கணவருக்கு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமும், வெற்றியும் கிடைத்துக் கொண்டிருக்கும். அதனால் அவர் வி.வி.ஐ.பி.யாக கருதப்படுவார். இது ஒருபுறம் என்றால், புகுந்த வீட்டில் நுழைந்த உடனேயே பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய அமைப்பிலான ஜாதகங்களைக் கொண்ட பெண்களும் இருக்கிறார்கள். அதாவது கூட்டுக் குடும்பத்தை உடைப்பது போன்ற நடவடிக்கைகள் அந்தப் பெண்ணால் மேற்கொள்ளப்படும். கடுமையான ஜாதக அமைப்புள்ள பெண்களை, அவர்களுக்கு ஏற்ற ஜாதக அமைப்புள்ள வரனுடன் சேர்த்துவிட்டால் பிரச்சனைகள் ஏற்படாது.அந்த வகையில் ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழி நூற்றுக்கு நூறு உண்மையானதே. இன்றைக்கும் பல குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக சிறப்பாக இருப்பதற்கு காரணம் அந்தக் குடும்பத்திற்கு வரும் அதிர்ஷ்ட ஜாதக அமைப்புள்ள பெண்கள்தான்.
ஆண் ஜாதகத்தை (கணவர்) ஜாதகத்தை மட்டும் வைத்து முன்னுக்கு வந்த குடும்பங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் பெண்ணின் ஜாதக அமைப்பு (மனைவி) காரணமாக முன்னுக்கு வந்த குடும்பங்கள்தான் நம் நாட்டில் அதிகம்.எனவே, திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போதே தங்கள் குடும்பத்திற்கு எந்த மாதிரியான பெண் தேவை என்பதை மணமகனின் பெற்றோர் முடிவு செய்து விட்டு, அதற்கு ஏற்றவாறு ஜாதக அமைப்புள்ள பெண்ணைத் தேர்வு செய்தால் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்

மார்க்கண்டேயர்

மார்க்கண்டேயர்
திருக்கடையூருக்கு சற்று தூரத்தில் அமைந்திருந்த காட்டுப் பகுதியில் குடில் அமைத்து மிருகண்டு என்ற மகரிஷியும், அவரது மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை ஆசை ஏற்பட்டதால் மிருகண்டு மகரிஷி சிவபெருமானை நோக்கி ஒற்றைக் காலில் தவம் இருந்தார்.
அவரது கடும் தவத்தில் ஈசனும் மனமுருகி அவர் முன் தோன்றினார். அவரிடம் குழந்தை வரம் கேட்டார் மிருகண்டு மகரிஷி.
அந்த வரத்தை கொடுத்த சிவபெருமான், அத்துடன் ஒரு நிபந்தனையையும் விதித்தார். குறைந்த ஆயுளும், நிறைந்த அறிவும் கொண்ட பிள்ளை வேண்டுமா? அல்லது நீண்ட ஆயுளுடன், ஆனால் குறைந்த அறிவும் கொண்ட மகன் வேண்டுமா? என்பதுதான் அந்த நிபந்தனை.
முட்டாளாக 100 வயது வாழ்வதைவிட நிறைந்த அறிவுடன் குறைவான ஆயுள் வாழ்வதே சிறந்தது என்று முடிவெடுத்த மிருகண்டு மகரிஷி, குறைந்த ஆயுளுடன் மெத்த அறிவு கொண்ட குழந்தையைக் கேட்டார். அதற்கு சிவபெருமான், நீ வேண்டியபடியே மகன் பிறப்பான். அந்த குழந்தை 16 ஆண்டுகளே உயிர் வாழும் என்று அருளிவிட்டு மறைந்தார்.
ஒரு வருடம் கழிந்தது.மிருகண்டு மகரிஷி தம்பதியர்க்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர்
சிவபெருமான் அருளிய வரத்தினால் பிறந்ததாலோ என்னவோ, அவர் மீது மிகுந்து பற்று கொண்டு வளர்ந்தான் மார்க்கண்டேயன். சகல சாஸ்திரங்களையும், வேதங்களையும் படித்துத் தேறினான். எந்தக் கேள்வி கேட்டாலும் அவனிடம் இருந்து சட்டென்று பதில் வந்தது. மகனின் திறமையை எண்ணி பெருமிதம் கொண்டனர் மிருகண்டு தம்பதியர்.
மார்க்கண்டேயன் தினமும் திருக்கடையூர் வந்து, அங்கு அமிர்தகடேஸ்வரராக எழுந்தருளி அருள்பாலிக்கும் சிவபெருமானை தொழுது வந்தான்.
நாட்கள் வேகமாக ஓடின. மார்க்கண்டேயன் வாலிப வயதை அடைந்தான்.
அதுவரை மகனின் திறமையை பார்த்து வியந்து வந்த மிருகண்டு தம்பதியர், அவனது ஆயுள் முடியப் போகிறதே... என்று வருந்தினர்.
உண்மையை அறிந்த மார்க்கண்டேயன், பெற்றோரின் இந்த நிலையைக் காண சகிக்காமல் தனது 15 வயதிலேயே ஒவ்வொரு சிவ தலமாக சென்று 108 சிவ தலங்களை தரிசிக்க எண்ணினான். அதன்படி 107 சிவ ஸ்தலங்களில் வழிபட்டுவிட்டு இறுதியாக தனது 16 வயதில் திருக்கடையூர் வந்தான்.
“அமிர்தகடேஸ்வரரே... நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்“ என்று, அந்த சிவலிங்கம் முன்பு விழுந்து வணங்கி மந்திரங்கள் சொல்லத் தொடங்கினான்.அந்தநேரம் அவனது உயிரை எடுக்க எமனும் வந்து விட்டான். தனது தவத்தின் வலிமையால் அவனால் எமனைப் பார்க்க முடிந்தது. உடனே, அப்படியே அமிர்தகடேஸ்வரரான லிங்கத்தைக் கட்டியணைத்துக் கொண்டான். எமனும் அவன் உயிரைப் பறிக்க தன் பாசக்கயிறை வீசினான். அது சிவலிங்கத்தையும் சேர்ந்து விழுந்தது. கயிற்றை பலமாக இழுத்தான். ஆனால், அவனால் இழுக்க முடியவில்லை.
தன்மீது பாசக்கயிற்றை வீசி இழுத்த எமனைக் கண்டு கோபம் கொண்டார் சிவபெருமான். சட்டென்று லிங்கம் பிளந்து வெளியே வந்தார்.
“காலனே எனக்கும் சேர்த்தா பாசக் கயிறு வீசுகிறாய்?“ கோபத்தில் கர்ஜித்தவர் எமனை எட்டி உதைத்தார். அதன் பின்னரும் கோபம் தணியாமல் தன் கையில் இருந்த சூலாயுதத்தினால் காலனைச் சம்ஹாரம் செய்து, ‘கால சம்ஹாரமூர்த்தி’ ஆனார். தொடர்ந்து, மார்க்கண்டேயனை அன்புடன் தடவி, “என்றும் பதினாறாக இருக்கக் கடவாய்“ என்று சிரஞ்சீவி பட்டம் அளித்தார்.
எமன் இறந்தால் பூலோகம் என்ன ஆகும்...? பூமாதேவியால் பூமியின் பாரத்தை தாங்க முடியவில்லை. “இறப்பே இல்லாமல் இருந்தால் எனக்குச் சுமை அதிகமாகும். ஆகையால் எமனுக்கு உயிர்ப் பிச்சை அளியுங்கள்” என்று வேண்டினாள்.சிவபெருமானும் எமனுக்கு உயிர்ப் பிச்சை அளித்து ஒரு நிபந்தனையும் விதித்தார். “யார் என்னிடத்தில் மிக பக்தியாக உள்ளார்களோ அவர்களை வதைக்காதே!” என்பதுதான் அந்த நிபந்தனை.நரகம் சொர்க்கமானது எப்படி?

நரகம் சொர்க்கமானது எப்படி?

அது பிதுர்லோகம்.துர்வாச முனிவர் வருகிறார் என்றதும், அங்கிருந்த நம் மறைந்த மூதாதையர்களாகிய அத்தனை பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அவரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலோடு காத்திருந்தனர்.
குறிப்பிட்ட நேரத்தில் பிதுர்லோகத்தில் காலடி எடுத்து வைத்தார் துர்வாசர். அவரை பிதுர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்று மகிழ்ந்தனர்.
திடீரென்று, “அய்யோ... அம்மா...” என்று கூக்குரல்கள்! அது வந்த திசையைக் கூர்ந்து நோக்கினார் துர்வாசர். இப்போது, அந்த அவலக்குரல்களின் வேகம் இன்னும் அதிகரித்திருந்தது.
“அங்கே என்ன நடக்கிறது?” என்று கேட்பது போல், அருகில் நின்ற பிதுர்களை ஏறிட்டார் துர்வாசர்.
“மகா முனிவரே! பூலோகத்தில் பாவம் செய்தவர்கள் எப்படியும் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். அவர்களின் பாவங்களை நிறைவேற்றும் பொருட்டு உருவாக்கப்பட்டவையே நரகங்கள்! அவற்றுள் முக்கியமானது கும்பீபாகம் என்னும் நரகம். சிவ துரோகிககள், குரு துரோகிககள், கடவுள் இல்லை என்று சாடுபவர்கள், மோக வெறியால் பெண்களை சீரழித்தவர்களுக்கு அங்கே தண்டனை வழங்கப்படும். எமதூதர்கள் அவர்களுக்கு பல்வேறு தண்டனைகளை கொடுப்பார்கள். அவற்றின் வேதனை தாங்க முடியாமல்தான் அங்கே கத்துகிறார்கள்...” என்று விளக்கம் கொடுத்தார்கள், பிதுர்கள்.
அவர்கள் இப்படிச் சொன்னதும், துர்வாசருக்கு கும்பீபாகம் நரகத்தை பார்க்க வேண்டும் என்பதுபோல் தோன்றியது. உடனே, கும்பீபாகம் அமைந்திருந்த இடத்தை நோக்கி நடந்தார். அதற்குள் என்னதான் நடக்கிறது என்று எட்டிப் பார்த்தார்.
பூலோகத்தில் பாவத்தை தாராளமாகச் சேர்த்தவர்கள் அங்கே நரக வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
“அய்யோ பாவம்...” என்பது போல் நெற்றியை சுருக்கிக் கொண்டு, அங்கிருந்து பிதுர்லோகத்திற்கு மீண்டும் திரும்பினார். சிறிதுநேரத்தில் பிதுர்லோகத்தில் இருந்தவர்களிடம் விடை பெற்றுவிட்டு புறப்பட்டார்.
துர்வாசர் சென்ற அடுத்த நொடியே கும்பீபாகம் நரகத்தில் ஒரேயடியாக மாற்றம் நிகழ்ந்தது. அங்கிருந்து அதுவரை வந்து கொண்டிருந்த அவலக் குரல்கள் திடீரென்று மறைந்து போயின. மாறாக, மகிழ்ச்சியில் திளைப்பவர்களிடம் இருந்து வெளிப்படும் சந்தோஷ ஆரவாரம் அங்கிருந்து வந்தது. பாவம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்த எம தூதர்கள், தாங்கள் தண்டனை கொடுத்தவர்கள் திடீரென்று ஆரவாரத்துடன் எழுந்து மகிழ்ந்து ஆடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அடுத்த நிமிடமே எமதர்மராஜனுக்கு தகவல் போனது. கும்பீபாகம் நரகத்தில் நடந்த மாற்றங்கள் பற்றி கூறப்பட்டது. அவருக்கும் அதிர்ச்சி! ஆனாலும், அது உண்மையாக இருக்குமா? என்று சின்ன சந்தேகம். கும்பீபாகம் நரகத்திற்கு வந்து அதை உறுதி செய்து கொண்டார்.
கும்பீபாகம் நரகத்தில் நடந்த அற்புதத்தைக் காண தேவேந்திரன் தலைமையில் தேவர்களும் வந்தனர். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் அதுபற்றிக் கூற... அவர் சிவபெருமானிடம் நடந்ததைக் கூறி தனது வியப்பை வெளிப்படுத்தினார்.
சிவபெருமான் கண்களை மூடி ஒருகணம் யோசித்துவிட்டு விஷ்ணுவைப் பார்த்தார்.“என் பக்தனான துர்வாசரால் ஏற்பட்ட மாற்றம்தான் இது. கும்பீபாகம் நரகத்தில் பாவிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறது என்று அவர் பார்த்ததால் இப்படி நிகழ்ந்துள்ளது. அதற்கு காரணம் அவர் தனது நெற்றியில் தரித்திருந்த திருநீறுதான். அவர், நெற்றியை சுருக்கி பாவிகளைப் பார்த்து வேதனைப்பட்ட போது, திருநீறு துகள்கள் காற்றில் பறந்து கும்பீபாகம் நரகத்தில் விழுந்தன. அந்த திருநீறுவின் மகிமையால் அங்கு அதுவரை நடந்த கொடுமைகள் மாறி, அந்த நரக லோகமே சொர்க்க லோகமாக மாறிவிட்டது...” என்று ஒரு விளக்கம் கொடுத்தார் சிவபெருமான்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாவம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காக இன்னொரு கும்பீபாகம் நரகத்தை உருவாக்கி, தனது பணியை வழக்கம் போல் செய்யத் தொடங்கினார் எமதர்மராஜன்.Thursday, March 10, 2011

