Saturday, April 30, 2011

தாம்பூலம் தரித்தல்:

தாம்பூலம் தரித்தல்:

நமது உடலில் சுரக்கும் 20 விதமான “அமினோ அமிலங்கள்” வெற்றிலையில் உள்ளன. செரிமானத்துக்கும் பெரிதும் உறுதுணையாகும் இந்த “அமினோ அமிலங்களை” வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது. அதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் “தாம்பூலம்” தரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.வெற்றிலைப் பாக்குடன் கூடிய¬ தாம்பூலம் “மங்கலப் பொருள்” என்பது பலர் அறிந்த
உண்மை. ஆனால் நம் முன்னோர் அதில் மருத்துவப் பயனையும் புகுத்தியுள்ளனர். மிகச் சிறந்த “நோய்த்தடுப்பு ஆற்றல்” தாம்பூலத்தில் உள்ளது.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம், மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பினை தூண்டுவதுடன் ஒரு வித உற்சாக உணர்வினை தருகிறது. பெரும்பாலான நாடுகளில் வெற்றிலைக்கு பால் உணர்வை மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது. அதனால்தான் புதுமண தம்பதியர்களுக்கு தாம்பூலம் தரிப்பது என்பது ஒரு சடங்காக நடைபெறுகிறது.

Monday, April 25, 2011

சில ஆன்மீக குறிப்புகள்:

ஹோமத்தில் சில்லரை நாணயங்களைப் போடுகிறார்களே. பணம் லட்சுமியின் அம்சமாயிற்றே. இது சரிதானா?
ஹோமத்தில் இருக்கும் அக்னியும் தெய்வாம்சம் தானே! மூலவர் பூஜையில் சுவர்ண புஷ்பம் என்று நாணயங்களைச் சமர்ப்பிக்கிறோம். அதுபோல, ஹோமத்தில் அக்னி வடிவில் இருக்கும் தெய்வத்திற்கும் சுவர்ண புஷ்பமாக நாணயங்களைப் போடுகிறோம்.
* நவரத்தின மோதிரம் அணி வதைப்பற்றி விளக்கம் அளியுங்கள்..
மோதிரத்திற்கு "அங்குலீயகம்' என்று பெயர். இதற்கு "விரலுக்கு அணிவிக்கப்படும் ஆபரணம்' என்று பொருள். எல்லா தெய்வங்களுக்கும் எல்லாக் கற்களும் உகந்தவை தான். சுவாமியை பிரதிஷ்டை செய்யும் முன் பீடத்தில் நவரத்தினங்கள் வைக்கப்படுகின்றன. கும்பாபிஷேக கலசம், திருவாபரணங்களிலும் இவற்றுக்கு முக்கியத்துவம் உண்டு. அவரவர் விரும்பும் கற்களில் விருப்பமான முறையில் மோதிரம் அணிந்து கொள்ளலாம். அவை தீங்கு ஏதும் விளைவிக்காது. சுவாமி முன்பு வைத்து வணங்கியபிறகு அணிந்து கொள்ளுங்கள்.
* பழைய கோயில்களை பாதுகாக்க முடியாமல் தவிக்கிறோம், இருந்தாலும் புதிய கோயில்களைக் கட்டுவது ஒரு வியாபார உத்திதானே?
எல்லோரையும் அப்படிச் சொல்லிவிட முடியாது. முன்பிருந்த மக்கள் தொகை, அவர்களின் வாழ்க்கை முறை என்பது வேறு. தற்போதுள்ள மக்கள் தொகை, அவர்களின் வாழ்க்கை முறை என்பது வேறு. முன்பு ஒரு கோயிலைச் சுற்றி ஓரு ஊர் அமைந்திருக்கும். இன்று மக்கள் தொகை பெருகி புதிது புதிதாக நகர்களும் ஊர்களும் பெருகிக் கொண்டே வருகின்றன. அவசரமான, பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இருப்பவர்கள் தொலை தூரம் சென்று கோயிலை தரிசிக்க இயலாமல் போய் விடுகிறது. எனவே அப்பகுதியில் வாழும் மக்கள் தினமும் தரிசித்து வழிபட தங்கள் பகுதிக்கென்று ஒரு கோயிலை அமைத்துக் கொள்வது இன்றியமையாததாகிறது.
* கோயில்களில் உள்ளது போல் வீட்டிலும் விக்ரஹ பூஜை செய்யலாமா?
கோயில்களில் பூஜை செய்வது போல் வீட்டிலும் செய்ய முடியுமானால் விக்ரக பூஜை செய்யலாம். விக்ரகங்களின் உயரம் ஆறு அங்குலத்திற்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.
** விழா நாட்களில் முதல்நாள் இரவே வாசல் தெளித்து கோலம் போட்டு விடுகிறார்களோ? இது சாஸ்திரப்படி சரிதானா?
சூரிய உதயத்திற்கு ஒன்றைமணி நேரம் முன்பு தான் வாசலைத் தூய்மை செய்து சாணம் தெளித்து கோலமிடவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. முதல்நாள் இரவே கோலமிட்டு விட்டு தூங்கிவிடுவது அவ்வளவு உசிதமானது அல்ல. அதிகாலையில் கோலம் இடும் வீட்டிலே திருமகள் நித்யவாசம் செய்வாள். இப்போது பிரம்மாண்டமான கோலங்களை எல்லாம் முதல்நாள் இரவே வாசலில் இட்டு அசத்துகிறார்கள். ஆனால், கூடியமட்டும் காலை நேரத்திலே வாசல் தெளித்து கோலமிடுங்கள்

மூன்று ஆசைகளை வெல்லுங்கள்

மூன்று ஆசைகளை வெல்லுங்கள்


- வினோபாஜியின் தத்துவம்
*தர்ம சாஸ்திரங்களில் மனிதமனங்களை புத்திரபாசமுள்ள மனது, பொருளால் பெருமைப்படும் மனது, புகழை விரும்பும் மனது என பிரித்துள்ளனர். இவற்றை வென்றவர்கள் மனதை வென்றவர்கள் ஆவார்கள்.
* புத்திரபாசத்திற்காகத்தான் திருமணம் செய்கிறோம். குழந்தைகளைப் பெறுகிறோம். சிற்றின்பத்திலேயே மூழ்கிவிடக் கூடாது.
* இரண்டாவது பொருளாசை. பொருள் இல்லாமல் உலகில் வாழ முடியாது. எனவே, பிறரைக் கெடுக்காமலும், யாரையும் வஞ்சிக்காமலும் நல்லவழியில் பொருள் தேட வேண்டும்.
* மூன்றாவதாக புகழ் வாசனை, புகழ் நாட்டம் மிதமாக இருந்தால் யாருக்கும் தீங்கில்லை. தன்னலம் கருதாமல் பிறருக்கு தொண்டு செய்வதால் உண்டாகும் புகழ் ஒருமனிதனுக்கு அவசியமானதே. பிறரைக் கெடுப்பதற்காக தன்னைத்தானே உயர்த்தி புகழ்ந்து கொள்ளுதல் கொடுமையானதாகும். இந்த மூன்றும் மனிதனின் செயல்பாடுகளுக்கு தூண்டு கோலாகவும், அவனை உயர்நிலைக்கு இட்டுச்செல்வதற்கும் மட்டுமே பயன்பட வேண்டும்.

காசிக்கு தம்பதியராகத்தான் போக வேண்டுமா?

காசிக்கு தம்பதியராகத்தான் போக வேண்டுமா?
தம்பதியராகப் போவது தான் விசேஷம். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராட சில நியதிகள் உண்டு. ஒன்று மனைவி அல்லது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு நீராட வேண்டும். இருவரும் இல்லாத பட்சத்தில் பசுமாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். இம்மூன்றிலும் தம்பதியராக நீராடுவதே உத்தமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்தால் தான் நன்மை உண்டாகுமா?

பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்தால் தான் நன்மை உண்டாகுமா?

பெயர் நட்சத்திரம் சொல்லி நமது வேண்டுகோள்களையெல்லாம் கேட்டால் தான் நன்மை உண்டாகும் என்றில்லை. ""வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ'' என்கிறார் மாணிக்கவாசகர். நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும். நாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இன்பமும் துன்பமும் இறையருளால் தான் நிகழ்கின்றன. பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதை நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளும் விதத்தில் பெரியோர்கள் வகுத்துள்ளனர்.

உனது சிறந்த நண்பன் - அன்னை

  உனது சிறந்த நண்பன் - அன்னை
உன்னை மிகவும் தாழ்ந்த மட்டத்திற்கு வர ஊக்குவிக்கிறவன், அவனோடு சேர்ந்து முட்டாள்தனமான காரியங்களைச் செய்ய அல்லது தவறான வழிகளில் செல்ல ஊக்குவிக்கிறவன், நீ செய்கிற அசிங்கமான காரியங்களுக்காக உன்னைப் பாராட்டுகிறவன் உன்னுடைய நண்பன் என்பதில் சந்தேகமில்லை...

யாருக்காவது தொற்றுநோய் இருந்தால் நாம் அவனுடன் நெருங்கிப் பழகமாட்டோம், கவனமாக அவனிடமிருந்து விலகிவிடுவோம். பொதுவாக அவனிடமிருந்து அந்த நோய் பிறருக்கும் பரவிவிடாமலிக்க அவனை ஒரு தனி இடத்தில் ஒதுக்கி வைப்பார்கள். தீயொழுக்கம், தவறான நடத்தை, கயமை, பொய், கீழ்மை இவையெல்லாம் எந்தத் தொற்று நோயையும்விட மோசமான தொற்று நோய்களாகும், இவற்றை வெகு கவனமாகத் தவிர்க்க வேண்டும். எவன் உன்னுடைய தவறான அல்லது அசிங்கிமான செயல்களில் பங்கு கொள்ள மறுக்கிறானோ, தவறான செயல்களைச் செய்யத் தூண்டுதல் ஏற்படும்போது அதை எதிர்த்து நிற்க எவன் உன்னை ஊக்குவிக்கிறானோ அவனே உன் நண்பன். அவனையே உன்னுடைய சிறந்த நண்பனாக நீ கருதவேண்டும். அப்படிப்பட்டவனுடன்தான் நீ பழகவேண்டும், எவனுடன் வேடிக்கைகளில் ஈடுபடலாமோ, எவன் உன்னுடைய தீய குணங்களைப் பலப்படுத்துகின்றானே அவனுடன் அன்று. அவ்வளவுதான். இதை நான் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்பவில்லை. நான் யாரை மனத்தில் கொண்டு இதைச் சொல்கிறேனோ அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். உண்மையில், யார் உன்னைவிட அறிவுடையவர்களாக இருக்கிறார்களோ, யாருடைய கூட்டுறவு உன்னைச் சான்றோனாக்குகிறதோ, உன்னை நீ அடக்கி ஆளவும், முன்னேறவும், நன்றாகச் செயல்படவும், விஷயங்களை மேலும் தெளிவாகக் காணவும் உதவுகிறதோ அவர்களையே நீ நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இறுதியாக, நீ பெறக்கூடிய மிகச் சிறந்த நண்பன், எல்லாவற்றையும் சொல்லக்கூடிய, உன்னை முற்றிலும் திறந்துகாட்டக்கூடிய நண்பன் இறைவனே அல்லவா? எல்லாக் கருணையின் ஊற்றும், திரும்பவும் செய்யாவிட்டால் நமது பிழைகளையெல்லாம் துடைத்துவிடக்கூடிய சக்தியின் ஊற்றும், உண்மையான சித்திக்கு வழியைத் திறப்பவனும் அவனே அல்லவா? எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடியவனும், பாதை‌யில் தவறாமல், தடுமாறாமல், வீழ்ந்துவிடாமல், இலட்சியத்தை நோக்கி நேரே நடந்துசெல்ல உதவுகிறவனும் அவனே. அவனே உண்மையான நண்பன், வாழ்விலும் தாழ்விலும் நீங்காத நண்பன், உன்னைப் புரிந்துகொள்ளக்கூடிய, குணமாக்கக்கூடிய நண்பன், வேண்டும்போது எப்பொழுதும் ஓடிவரும் நண்பன். நீ மனப்பூர்வமாக அழைத்தால் உனக்கு வழிகாட்டவும், உன்னைத் தாங்கவும் அவன் எப்பொழுதும் இருப்பான் - அதோடு உண்மையான முறையில் உன்னை நேசிப்பான்.

தேடி வரும் தெய்வம்

தேடி வரும் தெய்வம்

Post
பசுமாடு ஒன்றை கன்றுடன் விலைக்கு வாங்கிய ஒருவன், தன் ஊருக்கு அவற்றைஓட்டிச்சென்றான். பசுவின் பின்னால் கன்று வந்து கொண்டிருந்தது. திடீரென்றுபசு முரண்டு பிடித்து நின்று விட்டது. அவன் எவ்வளவோ முயற்சி செய்தும் நகரமறுத்தது. அங்கு வந்த பெரியவர் என்னவென்று விசாரிக்க அவனும் விவரத்தைசொன்னான். அதற்கு அவர், "கவலைப்படாதே, நீ கன்றை ஓட்டிக்கொண்டு முன்னால்செல், தாய்ப்பசு தானாகவே உன் பின்னால் வந்துவிடும்", என்றார். அவனும்அவ்வாறே செய்தான். உடனே தாய்ப்பசுவிரைவாக அவனைப் பின் தொடர்ந்து நடக்கஆரம்பித்தது. இறைவனும் அப்படித்தான். அவன் பிள்ளைகளே எல்லோரும் என்பதால்,பிறருக்கு நாம் உதவினால், நம்மைத் தேடி வந்து அவன் அருள்வான்.

ஏகலைவன்

குரு பக்தி

Post by Admin on Tue Feb 01, 2011 4:15 am
துரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச
பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும்
குருவாக இருந்தார். அவர்களுக்கு வில் வித்தை யை சிறப்பாகக்
கற்பித்து வந்தார். வில் வித்தையில் அர்ஜுனனை விடச் சிறந்தவர்
எவருமில்லை எனக்கூறும்படி செய்வதாகச் சபதம் செய்திருந்தார்.
இதனால் துரியோதனனுக்குக் கோபமும் பொறாமையும் அர்ஜுனன் மீது
ஏற்பட்டிருந்தது. இயல்பாகவே அர்ஜுனன் வில்லில் அம்பை ஏற்றி எய்வதில்
மிகவும் சிறந்தவன். அதனால் துரோணர் அர்ஜுனனிடம் தனி அன்பு
கொண்டிருந்தார்.

ஒரு நாள் துரோணர் தன் மாணவர்களுக்காகக் காத்திருந்தார். அப்போது ஓர் ஏழைச்சிறுவன் வந்து துரோணரைப் பணிந்து நின்றான்.
அவனை ஆசிர்வதித்தார் துரோணர்.
"யாரப்பா நீ? எங்கு வந்தாய்?"