பரிகாரம் இல்லாத ஜாதக அமைப்புகள் உள்ளதா

பரிகாரம் இல்லாத ஜாதக அமைப்புகள் உள்ளதா?
ஒருவரின் ஜாதகத்தில் ஏதாவது தோஷம் ஏற்படும் போது அதற்குரிய ஜோதிட பரிகாரங்கள், வழிபாடுகளைக் கூறுகிறீர்கள். பரிகாரம் என்பதே இதற்கு இல்லை; இதுதான் தலையெழுத்து என்று கூறும் வகையிலான ஜாதக அமைப்புகள் ஏதாவது உள்ளதா?
பதில்: ஜோதிட ரீதியாக பரிகாரமே இல்லாத பிரச்சனை என்று எதுவும் கிடையாது. பொதுவாக பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு/பரிகாரம் உண்டு.
நவகிரகங்கள் மற்றும் அவற்றின் காரகத்துவம் பற்றி ஜோதிடத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. உதாரணமாக சூரியனை எடுத்துக் கொண்டால் அவர் ஆத்மா, பிதுர், அரசாங்கம், அரசியல், இதயம் ஆகியவற்றில் ஆற்றல் செலுத்துவார்.
ஜோதிட ரீதியாகப் பார்த்தால் ஒரு கிரகம் குறிப்பிட்ட நபரின் ஜாதகத்தில் சிறப்பாக இருந்தால் அதன் காரகத்துவம் முழுமையாகக் கிடைக்கும். அதே கிரகம் கெட்டுப்போய் இருந்தால் அது வழங்கும் பலன்களும் கெடுதல் பயக்கும்.
ஜோதிட ரீதியாக பரிகாரம் இல்லாத விஷயம் என்று எதுவுமில்லை. பண்டைய காலத்தில் நவகிரகத்தால் ஏற்படும் தோஷங்கள், அவற்றால் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க குறிப்பிட்ட மந்திரங்களை ஜெபித்து முறையாக யாகம் நடத்தப்பட்டது.
ஆனால் தற்போதைய சூழலில் முறையாக யாகம் நடத்துபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதால், நடைமுறைப் பரிகாரங்களின் மூலம் தோஷத்திற்கு பரிகாரம் தேடுவதே சிறந்த வழி.
உதாரணமாக செவ்வாய் கிரகம் ரத்தத்திற்கும், விபத்திற்கும் உரியது. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய், சனி பார்வை பெற்றிருந்தாலும், செவ்வாய்+சனி சேர்க்கை பெற்றிருந்தாலும் அவருக்கு அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட ஜாதகர் தாமாகவே முன்வந்து ரத்ததானம் செய்யலாம். இதன் மூலம் விபத்தால் ரத்த இழப்பு ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.
திருமணமே நடக்காது என்பது போன்ற கடுமையான தோஷம் உள்ள ஜாதகத்தையும் பார்த்திருக்கிறேன். அந்த மணமகனுக்கு தற்போது 38 வயதாகிறது. அவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் (7, 8ஆம் இடம்) சிறப்பாக இல்லாமல், சுக்கிரனும் கெட்டுப் போய் இருந்ததால் அவருக்கு மண விலக்கு பெற்ற பெண்ணை திருமணம் செய்வதே சிறந்த பரிகாரமாக அமையும் எனக் கூறினேன்.
அந்த ஜாதகத்தை கொண்டு வந்த பெற்றோர், எனது அலுவலகத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக என்னிடம் ஒரு விடயத்தை தெரிவித்தனர். அதாவது, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் மகனின் ஜாதகத்தைக் கொண்டு வந்து பார்த்ததாகவும், அப்போது கூட மறுமணம் செய்ய வேண்டும் என்று நான் கூறியதாகவும் நினைவுபடுத்தினர்.
ஆனால் குடும்ப கௌரவம் கருதி மணவிலக்கு பெற்ற பெண்ணை திருமணம் செய்யாமல் தவிர்த்து வந்தோம். தற்போது மகனுக்கு 38 வயது முடிவடைய உள்ளதால் வேறு வழியில்லாமல் மணவிலக்கு பெற்ற பெண்ணை தேடி வருகிறோம் என்று கூறினர்.
எனவே, ஒருவர் தனது ஜாதகத்தில் கிரகங்களின் ஆதிக்கம் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

குரு தசையின் பலன்கள் என்ன?

குரு தசையின் பலன்கள் என்ன? குரு பகவான் 64 கலைகளையும் அறிந்தவர்; வேதங்கள், உபநிடதங்களில் தேர்ச்சி பெற்றவர் என அவரது பெருமையை ஜோதிட நூல்கள் கூறுகின்றன.உலகில் உள்ள அனைவருக்கும் நல்ல குரு (ஆசான்) அமைவது இல்லை. ஒரு சிலர் தனக்கு முதன் முதலில் கல்வி கற்பித்த ஆசிரியரை வாழ்நாள் முழுவதும் புகழ்ந்து பேசுவார்கள். சிலர் கல்லூரியில் கற்பித்த பேராசிரியரை மறக்க மாட்டார்கள்.
ஒரு மாணவனுக்கு படிக்கும் போது குரு தசை (16 ஆண்டுகள் நடக்கும்) வந்தால் அவருக்கு நல்ல ஆசிரியர் கிடைப்பார். பிற மாணவர்களுக்கு கிடைக்காத தனி கவனம், அன்பு, ஆதரவு சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் இருந்து குரு தசை நடக்கும் மாணவனுக்கு கிடைக்கும்.
அதேபோல் குரு தசை நடக்கும் மாணவன் தேர்வில் எழுதும் பதிலும் அருமையாக இருக்கும். சொந்த நடையில் பதில் தருவார். கேள்விக்கு 100% சரியான பதிலாகவும் அது இருக்கும். கல்லூரிப் படிப்பின் போது குரு தசை நடந்தால் அந்த மாணவர் ஆராய்ச்சிப் படிப்பை முடித்து பேராசிரியராகும் வாய்ப்பைப் பெறுவார்.
பொதுவாக 25 வயது முதல் 41 வயது வரையிலான காலத்தில் குரு தசை வந்தால், ‘சற்புத்திர யோகம்’ கிடைக்கும். உலகில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. ஆனால் அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோர் மீது முழுமையான அன்பு பிறப்பதில்லை. தந்தை மீதே சொத்துக்காக வழக்கு தொடரும் மகன்களும் இருக்கிறார்கள். அம்மாவுக்கு இறுதிக் காலத்தில் உணவளிப்பதில் கணக்குப் பார்க்கும் மகன்களும் உள்ளனர்.
ஆனால் சற்புத்திர யோகம் உள்ளவருக்கு பிறக்கும் குழந்தைகள், பெற்றோர் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கு காரணம் குரு தசை (தாய்/தந்தைக்கு) நடக்கும் காலத்தில் அந்தக் குழந்தைகள் பிறந்திருப்பர்.
இதேபோல் 41 வயதிற்குப் பின்னர் ஒருவருக்கு குரு தசை வந்தால் அவருக்கு ஆன்மிகத் தேடல் ஏற்படும். சமுதாயத்தின் நலனுக்காக பாடுபடுவார். பழமையான நூல்களை மீண்டும் பதிப்பிக்க உதவிபுரிவார். மேற்கூறிய அனைத்து பலன்களும் கிடைக்க சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
மேஷம், கடகம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய லக்னம்/ராசிகளில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் மிகப்பெரிய ராஜயோகத்தை வழங்குவார். ரிஷபத்திற்கு நல்லதும், கெட்டதுமாக பலன் வழங்குவார். மிதுனம், கன்னி ஆகிய 2 ராசிகளுக்கும் குரு பகவான் முக்கிய கிரகமாக இருந்தாலும், பாதகாதிபதியாகவும் வருவதால் நல்லதையும், கெட்டதையும் கலந்து வழங்குபவராகத் திகழ்கிறார். துலாம் ராசிக்கும் 50% நற்பலன், 50% கெடு பலனே குருவால் கிடைக்கும். மகரம், கும்ப ராசிகளுக்கு சமமான பலன் (பெரிய பாதிப்பும் கிடையாது, லாபமும் கிடையாது) கிடைக்கும்.
பூசம் 1ஆம் பாதத்தில் குரு உச்சமடைகிறார். கடக ராசியில் 30 பாகைகள் உள்ளன. அதில் 2.40 முதல் 5 பாகைக்குள் குரு உச்சமாகிறார். எனவே, அந்த குரு உச்சம் பெற்ற நேரத்தில் பிறந்தவர்கள் மிகப்பெரிய ராஜயோகத்தை பெறுவார்கள். அதற்குப் பிந்தைய காலத்தில் குருவின் உச்ச பலன் குறைந்து விடும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு உச்சமடைந்திருந்தால் அதற்கான பலன் முழுவதுமாகக் கிடைக்காது. சம்பந்தப்பட்டவர் வேண்டுமானால் குரு உச்சமாக இருக்கிறது எனப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அவர் அமைச்சருக்கு மிக நெருக்கமானவராக இருந்தாலும் அதனால் ஒரு பலனும் கிடைக்காது.
சிலருக்கு குருவும், சந்திரனும் பரிவர்த்தனை பெற்றிருப்பார்கள் (சந்திரன் மீனத்தில், குரு கடகத்தில்). இதுபோன்ற அமைப்பைப் பெற்றவர்களுக்கு குரு அல்லது சந்திர தசை நடக்கும் போது மிகப்பெரிய ராஜயோகம் கிடைக்கும் என ஜாதக அலங்கார நூல் கூறுகிறது. இவர்கள் நாடாளும் யோகத்தை அடைவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
நேர்மை, நியாயம், நீதிக்கு உரியவர் குருபகவான். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருந்து அவருக்கு குரு தசை நடந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை அடையலாம். ஆனால் பிறந்த உடனேயே குரு தசை வந்தால் சிறிய தொந்தரவுகள் ஏற்படும்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய 3 நட்சத்திரக்காரர்களுக்கு பிறந்த உடனேயே குரு தசை ஆரம்பமாகி விடும். அதுபோன்ற குழந்தைகளுக்கு சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை ஏற்பட வாய்ப்புண்டு.
ஒருவருக்கு 2வது தசையாக குரு தசை வந்தால் சிறப்பாக இருக்கும். இதேபோல் 3, 4, 5வது தசையாக வரும் போதும் நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். ஆனால் 6வது தசையாக குரு தசை வந்தால் சில பாதிப்புகளை உருவாக்கும். பொருள் இழப்பு, அரசாங்கத்தால் சொத்து பறிபோதல், வழக்குகளில் தோல்வியை ஏற்படக் கூடும்.
ஒருவருக்கு திருமணம் செய்வதற்கு முன்பாக அவருக்கு குரு பலன் இருக்கிறதா? என்று தான் ஜோதிடர்களும், பெற்றோரும் பார்க்கின்றனர். ஏனென்றால் குருதான் அனைத்தையும் சுமுகமாக தீர்க்கக் கூடியவர். குருவின் ஆதிக்கம் இருந்தால் அனைத்து தரப்பிலும் வெற்றி கிடைக்கும். திருமணம் மூலம் நல்ல பலனை அவர்கள் பெறுவதற்காகவே குரு பலன் இருக்கும் போது திருமணம் முடிக்கிறார்கள்.
குரு தசை நடக்கும் போது குரு பலன் இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாமா?
பதில்: சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்து, யோகாகாதிபதி தசையாக, குரு தசை/புக்தி நடந்தால் குரு பலன் இல்லாமலேயே திருமணம், வீடு கட்டுதல் உள்ளிட்ட சுபகாரியங்களை அவர் மேற்கொள்ளலாம்.

புதன் தசையின் பலன்கள் என்ன?

புதன் தசையின் பலன்கள் என்ன?
ஜோதிடத்தைப் பொறுத்தவரை புதனை வித்யாகாரகன் என்று அழைப்பர். கல்வி, வித்தைக்கு உரியவர் புதன். ஒரு மனிதனின் நரம்பு மண்டலங்களை இயக்குவது புதன். கற்றலில் ஆர்வம் இருப்பதற்கும் புதனே காரணம்.
புதன் நன்றாக அமையப் பெற்றவர்கள் சுயமாக முன்னேறுவார்கள். யாருடைய உதவியையும் எதிர்பார்க்க மாட்டார்கள். புதனின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். சபையில் பேசும் போது கூட முதலில் பேசத் தயங்குவார்கள். அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்ட பின்னரே இவர்கள் பேசுவார்கள். ஆனால் தேர்வின் போது சரியான பதிலை எழுதுவதற்கு இவர்கள் தயங்க மாட்டார்கள்.
புதன் நன்றாக இருந்தால் சொந்தத்தில் (மாமன் மகள், அத்தை மகள்) திருமணம் நடக்கும். விடாமுயற்சி உடையவர்களும் புதனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களே. வணிகத்திற்கு உரியவரும் புதன்தான். பங்கு வர்த்தகத்தில் வெற்றி பெறுபவர்கள் ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்கும். ஆனால் புதன் வலுவிழந்து காணப்பட்டால் அந்த ஜாதகர் பங்குச்சந்தையும் எவ்வளவு முதலீடு செய்தாலும் லாபம் பார்ப்பது கடினம். தூதுக்கோள் என்றும் புதன் அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் மன்னர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு போர் மூளும் சூழல் நிலவும் தருணத்தில், புதன் ஆதிக்கம் (ஆயில்யம், கேட்டை, ரேவதி அல்லது மிதுனம்/கன்னி ராசி) பெற்ற தகுதியான நபர் தூது சென்றால் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி விடுவார் என ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
புதனின் ஆதிக்கம் பெற்றவர்களிடம் எதிரிகள் கூட பகைத்துக் கொள்ளமாட்டார்கள். இதற்கு மனிதாபிமானமும் ஒரு காரணம்.
எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் புதன் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு மற்றவர்களின் பாராட்டு கிடைக்காது. உதாரணமாக அலுவலகத்திலேயே சிறந்த பணியாளர் எனப் பெயர் பெற்றிருந்தாலும் பதவி உயர்வு கிடைக்காது. புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இதுபோன்ற துரதிருஷ்டமும் ஏற்படும்.
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சிறு துயரமும் இவர்களை பெரியளவில் பாதிக்கும். புதன் தசை மொத்தம் 17 ஆண்டுகள் நடக்கும். சிறுவயதில் புதன் தசை வந்தால் சிறப்பான கல்வி கிடைக்கும். நடு வயதில் புதன் தசை வந்தால் வியாபாரத்தில் செல்வம் கொழிப்பார்கள். முதிய வயதில் புதன் தசை நடந்தால் புத்தகங்கள் எழுதிக் குவிப்பார்கள்.
கணிதத்திற்கு உரியவரும் புதன். ஒருவர் ஜாதகத்தில் புதன் நல்ல ஆதிபத்தியம் பெற்று, நல்ல கிரக சேர்க்கைகளுடன் இருந்தால் அவர்கள் ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியராக இருப்பார்கள்.
யாராவது கண்ணீர் விட்டால் இவர்களுக்கு மனம் இளகி விடும். கையில் இருப்பதையெல்லாம் கொடுத்து விடுவார்கள். மனித நேயம் மிக்கவர்களாகத் திகழும் புதன் ஆதிக்கம் பெற்றவர்கள் அதனாலேயே ஏமாற்றப்படுவார்கள்.
புதன் நன்றாக இருந்தால் அவர்கள் ஆய்வுப் படிப்புகள் மேற்கொள்வார்கள். கல்விக் கூடம் நடத்துவதற்கும் புதனின் தயவு தேவை. வில் வித்தைக்கு மட்டுமின்றி அனைத்து உள்ளரங்க விளையாட்டுகளுக்கும் உரியவர் புதன். திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள் என்பதால் சதுரங்க விளையாட்டில் நல்ல திறமை பெற்றிருப்பார்கள்.