"குருவே!, நான் தங்களிடம் வில் வித்தை பயிலவேண்டும் என
விரும்புகிறேன். பலநாட்களாகத் தங்களைத் தேடித் திரிந்தேன். இன்றுதான்
தங்களின் தரிசனம் கிடைத்தது. என்னைத் தங்கள் மாணாக்கனாக ஏற்றுக்
கொண்டு அருள் செய்ய வேண்டும்"

"என்ன கேட்டாய்? உன்னை மாணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா? நான் அரச
குடும்பத்தாருக்கு மட்டுமே கற்பிப்பவன். உன்னைப் போன்ற ஏழைச்
சிறுவனுக்குக் கற்பிக்க மாட்டேன். அரசகுமாரர்கள் வரும் நேரம் நீ
போய் வா. உனக்கேற்ற ஆசானைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வித்தையைக்
கற்றுக்கொள். என் பூரண ஆசி உனக்கு."
கைகளை உயர்த்தி ஆசி வழங்கிவிட்டு துரோணர் அங்கிருந்து சென்று
விட்டார். மண்டியிட்டு அமர்ந்திருந்த அந்த வேடுவச் சிறுவன் கண்களில்
நீர் பெருக நின்றான். அவனது பல நாள் ஆசை நிறைவேறாமல் போனது பற்றி
மிகவும் வருந்தினான். எங்கே துரோணர் பாதங்களை வைத்திருந்தாரோ அந்த
இடத்திலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டான். துரோணர் சென்ற திசை நோக்கி
வணங்கினான்.
விடுவிடுவெனத் தன் இருப்பிடம் நோக்கி நடந்தான்.

இல்லம் சேர்ந்த அச்சிறுவன் மண்ணைக் குழைத்து துரோணரைப் போன்ற ஒரு
சிலையைச் செய்து வைத்துக் கொண்டான். அந்தச் சிலையின் முன்னால் நின்று கொண்டு வணங்கினான். பின்னர் தனது பயிற்சியைத் தொடங்கினான். துரோனரையேதனது குருவாக மானசீகமாக வரித்துக் கொண்டான். விரைவிலேயே சிறந்த வில் வீரனாக ஆனான்.

நாட்கள் கடந்தன. ஒரு நாள் துரோணரும் அவரது மாணாக்கரான நூற்று
ஐய்வரும் காட்டுவழியே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தவழியில்
இரண்டு காட்டுப்பன்றிகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு சண்டையிட்டுக்
கொண்டு இருந்தன.அப்போது " அர்ஜுனா! இப்பன்றிகளைக் கொல்"
எனக்கட்டளையிட்டார் குரு.
அர்ஜுனன் திகைத்தான். " ஒரே பாணத்தினால் இரண்டு உயிர்களை ஒரே
சமயத்தில் கொல்ல முடியுமா? குருவே, அப்படிப்பட்ட கலையை நீங்கள்
இன்னும் எனக்குக் கற்பிக்கவில்லையே." இதற்குள் இரண்டு பன்றிகளும்
வெகு உக்கிரமாகப் போரிட்டுக் கொண்டு வழியை அடைத்துக் கொண்டு
இருந்தன. அப்போது எங்கிருந்தோ அம்புகள் வந்து ஒரே அடியில் இரண்டு
பன்றிகளையும் வீழ்த்தியது. பன்றிகள் இரண்டும் ஒரே சமயத்தில்
வீழ்ந்து இறந்தன. இதைப் பார்த்த அர்ஜுனன் திகைத்து நின்றான். தன்
குருவை சந்தேகத்தோடு பார்த்தான். "தன்னினும் சிறந்த வில்வீரன்
ஒருவன் உள்ளான். அவன் விட்ட பாணமே இதற்குச் சாட்சி. இந்தக்கலையை
அறிந்தவர் துரோணர் ஒருவரே. இன்று மற்றொருவர் உள்ளார் எனில் இதைக்
கற்பித்தவர் தனது குருவே. " இவ்வாறு அர்ஜுனன் எண்ணம் ஓடிற்று.

அப்போது வில்லும் கையுமாக அங்கு வந்தான் அன்று வந்த வேடுவச் சிறுவன். துரோணரைக் கண்டதும் மண்டியிட்டு வணங்கினான்.

"ஏ சிறுவனே! உனக்கு இக்கலையைக் கற்பித்தவர் யார்? உன் குரு யார்?" சற்றே கோபமாகக் கேட்டார் துரோணர்

"தாங்கள்தான் எனது குருநாதர். தினமும் நான் உங்கள் முன்னிலையில்தானே பயிற்சி மேற்கொள்கிறேன்."

"பொய் சொல்லாதே! ராஜகுமாரர்களைத் தவிர நான் யாருக்கும் கற்பித்ததில்லை. உண்மையைச் சொல்."

"என்னுடன் வாருங்கள்." என்று அழைத்த சிறுவனுடன் அனைவரும் அவன்
இல்லம் சென்றனர். காட்டின் நடுவே ஒரு குடிசை. அதன் முன்னே ஒரு
திறந்த வெளியில் நாடு நாயகமாக துரோணரின் சிலை அமர்ந்த நிலையில்
அமைக்கப் பட்டிருந்தது. அச்சிலையை வணங்கிய சிறுவன் "இவர்தான் என்
குருநாதர். இவர் முன்னால்தான் நான் பயிற்சி செய்கிறேன்." என்றான்
பணிவோடு.

"இது எனது உருவம்போல் உள்ளதே"

"ஆம் குருதேவா. தங்களின் பாதம் பதித்த மண்ணைக் கொண்டுவந்து
அதைச்சேர்த்து ஒரு சிலை செய்து தாங்களே அமர்ந்து எனக்குப் பாடம்
சொல்வதாக நினைத்துக் கொண்டேன். தங்களை என் மனதில் குருவாக எண்ணிக்
கொண்டு தினமும் வணங்கி வருகிறேன்."

துரோணர் அச்சிறுவனின் குருபக்தியே அவனுக்கு இத்தனை திறமைகளும்
வளரக்காரணம் என்பதைத் தெரிந்து கொண்டார். ஆயினும் அர்ஜுனனுக்கு
வில்லுக்கு விஜயன் என்ற பெயரைப பெற்றுத் தருவதாக வாக்குக்
கொடுத்திருப்பதால் இந்தச் சிறுவன் இனியும் வில்லை தன் கையில்
எடுக்கக் கூடாது என முடிவு செய்தார். சிறுவனை அன்புடன் பார்த்தார்.

"சிறுவா!, உன் பெயர் என்ன?"

"என் பெயர் ஏகலைவன். இந்தக் காட்டில் வசிக்கும் வேடுவர் தலைவரின் மகன் நான்."

"உன் திறமையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். குருதக்ஷிணை தரவேண்டாமா நீ?"

"குருவே! எதுவேண்டுமானாலும் கேளுங்கள். சிங்கம் புலி இவை வேண்டுமா?
மான்கள் வேண்டுமா? நொடியில் பிடித்துவருவேன் .உங்களுக்குக்
குருதக்ஷிணை யாகத் தருவேன்"

"அதெல்லாம் வேண்டாம். ஏகலைவா! நீயே சிறந்த மாணவன். என்பதை நான்
ஒப்புக்கொள்கிறேன். எனக்குக் குருதக்ஷிணையாக உன் வலதுகைக் கட்டை
விரலைத் தருவாயா?"

"தாங்கள் எனது குரு என ஒப்புக் கொண்டதே எனக்குப் போதும். தாங்கள்
குருதக்ஷிணை என என் உயிரையே கேட்டாலும் நான் தரத் தயாராக
உள்ளேன். பெற்றுக்கொள்ளுங்கள்."
மறுகணம் தனது இடது கை வாளால் வலதுகை கட்டை விரலை வெட்டி ஒரு
இலையில் வைத்து அவர் பாதத்தில் வைத்துப் பணிந்து நின்றான் ஏகலைவன்.
மனம் மகிழ்ந்த துரோணர் "ஏகலைவா! குருபக்தி என்ற சொல்லுக்கு நீயே
ஒரு உதாரணம். உலகம் உள்ளவரை உன் பெருமையை இவ்வுலகம் பேசும்." என்று ஆசிகூறி அங்கிருந்து சென்றார். அர்ஜுனனுக்குப் போட்டியாக ஒருவன்
வருவதைத் தடுத்து விட்ட நிம்மதி இருந்தாலும் ஒரு நல்ல வில்வீரனை
அவனது வீரத்தை திறமையை அழித்துவிட்டோமே என்ற வருத்தமும் துரோணருக்கு இருந்தது.

ஆனாலும் குருபக்தியில் சிறந்தவன் ஏகலைவன் என்ற புகழை அவனுக்குக்
கொடுத்து விட்டோம் என்ற பெருமை துரோணருக்கு நிம்மதியைக் கொடுத்தது.

நம்பியாண்டார் நம்பி

நம்பியாண்டார் நம்பிகளங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில்
மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.
இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை
முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர்
செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து
பூஜை செய்து வா…’ என்றார்.

மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.
“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார்.
உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல்
சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர்
கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.
பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?

அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…
“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.
அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து
வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த
ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின்
விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.

அவரிடம், “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான்
அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே
சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.
அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.

மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும்
நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த
விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின்
இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர்
சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.

அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி.
மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன்,
தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும்,
தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன
செய்யும்படி கேட்டுக் கொண்டான்.

அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து
ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11
திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக்
கொண்டிருக்கின்றன.

குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

கல்கி அவதாரம்

கல்கி அவதாரம்

இதுதசாவதாரங்களில் 10-ஆவது அவதாரமாகும். அது எப்போது என தெரியாவிட்டாலும் நிச்சயம் நடக்கும் என புராணங்கள் சொல்கின்றன. அதில் "யாஸஸ்' எனும் பிராமணருக்கு மகனாக கல்கி பிறப்பார். இவர் சகல வல்லமையுடன் பட்டுப் பீதாம்பரம் அணிந்து, மார்பில் துளசி மாலை துலங்க, கையில் வாளும் கேடயமும் தரித்து வெண்புரவி மீதேறி புறப்பட்டு
வந்து, சிரஞ்சீவியான பரசுராமரிடம் சென்று பற்பல கலைகள் பயின்று உபதேசம் பெற்றபின், குதிரை மீதேறி வாயு வேகத்தில் மூன்று இரவுகள் உலகை வலம் வருவார்.அப்போது அக்கிரமச் செயல் புரிவோரை எதிர்த்து அழித்து, அதர்மவான்களையும் கொடிய வர்களையும் ஒழித்து பூமியைப் புனிதப்படுத்துவார். தர்மத்தை நிலைநாட்டுவார். மக்களை நல்வழிப் படுத்துவார். அமைதி, அன்பைப் போதிப்பார். அதன்பின்கல்கி அவதாரம் நிறைவடையும். கலியுகமும் முடிவடையும். பின் புதிய யுகமான
சத்ய யுகம் பிறக்கும். அதில் அமைதியும் அன்பும் மட்டுமே மலரும்.

கலியுகம் எப்படி இருக்கும்?
கலியுகம் எப்படி இருக்கும்?கலியுகத்தில் என்னென்ன நடக்கும், மக்கள் எப்படி இருப்பார்கள், நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை கண்ணன் கூறியுள்ளார்."மனிதர்கள்எல்லாவற்றையும்அடையவேண்டும் என வெறியுடன் இருப்பார்கள். பணத்தாசையுடன் அலைவர். துறவிகள்கூட பணத்திற்காகத் தவறுகள் செய்வார்கள். ஆண்கள் மனைவிக்கு மட்டும் கட்டுப்பட்டு பெற்றோரை உதாசீனம் செய்து தூஷிப்பார்கள். மனைவிவழி
உறவினர்களிடம் மட்டுமே உறவாடுவார்கள். திருமணத்தில் முறை இருக்காது. சிறிதளவு சொத்துக்குக்கூட உறவினர் களைக் கொல்லத் தயங்க மாட்டார்கள். ஒருவருக் கொருவர் கெடுதல் செய்து கொள்வார்கள்' என்று கூறியுள்ளார்.கலியுகத்தில்இப்படிச் செய்த பாவங்கள் விலக வேண்டுமானால், கிருத யுகத்தில் கடுமையான தியானத்தாலும் யோக நிஷ்டை யாலும் பெற்ற புண்ணியத்தை- திரேதா யுகத்தில் யாகங்கள் செய்வ தன் மூலம் கிடைத்த புண்ணி யத்தை- துவாபர யுகத்தில் அர்ச்சனாதிபூஜைகள் செய்ததன் மூலம் கிடைத்த புண்ணியத்தை கலியுகத்தில் ஹரி நாம சங்கீர்த்தனம் செய்தும், கண்ணன் திருநாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயும் சிறிதளவு பிரயாசை யாலேயே அடைந்துவிடலாம்.ஆனால்,சிலரைத்தவிரபெரும்பாலோர்நன்னடத்தையில்லாமல், பொய், சூது, கொலை, கொள்ளை,வஞ்சனை, சோம்பல், தூக்கம், அளவற்ற சாப்பாடு, பணவெறி, மனைவி சொல் கேட்டல்,பெற்றோ ரைப் புறக்கணித்தல் போன்ற விபரீதங்கள் நிறைந்த வாழ்க்கையைத்தான் கலியுகத்தில் வாழ்கின்றனர்.இப்படி தர்மம், நீதி, நேர்மை நசிந்து அராஜகம் அதிகமாகும்போது நல்லவர்களைக் காக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் பகவான் "கல்கி அவதாரம்' எடுப்பார்.

"பரித்ராயண சாதுனாம் வினாசாயச் துஷ்கிருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே, யுகே.'

எப்போதெல்லாம்உலகில் அதர் மம் அதிகமாகிறதோ அப்போதெல் லாம் அதனை அழித்து தர்மத்தையும் அமைதியையும் நிலைநாட்ட விஷ்ணு அவதாரம் எடுப்பார்.

கிருஷ்ணாவதாரம்-சரீர தியாகம்

கிருஷ்ணாவதாரம்-சரீர தியாகம்குருக்ஷேத்திரத்தில்அர்ச்சுனனுக்கு யாதவ குலத் தலைவனான கண்ணன் போர்க்களத்திலேயே கீதையைப் போதித்தார். பின் 18 நாட்கள் நடந்த பாரதப் போர் பாண்டவர்களின் வெற்றியுடன் முடிவடைந்தது. பின்னர், தருமருக் குப் பட்டாபிஷேகம் செய்துவிட்டு துவாரகை சென்ற கண்ணன் 36 ஆண்டுகள் அரசாண்டார்.