எந்த ராசிக்காரர் காதலில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்?

எந்த ராசிக்காரர் காதலில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்? ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் தனி சிறப்பம்சம் உண்டு என்று கூறியிருந்தீர்கள். மனிதர்களின் பழக்க வழக்கம் கூட ராசியின் அடிப்படையில் வேறுபடும் என்றும், ஒருவர் உணவு சாப்பிடும் முறை, பிடித்த உணவு வகைகளைக் கூட ராசியைக் கொண்டு தெரிவிக்க முடியும் என்றும் சமீபத்திய கட்டுரை ஒன்றில் கூறியிருந்தீர்கள். அந்த வகையில் எந்த ராசிக்காரர் காதலில் அதிக ஆர்வம் உடையவராக இருப்பார் என்று விரிவாக் கூறுங்கள்?
பதில்: ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே கைபிடிப்பதில் உறுதியாக நிற்பார்கள் என்று கூறலாம். கன்னி ராசிக்காரர்கள் எப்போதுமே காதலித்துக் கொண்டிருப்பவர்கள்.
காதலிப்பார்கள், காதலில் ஈடுபாடு இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்கள் என்று மேற்குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களையும் குறிப்பிடலாம். ஆனால் காதலில் வெற்றி பெறுவார்களா? காதலித்தவரை கைபிடிப்பார்களா? என்பதை அவர்களின் சொந்த ஜாதகத்தை வைத்தே கணிக்க முடியும்.
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் அந்த ஜாதகர், தான்காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வார். சுக்கிரன் மோசமாக இருந்தால் காதலில் தோல்வி, திருமணத்திற்கு பின் குறுகிய காலத்தில் பிரிவு போன்ற சம்பவங்கள் ஏற்படும்.
பொதுவாக எந்த லக்னம்/ராசியாக இருந்தாலும், களத்திர ஸ்தானம் என்றழைக்கப்படும் 7, 8ஆம் வீடுகளைக் கொண்டே எந்த வகையான திருமணம் அமையும் எனக் கூற வேண்டும். ஒருவருக்கு 7, 8ஆம் அதிபதி நல்ல நிலையில் இருந்து பாவ கிரகங்களின் பார்வை/சேர்க்கை இல்லாமல் இருந்தால் அவருக்கு பெற்றோர் பார்க்கும் வரன் துணைவராக அமைவார்.
களஸ்திர ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும் வலுவாக இருந்தால் நெருங்கிய உறவிலேயே (அத்தை, மாமன் முறையில்) திருமணம் நடைபெறும்.

உடலமை‌ப்பு, முக அழ‌கி‌ற்கான ஜோ‌திட‌ம்!

உடலமை‌ப்பு, முக அழ‌கி‌ற்கான ஜோ‌திட‌ம்!
உடலமைப்பு, முக அழகு அல்லது லட்சணம் இதற்கெல்லாம் கூட ஜோதிடத்தில் இடம் உண்டு என்று சொல்லியிருக்கிறீர்கள். அது எப்படி?
சாதாரணமாக உடலாதிபதி என்பவர் சந்திரன்தான். அவர்தான் தோற்றங்களுக்குரிய கிரகம். தோற்ற அமைப்பிற்கு உரிய கிரகம். உதாரணத்திற்கு சுக்ரன் நன்றாக இருக்கிறாரென்றால், ஒருவிதமான காந்தமான கண்கள், கணிவான கண்கள். அவர்கள் சும்மா போய்க் கொண்டிருந்தால் கூட, என்ன சார்? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பேச வைக்கக் கூடியவர்கள். அந்த மாதிரியான கண்களெல்லாம் சுக்ரன் நன்றாக இருந்தாரென்றால் அந்த ஒளி அவர்களிடம் இருக்கும். அவர்களெல்லாம் பெரிதாக ஒன்றும் நம்மிடம் பேச வேண்டும் என்று அவசியமே இருக்காது. சும்மா அப்படி பார்த்து கண் சிமிட்டினாலே போதும் நாம் விழுந்துவிடுவோம். அந்த மாதிரியெல்லாம் இருப்பார்கள்.
சந்திரனும் அதேபோல வலுவாக இருக்க வேண்டும். சந்திரன்தான் முகத் தோற்றம், முகப்பொலிவு, அந்த உருண்டை முகம், அந்த முகத்திற்கு தகுந்த மாதிரி மூக்கு, கண், காது எல்லாம் செதுக்கி வைத்திருக்கிறது என்று சொல்வார்களே, அதெல்லாம் சந்திரன்தான். லக்னாதிபதி, உதாரணத்திற்கு மேஷ லக்னம் என்றால் அதிகமான உயரமாக இருக்க மாட்டார்கள். சராசரி உயரம், பருத்த தேகம் அல்ல. ஒல்லியாகவும் இல்லாமல் உயரத்திற்கு ஏற்ற சதைப்பிடிப்புடன் இருப்பார்கள். இதுபோல அங்க லட்சணங்கள் ஒவ்வொரு நட்சத்திர ராசிக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் அதுபோலத்தான் இருப்பார்கள். ரிஷப ராசிக்காரர்கள் என்றால் சராசரி உயரம், அதற்கும் மேலாக இருப்பார்கள்.
மிதுனம், கன்னி இதெல்லாம் புதன் ராசி. இவர்களுக்கு மூக்கின் நுனி கொஞ்சம் உருண்டையாக இருக்கும். குறிப்பாக கன்னி ராசிக்காரர்களுக்கு மிளகாய் மூக்கு இருப்பதையெல்லாம் பார்க்கிறோம். இதற்கடுத்து துலாம், சிம்மம், மகரம் ராசிக்கார்களைப் பார்த்தீர்களென்றால், மூக்கு நீளமாக இருக்கும். தனுசு, மீனம் ராசிக்காரர்களுக்கு புட்டபருத்தி பாபாவிற்கு பதுங்கி, ஒரு மாதிரி மடிந்து, அதாவது ஊர் பக்கத்திலெல்லாம் பெருமாள் மூக்கு என்று சொல்வார்கள் அந்த மாதிரி இருக்கும்.
மூக்கு பற்றி ஏன் அதிகமாகச் சொல்கிறேன் என்றால், நாசிதான் சாமுத்திரிகா லட்சணத்தில் பிரதானம். நாசி, கண்கள், நெற்றி அமைப்பு. நெற்றியில் இருக்கும் கோடுகளையெல்லாம் வைத்து சில விஷயங்களைச் சொல்லலாம். ஏனென்றால் சனி லக்னத்தையோ, ராசியையோ பார்க்கிறதென்றால் கோடுகள் நெற்றியில் வர ஆரம்பித்துவிடும். இதுபோன்ற சில விஷயங்கள் உண்டு. அடுத்து புதன் ஒருவருக்கு வலுவாக இருந்தால் மெல்லிய விரல்கள் நீளமான விரல்கள் இருக்கும். அவருடைய கையைப் பார்க்கும் போதே சொல்லிவிடலாம், புதன் உச்சமாக இருக்கிறார் அவர் ஜாதகத்தில் என்று.

Wednesday, March 9, 2011

எந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்

ராகம் !

எந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும் :
ஆகிர் பரவி................... அஜீரணத்தையும், ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தையும், மூட்டு வலிகளையும்

குணப்படுத்துகிறது .

பைரவி ............................ முட்டி மற்றும் முழங்கால் வலி .

சந்திரகௌன்ஸ் ........... பசியின்மை .

தர்பாரி கானடா .......... தலைவலி .

தீபக் ................................... அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல், குடற்கற்கள் .

குஜரிகோடி ..................... இருமல், சளி .

குணகளி .......................... மலச்சிக்கல், தலைவலி, மூலம் .

ஜோன்புரி ........................ வாயுக்கோளாறு, பேதி, மலச்சிக்கல் .

ஜெய் ஜெய் வந்தி ... பேதி, தலைவலி, மூட்டுவலி .

( த்வஜாவந்தி )

மால்கௌன்ஸ் ............. குடல் வாயு .

பூர்விகல்யாணி ............ இரத்தசோகை, டென்ஷன், குடல் எரிச்சல் .

பூர்ய தனஸ்ரீ ................. இரத்தசோகை .

சோஹானி .................... தலைவலி.

வசந்த பஹார் .............குடற்கற்கள் .

யெமன் கல்யாணி ....... மூட்டுவலி.

.
சில நேரங்களில் சில ராகங்கள் !

காலை மணி 5-6 .........பூபாளம்.
6-7..........பிலஹரி.

7-8...........தன்யாச
8-9
9-10..........ஆரபி, சாவேரி
10-11..........மத்யமாவதி.
11-12..........மணிரங்கு.
பகல் மணி12-100.......ஸ்ரீ ராகம்..
1-2............மாண்டு.
2-3............பைரவி, கரகரப்பிரியா.
3-4..............கல்யாணி, யமுனா கல்யாணி.
மாலை மணி4-5 .........காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம்

பிராண சக்தி பெருக...

பிராண சக்தி பெருக...

நம் உடம்பின் இயக்கத்துக்குப் பிராண சக்தியே மூலகாரணமாக விளங்குகிறது . நம் உடம்பில் பிராண சக்தியின் இருப்பு குறைந்தால் சோர்வும், களைப்பும், நோய்களும் உண்டாகும் . எண்ணுதல், பார்த்தல், பேசுதல், சாப்பிடுதல், வேலை செய்தல் முதலிய பல பணிகளால் பிராண சக்தி செலவாகிறது .
மவுனம் : ஒரு நாளைக்கு மவுனமாக இருப்பதன் மூலம் பிராண சக்தியைச் சேமிக்கலாம் . மவுனம் 3 வகைப்படும் . அவை வாய் மவுனம், உடல் மவுனம், மனோ மவுனம் என்பன . பேசாமல் இருப்பது வாய் மவுனம் . சைகைகள் கூட இல்லாமல் இருப்பது உடல் மவுனம் . மனதில் எதுவும் எண்ணாமல் இருப்பது மனோ மவுனம் ஆகும் .
மவுன உண்ணா நோன்பு : பேசாவிரதமும், உண்ணாவிரதமும் சேர்ந்து மேற்கொள்வது மவுன உண்ணா நோன்பு ஆகும் . இதனால் பிராண சக்தியை சேமித்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் .
முத்திரைகளால் மூச்சுப்பயிற்சி : கைவிரல்களால் எளிய முத்திரைகளுடன் மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் பிராண சக்தியைப் பெருக்கிக் கொள்ளலாம் . 2 கைகளிலும் மோதிர விரலின் 3ம் அங்குலாஸ்தியை கட்டை விரலால் தொட்டுக்கொண்டு செய்வது விஷம் நீக்கு முத்திரை ஆகும் . இந்த முத்திரையில் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்தால் உடலின் கழிவுகள் வெளியேறும் .கட்டை விரல் நுனியுடன் மோதிர விரல், சுண்டு விரல் நுனியைச் சேர்த்து வைத்துக் கொண்டு செய்வது பிராண முத்திரை ஆகும் . இந்த முத்திரையில் மூச்சுப்பயிற்சி செய்தால் உடலில் பிராண சக்தி பெருகும் .
கைகளை கோர்த்துக் கொண்டு வலதுகட்டை விரலை மேலே நீக்கிவைத்துக் கொள்வது லிங்க முத்திரை ஆகும் . இந்த முத்திரையில் கைகளை மார்புக்கு நேரே வைத்துக்கொண்டு ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்தால் மார்புச்சளி நீங்கும் . உடல் எடை குறையும் . உடல் சூடு அதிகமாகும் . நோய் எதிர்ப்புசக்தி பெருகும் .இரு கட்டை விரல்களால் காதுகளை அடைத்துக்கொண்டு ஆள் காட்டி விரல்களை கண்களின் மீதும், நடு விரல்களை மூக்கின் மீதும், சுண்டு விரல்களை கீழ் உதட்டின் மீதும் வைத்துக் கொண்டு செய்வது சன்முகி முத்திரை ஆகும் . இந்த முத்திரையில் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்தால் மனதை உள்நோக்கிப் பார்க்கும் திறன் ஏற்படும் . இது ஆன்மிக வளர்ச்சிக்கு உதவும் .கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி விரலின் நுனியைச் சேர்த்துச் செய்வது சின் முத்திரை ஆகும் . சின் முத்திரையில் மூச்சுப்பயிற்சி செய்தால் மனம் ஒருமுகப்படும் . நினைவாற்றல் பெருகும்

பாஞ்சாலி ஏன் சிரித்தாள் ?

பாஞ்சாலி ஏன் சிரித்தாள் ?

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே , தட்சிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் , காத்திருந்தார் . அவர் மரணமடைவதற்கு முன்பு , அவரிடமிருந்து நீதி , நேர்மை , அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார் . தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார் .
பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி " தாங்கள் எங்களுக்கு நீதி , நேர்மை , அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் " என்று கேட்க , பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள் . அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த தர்மர் , " நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் ? " என்று கடுமையாகக் கேட்டார் .
" துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது , கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும் ? தர்மம் தெரிந்த பீஷ்மர் , அந்தச் சபையில் அமர்ந்து , வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர , துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா ? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றி கேட்கிறீர்களே என்று நினைக்கும்போது சிரிக்காமல் என்ன செய்வது ? " என்று சொல்ல , பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள் . பீஷ்மர் பேசினார் . " பாஞ்சாலி சொன்னது முற்றிலும் உண்மை . அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும் . அப்போதுதான் உங்களுக்கும் , உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும் . துரியோதனன் , அன்னமிடுவதில் உயர்ந்தவன் . எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறைய உபசரிப்பான் . ஆனால் , அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல . சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு , அவர்களை தன் காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வான் . உண்டவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க , வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள் . இதற்கு சல்லியன் ஓர் உதாரணம் .
" ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன் , மற்றவர்களுக்கு அன்னமிட்டால் , அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும் . நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது . அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன் ."
" ஆனால் இப்போது , பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது . அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன . இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது . எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவன் . கேளுங்கள் " என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார் .
அதனால்தான் அந்தக் காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள் , சாதுக்கள் , பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள் .

வாய் - கண்

வாய் - கண்

வாய்
மற்ற எந்த அவயத்தையும் விட வாய்க்குத்தான் வேலை அதிகம். ருசி பார்ப்பது அதாவது சாப்பிடுவது, பேசுவது என்று அதற்கு இரண்டு காரியம் இருப்பதாலேயே இரண்டையும் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். "வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி" என்கிறபோது சாப்பாடு, பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவது தான் தாத்பர்யம்.
ஜகத்குரு சந்திரசேகரேந்திரர்.
கண்
பாரத இதிகாசங்கள் கண்களைச் சிறப்பித்துக் கூறுகின்றன. கடவுளைக் 'கண்' கண்ட தெய்வம் என்று சொல்கிறது. 'கண்' நம் வாழ்க்கைக்கு வழி காட்டியாய் அமைந்திருக்கிறது. திருதராஷ்டிரனுக்கு 100 குழந்தைகள் இருந்தும் ஒருவனைக் கூட நல்வழியில், ஒழுக்க நெறியில் கொண்டு செல்ல அவனால் இயலாமற் போயிற்று. அதற்கு அடிப்படைக் காரணம் அவனுக்குக் கண் இல்லாமை தான். கண் இருந்திருந்தால் அவர்களையும் பாண்டவர்களைப் போல நல்லவர்களாக உருவாக்கியிருக்க முடியும்.திருமால் எடுத்த பத்து அவதாரங்களும் பரிணாம வளர்ச்சியை விளக்குவதாக உள்ளது

திருமால் எடுத்த பத்து அவதாரங்களையும் வரிசைப்படி வைத்துப் பார்த்தால் பரிணாம வளர்ச்சி தத்துவத்தை விளக்குவதாக உள்ளது . திருமால் முதல் முதலாக ஊர்வன வகையைச் சேர்ந்த கூர்மமாக அவதரித்து பின் , அதைவிட சற்று உயர்ந்ததான மச்ச அவதாரத்தை எடுத்தார் . தொடர்ந்து விலங்குகளில் வராகமாகவும் , விலங்குகளில் உயர்ந்த சிம்ம அவதாரமும் எடுத்தார் . மனித அவதாரம் எடுக்க முனைந்த திருமால் முதலில் வாமனன் என்னும் குள்ள வடிவை எடுத்து பின் ராமனாக மனித அவதாரம் எடுத்தார் .

இதிலிருந்து திருமாலின் அவதாரங்களின் வரிசை முறையில் ஒரு ஒழுங்கு இருப்பது அறியத் தக்கது .

ஆறிலும் சாவு , நூறிலும் சாவு

பழமொழியின் பின்னணி .

' ஆறிலும் சாவு , நூறிலும் சாவு ' என்று ஒரு பழமொழி சொல்வார்கள் . இதற்கு , சாவு ஆறிலும் வரும் , நூறிலும் வரும் என்றே நாம் எல்லோரும் பொருள் கொள்கிறோம் . வாழ்க்கை நிலையற்றது என்பதைத் தான் இப்படிச் சொன்னார்கள் என்று நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றாலும் , அதன் உண்மையான பொருள் இதுவல்ல .குருசேத்திர போரில் , போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி , அவனிடம் சென்று , பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறாள் . அப்போது கர்ணன் கூறுகிறான் : ' தாயே ! நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும் சரி , கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து நூறாவது ஆளாக போரிட்டாலும் சரி , இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும் . ஆகவே , ஆறிலும் சாவு அல்லது நூறிலும் சாவு . எப்படி செத்தால் என்ன ? செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் ' என்கிறான் .
இங்கே கர்ணன் கூறியதுதான் , மேற்படி பழமொழிக்கு உண்மையான பொருள்

அனுமன் சீதையைக் கண்டு பிடித்தது எப்படி ?

அனுமன் சீதையைக் கண்டு பிடித்தது எப்படி ?

இலங்கையில் சீதையைக் கண்டு விட்டு வரும் அனுமன் " கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால் , " என்று தெரிவித்ததாகக் கம்பன் பாடியிருக்கிறார் .' கண்களால் கண்டனன் ' என்று சொல்வதில் என்ன விசேஷம் ? அனுமன் மாத்திரமல்ல , யாருமே கண்களால் தானே பார்க்கமுடியும் ? விளக்கம் :
சீதையைத் தேடப் புறப்பட்ட போது சீதையின் வடிவம் எப்படி இருக்கும் என்பது அனுமனுக்குத் தெரியாது . ஆகவே அனுமன் ஒரு காரியம் செய்தார் . மனைவியைப் பிரிந்து வாழும் ( தவிக்கும் ) ராமனின் கண்களை நன்றாகப் பார்த்து வைத்துக் கொண்டார் . அந்த கண்களில் எத்தனை சோகம் தேங்கியிருக்கிறதோ அதே அளவு சோகம் எந்தப் பெண்ணின் கண்களில் இருக்கிறதோ அவள்தான் சீதையாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார் . அவ்வாறே அசோகவனத்தில் சீதையைப் பார்த்ததும் அவள்தான் சீதை என்பதை , அந்தக் கண்களின் சோகத்தால் ' கண்களால் ' -- கண்டு கொண்டார் .ராமபிரானும், தவளைம்


ராமபிரானும், தவளைம்
ராமபிரான் ஒருமுறை கங்கையில் குளிக்கச் செல்லும்போது தன் தோளில் இருந்த அம்புராத் துணிகளைக் கழற்றி வைத்தார் . அதில் ஒரே ஒரு அம்புமட்டுமே இருந்தது . அதைப் படுக்க வைத்துச் செல்வது வீரனுக்கு அழகானது அல்ல எனத் தரையில் குத்திவிட்டுச் சென்றார் .
குளித்து முடித்து விட்டுத் திரும்ப அந்த அம்பைத் தரையிலிருந்து பிடுங்கியபோது , ஒரு தவளை ரத்தம் வெளியேற உயிருக்குத் துடிதுடித்துக் கொண்டு அதன் நுனியில் ஒட்டி இருந்தது ! அதைக் கண்ட ராமபிரான் நெஞ்சம் பதைபதைத்து , " தவளையே ! நான் உன்னை அம்பால் குத்தியபோது நீ குரல் கொடுத்திருக்கலாமே ! ஐயோ ! பெரும் தவறு செய்து விட்டேனே ! " எனக் கலங்கினார் .
தவளை கூறியது : " எம்பெருமானே ! எனக்குப் பிறர் தீமை செய்தால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னை ' ராமா ! ராமா ! ' என அழைப்பேன் . ஆனால் , அந்த ராமனே இப்போது எனக்குத் தீங்கு செய்யும்போது நான் வேறு யாரைக் கூவி அழைப்பேன் ? " என்றது .

இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் எதற்காக?

14 -வருடம் எதற்காக ?

கைகேயி இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும் என்று கூறுகிறாள். அதன் காரணம்:-யுகங்கள் 4 வகைப்படும். அவை கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்கள். இந்த கலியுகத்தில் தந்தையும், மகனும் 12 ஆண்டுகள் பிரிந்திருந்தால் (ஒருவரை ஒருவர் சந்திக்காமல் ) 12 ஆண்டுகள் கழிந்தபின்பு தந்தை, மகன் என்கிற உறவு முறிந்து விடும, என்கிறது இந்துமத சாஸ்திரம். இந்த கருத்து துவாபர யுகத்தில் 13 ஆண்டுகள், திரேதாயுகத்தில் 14 ஆண்டுகள், கிருத யுகத்தில் 15 ஆண்டுகள்.இராமாயணம் நடந்த காலம் திரேதா யுகம் . இதில் தசரதனும், இராமனும் 14 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தால் தந்தை, மகன் உறவு இல்லாமல் போய்விடும்.என்வே இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் கழித்து வந்தால் இராமனுக்கு பட்டம் கிடைக்காது, பரதனே அரசாள்வான்.

Tuesday, March 8, 2011

‌சிவரா‌த்‌தி‌ரி ‌விரதம்

‌சிவரா‌த்‌தி‌ரி ‌விரதம்

சிவராத்திரி அ‌ன்று விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். ‌வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.
சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். ‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்து பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம். இர‌வி‌ல் ‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் பூஜைக‌ள் கு‌றி‌த்த முழு ‌விவர‌மு‌ம் இ‌ங்கு தர‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ற்கே‌ற்ற பொரு‌ட்களை ‌நீ‌ங்க‌ள் வா‌ங்‌கி அ‌ளி‌க்கலா‌ம்.
முதல் சாமம்:- பஞ்சகவ்ய அபிசேகம் - சந்தனப்பூச்சு - வில்வம், தாமரை அலங்காரம் - அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் - ருக்வேத பாராயணம்.
இரண்டாம் சாமம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் - பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - பாயாசம் நிவேதனம் - யசுர் வேத பாராயணம்.
மூன்றாம் சாமம்:- தேன் அபிசேகம் - பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - எள் அன்னம் நிவேதனம் - சாமவேத பாராயணம்.
நான்காம் சாமம்:- கரும்புச்சாறு அபிசேகம் - நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்காரம் - அர்ச்சனை - சுத்தான்னம் நிவேதனம் - அதர்வன வேத பாராயணம்.

அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையு‌ம், உச்சிக்கால பூஜையையு‌ம் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது.மாசி மாதத் தேய்ப்பிறைச் சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரியாகும்.சூரிய உதயம் முதல் இரவு முழுவதும் பகல் இரவு 60 நாழிகையும் அமாவாசை இருந்தால், அன்று யோக சிவராத்திரி. திங்கட்கிழமை அன்று சூரிய அஸ்தமனம் முதல், அன்றிரவு நான்கு ஜாமமும் தோப்பிறைச் சதுர்த்தி இருந்தால் அன்றைய தினமும் யோக சிவராத்திரி. திங்கட்கிழமை அன்று இரவு நான்காம் ஜாமத்தில், அமாவாசை அரை நாழிகை இருந்தாலும் யோக சிவராத்திரியாகும். திங்கட்கிழமை இரவு நான்காம் ஜாமத்தில், தேய்பிறைச் சதுர்த்தசி அரை நாழிகை இருந்தாலும் யோக சிவராத்திரியாகிறது. இப்படி யோக சிவராத்திரி திங்கட்கிழமை சம்பந்தமாய் வருவது நான்கு வகைப்படும்.
யோக சிவராத்திரி விரதம்:
ஒரு யோக சிவராத்திரி விரதம் இருந்தால், அது மூன்று கோடி மற்றைய சிவராத்திரி விரதம் இருந்த பலனைத் தரும் என்பது ஜதீகம்.
நித்திய சிவராத்திரி:
பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி 12, வளர்பிறைச் சதுர்த்தசி 12 இந்த இருபத்து நான்கும் நித்திய சிவராத்திரியாகும்.
பட்ச சிவராத்திரி:
தை மாதம் தேய்பிறைப் பிரதமை தொடங்கிப் பதின்மூன்று நாள் வரையில், நியமத்துடன் ஒரு பொழுது உணவு உண்டு. பதினான்காவது நாளான சதுர்த்தசியன்று விதிப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி ஆகும். மார்கழி மாத வளர்பிளைச் சதுர்த்தசி திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடி வந்தாலும் மாசிமாதத் தேப்பிறைச் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமையுடனோ அல்லது ஞாயிற்றுக்கிழமையுடனோ கூடி வந்தாலும் அந்த ஒரு சிவராத்திரி, மூன்று கோடி சிவராத்திரிகளுக்கு இணையானதாகும் என்று அறியப்படுகிறது.
நமது நாட்டு விரதங்களில் நவராத்திரி சிவராத்திரி என்ற இரண்டுமே ராத்திரி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. முன்னது அம்பிகையைப் பற்றியது. பின்னது சிவனைப் பற்றியது. ராத்திரி காலத்தில் பூஜை செய்ய வேண்டும் என்பதை இவை மெய்ப்பிக்கின்றன.
ராத்திரி என்பது என்ன,ராத்திரி என்பது யாதொரு வேலையும் செய்யாமல் இருள் சூழ்ந்து உறங்கும் காலமாம். பகலெல்லாம் வேலை செய்து நாம் தினந் தோறும் இரவில் உறங்குகிறோம். அப்படி உறங்கி எழுந்தால் தான் உடலுக்கு ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. தூக்கம் இல்லாவிடில் உடலும் மனமும்; சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. நமது நன்மையை நாடி சர்வேஸ்வரன் நமக்குத்தந்தவரன் தூக்கமாம். ஆனால் அளவு கடந்தும் தூங்கககூடாது. தீர்க்க நித்திரை என்று மரணத்திற்குப் பெயர்.எதனால் தூக்கம் வருகிறது,
எதனால் தூக்கம் வருகிறது, தூக்கம் அவசியம்தானா, என்று விசாரித்த சிலா இது ஒரு அரிய பாக்கியம் இன்றியமையாதது என்ற முடிவிற்கு வந்தனர்.