துவாரகையில் யாதவர்கள் வரம்பு கடந்த சுகபோகத்தில் ஈடுபட்டனர். ஒரு நாள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணிப் பெண் வேடமிட்டு, அங்கு வந்த ரிஷியிடம், "என்ன குழந்தை பிறக் கும்?' எனக் கேட்டனர். உண்மையை உணர்ந்த ரிஷி கடுங்கோபத்துடன், "இரும்பு உலக்கைதான் பிறக்கும்; அதனால் உங்கள் குலமே அழியும்' என சாபமிட்டார். அதன்படியே பிரபாசபட்டினக் கடற்கரையில் யாதவர் குலம் அனைத்தும் அழிந்தே போனது.இது
கண்டு கவலையுற்ற பலராமர் யோகத்தில் அமர்ந்து உயிர் துறந்து பலராம
அவதாரத்தை முடித்துக் கொண்டார். நடந்த அனைத்தையும் பார்த்த கண்ணன், தன்னைத்தவிர யாவரும் அழிந்தனர்; தானும் தன் அவதாரத்தை முடிக்கும் காலம் வந்துவிட்டது என எண்ணி, குரா மரத்தடி யில் சரிந்து அமர்ந்தார்.அங்கு வந்த ஜரா எனும் வேடன் எய்த அம்புகுறி தவறி கண்ணனின் காலில் தைத்தது; கண்ணனின் உயிர் பிரிந்தது. அவர் சரீர தியாகம் செய்து கொண்ட இடம்தான் இப்போது தோரஹரசாகர் என அழைக்கப்படுகிறது.
இது ஹிரண்ய நதிக்கரையில் உள்ளது. இந்நதிக்கரையில் அர்ச்சுனன் கண்ணன் மகனின்உதவியுடன் சந்தனக் கட்டைகளை அடுக்கி, கண்ணனுக்கு ஈமக்கிரியைகளைச் செய்து முடித்தான். அப்போது கண்ணனின் தேகம் ஒரு மரக்கட்டையாகி நீரில் மிதந்து பூரி கடற்கரையருகில் ஒதுங்கியது. அதை எடுத்து ஒரு சிலை செய்து பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர்.ராமாவதாரத்தில் ராமனின் அம்பு பட்டு இறந்தவாலியே ஜரா என்ற வேடனாக கிருஷ்ணா வதாரத்தில் வந்து கண்ணன்மீது அம்பெய்து
கண்ணனைக் கொன்றான். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பது கடவுள் அவதாரத் துக்கும் பொருந்தும் என்பதை இதனால் நாம் அறிந்து கொள்ளலாம்.கிருஷ்ணாவதாரம் துவாபர யுக முடிவில் நிறைவுற்றது. அதன்பின் தோன்றிய யுகம்தான் நாம் வாழும் இந்த கலியுகம்.

பூர்த்தியான நாள்தான் துவாபர யுகத்தின் கடைசி நாள். அன்று பிற்பகல் 2.00
மணி, 27 நிமிடம், 30 வினாடிகளில் கண்ணன் சரீரத் தியாகம் செய்தார். அதுதான்
கி.மு. 3102-ஆம் ஆண்டு, பிப்ரவரி 18-ஆம் நாள் என்று குறிப்பிடுகிறார்கள். அதன்பின் கி.மு. 3102, பிப்ரவரி 20-ஆம் நாள் கலியுகம் பிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.சோம்நாத்அருகேயுள்ள பிரபாசபட்டினத்தில் 7-9-2004 அன்று நடந்த மாநாட்டில் ஞானானந்த சரஸ்வதி சுவாமிகள் தன் ஆராய்ச்சிக் கட்டுரையிலும் இதையே
குறிப்பிட்டுள்ளார். இவர் விஷ்ணு புராணம், மத்சய புராணம், மகாபாரதம், பாகவதபுராணம் ஆகியவற்றில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் கணினி மூலம் கணித்துநிர்ணயம் செய்துதான் மேற்கண்ட விவரங்களைத் தெளிவுற விளக்கியுள்ளார். மேலும் கண்ணன் மறைந்த தினமான பிப்ரவரி 18-ஐக் கொண் டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். கண்ணன் 125 வருடம், 7 மாதம், 6 நாட்கள் பூவுலகில் வாழ்ந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். உலகம் தோன்றி 198 கோடியே, 67 லட்சத்து, 73 ஆயிரத்து, 109 ஆண்டுகள் ஆகின்றன.

சாய்பாபாவின் சரித்திரம்

சாய்பாபாவின் சரித்திரம்பகவான் சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவுற்றதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு அதிசய நிகழ்வு என்று ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் சாய்பாபா திறமையாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் இருக்கும் போது, தேள் ஒன்று சாய்பாபாவை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் அவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பா பாவின் உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்த வர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். (ஷீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர்.

இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்). சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தி யாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப் பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப் பட்டு 1950ல் நிறை வடைந்தது. 1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்து வமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர் களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்ய படுத்தினார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்தார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

சமூகத் தொண்டு:ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடை கின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங் களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது. சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங் களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்."அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.

சாய்பாபாவின் சேவைகள் : * சத்ய சாய் தனது பக்தர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சமூக சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 136 நாடுகளில் இவை இயங்கி வருகின்றன.
* சமூகம், கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட பல துறைகளில் இவரது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
* பெங்களூருவில் உள்ள பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் முதியோருக்காக "விருத்தாஸ்ரமம்' என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
* பாபா குறித்த நூல்கள், "சிடி'க்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகிறது.
* ஆந்திராவில் உள்ள அனந்தபூர், வடக்கு கோதாவரி மற்றும் கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரே ஆண்டில் அம்மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.
* ஒயிட்பீல்டு ஆசிரமம் அருகே சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்øகாக வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
* சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தெலுங்கு கங்கை திட்டத்தை சரி செய்து தீர்வு வழங்கியது சாய் பாபாவின் சாயி மத்திய அறக்கட்டளை.
* நாட்டில் இயற்கை பேரழிவு ஏற்படும் சமயங்களில் அப்பகுதியில் உள்ள சாயி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உதவிகள் செய்கின்றனர்.

""எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடு'' : 1976ல் நடந்த நிகழ்ச்சி இது. சாய்பாபா பிருந்தாவனத்தில்(சாய்பாபாவின் இருப்பிடம்) இருந்தார். இன்ஜினியர்கள் சில கட்டடத் திட்டங்களை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். சாய்பாபா அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, ""டியர் பா#ஸ், உங்களுக்காக ஒரு ஹாஸ்டலை கட்ட ஏற்பாடு செய்திருக்கிறேன். அது வசதியான அறைகள் கொண்டதாக இருக்கும்,'' என்றார்.

ஒரு மாணவர் பாபாவை நோக்கி, ""சுவாமி! நாங்கள் இங்கு சுகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். புதிய ஹாஸ்டல் எங்களுக்குத் தேவையில்லை. இந்த பிருந்தாவனமே எங்களது இல்லம்'' என்றார். ""அன்புள்ள குழந்தைகளே! பிருந்தாவன் உங்களது என்று சொல்வது சரியே. அதே சமயத்தில் சிறுவர்களாகிய நீங்கள் இடம் போதாமல் முடங்கிக் கிடப்பதைப் பார்த்து என் மனம் பொறுக்கவில்லை. உங்களுக்கு வசதி செய்து தருவது தான் என் கடமை. வரும் வியாழன் அன்று புதிய ஹாஸ்டலுக்கான அடித்தளம் போடப்படும்'' என்று சொல்லிவிட்டு தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களுக்கு ஆசி அளிக்க கிளம்பினார்.
அடுத்த இரண்டுநாட்களுக்குள் அடித்தளமிடும் பூமிபூஜை நடக்க இருந்தது. இன்ஜினியர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள். மாணவர்களுக்கு இச்செயல் பிடிக்கவில்லை. அடுத்தநாள் ஹாஸ்டலுக்கு பாபா வந்தபோது, வயதில் சிறிய மாணவன் ஒருவன், பாபாவின் கையில் ஒரு கடிதத்தைத் தந்தான். அவர் அதைப் படித்து விட்டு சிரித்து விட்டார். வார்டனை வரச் சொல்லி அதை உரக்கப் படிக்குமாறு கூறினார். அதில் கீழ்க்கண்டவாறு இருந்தது.

""அன்பு மிக்க சாயி அம்மா! தங்களின் மலர்ப்பாதங்களுக்கு எங்கள் பணிவான வணக்கம். தங்களுக்கு எங்களிடம் வருத்தமா? தங்களின் அமைதியை நாங்கள் கெடுக்கிறோமா? ஒழுக்கவிதிகளை மீறி கட்டுப்பாடின்றி நடக்கிறோமா? அவ்வாறு இல்லாவிட்டால் பிருந்தாவனத்தின் எல்லையை விட்டு எங்களை ஏன் அனுப்ப முயற்சி செய்ய வேண்டும்? மிகவும் ரம்மியமான இந்த பிருந்தாவனத்தில் தான் நாங்கள் இனிமையையும், அன்பையும், பாதுகாப்பையும் நெருக்கமாக நாங்கள் உணர்கிறோம். வானுலக தேவர்கள் கூட இந்த அன்பை, ஆனந்தத்தை அனுபவிக்க ஆசைப்படுவார்கள்.''
இதயம் நிறைந்த பாசத்துடன் தங்கள் குழந்தை

பின்குறிப்பு: பிருந்தாவனத்தில் இருந்து வெகு தூரத்தில் புதிய ஹாஸ்டல் கட்டவேண்டும் என்று தாங்கள் உறுதியாக இருந்தால், தயவு செய்து தங்களுக்கும் ஒரு புதிய இல்லம் அமைத்துக் கொண்டு எங்களுக்கு மிக அருகிலேயே இருக்க வேண்டுகிறோம். வார்டன் இக்கடிதத்தைப் படித்து முடித்ததும், கண்ணீர் விடாத மாணவர்கள் யாருமே இல்லை. ஒரே குரலில் அனைவரும், ""சுவாமி! தயவு செய்து எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கெஞ்சினர். இதைக் கண்டு பாபாவின் உள்ளம் உருகியது. அவர் உடனே தலைமை இன்ஜினியரை அழைத்து, வரைபடங்களை வேறு மாதிரி வரையும்படி கேட்டுக் கொண்டார்.
பிருந்தாவன பகுதிக்குள்ளேயே புதிய ஹாஸ்டலைக் கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த பரபரப்பான செய்தியைக் கேட்டதும் மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். பூமிபூஜை நாளன்று ஆரத்திக்கான விளக்கை ஏற்றும்போது மாணவன் ஒருவன், ""சுவாமி! நீங்கள் எங்களுக்காக எவ்வளவோ செய்கிறீர்கள். தங்களுக்குக் கொடுக்க எங்களிடம் ஒன்றும் இல்லையே!'' என்ற சொல்லி கண்ணீர் விட்டான். அதற்கு பாபா""ஆனந்தக் கண்ணீர், உன் மிருதுவான கன்னத்தில் வழிகிறதே! அது போதாதா? எனக்கு வேண்டியது அதுவே! எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்து! நான் மிகவும் விரும்புவது உன் மகிழ்ச்சி மட்டுமே!'' என்றார். பிருந்தாவன் அமைப்பில் உள்ள உயர்ந்த கட்டிடம் பாபா மாணவர்கள் மீது கொண்டுள்ள அளவற்ற அன்புக்கு ஒரு இனிய நினைவுச் சின்னம்.

பிறப்பும் இறப்பும் எனக்கில்லை : ஒருமுறை பிறந்த நாள் விழாவில் சத்யசாய்பாபா சார்பில் ஒரு செய்தியை சாய்பக்தர் ஒருவர் வாசித்தார். அதில், ""இந்த உடலுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஆனால், நீங்கள் எனக்கு அன்பின் காரணமாக விழா எடுக்கிறீர்கள். ஆம்...அன்பே உலகில் மிக உயர்ந்த சக்தி. இங்கே அனைவரும் ஒன்று கூடி சகோதர, சகோதரிகளாக அமர்ந்துள்ளீர்கள். உலகத்தில் சாந்தி ஏற்பட நாம் முயற்சிக்க வேண்டும். குறுகிய உணர்வைக் கொன்றுவிட்டு ஒற்றுமையையும், கூட்டுறவையும் வளரச் செய்தால் அதுவே உண்மையான மனிதத்தன்மையாகும்,'' என்று கூறப்பட்டிருந்தது.

""துயரத்தைத் தாங்கும் சக்தியைத் தருகிறேன்'' அன்றே சொன்னார் சத்யசாய்பாபா : ராமபிரானைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதிய ராமசரண் என்ற பண்டிதர் பாபாவின் பக்தர். அவர் உடல் உபாதைகளால் அவதிப்பட்டார். ராமசரணின் நண்பர்கள் பாபாவிடம் சென்று நிவாரணம் பெற்றுவரும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், "வினைப்பயனை அனுபவித்துக் கழிப்பதே நல்லது' என்றார் ராமசரண். ராமசரண் படும் இந்த துன்பம் குறித்து பாபா ஒருமுறை குறிப்பிட்டார். ""கடவுள் எப்போதும் காப்பாற்ற மாட்டார் மற்றும் தண்டனையும் அளிக்கமாட்டார். நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நான் உங்களுக்கு அளித்த பரிசுகள். அவைகள் என்னால் உண்டாக்கப்பட்டவையல்ல. அவைகளை உருவாக்குபவர்கள் நீங்களே,'' என்றார். ""அப்படியானால் துன்பங்களை நீக்க கடவுளின் பங்குதான் என்ன? என்றார் ஒரு பக்தர்.அதற்கு பதிலளித்த பாபா ""நான் உங்களுக்கு துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை அளிக்கிறேன். தூக்கமுடியாமல் சில்லரைக் காசு மூடையைச் சுமந்து வருபவனிடம் ரூபாய் தாளாக மாற்றித் தந்தால் சுமை எப்படி குறையுமோ, அதுபோல துயரங்களைச் சுமந்து வருபவனின் சுமையை குறைத்து லேசாக்கிவிடுகிறேன். அப்போது துயரச்சுமை உன்னை அழுத்துவதில்லை'' என்றார்.

சப்த கன்னியர்கள்

சப்த கன்னியர்கள்

சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.
கி.பி 510 ஆம் ஆண்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு சிறப்புற்று இருந்ததாக கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சப்தகன்னியர்கள் எழு தாய்மார்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். 
சப்தகன்னியர்கள் பிறந்த கதை

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண்  இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

நம் உடலோடு தொடர்பு கொண்டுள்ளவர்கள்

சப்தமாதர்களுக்கும் நம் உடலுக்கும் தொடர்பு உள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை : பிராம்மி தோலுக்கு தலைவி. மகேஸ்வரி நிணத்திற்கு தலைவி. கவுமாரி ரத்தத்திற்கு தலைவி. நாராயணி சீழிற்குத் தேவதை. வாராஹி எலும்பின் தெய்வம். இந்திராணி சதையின் தேவதை. சாமுண்டி நரம்பின் தலைவி.