நமது உப நி~த்ஸ்;வம் அபீதோபவதி என்கிறது. அதாவது தூக்கத்தில் சிவன் நம்மை அடைகிறான். இதைத் தூங்குகிறான் என வேதம் மறைவிடமாகக் கூறுகிறது.
பகலெல்லாம் அலைந்து திரிந்த நமது இந்திரியங்களும் உடலும் சக்தியை இழந்து ஓய்வடைகின்றன. அச்சமயம் நமது இருதயத்தில் உள்ள ஈஸ்வரன் நம் ஜீவனை அணைத்து அருகில் அமர்த்துகின்றான். அச்சமயம் கண் காண்பதில்லை. காது கேட்பதில்லை. புத்தி ஒன்றையும் நினைப்பதில்லை. சுகமாகத்தூங்கினேன் என எழுந்தபின் கூறுகிறோம்.

சக்தி தரும் சிவன்„- அச்சமயம் நாம் இழந்த சக்தியை பகவான் நமக்கு அளித்து அனுப்புகிறார். இப்படி இம்மண்னுலகும் விண்னுலகும் ஒரு சமயம் வேலையை விட்டு இறைவனிடம் ஒடுகிகிறது. இதுவே மஹாபிரளயம் எனப்படும். நாம் தினந்தோறும் தூங்குவது தைனந்தினப்ரளயம் எனப்படும். நாம் பகலில் வேலை செய்து களைத்துபபோவது போல் உலகெல்லாம் வளர்ச்சி காலத்தில் வேலை செய்து களைப்படைகிறது. அந்த பிரபஞ்சத்திற்கு இழந்த சக்தியை அளிப்பதற்காக சிவன் தனக்குள்லயப்படுத்துகிறார். இதே பிரளயம் எனப்படும். புpர லயம் என்பதே பிரளயம் என்றாயிற்று. லயம் என்றால் இரண்டறக் கலத்தல். பிர என்றால் உலகம். பிரளயம் என்றால் உலக ஒடுக்கம் என்பதாகும்.
பிரளயத்தில் இறைவனைத் தவிர ஒரு வஸ்துவும் காணப்படாது. மெழுகில் தங்கப்பொடிகள் உருத்தெரியாமல் மறைவது போல் உலகம் சிவனது சக்தியில் ஒளிந்திருக்கும். சிவனது சக்தியை ப்ரக்ருதி என்றும் மாயை என்றும் கூறுவார்கள். தட்டானைப்போல் பரமன் மெழுகு போன்ற ப்ரக்ருதியில் தங்கப்பொடி போன்ற ஜீவர்களை ஒடுக்குகிறார். தீயில் மெழுகை உருக்கினால் தங்கம் தனியே வருவது போல் சிருஸ்டி காலத்தில் ஜீவர்கள் கர்மாவிற்கு ஏற்றபடி உடல் எடுக்கிறார்கள்.
அப்படி உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே சிவராத்திரி ஆகும். அன்று சிவனைத்தவிர வேறு ஒரு வஸ்துவும் இல்லை. ஆனால் சிவனைவிட்டு என்றும் பிரியாத சக்தி மாத்திரம் இருப்பாள். அன்னையான உமையவள் குழந்தைகளான நம் பொருட்டு சிவனை அச்சமயம் பூஜித்தாள். சிவபூஜை இல்லாவிழல் நாம் வாழ முழயாது. உலகம் ஒடுங்கிய பொழுது பார்வதி- சிவனை நாம் சிவமாக (சேமமாக) இருப்பதற்காகப் பூஜித்த தினமே சிவராத்திரி ஆகும். அது மாசி மாத தேய் பிறையாகும்.
நமக்காக தேவி சிவனைப் பூஜித்த தினத்தில் நாம் சிவனைப் பூஜித்தால் தினம் பூஜிப்பதைவிட பன்மடங்கு பயனைத்தரும். அன்று சுத்த உபவாசம் இருந்து இரவு கண் விழித்து நான்கு கால பூஜை செய்பவருக்கு முக்தி தரவேண்டும் என தேவி வேண்டினாள். சிவனும் அவரரவர் விருப்பங்களை நான் நிறைவேற்றுவேன். அத்துடன் விருப்பமேயில்லாத மனநிலையையும் தந்தருளுவேன் என வருமளித்தார்
அபிசேகப்ரியன்: அபிசேகப்ரியன் சிவன். அலங்காரப்ரியன் விஸ்ணு சிவலிங்கத்திற்கு அபசேகம் செய்யச் செய்ய நமது துன்பம் அகலும் நோய் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும். நல்ல எண்ணெய் பஞ்சகவ்யம் பஞ்சாமிருதம் நெய் பால்; தயிர் தேன் கரும்புச் சாறு இளநீர் பழரசம் சந்தனம் ஐந்து கலச தீர்த்தம் -இந்த வரிசைக் கிரமத்தில் இந்த வஸ்துக்களால் பதினொரு ருத்ர ஜபத்துடன் அபிசேகம் செய்யவேண்டும். பூஜை செய்யாதவர் புஜை செய்யும் இடத்தில் இவைகளை அளித்து அபிசேகம் தரிசனம் செய்யவேண்டும். சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும்; மூர்த்தி சிவன் அதேபோல் சீக்கிரம் கோபமும் உண்டாகும். ஆதலால் அபசேக திரவியங்களும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை செய்பவரும் சுத்தமாக இருந்து மனம் வாக்கு உடல் மூன்றும் ஒன்றுபட்டு நிதானமாக பூஜை செய்து சிவனருள் பெறலாம். சிவனுக்குரிய முக்கிய விரதங்களில் சிவராத்திரி விரதம் முக்கிய விரதமாகும். நித்ய, பட்ச, மாத, யோக, மகா சிவராத்திரி என சிவராத்திரி ஐந்து வகைப்படும். மாதந்தோறும் கிருட்ணபட்ச சதுர்த்தியில் வருவது நித்ய சிவராத்திரி ஆகும். மாதந்தோறும் வருவது மாத சிவராத்திரி ஆகும். திங்கட்கிழமை பகல், இரவு இரு பொழுதும் அமாவாசையாக இருந்தால் அது யோக சிவராத்திரி ஆகும். கிருட்ணபட்ச மாசி மாத சிவராத்திரி மகாசிவராத்திரி ஆகும்.
சிவராத்திரியைப் பற்றி பல புராணக்கதைகள் உண்டு. ஒரு காலத்தில் உலகம் அழிந்த போது மீண்டும் உலகை சிருஷ்டிக்க வேண்டி அன்னை உமாதேவி சிவபெருமானை வேண்டித் தவமிருந்த இரவே சிவராத்திரி ஆகும். இன்னொரு கதையில் ஒரு நாள் அன்னை உமா விளையாட்டாக தந்தை ஈசனின் கண்களை மூடியதாகவும், இதனால் உலகமே இருள் அடைந்து போனதாகவும், இதனால் பயந்து போன தேவர்கள் இரவு முழுவதும் இறைவனை வேண்டி வணங்கி மீண்டும் உலகிற்கு ஒளி கிடைக்கச்செய்ததாகவும் அந்த இருண்ட இரவே சிவராத்திரி ஆகும். மற்றொரு கதையில் ஒரு முறை ஒரு வேடன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் அன்று ஒரு விலங்கும் அகப்படவில்லை. பொழுதும் நன்றாக இருட்டிவிட்டது. ஆகவே இரவில் வீடு திரும்ப அஞ்சிய வேடன் ஒரு மரத்தின் மீதேறி அமர்ந்தான். துஸ்ட மிருகங்களிற்கு அஞ்சிய வேடன் அன்று இரவு முழுவதும் அந்த மரத்தின் இலைகளைப் பறித்து ஒவ்வொன்றாக கீழே போட்ட வண்ணம் இருந்தான். அந்த இலைகள் அந்த மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அது ஒரு வில்வ மரம். அன்றைய தினம் ஒரு மகாசிவராத்திரி தினமாகும். மகாசிவராத்திரி தினத்தில் அறியமலே சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளை பறித்துப் போட்ட வேடனிற்கு மோட்சம் கிடைத்ததாக இந்தக் கதை கூறுகிறது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் சிவராத்திரி அன்று வில்வ தளை கொண்டு சிவனை வழிபட்டால் சகல வினைகளும் நீங்கி சகல சுகங்களையும் நாம் பெறலாம் என்பதே ஆகும்.
நான்கு கால சிவ பூஜைகள்
சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது அவ்வாறு பூஜை மேறnடிகாண்டு பூஜையைச் செய்து முடிக்க முழயாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையைக்கண்டு களிக்கலாம். அன்று பூராகவும் உபவாசமாக இருந்து வரவேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.கும்பமேளா .

கும்பமேளா .

கும்பமேளா -- பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாகக் கொண்டாடப்படும் வட இந்தியத் திருவிழா . தென்னிந்தியாவிலும் இதே போன்று பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு வைபவம் நிகழ்கிறது -- மகாமகம் . தமிழ்நாட்டில் கும்பகோண்த்தில் மகாமகக் குளத்தில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் புனித நீராடும் தனிச்சிறப்புமிக்க விழா.
இரண்டும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற ஒற்றுமை தவிர , முக்கியமான வித்தியாசம் ஒன்றும் உண்டு . ஆமாம் , மகாமகம் ஒவ்வொரு 12 ம் ஆண்டிலும் ஒரே தலத்தில் கொண்டாடப்படுகிறது . ஆனால், கும்பமேளா வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது . அதாவது நான்கு இடங்களில். ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை அடுத்தடுத்து .
1 ) உத்தரப்பிரதேசம், அலகாபாத்திலுள்ள கங்கை - யமுனை - சரஸ்வதி நதிகள் கூடும் பிரயாகை.

2 ) உத்தர்கண்ட், கங்கைக்கரையில் உள்ள ஹரித்வார் .

3 ) ஷீப்ரா நதிக்கரையில் உள்ள மத்தியப்பிரதேசம் உஜ்ஜயினி .

4 ) கோதாவரி நதி தீரதில் உள்ள மகாராஷ்டிர நாசிக் .

இப்படி நான்கு தலங்களில் முறைவைத்துக் கொண்டாடப்படுகிறது .

ஒருவரின் இன்னல்களுக்கு ஜோதிட சாஸ்திர பரிகாரங்கள்!