ப்ராம்மி

அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.

மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள்  தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி  நிச்சயம்.

வாராஹி

அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும்,உடம்பைத் தாங்குவதும்,ஓய்வு தருவதும் ஆகும். இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.

கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.

மகேஸ்வரி

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.

இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.

இந்திராணி:

அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி. இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். உலகத்தின் சகல உயிர்களும் தோன்ற பெண் பிறப்புறுப்புதான் காரணமாக இருக்கிறது.

தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.

மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.

கௌமாரி

கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.

இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்

வைஷ்ணவி

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.

சாமுண்டி

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.

பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!

இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.

படைப்பு ரகசியம்

சப்த கன்னிகைகளின் சூட்சும படைப்பு ரகசியம் என்னவெனில்,பெண்ணின் சக்தியிலிருந்து பெண்மையாக உருவெடுத்தவர்கள். கன்னிகையாக இருப்பதற்குக் காரணம் மேலோட்டமாக மட்டுமே விளக்க முடியும். சப்த கன்னிகையின் ஸ்தானத்தை உணர விரும்புபவர்கள் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு தினமும் இந்த சப்த கன்னிகைகளின் காயத்ரி மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபித்துவந்தால் உணரலாம்.

மனதால் நினைத்தாலே அபயம் கிட்டும்

கன்னித்தன்மை (விர்ஜின்) என்பது உயிர்களை உருவாக்கி அளிக்கும் நிலைக்கு முந்தைய பவித்ரமான நிலை. கன்னித்தன்மை என்றால் மிகவும் தூய்மையான என்றும் ஒரு அர்த்தம் உண்டு.

கன்னித்தன்மையை தாய்மைக்கு இட்டுச்செல்லலாம். அதற்கு அனுமதி ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டு. ஆனால்,கன்னித்தன்மையை களங்கப்படுத்தக் கூடாது. (அப்படி களங்கப்படுத்தினால் களங்கப்படுத்துபவனுக்கு மேற்கூறிய சப்தகன்னிகைகளின் வரங்களில் ஏதாவது ஒன்று மட்டுமாவதை இழந்தே ஆக வேண்டும் என்பது சாபம்) இவர்களின் அவதார நோக்கமும் தங்களுடைய முழுமையான சக்தியோடு விளங்கிடுதல் மற்றும் ஆண்மைசக்தி எனப்படும் சிவமூலத்தை துணையாகக் கொள்ளாததும் இவர்களின் சிறப்பாகும்.

சப்தகன்னியர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல;ஆண்களுக்கும் ஒரு பலமே!
சப்த கன்னியரை, அன்புடன் மனதால் நினைத்தாலே போதும். நம் அன்னையாக, உயிர் தரும் தோழியராக, அன்பும், அபயமும், அருளும் அற்புத தேவியர்.

நமது இந்துதர்மம் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்

நமது இந்துதர்மம் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்

வேதங்களின் ஏதாவது ஒரு பகுதியை நான் படிக்கும்போது,தெய்வீகமான, இதுவரை அறிந்திராத ஒளி என்னுள் வெளிச்சம் தருவதை உணர்கிறேன்.வேதங்களின் ஒப்பற்ற போதனையில் பேதம் இல்லை.அது அனைத்து வயதினருக்கும், பிரதேசத்தினருக்கும்,நாட்டினருக்கும்,ஜாதிக்கும் உரியது.

அது பேரறிவை அடைவதற்கான பெருவழி.அந்த வழியில் செல்லும்போது,கோடைகால இரவில் நட்சத்திரங்கள் ஒளிரும் வானவெளியின் கீழ் இருப்பதைப் போல் உணர்கிறேன்.


ஹென்றி டேவிட் தோரா(1817 டூ 1862)அமெரிக்காவின் புகழ்பெற்ற தத்துவ அறிஞர்,எழுத்தாளர்,சமூக விமர்சகர்.
இந்த உலகின் மிகப்பெரிய நம்பிக்கைகளுள்,பிரபஞ்சக் கோட்பாட்டோடு பொருந்தி வரக்கூடிய காலக்கணக்கைக் கொண்டிருக்கும் ஒரே மதமும் அதுவே(இந்து மதம்)

கார்ல் சகன் (1934 டூ 1996) புகழ்பெற்ற நவீன வானியற்பியலாளர்.

பண்டைய காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் மூலமாக இறைவன்,அனைத்து புனித நூல்களையும் இந்துக்களுக்கு அளித்துள்ளான்.

பிரம்மா அந்த ரிஷிகளில் முதன்மையானவர்.படிப்படியான ஆய்வுகளுக்குப்பின் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.


ரிக்,யஜீர்,சாமம்,அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும்,பிரம்மாவின் மிகச்சிறந்த அறிவுநூல்களாகும்.


முகமது தாரா ஷீ கோ(1627 டூ 1658)

ஷாஜஹானின் மூத்த மகன்

பலகோடி மடங்கு நன்மை தரும் கிரகணகால மந்திர ஜபம்

பலகோடி மடங்கு நன்மை தரும் கிரகணகால மந்திர ஜபம்

புராதன இந்துபுராண நூல்கள் தெரிவிப்பது என்னவெனில்,கிரகணகாலத்தில் எந்த மந்திரத்தையும் ஒருமுறை ஜபித்தாலும்,அந்த மந்திரத்தின் சக்தி நூறுகோடி மடங்கு ஜபித்ததற்கான பலனைத் தரும்.

மகா விஷ்ணுவின் கல்கி அவதாரம்,குதிரையில் அமர்ந்து வருவது குறித்து புராணங்கள் கூறும் தாத்பரியம் என்ன?

மகா விஷ்ணுவின் கல்கி அவதாரம்,குதிரையில் அமர்ந்து வருவது குறித்து புராணங்கள் கூறும் தாத்பரியம் என்ன?
சமுதாயம் முற்றிலும் சீரழிந்து,இனி சீர்திருத்த இயலாது என்கிற சூழலில்,கல்கி அவதாரம் நிகழும்.உலக வெப்பம் படிப்படியாக உயர்ந்து,தாவரங்களைத் தோற்றுவிக்கும் தகுதியை பூமி இழந்துவிடும்.உணவின்றி விலங்குகளும் மடிந்துவிடும்.மனிதர்கள் சக மனிதரையே உணவாக்க முயற்சிப்பர்.அப்போது கல்கி அவதாரம் நிகழும்.

வேகமாக செயல்படும் வாகனம் குதிரை.தனியொருவராக போர் புரியக் கிளம்பும் கல்கிக்கு அந்தக்குதிரை உதவும்.எல்லாம் அற்றுப்போன அந்த வேளையில்,நமது பண்பாட்டில் ஊறிய ஒரு குடும்பத்தில்(திருநெல்வேலி மாவட்டம் என்று ஒரு கருத்து பேசப்படுகிறது)தோன்றுவார்.அந்தக்குடும்பத்தின் பராமரிப்பில் இருக்கும் குதிரை,அவருக்கு வாகனமாக செயல்படும்.
வெப்பம் அதிகமாக,அதிகமாக வாழ்க்கைக்குத் தேவையான நீர்வளம் குறையும்.உயிரினங்களில் வாழ்வு ஸ்தம்பிக்கும்.புதுப்படைப்புக்குத் தோதாக வெப்பத்தில் எல்லாமும் மூழ்கிவிடும்.இதையே பிரளயம் என்கின்றன புராணங்கள்.அதன் பிறகு படைப்பு தொடரும்.படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகியன பரம்பொருளின் பொறுப்பில் இருப்பதால்,படைப்பதற்காக அழிக்க முற்படுகிறார் கல்கி என்பது புராணத்தகவல்.

பரிகாரக்கோயில்களுக்கான சுலப விளக்கம்

பரிகாரக்கோயில்களுக்கான சுலப விளக்கம்

பூமியில் எல்லா கனிம வளங்களும் இருப்பினும் எல்லாமும் எல்லா இடத்திலும் கிடைக்காது.எது எது எந்த இடத்தில் உள்ளது என தக்கவர்களைக்கொண்டு ஆராய்ந்து அவர்கள் சொல்லும் அந்தந்த இடங்களில்தான் அது அது கிடைக்கும்.
உதாரணமாக தங்கம் வேண்டுமானால் கோலாரிலும்,நிலக்கரி நெய்வேலியிலும்,பெட்ரோல் வேண்டுமானால் நரிமணத்திலும் தோண்ட வேண்டும்.
அதுபோல்,அவரவர் பிரச்னைகளுக்கு ஏற்ப திருவருள் விளங்கித் தோன்றும் திருக்கோயில்களைக் கண்டு நம் மெய்ஞானிகளாகிய நால்வர் பெருமக்கள் ஆய்வு செய்து அதற்குரிய தலங்களை தேர்வு செய்து பதிகங்கள் பாடி நமக்கு வழிகாட்டியுள்ளனர்.நமது ஆஸ்தான ஜோதிடர்களும் நமக்கு வழிகாட்டிவருகின்றனர்.

நன்மை செய்பவர்களாகவே இருங்கள்

நன்மை செய்பவர்களாகவே இருங்கள்

சொன்னவர்: திருமுருக கிருபானந்தவாரியார்
வயலில் தூவப்படும் சில விதைகளே,பல ஆயிரம் மடங்காக பயிர்களைத் திருப்பித்தரும்.அதைப் போலவே,ஒருவர் செய்யும் நன்மையும்,தீமையும் பல மடங்காகப் பெருகி அவரிடமே வந்து சேரும்.
ஆகவே,எப்போதும் பிறருக்கு நன்மை செய்பவர்களாகவே இருங்கள்.சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும் கூட,நன்மை செய்வதிலிருந்து விலகாதீர்கள்.இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும்.


ருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்

ருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்

ருத்ராட்சத்தை வாங்கும் மனிதர்கள் யாராக இருந்தாலும்,அதை கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும்;அணிந்தப்பின்னர்,அதை ஒரு போதும் கழற்றக்கூடாது.அப்படிக் கழற்றினால் அது பாவத்தைத் தரும்.
சரி! ருத்ராட்சம் அணிந்துகொண்டு காம ரீதியான நடவடிக்கையில் ஈடுபடலாமா?
 அப்படி ஈடுபட்டால் அது பாவம் கிடையாதா?
நிச்சயமாகக் கிடையாது.மனிதனது வழக்கமான நடவடிக்கைகளில் ஒரு பகுதியே காம நடவடிக்கைகளும்(உடலுறவு கொள்ளுவதும்,சுய இன்பம் அனுபவிப்பதும்).காமமே தவறு எனில்,கடவுள் நம்மையெல்லாம் படைத்ததே தவறுதானே?ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவது மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.ஆண்கள் தொண்டைக்குழியில் ருத்ராட்சம் இருப்பதுபோல், கழுத்தில் ருத்ராட்சம் கட்டுவது நல்லது.இதனால்,ஆண்களின் ஆண்மை சக்தி அதிகரிக்கும்;ஆண்மைக்குறைவு குறைந்து விந்து கெட்டிப்படுதல் அதிகரிக்கும்;நினைவாற்றல் அதிகரிக்கும்.

பிறந்த குழந்தை முதல் 100 வயது பாட்டி வரை யார் வேண்டுமானாலும்,எவர் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாம்.கர்ப்பிணிகள்,உடல் ஊனமுற்றோர்கள்,நோயாளிகள்,மன நிலை பாதித்தவர்கள் என யாரும் ருத்ராட்சம் அணியலாம்.
நீங்கள் உங்களது தினசரி வாழ்க்கையுடன் சேர்ந்தே புண்ணியம் சேர்க்க விருப்பமா?
உங்களது வார்த்தையை மதிக்கும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களிடம்,சந்தர்ப்ப சூழ்நிலை பார்த்து,ஓம்சிவசிவஓம் பற்றி விளக்கிச் சொல்லுங்கள்.அவர்களையும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க தூண்டுங்கள்.

சொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்

  சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்குப் போக இயலாதவர்கள் பின்வரும் மந்திரங்களை தேய்பிறை அஷ்டமியன்று ஒரு மணிநேரம் வரை ஜபித்துவரவும்.முடிந்தால் இந்த நாளில் பகல் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து,மாலை சூரியன் மறைந்ததும் வீட்டை வாசலைப் பெருக்கியதும்,இந்த மந்திரங்களை 9 இன் மடங்குகளில் ஒவ்வொன்றையும் ஜபித்துவிட்டு,விரதத்தை முடிக்க இழந்த அனைத்தும் கிடைக்கும்.

ஒருவேளை பகல் முழுவதும் விரதம் இருக்க இயலாதவர்கள்,மதியம் மட்டும் சாப்பிடாமல் இருந்து மாலையில் மேற்கூறியதுபோல் பின்பற்றி விரதம் முடிப்பதும் நன்று.இதைத் தவிர,வேறு பல வழிமுறைகள் உங்களுக்கோ,உங்களின் ஜோதிட குருநாதருக்கோ,ஆன்மீக வழிகாட்டிகளுக்கோ,உங்களின் பகுதி பிராமணர்களுக்கோ தெரிந்திருக்கும்.அவற்றில் உங்களால் முடிந்தவற்றை பின்பற்றவும்.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி

ஓம் பைரவாய வித்மஹே

ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:

தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் தியான சுலோகம்

காங்கேய பாத்ரம் டமரும் த்ரிசூலம்

வரம் கரை ஸமசந்ததம் த்ரிநேத்ரம்

தேவ்யாயுதம் தப்த ஸ்வர்ண வர்ஷணம்

ஸ்வர்ணாகர்ஷணம் பைரவம் ஆஸ்ரயாம்யகம்

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மகா மந்திரம்

ஓம் அஸ்ய ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ

மகா மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷிஹ பங்திஸ் சந்தஹ

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ தேவதாஹ்

ஸ்வர்ணாகர்ஷணாகர்ஷண பைரவ ப்ரசாத சித்யர்த்தே

ஸ்வர்ண ஆகர்ஷண சித்யர்த்தே ஜபே வினியோகஹ

சொர்ண ஆகர்ஷண பைரவர் நாமாக்கள்

ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ

ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ

ஓம் ஸ்வர்ணாகாஷணபைரவ நமஹ

ஓம் பக்தப்பிரிய நமஹ

ஓம் பக்த வச்ய நமஹ

ஓம் பக்தா பீஷ்ட பலப்பர நமஹ

ஓம் ஸித்தித நமஹ

ஓம் கருணாமூர்த்தி நமஹ

ஓம் பக்த பிஷ்ட ப்ரபூரக நமஹ

ஓம் ஸ்வர்ணா ஸித்தித நமஹ

ஓம் ரசஸித்தித நமஹ

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம் 1

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாய

ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராய

ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய வித்வேஷனாய

மஹா பைரவாய நமஹ,ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூலமந்திரம் 2

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய ஹீம்பட் ஸ்வாஹா!

ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாய

தன தான்ய விருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்

தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா!

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம் 3

ஓம் ஐம் க்லாம் கிலீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்

வம்ஸஹ ஆபதோத்தாரணாய அஜாமில பந்தனாய

லோகேஸ்வராய ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவாய

மமதாரித்ரய வித்வேஷனாய

ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹா!

உடல்நலம் பெற தண்ணீர் சிகிச்சை

உடல்நலம் பெற தண்ணீர் சிகிச்சை

மருந்து,மாத்திரை,ஊசி,டாக்டர் என்று எதுவுமே இல்லாமல் இலவசமான சுலபமான சிகிச்சையே தண்ணீர் சிகிச்சை!தினமும் சுத்தமான தண்ணீரை ஒன்றேகால் லிட்டர்(சுமார் ஆறு டம்ளர்கள்)அருந்துவதால் ஏராளமான நோய்கள் தீருகின்றன என்பதை ஜப்பானின் நோயாளிகள் கழகம் கண்டறிந்துள்ளது.
தலைவலி,இரத்த அழுத்தம்,இரத்த சோகை,கீல்வாதம்,மூட்டுவலி,சாதாரண பக்கவாதம்,ஊளைச்சதை,காதில் இரைச்சல்,இருதய வேகமான துடிப்பு,மயக்கம்,இருமல்,ஆஸ்துமா,சளி தொல்லை,மூளைக்காய்ச்சல்,கல்லீரல் சார்ந்த நோய்கள்,சிறுநீரகக் குழாய் நோய்கள்,பித்தக் கோளாறுகள்,வாயுக்கோளாறுகள்,வயிற்றுப்பொருமல்,இரத்தக் கடுப்பு,மூலம்,மலச்சிக்கல்,பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல்,ஒழுங்கற்ற மாதவிடாய்(இன்றைய மென் பானங்களை அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படுவது),அளவற்ற வெள்ளைப்படுதல்,கருப்பை புற்றுநோய்,மார்புப் புற்றுநோய்,தொண்டை சார்ந்த நோய்கள் இவை தீரும்.

எப்படி தண்ணீர் சிகிச்சை எடுத்துக்கொள்வது?

காலையில் எழுந்தவுடன்(பல் துலக்கும் முன்பாகவே) 1250 CC தண்ணீரை ஒரே தடவையில் குடித்துவிட வேண்டும்.இது சுமார் 6 தம்ளர் அளவாக இருக்கும்.1.25 லிட்டர்கள் அளந்து வைத்துக்கொள்வது நன்று.இதை நமது முன்னோர்கள் உஷா பானம் என்று பெயரிட்டுள்ளனர்.குடித்தபின்னர் முகம் கழுவிக்கொள்ளலாம்.

காலையில் இப்படி தண்ணீர் குடித்தப்பின்னர்,ஒரு மணிநேரம் வரையிலும் எந்த விதமான பானங்களோ,பிஸ்கட்,பழங்கள்,தின்பண்டங்கள் எதையும் சாப்பிடக்கூடாது.இது மிக முக்கியமான நடைமுறையாகும்.

காலையில் 1.25 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக முதல் நாள் இரவு சாப்பிட்டு முடித்தப்பின்னர்,படுக்கைக்குச் செல்லும் முன்பாக,நரம்புமண்டலத்தைத் தூண்டிவிடக்கூடிய பானங்கள்(மது மற்றும் போதை வஸ்துக்கள்)உணவுகளையோ எதையும் சாப்பிடக்கூடாது.இந்த நிபந்தனையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.எனவே,இரவே பல்துலக்கிக் கொள்வது நன்று.தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கலாம் என சந்தேகப்பட்டால்,இரவே நீங்கள் காலையில் குடிக்க இருக்கும் 1.25 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்வது நல்லது.

ஒரே மூச்சாக 1.25 லிட்டர் தண்ணீரை குடிக்க முடியுமா?

சில நாட்கள் சிரமம் தான்.இரண்டு மூன்று நிமிடங்களில் விட்டுவிட்டும் குடிக்கலாம்.ஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் செல்லும்.அதுவும் நன்மைக்கே!

சரி! எப்படி இந்த தண்ணீர் சிகிச்சை பலனளிக்கும்?

சரியான முறையில்(மேற்கூறிய முறையில்) சாதாரண நீரைக் குடிப்பதால் மனித உடலை சுத்தம் செய்கிறது.தினசரி 1.25 லிட்டர் அளவுக்கு தூய நீரைக் குடிப்பதால்,குடலை வலுவாக்குகிறது.மருத்துவ வார்த்தையில் ஹெமடோபைஸில் எனப்படும் புது ரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் முழுவதையும் வலுவடையச்செய்கிறது.இந்த முறையினால் குடலின் பகுதியில் உள்ள திசு மடிப்புகள் தூண்டப்படுகின்றன என்பது அறிவியல் கருவிகள் மூலம் ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டுவிட்டன.குடல் பகுதியில் இருக்கும் திசு மடிப்புகள் சாப்பிட்ட உணவுப்பொருட்களை ரசமாக்கி உறிஞ்சப்படும்போது புது ரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

தினமும் குடல் சுத்தமாக்கப்படுவதால்,தினமும் புது ரத்தம் உற்பத்தியாகிறது.இப்படி தினமும் புது ரத்தம் உற்பத்தியாவதால்,உடலில் அதுவரை இருந்துவந்த நோய்கள் வெகுவேகமாக குணமடைகின்றன.இந்த சூழ்நிலையை தினசரி காலையில் வெறும்வயிற்றில் தண்ணீர் அருந்துவதன் மூலம் மட்டுமே உருவாக்கிட முடியும்.
நீண்ட ஆய்வுக்குப் பிறகு,பின்வரும் அதிசயத்தக்க முடிவுகள் கிடைத்திருக்கின்றன.
மலச்சிக்கல் ஒரே நாளில் குணமடைகிறது.
வயிற்றுப்பொருமல் இரண்டு நாளில் குணமடைகிறது.
சர்க்கரை நோய் ஏழு நாட்களில் குணமடைகிறது.
இரத்த அழுத்தம் நான்கு வாரங்களிலும்,புற்று நோய் நான்கு மாதங்களிலும்,க்ஷய ரோகம் ஐந்து மாதங்களிலும் குணமடைகிறது.
இந்த தண்ணீர் சிகிச்சையில் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள்:
மூட்டுவாதம்,வாயுப்பிடிப்பு முதலிய நோய் இருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை,மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கும்,இரவு உணவுக்கு முன்பு இந்த தண்ணீர்சிகிச்சையை செய்து வர வேண்டும்.ஒரு வாரம் கழித்து தினமும் காலையில் மட்டும் செய்துவந்தால் போதுமானது.
மற்றவர்கள் தினமும் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தப்பின்பே தண்ணீர் அருந்த வேண்டும்.
படுக்கைக்குச் செல்லும் முன்பாக காபி,டீ,நொறுக்குத் தீனிகள் சாப்பிடக்கூடாது.
இதுவரையில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளில் எதையும் மாற்றிச் செய்வது கூடாது.

நீங்கள் ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக வேண்டுமா?

செல்வ வளம் தரும் க்பேர கிரிவலம்

நீங்கள் ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக வேண்டுமா?
மிக சுலபம்.தாந்திரீகம் எனப்படும் ஆன்மீக வழிமுறைப்படி இந்த வழிபாட்டைச் செய்தால் போதும்.
பல நூற்றாண்டுகளாக மகான்கள்-சித்தர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இது.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று விண்ணுலகிலிருந்து குபேர பகவான் பூமிக்கு வருகிறார்.வந்து அண்ணாமலையில் உள்ள குபேரலிங்கத்திற்கு அன்றைய தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30-6.00)பூஜை செய்கிறார்.பூஜையை முடித்தபிறகு கிரிவலம் வருகிறார்.அந்த நாளில்-மாலை 4.00மணிக்கு நாமும் குபேரலிங்கம் கோவிலுக்கு வந்து 6.00 மணி வரை குபேரலிங்கத்தை வழிபட்டுவிட்டு,கிரிவலம் வந்தால் நமக்கும் குபேரசம்பத்து கிடைக்கும்

பொன்னும் நவரத்தினங்களும் பெருக சொல்லவேண்டிய மந்திரம்

பொன்னும் நவரத்தினங்களும் பெருக சொல்லவேண்டிய மந்திரம்

வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும்.அலங்கரிப்பது உங்கள் வசதியைப் பொறுத்தது.
கீழ்காணும் மந்திரத்தை 108 முறை மனதிற்குள் ஜபிக்கவும்
ஓம் ஸ்ரீம் வஸீதே வஸீதாரே வஸீகரி
தனகரி தான்யகரி ரத்னகரி ஸ்வாஹா

இப்படி 108 முறை ஜபித்தபின்,பக்கத்தில் உள்ள சிறுமிகளுக்கு இனிப்பு வழங்குங்கள்.
வாரா வாரம் இவ்வாறு செய்து வந்தால்,வீட்டில் பொன்னும் நவரத்தினங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.இதை பரீட்சை செய்து பார்த்ததில்,குடும்பத்தில் பணக்கஷ்டம் நீங்குகிறது.

ஞாபக சக்தி பெருக கூற வேண்டிய முருக மந்திரம்

ஞாபக சக்தி பெருக கூற வேண்டிய முருக மந்திரம்

முருகப் பெருமானது சடாச்சர மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை உருப் போட்டால் நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.இது அனுபவ உண்மை!
ஓம் ஐம்கிரிம் தோத் தஸ் ஸ்வாகா
தவிர,கந்தரனுபூதியில் உள்ள 15-வது பாடலாகிய “முருகன் குமரன் குகன் என்று மொழிந்து” என்று துவங்கும் பாடலை ஒருநாளுக்கு 108 முறை வீதம் ஜபித்து, 48 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வந்தாலும் நினைவாற்றல் பெருகும்
.

குடும்பமாக ஏன் வாழ வேண்டும்?

குடும்பமாக ஏன் வாழ வேண்டும்?
விளக்கமளிப்பவர்:தவத்திரு.வேதாத்திரி மகரிஷி அவர்கள்

கணவன்,மனைவி, அவர்களின் பெற்றோர்கள்,குழந்தைகள் சேர்ந்து இருப்பதுதான் குடும்பம் எனப்படுகிறது.
பொருள் ஈட்டும் திறன்,வாழ்க்கை அனுபவம் இரண்டும் இணைந்தால்தான் மனிதன் வாழ்வு அமைதியாக, நிறைவாக நன்கு நடைபெறும்.


குழந்தைகளுக்கு இந்த இருவகையும் தெரியாது.வயது முதிர்ந்தவர்(பெற்றோர்கள்)களால் பொருள் ஈட்ட முடியாது.வாலிபப் பருவத்தினர்தான் உழைத்துப் பொருள் ஈட்ட முடியும். அதை குழந்தைகளும்,முதியோர்களும் கூடித் துய்த்து குறைவின்றி வாழ வேண்டும்.இது இயற்கை நியதி. இதனை மாற்ற முடியாது.இந்த இயற்கை நியதியானது பெற்றோர்,மக்கள் பராமரிப்புக் கடமையாக மாறி அது செயலாகும் போது அதைத்தான் குடும்பம் என்கிறோம்.
குடும்பத்தில் ஒருவர் தேவைகளையும் விருப்பங்களையும் மற்றவர் மதித்து, உதவி தன் தேவை விருப்பங்களைக் கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்ககி அறத்தை கணவன் மனைவி இருவருமே உயிர் போலக் காக்க வேண்டும்.இத்துறையில் அடையும் வெற்றியின் அளவே குடும்பத்தில் அமைதியும், செழிப்பும்,இன்பமும் அமையும்.

திருக்குறள் ஞான அமுது-

 திருக்குறள் ஞான அமுது
*இதயத்தில் தூய்மை இல்லாமல் எந்த மந்திரத்தைச் சொன்னாலும் அது பயன் தராது.
*துறவு மேற்கொள்கிறவனுக்கு முன் செய்த நல்வினை இருந்தால்தான் ஞானம் கைகூடும்.
*தினமும் தலைவனை(அகத்தியர் முதலான சித்தர்களில் ஒருவரை) நினைத்து உருகி பூஜை செய்தால் பாவங்கள் சேராது.காமம் அடிபட்டுப் போகும்.கோபம் அடிபட்டுப்போகும்;நான் என்ற கர்வமும் அடிபட்டுப் போகும்.
*காய்கறி உண்பதால் மனதில் சாந்தம் திகழும்.அதே சமயம், எந்த கர்ம வினையும் நம் ஆன்மாவிற்கு வராது.

*அசைவம் உண்பதால் மனதிலும்-உடலிலும் மூர்க்கத்தனம் வளரும்.காம வெறியைத்தூண்டும்.அறிவை(பகுத்தறிவை) மங்கச் செய்யும்.

*ஒருவரது தவம் முற்றுப் பெற 27,000 ஆண்டுகள் தவம் செய்திருக்க வேண்டும்.
*தவசிகள்( மாபெரும் துறவிகள்) மனமகிழ்ந்து ஒருமுறை வீட்டில் சாப்பிட்டால் மூன்று புவனத்தார் சாப்பிட்டதற்குச் சமம்.மேலும் 1024 அண்டங்களில்(காலக்சி)உள்ளவர்கள் சாப்பிட்டதற்கான புண்ணியம் கிடைக்கும்.
*தாம்பத்திய உறவுக்கு முன் 10 நிமிடம் பூஜை செய்தால் பண்புள்ள புத்திரபாக்கியம் உண்டாகும்.

பிதுர் தோஷமும் பரிகாரங்களும்

உங்கள் மனைவிக்கு கைப்பிடி சோறும்,கட்டுவதற்கு புடவையும் நீ கொடுத்து அவளை காப்பாற்றினால் நீ கால் ஞானி!
பெற்ற பிள்ளைக்கு பிடி சோறும் கற்பதற்குக் கல்வியும் நீ கொடுத்தால் நீ அரை ஞானி!
மூதாதையர்களையும் மூத்தவர்களையும் மதித்து ஆதரித்து நடந்தால் நீ முக்கால் ஞானி!!
இந்த மூன்றையும் நீ கடைசிவரை செய்து வந்தால் நீ முழு ஞானி!!!
நிர்மலான மனதுடன் நிச்சயம் செய்து வந்தால் உன் மனம் நிர்மலாகும்.