ஒருவரின் இன்னல்களுக்கு ஜோதிட சாஸ்திர பரிகாரங்கள்!
குழந்தை பிறக்கும் நேரத்தில் நவக்கிரகங்களின் நிலைகள், அது இவ்வுலகில் தங்கி வாழும் அனுபவங்களை முன் அனுமானித்து விடுகிறது. நவக்கிரகங்கள் ஒரு தனிமனிதனுக்கு நல்லதை மட்டும்மேயோ அல்லது கெடுதல்களை மட்டுமேயோ செய்வதில்லை, சில கிரகங்கள் சில நிலைகளில் இருக்கும்போது சோதனைக்கால சுமைகளையோ, கஷ்டங்களையோ ஒரு மனிதனுக்கு அளிக்கிறது. இந்திய ஜோதிட சாஸ்திரம் பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே பேசுவதில்லை, அதற்குப் பரிகாரங்களையும், தீர்வுகளையும் கூறுகிறது.
கிரகங்களின் வீழ்ச்சிக்காலங்களிலோ, அல்லது வேறு ஸ்தானங்களை அடையும் போதோ, அவைகளின் இயக்கத்தை, சோதிடவியல் கணக்குகளின் மூலம் கணக்கிட்டு, எந்த ஒரு தீமையான விளைவையும் முன்கூட்டியே கணிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கான பரிகாரங்களையும் சொல்லிவிடுவதில்தான் சோதிடத்தின் சிறப்பே அடங்கியிருக்கிறது. ஒரு பாதசாரியை மழையிலிருந்தும், கடும் வெயிலிலிருந்தும் காப்பாற்றும் குடை போலவோ, சந்தனம் போலவோ ஜோதிடம் கூறும் பரிகாரங்கள், ஒரு தனி மனிதனை கிரகஸ்தானங்களால் தீர்மானிக்கப்படும், தீமைகளிலிருந்தும், சோதனைகளிலிருந்தும் பாதுகாக்கிறது.
ஜோதிட சாஸ்திரம் ஒரு பொதுப்படையிலான தீய விளைவுகளை கணித்து பரிகாரம் அளிக்கிறது என்றால், இந்திய தாந்திரிகத் தத்துவம் ஒரு குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு பரிகாரங்களை அளிக்கிறது. உதாரணமாக கல்யாணம் நின்று போதல், குழந்தை பாக்கியமின்மை போன்ற குறிப்பிட்ட பிரச்சனைகள். பண்டையகால ரிஷிகளால் உருவாக்கப்பட்ட தாந்திரிக பரிகார முறைகள் - கிரகங்களின் ஸ்தானம் பற்றிய சரியான கணிப்பு முறையில் அவற்றின் பலம், பலவீனம் ஆகியவற்றை கண்டுணர்ந்து நல்ல முடிவுகளைக் கொண்டதாக இருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட இலக்கை மட்டுமே கருத்தில் கொள்ளும்போது, ஜாதகத்தின் ஒரு குறிப்பிட்ட கிரகஸ்தானங்களையும் இந்த கிரகங்களின் மீதான மற்ற ஸ்தானாதிபதிகளின் தாக்கங்களையும், மற்ற ஸ்தானாதிபதிகளின் மீதான இந்தக் குறிப்பிட்ட கிரகத்தின் தாக்கங்களையும் மிகச் சரியாக கணிக்க வேண்டும். இப்படி கணித்தால் மட்டுமே, ஒரு மனிதனின் ஆசைப்படக் கூடிய இலக்கை எட்டுவதற்கு, ஜாதகம் பயனுள்ளதாய் இருக்கும். ஆகவே ஜாதகம் பார்ப்பவர்கள் ஒரு திறமையான மருத்துவரைப் போல் இருக்க வேண்டும் இதுவே அடிப்படை நிபந்தனை.
பணத்திற்காக ஜாதகம் பார்க்கும் போலி சோதிடர்களால், தெளிவான பகுப்பாய்வை செய்ய முடியாது. இது போன்ற போலி - சோதிடம், பலரை பல தீமைகளுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. ஒரு திறமையான உண்மையான ஜோதிடனின் கணிப்பின் படி தீமைகளைக் கண்டுணர்ந்து, அவர் கூறும் பரிகாரங்களை செய்துவந்தால், அவன் வாழ்வை புரிந்து கொண்டு சந்தோஷமான வாழ்வை திட்டமிட்டு நடத்தலாம்.

பரிகாரம் ஒரு வடிகாலே :

பரிகாரம் ஒரு வடிகாலே : கிரக நிலைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைக்கவும் பரிகாரம் செய்கிறோம்கிரக நிலைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைக்கவும் பரிகாரம் செய்கிறோம். இது வடிகால் போன்றது என்று ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கூறுகிறார்.
பரிகாரங்கள் செய்வதால் நிவாரணம் பெறலாம். எல்லாவற்றையுமே ஜோதிட ரீதியாக பார்க்கும் போது ஒவ்வொரு வாரத்திற்கும், ஒவ்வொரு ராசிதாரருக்கும் ஒரு விருட்சத்தை (மரத்தை) ஒதுக்குகிறோம். அதேபோல, பரிகாரமாக எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதை கூறுகின்றோம். குறிப்பிட்ட விருட்சத்தை பராமரிக்கும் போது அல்லது மரக்கன்றை நடும் போது கிரகத்தினால் ஏற்படும் தாக்கம் குறைகிறது. அதேபோல, அந்த ராசிக்குரிய கடவுளை வணங்கும் போது கடுமையான பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு, ஒருவருடைய ஜாதகத்தில் மோசமான நிலை நிலவும் போது, அதனால் அவருக்கு விபத்தில் கால் போய்விடும் என்ற அளவிற்கு ஆபத்து இருக்கமானால், இப்படிப்பட்ட பரிகாரங்களைச் செய்வதன் மூலம் அதுவொரு சிராய்ப்பாகவோ அல்லது எலும்பு முறிவு என்ற அளவிலோ முடிந்துவிடுகிறது. அதாவது, தலைக்கு வருவது தலைப்பாகையோடு போய்விட்டது என்று கூறுகிறோமே அந்த நிலையை பரிகாரம் ஏற்படுத்துகிறது.
அந்தந்த வாரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் எந்த கிரகங்களால் நேர்முகமான, எதிர்மறையான கதிர் வீச்சுக்களை செலுத்துகின்றன என்பதனைக் கணித்து, அதில் எதிர்மறை கதிர்வீச்சுக்களை வலிமையிழக்கச் செய்ய அதற்குரிய தெய்வம், அதற்குரிய விருட்சம் ஆகியவற்றை வணங்கச் சொல்கின்றோம்.
கடவுளை வணங்குவது, இயற்கையான பாதுகாப்பு, சூழ்நிலை மாற்றம் ஆகிய மூன்றும்தான் பரிகாரத்திற்கான நடைமுறைகளாகும்.

ச‌னி‌ப்பெய‌ர்‌ச்‌சி, குரு‌ப்பெய‌ர்‌ச்‌சி தொட‌ர்பான பரிகாரம்!

ச‌னி‌ப்பெய‌ர்‌ச்‌சி, குரு‌ப்பெய‌ர்‌ச்‌சி தொட‌ர்பான பரிகாரம்! இ‌ந்த ச‌னி‌ப்பெய‌ர்‌ச்‌சி‌யினாலு‌ம், குரு‌‌ப்பெய‌ர்‌ச்‌சி‌யினாலு‌ம் கடுமையான சோதனை‌க்கு‌ள்ளாகு‌ம் இர‌ண்டு ரா‌சி‌ தார‌ர்க‌ள் எ‌‌ப்படி‌ப்ப‌ட்ட ப‌ரிகார‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம்
இ‌ந்த குரு பெயர்ச்சி கடகத்திற்கு கடினமான நேரம்.
சனி பெயர்ச்சி சிம்மத்திற்கு கடினமாக இருக்கிறது
கடகத்துக்காரர்கள் மன உளைச்சல், பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை, தூக்கமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படுவர்.
இவர்கள் தங்கள் ராசி பலத்தை அதிகரித்துக் கொள்ள குரு தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
தாயாருக்கு உதவுவது, தாயை இழந்தவரின் பிள்ளைகளுக்கு உதவுவது ஆகியப் பரிகாரம் செய்தல் நலம். இதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கவீண் விரையம், சந்தேகப்படுதல், முன்கோபம், நம்பி ஏமாந்து போதல், திருடு, வீண் பழி சுமத்தப்படுதல் ஆகியவற்றால் பாதிக்கப்படுவர். ராசியிலேயே சனி சென்று (ஜென்ம சனி) கொண்டிருப்பதால் இவைக‌ள் ஏற்படு‌ம்.இதற்கு பரிகாரம் பார்வையற்றவர்களுக்கு உதவுதல், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல், தந்தையை இழந்து வாடும் பிள்ளைகள், முதல் தாரத்து குழந்தைகளை இரண்டாம் தாரத்து பெண் கொடுமைப் படுத்துவாள். அந்த குழந்தைகளை அடையாள‌ம் க‌ண்டு அவ‌ர்களு‌க்கு உதவுத‌ல் ஆ‌கியவை நல்லது.
பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக இந்த இடர்பாடுகளில் இருந்து விடுபட முடியும்.

குழந்தை பாக்கியம் வேண்டுதலால் கிட்டுமா?

குழந்தை பாக்கியம் வேண்டுதலால் கிட்டுமா?

குழந்தை வாரிசு வேண்டி தெய்வத்திற்கு பரிகாரங்கள் குழந்தை வாரிசு வேண்டி தெய்வத்திற்கு பரிகாரங்கள் செய்து குழந்தைப்பேறு பெற்றவர்களைப் பார்க்கிறோம். இதுபோல் வேண்டுதல், பரிகாரங்கள் செய்வதால் குழந்தை பாக்கியம் கிட்டுமா?

அதாவது ஒரு ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் இருந்தால்தான் அது கிட்டும். பரிகாரங்கள் மூலமாக குழந்தை பெறும் ஜாதகங்களும் உண்டு. ஆனால் ஜாதகத்தில் குழந்தை பாக்கியமே இல்லையென்றால் என்னதான் செய்தாலும் கிட்டாது.
சில ஜாதகங்களுக்கு என்ன செய்தாலும் நன்மை அடைய முடியாது. முந்தைய காலத்தில் தர்ம, கர்ம புத்திரன் கிடைப்பான் என்று கூறுவார்கள். அதாவது தர்மம் பண்ணு. உனக்கு கர்மம் பண்ண புத்திரன் இருப்பான் என்பதுதான் இதன் அர்த்தம்.
ஒரு எண்ணத்தோடு காமம் புரிந்து அந்த எண்ணத்திலே யோனி வெற்றி அடைந்து அந்த யோனி பலத்திலேயே பிள்ளைகள் பெற்று வாழ்வது என்பதை தற்போது அறிவியல் ஆராய்சிகள் கூறுகின்றன.
எந்த சிந்தனையுடன் இணைகிறார்களோ, அப்போது அவர்களது மனதில் எந்த சிந்தனை ஓடுகிறதோ அதற்கேற்ற வகையில் பிள்ளைகள் பிறக்கின்றன.சமீபத்தில் ஒரு பெற்றோர் வந்திருந்தார்கள். அவர்களுடைய குழந்தைக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தக் குழந்தை பாலிவுட் நடிகையைப் போன்று இருந்தாள். அவரிடம், அந்த நடிகையின் பெயரைச் சொல்லி உங்களுக்கு அந்த நடிகையை ரொம்பப் பிடிக்குமா என்று கேட்டதற்கு அவரும் ஆம் என்று பதிலளித்தார்.
அதுபோல் நாம் எதை எண்ணுகிறோமே அதன்படியே நமக்கு அமையும்.
எண்ணம் செயல் வித்து. எண்ணத்தைக் கொடுப்பவன் சந்திரன். மனதில் நல்ல விதைகளை விதைக்கக் கூடியவன் சந்திரன். அதனை செயல்படுத்தக் கூடியவன் சுக்ரன். எண்ணம் நல்லதாக இருந்தால் நல்லவையே கிடைக்கும். பரிகாரம் செய்வதால் குழந்தை பாக்கியம் உண்டு என்பவர்களுக்கு மட்டுமே குழந்தை கிட்டும். எல்லோருக்கும் பரிகாரங்கள் பலன்தராது.
எந்த தெய்வத்தை நாடினாலும், எத்தனை பரிகாரங்கள் செய்தாலும், எந்த விதமான மருத்துவமுறையிலும் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் என்பது கிட்டவே கிட்டாது. அதுபோன்ற ஜாதகங்களும் உண்டு.
தர்ம, கர்ம புத்திரன் என்றும், அடுத்து தத்து புத்திரன் என்றும் ஜோதிடம் கூறுகிறது.

ஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருக்கக் கூடாதா?

 ஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருக்கக் கூடாதா?

ஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருக்கக் கூடாது. அதனை தவிர்ப்பது நல்லது. அதற்கு பரிகாரம் குலதெய்வ வழிபாடு. வருடத்திற்கு ஒரு முறையாவது திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது.
ஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருந்தால் இருவருக்கும் சுயமரியாதை பிரச்சினை ஏற்படும். ஒருவர் நன்றாக இருந்தால் மற்றொருவர் நன்றாக இருக்க மாட்டார். ஒருவர் வளர்ச்சி அடைந்தால் மற்றொருவர் வளர்ச்சி தடைபடும்.
எனவே ஒரே வீட்டில் ஒரே ராசிக்காரர்கள் இருந்தால் அதற்கு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று வருவதுதான் பரிகாரமாகும்

பெரும் இழப்புகள், பிரச்சினைகள் வரும்போது எப்படி சமாளிப்பது?

பெரும் இழப்புகள், பிரச்சினைகள் வரும்போது எப்படி சமாளிப்பது?

சிறிய டீ கடையில் ஆரம்பித்து பெரிய பாஸ்ட் புட் கடைக்கு சொந்தக்காரராகி, மீண்டும் டீக்கடைக்கே வந்த ஒருவர் வந்திருந்தார். அவருக்கு கிரக நிலை அவ்வாறு இருந்தது.
அவரை உங்களுக்கு இந்த கிரகம் வந்த போது இதெல்லாம் கிடைத்தது. பின்னர் அந்த கிரகம் மாறியதும் வந்ததெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக இழந்தீர்கள்.
இது இத்தனை நாட்களுக்கு நீடிக்கும். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கூறினேன்.
அந்த சமயத்தில் கோபம் வரும், பொறாமை, ஆத்திரம் வரும். தன்னிடம் வேலை செய்து கொண்டிருந்தவன் வேறு கடை வைத்துவிட்டான் என்ற ஆத்திரத்தில் அடிக்கத் தோன்றும். பின்னர் என்ன காவல்நிலையத்தில் போய் உட்கார வேண்டியதுதான். எனவே அந்த சமயத்தில் பொறுமை காக்க வேண்டும்.
பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். பெரிய நிறுவனத்தை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாமல் திண்டாடுவதை விட அதனை சிறியதாக்கிக் கொண்டு எளிமையாக வாழ வேண்டும். பின்னர் நேரம் சரியானதும் அதனை கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்று அறிவுரை கூறி அனுப்பினோம்.
இந்த சமயங்களில்தான் உணர்ச்சி வயப்படுவது, வழக்குப் போடுவது, இரண்டு தட்டு தட்டிவிடலாமா என்று நினைப்பது போன்றவை தோன்றும். இதெல்லாம் செய்து சிக்கிக் கொள்ளக் கூடாது.
இதுபோல வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைக்கு எளிமையான வாழ்க்கையே சிறப்பாக அமையும்.
வாழ்க்கைச் சரிவை எதிர்கொள்வது எப்படி?
வாழ்க்கைச் சரிவு ஏற்படும் போது பெரிய வீட்டில் இல்லாமல் சின்ன வீட்டில் இருக்க வேண்டும். நல்ல உயர்ந்த ஆடைகளை அணியாமல் எளிமையாக வாழ முற்படுங்கள். எளிமையான உணவை உண்ணுங்கள் என்று கூறுகிறோம்.
பெரிய பெரிய நோய்கள் இருப்பதைப் போன்று தோன்றும். ஆனால் அதற்கெல்லாம் பயந்து விடக் கூடாது.
ஏதேதோ நினைத்து டெஸ்ட் எல்லாம் எடுத்திருப்பார்கள். எல்லாம் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லியிருக்கும்.