உங்களது பிறந்த ஜாதகத்தில் ராகு,கேதுக்கள் உங்கள் வாழ்வில் பிதுர்தோஷத்தை உண்டாக்குகின்றன.உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,5,7,9-இவ்விடங்களில் ராகு அல்லது கேது நின்றால் உங்கள் வாழ்க்கை தினமும் போராட்டம் தான்!இதுவே பித்ரு தோஷம் ஆகும்.பித்ரு தோஷம் உள்ளவர்கள் என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.
பித்ரு தோஷம் பரிகாரம் செய்தபின்னர்தான் வாழ்க்கை போராட்டம் இன்றி செல்லத்துவங்கும்.பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும்.நோய்கள், தேவையற்ற வம்புகள், கணவன் மனைவி பிரச்னைகளை உருவாக்கும்.குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும்.
மகாளய பட்சம் என்று ஒரு காலம் தமிழ்வருடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசி மாதத்தில் வரும் அமாவசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்களாகும்.இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள்.அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.
மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.
திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.திலம் என்றால் எள் என்று அர்த்தம்.திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு.சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.
திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.
வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.
கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம க்க்க்ஷேத்த்ரம் என்ற ஸ்தலம் உள்ளது.அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.
பிதுர்சாந்தி செய்யாமல் செய்கின்ற எந்த பூஜைகளும் பலன் கொடுப்பதில்லை.கேரளாவில் பிதுர்சாந்திக்கு ஜென்ம நட்சத்திரத்தன்று பசுவுக்கு பருத்திக்கொட்டை பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுக்கின்றனர்.
வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா,இராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்
.

எப்படி சாப்பிடுவது?

எப்படி சாப்பிடுவது?

சில ஆன்மீக மரபுகள்

ஒருவன் தனது வீட்டில் கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் அவனது கல்வி வளரும்.மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அவனுக்கு செல்வம் பெருகும்.வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அவனுக்கு நோய் வளரும்.தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அவனுக்கு அழியாத புகழ் உண்டாகும்.
இது எப்படி சாத்தியம்?
கிழக்கு திசை இந்திரனுக்கு உரியது.மேற்கு செல்வத்தின் அதிபதியாகிய மகாலட்சுமிக்கு உரியது.வடக்கு சிவனுக்கு உரியது.தெற்கு யமனுக்கு உரியது.

தனது வீட்டைத்தவிர,ஒருவன் தனது உறவினர் நண்பர்கள் வீட்டில் மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால் அந்த நண்பன் அல்லது உறவினர் நட்பு கெட்டு-பகையாகிவிடும்.
மகாலட்சுமி பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள்

முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றியிருந்தாலும்,தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று(சினிமா- டிவியில் நடித்திருத்தல் அல்லது உலகின் மிகப் பழமையான தொழில் செய்திருத்தல்) பொன் - பொருள் - ஆடைகள் சேர்த்திருந்தாலும்
அவர்கள் இப்பிறவியில் / மறுபிறவிகளில் பாடுபட்டு சேர்த்த பணம்,பொருட்கள்,பூர்வீக சொத்துக்களை பலவழிகளிலும் இழந்து வறுமையில் தவிக்க வேண்டியிருக்கும்.வறுமையால் ஏராளமான துன்பங்ளை அடைவர்.ஆதாரம்:மனு நீதி நூல்,கருட புராணம்.

இத்தகைய பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்.
மகாலட்சுமி பூஜையின் போது நாம் முற்பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி- மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள்.

பெண்களின் மாங்கல்ய தோஷத்திற்கும் ஸ்ரீமகாலட்சுமி பூஜை சக்திவாய்ந்த பரிகாரம் ஆகும்.

எப்படி மகாலட்சுமி பூஜை செய்வது?

அ.வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும்.(இந்த வலைப்பூவின் முகப்பில் உள்ள படம் கூட ஓ.கே!)
ஆ.காலையில் ஸ்ரீமகாலட்சுமி படத்தை 12 அல்லது அதன் மடங்குகளில் வலம் வரவும்.பால், பழம் அல்லது பாயாசம் நைவேத்தியம் செய்யவும்.
இ.நெய் தீபம் ஏற்றவும்.
ஈ.மகாலட்சுமி அஷ்டகம் அல்லது மகாலட்சுமி துதியை 3 முறை பாடவும்.
உ.நைவேத்தியத்தை பெண்குழந்தைகளுக்கு (பிரசாதமாக) பகிர்ந்து கொடுக்கவும்.
ஊ.இதையே ஆடிமாதம் செய்தால் அதன் பெயர்தான்
வரலட்சுமி விரதம்.
எ.ஆடிமாதம் செய்யும் போது வயதான சுமங்கலிகளை வரவழைத்து அவர்களை வணங்கி ஆசி பெறுவது நன்று.

Saturday, April 23, 2011

தானங்களால் ஏற்படும் பலன்கள்

தானங்களால் ஏற்படும் பலன்கள்
1.ஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும்.அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.

வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும்,உடல் வலிமையும் உண்டாகும்.

2.தேன் தானம்:புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.
3.நெய்தானம்: பாவக்கிரக திசை நடப்பவர்கள்(6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.
4.தீப தானம்:இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.
5.அரிசிதானம்: பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்யவேண்டும்.யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.
6.கம்பளி-பருத்தி தானம்:வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளிதானம் செய்தால் நோய் தீரும்.வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.

பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன?

பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன?

14 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை அல்லது பவுர்ணமி வருகிறது.இந்த இருநாட்களிலும் சூரியனும் சந்திரனும் முழுவலிமையடைகின்றன.இந்து ஜோதிடப்படி சூரியன் ஆத்மாக்காரகன் எனவும் சந்திரன் மனக்காரகன் எனவும் அழைக்கப்படுகிறது.

பூமியில் பிறக்கும் மனிதன் 14 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் பிறக்கிறான்.அது வளர்பிறை பிரதமை என வைத்துக்கொள்வோம்.அவனது பிறந்த நட்சத்திரம் அசுவினி என வைத்துக்கொள்வோம்.அவனது அசுவினி வளர்பிறையில் வருவதால் பஞ்சபட்சி சாஸ்திரப்படி அவனது பட்சி ஆந்தை வருகிறது.
ஆந்தையின் குணம் என்ன?
அது இரவில் மட்டுமே வெளிவரும்.ஆக, அந்த மனிதனுக்கு பட்டம்,பதவி எல்லாமே இரவில்தான் கிடைக்கும்.தனது பட்சி ஆந்தை என அவன் அறிந்தால்,அவன் ஒருவரிடம் உதவி கேட்டுச்செல்ல வேண்டிய நேரம் இரவு மட்டுமே! பகலில் அவன் உதவி கேட்டால் அந்த உதவி கிடைக்காது.
அவனுக்குஒரு மாதத்தில் (தமிழ்மாதத்தில்) வளர்பிறைகாலமான 14 நாட்களில் காரியங்கள் வெற்றியடையும்.அந்த 14 நாளில் ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் அவனது பறவை(பட்சி)யான ஆந்தைக்கு மரணபட்சிநாளாக அமைகிறது.அந்த நாளில் அவன் செய்யும் எந்த சுபகாரியமும் படுதோல்வியடையும்.மீதி 13 நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சுமார் 1 1/2 மணி நேரம் அரசபட்சி நேரமாகிறது.அந்த நேரத்தில் அவன் ஒரு சர்வாதிகாரியை சந்தித்தாலும் காரிய வெற்றி உண்டாகிறது.
இந்த பஞ்சபட்சி நேரத்தைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பயன்படுத்துகிறார்கள்.அவர்களது அரசபட்சிநேரம் பல சமயங்களில் ராகுகாலத்திலோ, எமகண்டத்திலோ யதார்த்தமாக அமைந்துவிடுகிறது.இதைத் தான் அந்த அரசியல்வாதிகள் “நான் ராகு காலத்தில் மனுத்தாக்கல் செய்தேன்” என பகுத்தறிவு பகலவன்கள் போல பீற்றிக் கொள்கிறார்கள்

ஏன் வடக்கு நோக்கி தலைவைத்துப்படுக்கக்கூடாது?

ஏன் வடக்கு நோக்கி தலைவைத்துப்படுக்கக்கூடாது?

பூமியின் காந்தப்புலம் மிகவும் சக்தி வாய்ந்தது. 24 மணி நேரமும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி காந்த அலைகள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொரு மனித உடலிலும் சிறு அளவில் காந்த புலம் உள்ளது.நாம் தினமும் வடக்கு நோக்கித் தூங்கும்போது மனித காந்த புலத்திற்கும் பூமியின் காந்தபுலத்திற்கும் மோதல் உருவாகி மனித ஆரோக்கியத்தை சீர்குலைக்கலாம் என நமது முன்னோர்கள் நம்பினர்.
இன்றைய மருத்துவத்துறை ஏராளமான ஆய்வுகள் செய்து சில உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர்.
அதன்படி, நீண்ட நாட்களாக ஒரு மனிதன் வடக்கு நோக்கி தூங்கினால் அவனுக்கு ஹிஸ்டீரியா-மன நோய் பாதிப்பு நிச்சயம் ஏற்படும் என கண்டறிந்துள்ளனர்.

அபிராமி பட்டரும் விண்வெளி அதிசயமும்

அபிராமி பட்டரும் விண்வெளி அதிசயமும்

முன்னொருகாலத்தில் தஞ்சாவூரில்- திருக்கடையூர் என்ற கோவில் இருந்தது.அங்கு அபிராமி பட்டர் என்பவர் அந்தக்கோவிலில் உதவியாளராக இருந்தார். அவருக்கு அந்த கோவில் தெய்வமான அபிராமிஅம்மன் மீது அளவற்ற பக்தி.
அது எந்த அளவுக்கு எனப்பார்த்தால், இன்றைய குணா சினிமாவில் எப்படி கமல் அந்த சேட் பெண்மீது ஆழமான காதலாக இருப்பாரோ அது போல !!!
ஒரு நாள். . .
அப்பகுதியை ஆண்ட மன்னன் அந்தக்கோவிலுக்கு வந்தான்.அன்று அமாவாசை.
அந்த மன்னன் யதார்த்தமாக அபிராமி பட்டரிடம் இன்று என்ன தேதி(திதி)? என்று கேட்டான்.அவர் எப்போதும் அன்னை அபிராமியம்மன் நினைவாகவே இருந்ததால் அன்று அமாவாசை என்பதை மறந்து பவுர்ணமி எனக்கூறிவிட்டார்.
மன்னன் தன்னுடன் வந்த காவலர்களிடம் இன்று இரவு முழுநிலவு வந்தால் நீங்கள் அரண்மனைக்கு வந்துவிடுங்கள்.அப்படி முழுநிலவு வராவிட்டால் இவரை சிரச்சேதம்(தலையை வெட்டிவிடுதல்) செய்துவிடுங்கள் என உத்தரவிட்டுப்போய்விட்டார்.

மன்னன் போனதும் அருகில் இருந்தவர்கள் அபிராமிபட்டரிடம் நிகழ்ந்த சம்பவத்தை உணரவைத்தனர்.அவருக்கு உயிர்பயம் வந்துவிட்டது.
அபிராமி பட்டர் அபிராமி அம்மனைச் சரணைடந்து அவளை நினைத்து கண்ணீர் பெருகப் பாடினார். இரவு வந்தது. பௌர்ணமி வந்தது. மன்னன் அலறியடித்து ஓடி வந்து அபிராமிபட்டரிடம் மன்னிப்புக் கேட்டான்.அபிராமி பட்டர் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார். அபிராமி அம்மனுக்கு நன்றி கூறினார்.
இன்றைய நவீன வானியல் ஆய்வுகள் கூறுவது என்னவென்றால்,25,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக மூன்று பவுர்ணமிகள் வரும்.அதாவது, பவுர்ணமி-அமாவாசை-பவுர்ணமி என்ற சுழற்சி ஒருமுறை மட்டும் உடையும்.
இதன்மூலம் நமது தமிழ் தமிழர் பண்பாட்டின் தொன்மை அதாங்க பழமையை அறியலாம்

அன்னதானம் செய்ய விரும்புகிறீர்களா?

 அன்னதானம் செய்ய விரும்புகிறீர்களா?

தானங்கள் 8 வகைப்படும்.அதில் மிக எளியது;நாம் ஒவ்வொருவரின் கர்மத்தையும்(நாம் செய்த பாவங்களுக்கான பலனை அனுபவித்தல்) அழிக்கும்திறன் அன்னதானத்திற்கு உண்டு.
வீடு,வாசல் இல்லாத அனாதைகளுக்கு செய்யும் தானம் மட்டுமே அன்னதானம் ஆகும்.

வேலை கிடைக்க உதவிடும் மந்திரம்:

வேலை கிடைக்க உதவிடும் மந்திரம்:

ஸ்ரீஇலட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும்,வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலை 10 முறை ஜபிக்கவும்.வெள்ளிக்கிழமை மாலைவேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி ஸ்ரீஇலட்சுமி பூஜை செய்து 108 முறை ஜபித்துவர விரைவில் வேலைகிடைக்கும்.

ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா/
விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ/
ஹரிப்ரியா தேவதேவீ மஹாலக்ஷ்மீச சுந்தரீ//

எது சரியான தமிழ் வருடப்பிறப்பு?

எது சரியான தமிழ் வருடப்பிறப்பு?

சூரியனை பூமி நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது.பூமியானது சூரியனுக்கு அருகில் வரும் காலமே தமிழ்வருடப்பிறப்பாகும்.அதுவே சித்திரை 1ஆம் நாளாகும்.அப்போது தான் அக்னி நட்சத்திரம் எனப்படும் வெப்பநாட்கள் சுமார் 25 நாட்கள் வருகின்றன.

சூரியனிடமிருந்து வெகுதொலைவில் செல்லும் காலமே நமது குளிர்காலம்.நமது முன்னோர்கள் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அதன் முடிவுப்படி கிடைத்த தீர்வுகளின் அடிப்படையில் நமது மரபுகளை உருவாக்கியுள்ளனர்.

வெறும் அரசியல் அதிகாரத்தைக்கைப்பற்றி தை 1ஆம் நாளை தமிழ்வருடப்பிறப்பு என அறிவிப்பது தவறல்லவா?

செல்வ வளம் தரும் மந்திரங்கள்

செல்வ வளம் தரும் மந்திரங்கள்

அ)லட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதியே வரவரத ஸர்வ
ஜனம்மே வசமானய் ஸ்வாஹா!
ஹிருதயாதி ந்யாஸ!நிக்விமோக!
இதை ஜபித்துவந்தால் தன அபிவிருத்தி ஏற்படும்.