நவகிரகங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் யாது?

நவகிரகங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் யாது?
ஆதி காலங்களில் அதாவது கி.மு. காலகட்டத்தில் அமைந்த கோயில்களில் நவகிரக வழிபாடு கிடையாது. கி.பி. காலகட்டத்தில்தான் - 4வது நூற்றாண்டுக்கு பிறகு, ராஜராஜ சோழனின் வருகைக்கு பின்னரே நவகிரக வழிபாடு ஏற்பட்டுள்ளது.
பல கோயில்களில் பிற்காலங்களிலேயே நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது வரலாற்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீவிர இறை நெறியாளர்கள் சிவனை ஆதியும், அந்தமுமாக வழிபடுபவர்கள், நவகிரக வழிபாட்டை கடைபிடிப்பதில்லை. சிவனைத் தாண்டி என்ன நடந்து விடப்போகிறது என்ற எண்ணமே இதற்கு காரணம். நாளென்ன செய்யும் கோள் என்ன செய்யும் என்ற திருக்கோளர் பதிகம் பாடலின் பொருள் இதுதான்.நவகிரகங்கள் என்பது இறைத் தூதர்களாக கருதப்படுகின்றனர். இறை-ஏவல் ஆட்கள் என்றும் கூறலாம். அதாவது இறைவன் நினைத்ததை, அவரது உத்தரவை நிறைவேற்றும் ஊழியர்கள்.
இதன் காரணமாகவே மூலவரை வணங்கினால், அவரது ஊழியர்களால் நம்மை எதுவும் செய்ய முடியாது என்பது தீவிர இறை நெறியாளர்கள், சைவப் பிரியர்கள், அடியார்களின் தீர்க்கமான கருத்து.
ஆனால் மற்றொரு பிரிவினர் இறைவனுக்கே நேரம் காலம் உண்டு என்று நம்புகிறார்கள். உதாரணத்திற்கு, திருவண்ணாமலை போன்ற கோயில்களிலுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால் அக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், அந்த கோயிலுக்கு செல்பவர்களின் வருகை அதிகரித்துள்ளது.
நம்முடைய இந்து தர்மப்படி, நாம் உருவாக்கும் சட்ட திட்டத்திற்கு நாமே கட்டுப்பட வேண்டும். அதாவது இறைவனுக்கும் ஜென்ம நட்சத்திரம் உண்டு என்ற வகையில் அவரும் நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்ற வாதமும் உள்ளது.

கடவுளுக்கு எவ்வாறு நட்சத்திரம், ராசி கணிக்கிறீர்கள்?
அது அவர்களுடைய பிறந்த நாள் என்று ஏதும் இல்லையாதலால், அவதரித்த நாளைக்கொண்டு நட்சத்திரத்தை கணித்துள்ளனர். சிவபெருமான் ருத்திர அவதாரமெடுத்ததை அடிப்படையாக்க்கொண்டு அவருக்கு திருவாதிரை நட்சத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல சிவனுக்கு நேரம் கெட்டிருந்தபோது அவர் பிச்சையெடுத்த கதையெல்லாம் உள்ளது.
இப்படித்தான் ராமனுக்கு நவமியும், கிருஷ்ணனுக்கு அஷ்டமியும் உள்ளது.
நவகிரகங்களை வழிபடும் முறை: நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது.
முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர், அந்த கோயிலின் மூலவரை வணங்கி விட்டு, இறுதியாகவே நவகிரக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதுவே சிறந்த பலன்களை அளிக்கும்.
மூலவரை வழிபடாமல் நவகிரங்கங்களை மட்டும் வழிபடுவது எதிர்மறையான பலன்களையே கொடுக்கும்.

அட்டமத்து சனிக்குப் பரிகாரம் உண்டா?

அட்டமத்து சனிக்குப் பரிகாரம் உண்டா?

சனி தசை வந்துவிட்டாலே சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். யார் என்ன சொன்னாலும் நம்பக் கூடாது. உங்க மனைவியை அங்க பார்த்தேன், அவர் அப்படியா? மாமனார், மாமியாரைப் பற்றி எல்லாம் தவறாகச் சொல்வார்கள்.
எதையும் நம்பக் கூடாது. அட்டமத்து சனி, நேரடியாக சண்டையை உருவாக்காமல், நம்மைச் சார்ந்த உறவினர்கள் மூலமாக ஏகப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.
பரிகாரம் என்று சொன்னால், முக்கியமாக சந்தேகப்படுதலை தவிர்க்க வேண்டும். உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். சுவையான உணவுகளைக் குறைத்துக் கொண்டு உப்பு சப்பில்லாமல் சாப்பிடவும், சகிப்புத் தன்மையை அதிகரித்துக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்.
எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் நம்மை கேவலாமாக எது சொன்னாலும் தாங்கிக் கொள்ள வேண்டும்.
பொதுவாக சனிக்கிழமைகளில் எள் விளக்கு ஏற்றலாம். அல்லது சனிக்கிழமைகளில் ஊனமுற்றவர்கள் அல்லது மனநலம் குன்றியவர்களுக்கு உதவலாம். பிரதோஷ பூஜைகளில் பங்கேற்கலாம்.
எதை எடுத்தாலும் தாமதமாகும். கோபப்படக் கூடாது. தாங்கிக் கொண்டு பொறுமையாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லலாம்.

வெள்ளெருக்கு விநாயகர்!

வெள்ளெருக்கு விநாயகர்! வெள்ளெருக்கு (வெ‌ள்ளை எரு‌க்கு) வேரில் உருவான விநாயகரே மிகவும் சக்தி வாய்ந்தவர். பொதுவாக வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கு தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.
ஆனால், அதேவேளையில் அங்கு தீய சக்திகள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் வெள்ளெருக்கில் 2 வகை உண்டு. “வெள்ளருக்கு பூக்குமே வேதாளம் பாயுமே” என்ற பாடலும் சங்க காலத்தில் பிரபலம். எனவே வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர்ந்துள்ளது என்றும் பார்க்க வேண்டும். தீய சக்தி உள்ள இடத்தில் இருக்கும் வெள்ளருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்கக் கூடாது.
எனவேதான் வெள்ளெருக்கு வேரை எடுக்கும் முன்பாக வேப்பிலை, கூழாங்கற்கள், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்புக்கட்டி, ஒருவாரம் கழித்த பின்னரே வெள்ளெருக்கு வேரை எடுத்து அதனை பதப்படுத்தி விநாயகர் செய்ய வேண்டும்.வெள்ளெருக்கு செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளதால், அதனைக் பார்த்தவுடன் வெட்டிவிடாமல் மேற்கூறிய பரிகார முறைகளை கடைப்பிடித்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.இதற்கடுத்தபடியாக இடம்புரி விநாயகர் வினைகளை தீர்க்கக் கூடியவர் என சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. வலம்புரி விநாயகர் வல்லமை, வளமை, செல்வ பாக்கியம் ஆகியவற்றை அளிக்க வல்லவர். பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் வலம்புரி வகையைச் சேர்ந்தவர்.
இடம்புரி விநாயகர் தீய சக்திகளை அழிக்கும் வல்லமை உடையவர். எனவேதான் திருஷ்டி, வாஸ்து சாஸ்திரம் ஆகிய குறைகளுக்காக வைக்கப்படும் விநாயகர் இடம்புரி விநாயகராக இருந்தால் நல்லது.

குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்?

 குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்?

பொருளாதாரப் பின்னடைவு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளால் முடிவெடுக்காத முடியாத மனநிலையில் மக்கள் இருக்கும் போது அதிலிருந்து மீளுவதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் அல்லது யாரை வணங்கலாம்?
மேற்கூறப்பட்டுள்ளவை எல்லாம் சிம்மச் சனியால் ஏற்பட்டவை. சனியை ஜோதி கிரகம் என்றும் கூறலாம். அந்த வகையில் முனிவர்களை வழிபடுவது நல்லது. நவகிரகங்களில் சனி ஆர்ப்பாட்டம் இல்லாத குணமுடையது. எனவே பல நூறு பேரை அழைத்து பூஜை, பஜனை நடத்தி வழிபடுவதை விட, முனிவர்கள் அல்லது மகான்களின் ஜீவ சமாதிக்கு சென்று அமைதியாக சில நிமிடங்கள் சனியை நினைத்தது தியானம் செய்தால் பலன் பெறலாம். மக்களுக்கு தற்போதைய சூழலில் ஆடம்பரம் இல்லாத பக்திதான் தேவை.
சூரியனின் வீடு சிம்மம். அந்த வகையில் திருவண்ணாமலை திருத்தலத்தில் வழிபாடு செய்யலாம். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரரை வணங்குவதுடன், ரமணர் மகானையும் வழிபட முடியும்.
ஷேசாஸ்த்ரி சுவாமிகளும் அங்கு இருக்கிறார்கள். கிரிவலம் செல்ல முடியும். இதுபோல் அவரவர் மனதிற்கு பிடித்த முறையில் பிரார்த்தனை மேற்கொள்ள முடியும். ஏன்... அங்குள்ள கோசாலைக்கு செல்லலாம் அல்லது மலையடிவாரத்திலேயே இறைவனை நினைத்து அரை மணி நேரம் தியானித்து விட்டு வரலாம். இதன் மூலம் மனதளவில் சில தீர்வுகள் கிடைப்பதுடன், நிம்மதியும் பிறக்கும்.

ராகு 7ஆம் இடத்தில் உள்ளதால் திருமணம் தள்ளிப் போகிறது? இதற்கு என்ன பரிகாரம்?

ராகு 7ஆம் இடத்தில் உள்ளதால் திருமணம் தள்ளிப் போகிறது? இதற்கு என்ன பரிகாரம்? 7இல் ராகு உள்ளதால் அவர் சர்ப்ப சாந்தி செய்து கொள்ளலாம். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபடுவது எல்லா வகை சர்ப்ப தோஷங்களுக்கும் நல்லது. அங்குள்ள ராமானுஜரையும் வழிபட வேண்டும். ஆதிஷேசனின் மறுவடிவமாகவே ராமானுஜர் கருதப்படுகிறார். சர்ப்பங்களின் தலைவன் ஆதிஷேசன் என்பதால் ராமானுஜரை வழிபடுவதும் நல்ல பலனைத் தரும்.
ராகு 7இல் இருந்து திருமணம் தள்ளிப்போனால் விதவைப் பெண் அல்லது விவாகரத்து பெற்ற பெண் அல்லது முற்போக்கு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பிறந்த பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதேபோல் வசதி குறைவான இடத்தில் பெண் எடுப்பதும், தங்களுடைய ஜாதியை விட்டு வேறு ஜாதியிலும் (உட்பிரிவு) பெண் எடுப்பதும் நல்ல பலனைக் கொடுக்கும்.

புத்திர தோஷம் என்றால் என்ன? அதனை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம்?

புத்திர தோஷம் என்றால் என்ன? அதனை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம்?

பதில்: புத்திர தோஷம் என்பது ஒவ்வொரு லக்கினத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5ஆம் இடம்தான் புத்திர ஸ்தானத்தை குறிக்கும். எனவே, அந்த 5ஆம் இடத்தை முக்கியமாக பார்க்க வேண்டும்.
“சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தையாகப் பிறக்கும்” என்று பழமொழி உண்டு. அந்த வகையில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் திகழ்கிறது. தாய்மாமன், தாய்வழி உறவுகள், மனப்பான்மை ஆகியவற்றைக் குறிப்பதும் 5ஆம் இடம்தான்.
ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அல்லது தாமதமாக கிடைக்கும். ஒருவேளை 5ஆம் இடத்தில் உள்ள பாவ கிரகங்களை சுபக் கிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபகிரகங்கள் வேறுபடும்- மேஷத்திற்கு சந்திரனும் சுபக்கிரகம்) குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஐந்தாம் வீட்டிற்கு உரிய கிரகம் பாவ கிரகங்களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும். உதாரணமாக கடக லக்னத்தை உடைய ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கு 5ஆம் வீடு விருச்சிகம் (செவ்வாய்). ஆனால் அவரது ஜாதகத்தில் செவ்வாய் 8இல் மறைந்திருந்தது. அவருக்கு 5ஆம் இடத்தில் எந்தப் பாவ கிரகமும் கிடையாது. ஆனால் 5க்கு உரிய கிரகம் 8இல் மறைந்திருப்பதால், மனைவிக்கு கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறினேன்.
புத்திர தோஷம் என்றால் என்ன? அதனை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம்?

அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், இதுவரை தனது மனைவி 4 முறை கர்ப்பம் தரித்தாலும், சிறிது நாட்களிலேயே கரு கலைந்து விடுவதாக வருத்தத்துடன் கூறினார். கடக லக்னம், சிம்ம லக்னதாரர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி 6 அல்லது 8இல் மறைந்தால் இதுபோன்று நிகழும்.
அதேபோல் ஆணின் ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்து, பெண்ணின் ஜாதகத்தில் 7ஆம் இடம் நன்றாக இல்லாமல் இருந்தால் கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, திருமணத்திற்கு முன்னர் பொருத்தம் பார்க்கும் போதே இதனை நன்றாக ஆராய்ந்து பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதேபோல் “புத்திரக்காரகன் புதன் மனை சென்றிட புத்திர சூனியம்” என்ற ஜோதிட மொழியும் சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்திரக்காரகன் குரு, புதனின் வீட்டில் (மிதுனம், கன்னி) இருந்தால் புத்திர சூன்யம் (ஆண் வாரிசு இல்லாமை) ஏற்படும் என்பதே இதன் உள்ளர்த்தம்.
ஆனால், குரு பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ அல்லது லக்னத்திற்கு யோகாதிபதியின் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்திருந்தாலோ ஆண் வாரிசு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, புத்திர தோஷத்தைப் பொறுத்த வரை ஜோதிட ரீதியாக பல விடயங்களை கணக்கிட வேண்டும்.

Monday, March 7, 2011

பாழடைந்த வீட்டில் துர்தேவதைகள் குடியேறுவதை தடுக்க பரிகாரம் என்ன

பாழடைந்த வீட்டில் துர்தேவதைகள் குடியேறுவதை தடுக்க பரிகாரம் என்ன?
நிதிப்பற்றாக்குறை காரணமாக வீட்டின் ஒரு பகுதி மிகவும் பாழடைந்த நிலையிலேயே இருக்கிறது. அங்கு துர்தேவதைகள் குடியேறுவதை எவ்வாறு தவிர்க்கலாம்?
பதில்: பொதுவாக வீட்டின் அனைத்து பகுதிகளையும் சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்வதே சிறந்தது. ஆனால் நிதிப்பற்றாக்குறை அல்லது சொத்துத் தகராறு காரணமாக வீட்டின் ஒருபகுதி பயன்படுத்தப்படாமல் பாழடைந்து விடுவது வழக்கத்தில் உள்ளது.
அப்பகுதியை அப்படியே அடைத்து வைக்காமல் பசுவின் சாணத்தால் மெழுகுவது நல்லது. தினசரி மெழுக வேண்டும் என்று அவசியம் இல்லை. வாரம் ஒருமுறை அப்பகுதியை சுத்தம் செய்து பசுஞ்சாணத்தால் அதனை மெழுகினால் போதும். அத்தோடு அங்கு சிறு கோலமிட்டு ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வீட்டின் ஒரு பகுதியை பயன்படுத்தாமல் வைத்திருப்பது, நம் உடலின் ஒரு பாகத்தை பயன்படுத்தாமல் வைத்திருப்பதற்கு சமமாகும். இது நோய்க்கு அறிகுறியாக அமைந்து விடும். பாழடைந்த வீட்டில் லக்ஷ்மி கடாட்சமும் இல்லாமல் போய்விடும்.எனவே, வீட்டில் எந்தப் பகுதியையும் பாழடைந்த நிலையில் வைத்திருக்கக் கூடாது. அதனைப் பராமரித்து, பயன்படுத்த வேண்டும். மேற்கூறிய செலவில்லாத, எளிய பரிகாரங்களை செய்தன் மூலம் வீட்டை புதுப்பிப்பதற்கான நிதிவசதியும் கிடைக்கும்.

பெண்ணுக்கு மீண்டும் திருமணம் செய்யும் முன் பரிகாரம் மேற்கொள்ள வேண்டுமா?

பெண்ணுக்கு மீண்டும் திருமணம் செய்யும் முன் பரிகாரம் மேற்கொள்ள வேண்டுமா?ஒருமுறை நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு சில காரணங்களால் அத்திருமணம் நடக்காமல் போகிறது. மீண்டும் வேறு வரன் பார்த்து திருமணம் செய்வதற்கு முன்பாக பரிகாரம் மேற்கொள்ள வேண்டுமா? இதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?
பொதுவாக ஒரு பெண்ணுக்கு வரன் பார்ப்பதற்கு முன்பாக நல்ல தசாபுக்தி நடக்கிறதா? குரு பலன் உள்ளதா? என்பதைப் பார்த்த பிறகே திருமணம் நிச்சயிக்க வேண்டும். இதனால் திருமணம் தடைபடுவதை தடுக்க முடியும். மேற்கூறிய காரணிகள் சரியில்லாத நேரத்தில் திருமணம் நிச்சயிக்கும் போதுதான் அதில் தடங்கல் ஏற்படுகிறது.
இந்த மாதிரியான நேரங்களில் திருச்சந்தூர் முருகன் கோயிலுக்கு வளர்பிறை சஷ்டி திதியில் சென்று வழிபாடு நடத்தி வரலாம். இதன் மூலம் கர்ம வினைகள் (இருந்தால்) நீங்கும். மீண்டும் வரன் நிச்சயிக்கும் போது இடையூறுகள் தடை வராமல் இருக்கும்.

பல்லியைக் கொல்வதால் ஏற்படும் தோஷத்திற்கு பரிகாரம் என்ன?

பல்லியைக் கொல்வதால் ஏற்படும் தோஷத்திற்கு பரிகாரம் என்ன?

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சந்திர, சூரியர்களாக காட்சி தரும் பல்லி உருவங்களை தொட்டு வணங்குவதும், மூகாம்பிகை கோயில்களிலும் பல்லி உருவத்தை தொட்டு வணங்குவது இதற்கு பரிகாரமாக கூறப்படுகிறது. பல்லியை மினி ஜோசியர் என்று கூறலாம். மனிதர்களுக்கு நல்லது, கெட்டதை எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உள்ளது. எனவே அது மதிக்கத் தகுந்த ஜீவராசியாக கருதப்படுகிறது. எனவே, அதனைக் கொன்றால் மேற்கூறிய வழிபாடுகளை மேற்கொள்வது பலன் தரும்.

அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?

அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?

பொருத்தம் பார்க்கும் போதே கருச்சிதைவுகளை ஏற்படும் வாய்ப்பு அந்த வரனுக்கு இருக்கும் பட்சத்தில் அதனைத் தவிர்த்து விடுங்கள் என்று மாப்பிள்ளை அல்லது பெண் வீட்டாரிடம் வெளிப்படையாக கூறி விடுவோம்.சமீபத்தில் வந்திருந்த ஜாதகத்தில் பெண்ணிற்கு 5இல் செவ்வாய்+கேது இருந்தது. மணமகன் ஜாதகத்தில் 5இல் சனி+ராகு இருந்தது. இருவருக்கும் மற்ற பொருத்தங்கள் சிறப்பாக இருந்ததால் சிலர் திருமணம் செய்யலாம் எனக் கூறியிருந்ததாக பெண்ணின் தந்தை என்னிடம் கூறினார்.
ஆனால் இந்தத் திருமணத்தை நடத்த வேண்டாம் என்று நான் அவருக்கு அறிவுறுத்தினேன். காரணம், இருவருக்கும் திருமணம் நடந்தால் கருச்சிதைவு உண்டாகும். தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுவதால் கர்ப்பபை பலவீனமாகும். நவீன மருத்துவ முறைகளைப் (IVF) பின்பற்றினால் கூட கரு தங்காது என எடுத்துரைத்தேன்.
எனவே, கருச்சிதைவு ஏற்படுவதை பொருத்தம் பார்க்கும் போதே நம்மால் தவிர்க்க முடியும் என்று கூறுவதற்காக இந்த உதாரணத்தைக் கூறினேன். ஆனால் சில பெற்றோர் இதுபற்றிக் கவலைப்படாமல் பொருத்தம் சரியாக இருப்பதாகக் கூறி திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
ஒருவேளை, கருச்சிதைவு ஏற்படும் ஜாதகங்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால், கரு உருவாகும் காலத்தை அவர்களின் ஜாதகத்தை வைத்து கணிக்க வேண்டும். குறிப்பாக 5க்கு உரிய கிரகம் தம்பதிகளுக்கு வலுவடையும் போது கருவுறுவது சிக்கலைக் குறைக்கும். தசாபுக்தியும் முக்கியமானதாகும்.
பரிகாரம்: அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் திருக்கருகாவூர், திருசெந்தூர் போன்ற கோயில்களுக்கு செல்லலாம். இதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது பொதுவான பரிகாரம்.

ஒரே ராசியுடைய தம்பதிகளுக்கிடையே கருத்து மோதல் ஏற்படாமல் தவிர்க்க என்ன பரிகாரம்?

ஒரே ராசியுடைய தம்பதிகளுக்கிடையே கருத்து மோதல் ஏற்படாமல் தவிர்க்க என்ன பரிகாரம்?
ஒரே ராசியுடைய தம்பதிகளின் வாழ்க்கையில் கிரக நிலைகள் சரியில்லாத போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இதுபோன்ற அமைப்பை உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தலாம்.
ஒரே ராசியுடைய தம்பதிகளின் வாழ்க்கையில் கிரக நிலைகள் சரியில்லாத போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இதுபோன்ற அமைப்பை உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தலாம். இதன் மூலம் தம்பதிகளிடையே சண்டை சச்சரவுகள் குறைந்து, அன்யோன்யம் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
இதன் மூலம் தம்பதிகளிடையே சண்டை சச்சரவுகள் குறைந்து, அன்யோன்யம் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்?

 வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்?

பொதுவாக லக்னத்தையும், லக்னாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் யாருக்காவது கடன்பட்டிருப்பார். உதாரணமாக மகர லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 12ஆம் வீட்டில் சனியும், 2வது வீட்டில் செவ்வாயும் இருந்தது. இதன் காரணமாக அவர் வாழ்க்கை முழுவதும் கடன்பட்டவராகவே இருந்தார்.
இவ்விடயத்தில் லக்னத்தை மட்டுமல்லாது லக்னாதிபதி, 6ஆம் அதிபதி ஆகியோரின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக மீன லக்னத்திற்கு அதிபதி குரு; 6ஆம் அதிபதி சூரியன். இதில் குரு நீச்சமாகி, 6ஆம் அதிபதி சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்வின் இறுதிநாள் வரை கடன்காரராக இருப்பார்.
எனவே, லக்னாதிபதி பலவீனமாக இருப்பவர்கள், சம்பந்தப்பட்ட லக்னாதிபதிக்கு உரிய கோயில்கள், பரிகாரங்களை மேற்கொள்ளலாம். நிதி நிலைக்கு சிக்கல் வராத வகையில் எளிய வகையிலான தானங்களையும் மேற்கொள்ளலாம்.
இதேபோல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு, மொழிப் பாடங்களை பயிற்றுவிப்பதும் பலனளிக்கும். குறிப்பாக தமிழ் சொல்லித் தருவதன் மூலம் சில தோஷங்கள் கழியும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஏனென்றால் தமிழுக்கு உரிய கிரகம் சந்திரன். உடல் மனதிற்கு உரியவரும் அவரே.
தமிழ் பயிற்றுவிக்கும் போது உடலும், மனதும் பலம் பெறுகிறது. இவை இரண்டும் பலமாக இருந்தால் எவ்வளவு கடனையும் அடைத்துவிட முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும்.

ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?  நானும், என் மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டோம்? எங்கள் வீட்டிலும் இதனை ஏற்றுக் கொண்டனர். ஆனால் சமீபத்தில் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்ததில் இருவருக்கும் ரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்யம்) இல்லை என்பது தெரியவந்தது. இதனால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க பரிகாரம் உள்ளதா?
இந்தக் கேள்வியை எழுப்பிய வாசகர் தனது ராசி, லக்னம், நட்சத்திரம் என எந்தக் குறிப்பையும் தெரிவிக்கவில்லை. அவற்றை வைத்தே துல்லியமான பரிகாரங்களைக் கூற முடியும்.
எனினும், கஞ்சனூர் சென்று சுக்கிரனை வழிபட்டால் ரஜ்ஜு பொருத்தம் இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும்.

பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்ன

பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்ன?
ம்பந்தப்பட்ட ஜாதகர் எந்த தசா புக்தியில் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானார் என்பதை முதலில் பார்க்க வேண்டும். 6ஆம் அதிபதியின் தசையில் அந்த நிலை ஏற்பட்டதா? அல்லது 8க்கு உரியவனின் தசையில், 6ஆம் அதிபதியின் புக்தியில் அது நிகழ்கிறதா? என்பதைப் பொறுத்து பரிகாரம் மேற்கொள்ள வேண்டும். பொதுவாக பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் மேற்கொள்ள விரும்புபவர்கள், குலதெய்வத்தை முதலில் வணங்கி விட்டு, ராமேஸ்வரம், காசி, கயா, கங்கை உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் நீராடி, இறைவனை வணங்கி, பிண்டங்களை அளித்தால் பலன் பெறலாம்.
ஆனால் அடுத்தடுத்து பிரம்மஹத்தி தோஷம் ஏற்படாமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பரிகாரம் இருக்கிறது என்பதால் எத்தனை முறை வேண்டுமானாலும் அதனை செய்து கொள்ளலாம் என பொருள் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் அந்த பாவங்களுக்கு உண்டான பலனை அனுபவித்தாக நேரிடும்.