ஆ)ருண ஹரண கணபதி(கடன் தீர்க்கும் கணபதி)

ஓம் கணேச ருணம் சித்தி வரேண்யம் உறம்நமபட்
ஹிருதயாதி ந்யாஸ திக்விமோக(ஆறுதடவைக்கு குறையாமல்/ஒவ்வொரு முறையும்)

இ)ஐஸ்வர்ய லட்சுமி போற்றி
நமவசிய அஷ்ட லட்சுமி மகிழ்ந்தே
நன்மை எல்லாம் தர வேண்டினேன் புகழ்ந்தே
அமரர் தொழும் லட்சுமி உன்னையே நினைத்தேன்
அன்பினால் மருவியே அனுதினமும் பணிந்தேன்

அருள் புரிவாயே அன்னை லெட்சுமியே
அகால இருந்தே ஐஸ்வர்யம் தந்தே

இராமர் பாலம் இருப்பது 101% உண்மை

இராமர் பாலம் இருப்பது 101% உண்மை:ஆதாரத்துடன்இராமர் பாலம் 101% நிஜம்:ஆதாரங்களுடன்

தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் அருகில் திருப்புல்லாணிக்கரை உள்ளது.இங்கு கடலுக்குள் நவக்கிரகங்கள் உள்ளன.இங்குள்ள 70 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களிடம் பேசிப்பார்த்தால் இராமர் பாலம் முழு நிஜம் என்பது தெரியவரும்.
மேலே அமெரிக்க விண்வெளி அமைப்பானநாசா எடுத்துள்ள சாட்டிலைட் புகைப்படத்தில் இருப்பது
ராமர் பாலம் தான்.
சுமார் 30 மைல் நீளமும் 3 மைல் அகலமும் கொண்டதாக இது கடலில் முழ்கிக்கிடக்கிறது.
இந்த பாலம் கடல் அலைகளால் உருவாக்கப்படவில்லை.இதன் முனைகள் உறுதியாக உள்ளன.இதன் வயது சுமார் 17,50,000 ஆண்டுகள் ஆகும்.
நமது இந்துக்காலக்கணக்குப்படி முதல் யுகமான திரேதாயுகத்தின் முடிவில் இராமாயணம் நடைபெற்றது.ராமாயணத்தின் இறுதிக்கட்டத்தில் கட்டப்பட்டதே இந்த ராமர் பாலம்.கி.பி.1450 வாக்கில் இலங்கையை ஆண்ட மன்னன் தினமும் குதிரைவீரர்களிடம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் கொடுத்து அனுப்பியுள்ளான்.அந்த குதிரைவீரர்கள் இந்த ராமர் பாலம் வழியாக இலங்கையிலிருந்து தினமும் இராமேஸ்வரத்திற்கு வந்து சென்றுள்ளனர்.
இன்று இந்த ராமர் பாலத்தின் வழியாக நடந்தே இலங்கைக்குச் செல்ல முடியும்.பாலத்தின் ஆழம் குறைந்த பட்சம் 5 அடி(ஒரு ஆளின் உயரம்), அதிக பட்சம் 25 அடி(ஐந்து ஆள்களின் உயரம்)என திருப்புல்லாணிக்கரைப்பெரியவர்கள் கூறுகின்றனர்.
நாம் நமது முன்னோர்களின் படைப்புகள், புராதனச்சொத்துக்களைப் போல உருவாக்காவிட்டாலும் பரவாயில்லை;பாதுகாக்கக்கூடச் செய்யவில்லை யெனில் வரலாறு நம்மை மன்னிக்குமா?//

சதுரகிரி மலை:சிவபெருமானும் சித்தர்களும் வாழுமிடம்சதுரகிரி மலை:சிவபெருமானும் சித்தர்களும் வாழுமிடம்

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு என்ற கிராமம் உள்ளது.இங்கிருந்து 15 கிலோ மீட்டர் பயணித்தால் தாணிப்பாறை என்ற மலையடிவாரப்பகுதி உள்ளது.இதுதான் சதுரகிரியின் நுழைவாசல்.இங்கிருந்து 5 மைல்கள் தூரம் அடர்ந்த காட்டுப்பாதையில்(சாலை வசதி கிடையாது.பாதை கரடு முரடானது)பயணித்தால் சதுரகிரியை அடையலாம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது.

நெற்றியில் திலகம் இடுவதன் நோக்கம் என்ன?


நெற்றியில் திலகம் இடுவதன் நோக்கம் என்ன?

இந்து சமயப் பற்றுள்ள பெரும்பாலான இந்தியர்கள், முக்கியமாக மணமான பெண்மணிகள்,நெற்றியில் திலகம் அல்லது பொட்டு அணிகின்றனர்.மேலும் விசேஷ நாட்களிலும் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுவதற்கு முன்போ பின்போ அணியப்படுகிறது. பல சமூகங்களில் மணமான பெண்டிர் எந்நேரத்திலும் நெற்றியில் குங்குமப்பொட்டுடன் திகழவேண்டும் என்ற நெறிமுறை வலியுறுத்தப்படுகிறது.சமயக்கோட்பாடுகளில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள் திலகம் இடுவதை ஒரு சடங்காகவே செய்கின்றனர்.ஆன்மீகப்பெரியோர்களையும், ஆண்டவனையும் திலகமிட்டு தொழுது வணங்குவதும் வழக்கில் உள்ளது.வட இந்தியாவில் பல பகுதிகளில் மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கும்போதும் வழியனுப்பும்போதும் திலகமிடுவது வழக்கில் உள்ளது.

ஏன் திலகம் அல்லது பொட்டு போன்ற சின்னங்களை நெற்றியில் அணிகிறோம்?
திலகம் அதனை அணிபவரிடத்திலும் அவரைச் சூழ்ந்துள்ளவரிடமும் ஒரு தெய்வீகமான, புனிதமான உணர்வை ஏற்படுத்துகிறது.இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சந்தனம்,குங்குமம் மற்றும் பஸ்மம்(விபூதி) முதலியன பிரசாதமாக அளிக்கப்படுகின்றன.அதனை நமது நெற்றியில்,புருவங்களுக்கு இடையே உள்ள பகுதியில் அணிகிறோம்.இப்பகுதி நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் ஆகியவற்றின் மையமாகும்.யோக சாத்திரத்தில் இது ‘ஆக்ஞா சக்ரா’ என்று அழைக்கப்படுகிறது.திலகத்தின் நெற்றியில் இடும்போது பின்வரும் பிரார்த்தனை சொல்லப்படுகிறது.
“இறைவன் என் நினைவில் நிறைந்திருப்பாராக.புனிதமான இந்த உணர்வு என் செயல்கள் அனைத்திலும் பரவி நிற்கட்டும்.என் செயல்கள் நேர்மையானவையாக இருக்கட்டும்”
இவ்வாறு திலகம் இறைவனது நல்லாசியின் அடையாளமாக விளங்குவதுடன் தவறான இயல்புகளினின்றும் தீய சக்திகளிலிருந்தும் நம்மைக் காக்கும் ரட்சையாகவும் விளங்குகிறது.
நம் உடல் முழுவதும் மின்காந்த அலைகளாக சக்தியை வெளிப்படுத்துகிறது.நெற்றியும்,புருவங்களிடையே உள்ள நுண்ணிய பகுதியும் இத்தகைய சக்தியை வெளிப்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை.(இது பற்றி விரிவாக தெரிந்துகொள்ள ஓஷொ என்ற ரஜனீஷ் அவர்கள் எழுதிய மறைந்திருக்கும் உண்மைகள் என்ற புத்தகத்தை வாசிக்கவும்.உங்களின் தினசரி வாழ்வின் மீது முழுப்பிடிப்பு வந்துவிடும்.அந்த அளவிற்குப்பிரமித்துப்போவீர்கள்)

இதன் பொருட்டே
மனம் கவலையுறும் போது தலை உஷ்ணமடைந்து தலைவலி ஏற்படுகிறது.நெற்றியில் அணியும் திலகம் நெற்றியை குளிரவைத்து உடல் உபாதையிலிருந்து பாதுகாக்கிறது.நெற்றியும் புருவங்களிடையே உள்ள நுண்ணிய பகுதியின் மூலகாக நம்மை மற்றவர்கள் தன்வசப்படுத்தலையும்(மன வலிமை மிக்க மந்திரவாதியால் மயக்கப்படுவது) தடுக்கிறது.மேலும் உடலின் சக்தி வீணாகாமல் தடுக்கப்படுகின்றது.சில சமயங்களில் நெற்றிப்பகுதி முழுவதும் சந்தனம் அல்லது விபூதி(பஸ்மம்) பூசிக் கொள்வதும் உண்டு.
சில பெண்கள் ப்ளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட ஒட்டும் பொட்டுக்களை பலமுறை பயன்படுத்தலாம் என்பதும், இவை அலங்காரத்திற்கு மட்டுமே ஏற்றவையாக இருக்கின்றன என்பதும் உண்மையே.ஆனால் இவை திலகங்கள் போல பயன் தருபவை அல்ல.

காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்


காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்

காயத்ரிமந்திரத்தை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியவர் விஸ்வாமித்ரர் ஆவார்.அவர் ஆகாயத்தில் சூட்சும ஒலியாக தியான நிலையிலிருந்து இதனைக் கண்டறிந்தார். அவர் பிராமணர் அல்ல.(இதன் மூலம் ஜாதிப்பாகுபாடு புராதன காலத்தில் இல்லை எனத் தெரிகிறது).அவர் ஒரு க்ஷத்திரியர்.ஆனால் இன்று மூன்று வேளைகளிலும்(காலை, மதியம், மாலை) சந்தியாவந்தனம் செய்துவரும் பிராமணர்கள் ஜபிப்பது காயத்ரி மந்திரத்தைத் தான்.

ஓம் பூ: புவ: ஸ்வஹ: தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோயோந: ப்ரசோதயாத்

இதுதான் அந்த காயத்ரி மந்திரம்.இதில் : என வந்தால் ஹ என உச்சரிக்கவும்.அதாவது ஓம் பூஹ புவஹ ஸ்வஹஹ, த்யோயோநஹ என உச்சரிக்கவேண்டும்.
இதன் தமிழ் அர்த்தம் என்ன?
‘யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக் கடவுளை நான் வணங்குகிறேன்’என்பதே இதன் அர்த்தம்.
சூரியனுக்கு உள்ள்ளே காயத்ரி தேவி இந்த காயத்ரிமந்திரத்தின் வடிவமாக ஸ்தூல வடிவமாக அமர்ந்திருக்கிறாள்.அவளுக்கு ஐந்து திருமுகங்கள்!
லட்சுமி, சரசுவதி,பார்வதி,மகேசுவரி,மனோன்மணி என்ற ஐந்து முகங்களும் சிவனின் படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருள் செய்தல் ஆகிய தொழில்களை நினைவுபடுத்துகின்றன.

காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர்களின் அனைத்து ஆசைகளும் உறுதியாக நிறைவேறும்.தினமும் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர்களுக்கு ‘ஆத்மசுத்தி’ கிடைக்கும்.அவர்கள் இவ்வுலகில் வாழும் வரையிலும் அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள்.
காயத்ரிமந்திரத்தை ஜபிப்பவர்கள் ஒழுக்க நெறியுடனும்,உள்ளத்தூய்மையுடனும் இருக்க வேண்டும்.காயத்ரிமந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்ற பின் தினமும் ஜபிக்கச் சிறந்ததாகும்.(நாம் அகத்திய மகரிஷியை நமது குருவாகக் கொள்வோம்.இந்த வலைப்பூவில் சித்தர்களை நேரில் தரிசிப்பது எப்படி? என்ற தலைப்பைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.அதில் உள்ள வழிமுறைப்படி 48 நாட்கள் முயன்று அகத்தியரை தரிசித்து அவரது அருளாற்றலால் காயத்ரி மந்திரம் உபதேசம் பெறுவோம்)
அஷ்ட ஐஸ்வர்யங்களும்,அஷ்டமாசித்திகளும் காயத்ரிதேவியை வழிபட்டால் கைகூடும் என்பது பல்லாயிரக்கணக்கானவர்களின் அனுபவம்.

காயத்ரி மந்திரத்தை மனதிற்குள் ஜபிப்பது 1000 பங்கு பலனைத் தரும்.உதடுகள் மட்டும் அசைந்தவாறு ஜபித்தால் 100 பங்குபலனும் சப்தமில்லாமல் ஜபித்தால் 10 பங்கு பலனும் தரும்.ஒவ்வொரு முறையும் 27 முறையாவது ஜபிப்பது நன்று.
இந்த காயத்ரி மந்திரத்தை ஏதாவது ஒரு அம்மன்(பத்ரகாளி அல்லது மாரி அல்லது வெயிலுகந்தம்மன் அல்லது வைஷ்ணவி அல்லது வராஹி அல்லது ஏதாவது ஒரு பெண் தெய்வம்) சன்னதியில் கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு அல்லது நின்றவாறு ஜபித்தால் அதனால் கிடைக்கும் பலன்களைச் சொல்ல இந்த சர்வர் பத்தாது.ஏன் இந்த உலகில் உள்ள மொத்தசர்வர்களும் பத்தாது.

என் அனுபவத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகாலத்தில் முதல் முறையாக ஒன்பதுமுறை ஜபித்த உடனே குளிரூட்டப்பட்ட காரில் பயணம் செய்யும் வாய்ப்பு உடனே கிடைத்தது.

யாக சாலையில் அமர்ந்து காயத்ரிமந்திரத்தை ஜபித்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும்.வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து 27 முறை உள்முகமாகக்கூற 27,000 முறைக்குச் சமம் என்பதால் சுத்தமான அறையில் அமர்ந்து மந்திரத்தைக்கூறி அனைத்து செல்வங்களையும் அடையலாம்.
தொடர்ந்து ஒருவன் அல்லது ஒருத்தி காயத்ரி மந்திரத்தை ஜபித்துவந்தால் அவன்/ள் பெரும் செல்வந்தராவது நிச்சயம்.

வீட்டில் அல்லது கோவிலில் காயத்ரிமந்திரத்தை பயபக்தியோடும் முழுமனதோடும் சொல்பவர்கள்(ஜபிப்பவர்கள்) நிச்சயம் பலன் பெறுவார்கள்.இந்த ஜபம் செய்ய தண்ணீர் மட்டும் போதுமானது.
ஒருவேளை தண்ணீருக்குப்பதிலாக இளநீர் வைத்துக்கொண்டு ஜபிப்பது மிக மிக நன்று.நீண்ட நேரம் மந்திர ஜபம் செய்துவிட்டு முடிவில் இளநீர் அருந்தினால் அந்த மந்திர அலைகள் நம் உடலிலேயே தங்கிவிடும் என பிரபல ஜோதிடரும் எனது ஆத்மார்த்த குருவுமாகிய மிஸ்டிக் செல்வம் அவர்கள் கூறியுள்ளார்.

மூதேவி எங்கேல்லாம் இருப்பாள்?

மூதேவி எங்கேல்லாம் இருப்பாள்?

அருட்திரு இராமலிங்க அடிகளார் தீபம் இல்லாத வீட்டில் இரவில் கூட தூங்கக்கூடாது என அருளியுள்ளார்.வீட்டில் விடி விளக்கு எரியச்செய்து சுத்தமான நறுமணம் கமழும் பத்தியை எரிய விட்டபின்பே தூங்கச் செல்லவேண்டும்.இல்லாவிட்டால் ஜேஷ்டாதேவி எனப்படும் மூதேவியின் தாக்குதல் இருக்கும்.சில நிறுவனங்கள்,கடைகள்,வீடுகள் இவைகளில் மதியம் 12 மணிக்கு எல்லாவிளக்குகளை ஏற்றிய பின்பும் கூட இருளடைந்திருக்கும்.அங்கேல்லாம் மூதேவி வாசம் செய்கிறாள் என அர்த்தம்.
துர்வாடை,அழுக்குத்துணிகள்,துன்பம்,புலம்பல்,அலங்கோலமாக ஆடுதல்(இன்றைய கல்லூரி மாணவிகள் விடுதிகளில் தினமும் செய்வது),எதிர்மறையான எண்ணங்கள்(அதான் அடுத்தவரை கெடுக்க நினைப்பது,தவறான ஆலோசனை தருவது)அடிக்கடி கொட்டாவி விடுதல்,தீராத மனக்கஷ்டம், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், இவை அனைத்தும் மூதேவியின் அடையாளங்களாகும்.இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மை வந்தடைந்துவிடும்.

மூதேவி வராமலிருக்க நாம் நமது வீட்டில்/அலுவலகத்தில்/கடைகளில் வைத்திருக்கவேண்டியவை:
தீபம், தூபம், உப்பு,மஞ்சள்,கண்ணாடி,பட்டு ஆடைகள்,தேங்காய்,பால்,வெண்ணெய்,மாவிலை,கோமியம்(பசுவின் சிறுநீர்)

சில ஆன்மீக குறிப்புகள்:

சில ஆன்மீக குறிப்புகள்:தினசரி வாழ்க்கைக்கு

· சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.
· தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக்கடமைகளைத் துவக்கவேண்டும்.அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர் அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.
· கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும்.எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது.
· ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.
· பாமாயில்(பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால்(சாப்பிட்டால்) நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.
· தேங்காய் தொடர்ந்து உண்டால்(அதாங்க இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும்.குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.
· நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு.வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.
· வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண் டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.
· இயேசு கிறிஸ்து விஸ்வகர்மா குலத்தில் அவதரித்தார்.
· நெற்றிச்சுட்டி அறிவுக்கண்ணை(மூன்றாவது கண் நம் எல்லோருக்கும் புருவமத்தியில் இருக்கிறது)த் திறக்கும்.காதணி நல்ல கண்பார்வையைத் தரும்.ஒட்டியாணம் துர் ஆவிகள் பெண்களின் தொப்புள் வழியாக உடலுக்குள் நுழையாமல் தடுக்கும்.
· காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.
· கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே(கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.
· நீங்கள் குரு உபதேசம் பெற விரும்புகிறீர்களா?
· சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நின்ற நாட்களிலும் கடகம் மற்றும் விருச்சிகம் லக்கினங்களிலும் குரு உபதேசம் பெற நன்று.
· கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும் நீலவெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை.தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.

உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டுமா?

உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டுமா?

இன்று தமிழ் உலகத்தின் முக்கியப்பிரச்னை: என் குழந்தை என் பேச்சைக் கேட்பதில்லை.என்ன செய்வதென்று தெரியவில்லை;
உங்களின் குழந்தையின் 3 வயது முதல் 12 வயது வரை
அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறீர்களா?

தகுந்த நபரிடம் உங்கள் குழந்தையை அறிமுகம் செய்திருக்கிறீர்களா?

சுய சிந்தனையை ஊக்குவிக்குறீர்களா?

இவற்றுக்கெல்லாம் இல்லை என்பதால்தான் 12 வயதிற்கு மேல் உங்கள் குழந்தை( ஆணும் சரி பெண்ணும் சரி) உங்கள் பேச்சைக் கேட்பது இல்லை.
தகவல் ஆதாரம்:விஜய பாரதம் தேசிய வார இதழ் 23.5.2008 பக்கம் 35.
எனக்கு எவ்வளவு வேலை இருக்குது தெரியுமா? என் பிள்ளையிடம் கூட மனம்விட்டுப் பேச நேரமில்லை; என்கிறீர்களா?
நீங்கள் சம்பாதிப்பது யாருக்காக?
உங்களது அடுத்த தலைமுறையை பொறுப்பாக வளர்க்கும் பொறுப்பு உங்களது குழந்தையின் ஆசிரியர்களுக்கு வெறும் 20% தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அதே சமயம் உங்களது பங்கு 80% என்பதை மறக்காதீர்கள்.
நீங்கள் அன்பு செலுத்தவும் மனம் விட்டுப்பேசவும் நேரம் ஒதுக்காத போது அந்த இடத்தைப்பிடிப்பது யார் தெரியுமா? காமவெறிபிடித்தவர்கள்,நயவஞ்சகம் நிறைந்தவர்கள், உங்கள் குடும்பத்தை நாசமாக்கிட நினைக்கும் உங்கள் உறவினர்கள்.

ஓம்- ஒரு அறிவியல் பூர்வமான நிரூபணம்


ஓம்- ஒரு அறிவியல் பூர்வமான நிரூபணம்

அடிப்படைக் குரல் ஒலிகள் மண்ணிலோ ஏதாவது ஒரு திரவத்திலோ அதிர்வடையச்செய்யும்போது, அவை சில அமைப்புக்களை உண்டாக்கும்.இந்த அமைப்பு இயல் அலையியல் (Cymatics) எனப்படும்.

இதனைக் கண்டறிந்து உலகிற்கு உணர்த்தியவர் சுவிஸ்நாட்டின் அறிஞர் டாக்டர் ஹான்ஸ்ஜென்னி(1904 முதல் 1972 வரை).ஒலியின் ஒவ்வொரு அதிர்வும் ஒரு தனித்த அமைப்புடையது.இயற்கை மூலம் இவை திரும்பத் திரும்ப நிகழ்கின்றன.

படைப்பின் அடிப்படை ஒலி ஓம் ஆகும்.

இப்பிரபஞ்சத்தில் எல்லாப் பொருளும் சக்தி அதிர்வால் ஆனவை.ஒவ்வொரு பொருளும் தனக்கென்று தனித்த அதிர்வெண்ணில் அதிர்கிறது.அதிரும் சக்தியை ஒளியாகக் காணலாம்.

இது மனிதர்களையும் உள்ளடக்கியது.நாம் எல்லோரும் அதிரும் ஒளி சக்தியே!!!

பிரபஞ்சத்திலும் பூமியிலும் சில புள்ளிகளில் குவிகிறது.இப்புள்ளிகளை அதிர்புள்ளிகள்(Vortex)என்பர்.

ஹான்ஸ்ஜென்னி ஓம்கார ஒலியை மணலில் அதிரச்செய்தார்.அவ்வாறு செய்த போது ஸ்ரீசக்கரவடிவத்தில் படல் கிடைத்தது.எனவே,ஓம் என்ற பிரணவ ஒலியின் வரிவடிவம்(ஸ்தூல வடிவம்)ஸ்ரீசக்கரம்.

ஆச்சரியமாக இருக்கிறதா?நமது ஆன்மீகம் எவ்வளவு அறிவியல் தன்மைகொண்டது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்।

உங்களது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டுமா?

உங்களது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டுமா?

கீழ்க்கண்ட கவுரி மந்திரத்தை அம்பாள் சன்னிதியில் வெள்ளிக்கிழமைதோறும் 18 முறை கிழக்கு நோக்கி அமர்ந்து மனதுக்கு ஜபித்துவரவும்.மிகச் சிறந்த வரன் அமையும்.

ஓம் காத்யாயனி மஹாமாயே ஸர்வயோகினி

யதீஸ்வரி நந்தகோப ஸீதம் தேவி

பதிம் மே குருதே நமஹ.

மகாபாரதமும் நிஜமே!மகாபாரதமும் நிஜமே!

ராமரால் கட்டப்பட்ட சேது பாலம் எப்படி 17,50,000 ஆண்டுகளாக இராமேசுவரம் அருகில் உள்ளதோ அதேபோல மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணபகவான் வாழ்ந்த அரசாண்ட துவாரகாபுரியும் 5200 ஆண்டுகளாக கடலுக்குள் மூழ்கிக் கிடக்கிறது.கலியுகம் துவங்கி இப்போது 5100 ஆண்டுகளாகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம் 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.ஆராய்ச்சிக்குழுவின் தலைவரான எஸ்.ஆர்.ராவ் தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒருபுத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.அந்தபுத்தகத்தின் பெயர் The Lost City of Dwarka.

புராண அல்லது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளிப்பட்டுள்ளது.இது மகாபாரதக்கதை நிஜத்தில் நிகழ்ந்த நிகழ்வு என்பதை துவாரகை இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது.
கி.மு.1500 ஆம் ஆண்டுவாக்கில் தற்போதைய துவாரகை மற்றும் அதன் அருகில் உள்ள பெட் துவாரகை ஆகிய பகுதிகளில் கிருஷ்ணன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இருக்கிறது.

கடற்கரையிலிருந்து சுமார் அரை மைல் தூரம் நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரம் இருந்திருக்கிறது.ஒவ்வொன்றும் 18 மீட்டர் அகலமுள்ள இரண்டு பிரதான சாலைகள்,ஒன்றுக்கொன்ரு தொடர்புடைய ஆறு குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்டமான கட்டடத் தொகுப்புகளைக் கொண்டு துவாரகை விளங்கியிருக்கிறது.

அந்நகரின் சுவர்கல் 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மைவாய்ந்ததாக இருக்கின்றன.கடலில் மூழ்கிய இந்நகரம், வடக்கு நோக்கி விரிவடைந்திருக்கிறது.இப்படி விரிவாக்கமான பகுதி ‘பெட் துவாரகை’ என்றழைக்கப்படுகிறது.இந்த தீவுப்பகுதி கிருஷ்ணர் மற்றும் அவர் மனைவியரான சத்யபாமா மற்றும் ஜாம்பவதிக்கான பொழுதுபோக்குதலமாகவும் அமைந்திருக்கிறது.மேலும் தென்னிந்தியாவின் ஒகமதி என்ற இடம் வரையிலும், கிழக்கு இந்தியாவில் பிந்தாரா பகுதியில் ‘பிந்த்ரா-தாரகா’என்ற இடத்தில் துர்வாசரின் குடில் இருந்ததாக மகாபாரதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
துவாரகையின் நிர்மாணம் பிரமிப்பூட்டக்கூடியது.மேற்குக் கடலிலிருந்து நிலம் பெறப்பட்டு நகரம் திட்டமிடுக் கட்டப்பட்டுள்ளது.

இது கோமதி நதிக்கரையில் அமைந்துள்ளது.த்வாரமதி,குசஸ்தலை என்றும் துவாரகை அழைக்கப்படது.எல்லா அடிப்படை வசதிகளும் நிறைந்த ஆறு பகுதிகள்,குடியிருப்புகள்,வியாபார ஸ்தலங்கள்,அகன்ற சாலைகள்,பொது இடங்கள், ‘சுதர்மா சபா’ என்ற பொதுக்கூட்ட அரங்கம் மற்றும் அழகான துறைமுகம் ஆகியவற்றைக்கொண்டு விளங்கியது துவாரகை.மகாபாரதயுத்தம் முடிந்து 36 ஆண்டுகள் கழித்து துவாரகையைக் கடல் கொண்டது.இதை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர், யாதவர்களை ப்ரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு(தற்போதைய சோம்நாத்) அழைத்துச் சென்று காத்தார்.

இந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பல் மூலமாக எல்லோரும் சென்று பார்ப்பதற்கு இந்திய கடல் அகழ்வாராய்ச்சிக்கழகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

குங்குமம் செய்வது எப்படி?

குங்குமம் செய்வது எப்படி?
குங்குமத்தில் கூட இன்று கலப்படம் வந்துவிட்டதால் நாமே நமது குலதெய்வம் அல்லது கோயில்களுக்கு குங்குமம் செய்துதரலாமே!
புண்ணியம் செய்தபலன் கிடைக்கும்.நம்மால் தயாரிக்கப்பட்ட குங்குமம் நமது பகுதி மக்கள் பயன்படுத்தின பெருமை நமக்கு கிடைக்கலாம் இல்லையா?

ஒரு வெள்ளிக்கிழமை குங்குமம் செய்யத் துவங்குவது நல்லது.இன்று 31.7.2009 வரலட்சுமி விரதம்.இது போன்ற சுபநாட்களில் துவங்குவது நன்று.தேய்பிறைநாட்களில் துவங்கக் கூடாது.

பெண்கள் மடிசார் கட்டியும், ஆண்கள் பஞ்சகச்சம் அணிந்து தயாரிப்பது நலம்.ஏனென்றால், பூமாதேவிக்கும் மர்மஸ்தானத்திற்கும் தொடர்பானால் முழுமையான இறைசக்தி கிடைக்காது.

புள்ளிகள் மற்றும் பூச்சிகள்தாக்குதல் இல்லாத எலுமிச்சை பழங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். கொடி எலுமிச்சை மிகவும் நன்று.

எலுமிச்சையை துர்க்கைகாயத்ரி மந்திரம் சொல்லிக்கொண்டு கீழிருந்து மேலாக நறுக்க வேண்டும்.நறுக்கிய எலுமிச்சையிலிருந்து சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும். இதற்கு எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகிக்கக்கூடாது. பித்தளை அல்லது மண் சட்டியை உபயோகிப்பது நல்லது.வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சைச் சாற்றில் சேர்க்கவேண்டும். நல்ல சிவப்பு நிறம் வேண்டுமானால் சிறிது அதிகமாகசேர்க்க வேண்டும்.

இக்கலவையினை நிழலில் காய வைக்கவேண்டும். இதுவே குங்குமப்பொடி.இதனைத் தயாரிக்கும்போது லலிதா சகஸ்ரநாமம் அல்லது தேவிமகாத்மியத்திலுள்ள துர்க்காஸ்ப்தசதி ஸ்லோகங்களைப் படித்துக் கொண்டே செய்யவேண்டும்.

குங்குமம் என்றாலே மங்களம் என்று பொருள்.மாங்கல்ய பலத்தை அதிகரிப்பதே குங்குமத்தின் பொருள்.

அம்பாளின் பரிபூரண அருளைப் பெறுவதற்காக ஆண்கள் குங்குமத்தை அணிந்து கொண்டு அம்பாளை குங்குமத்தால் அர்ச்சித்து பரிபூரணப்பலன்களைப் பெறுகின்றனர்.

இதை ஹயக்ரீவப் பெருமாள் அகத்தியருக்கு உபதேசித்தார்.

சுபநாட்களில் கோவில்களிலும்,வீடுகளிலும் குங்குமதானம் செய்பவர்கள் மாங்கல்யப் பிராப்தி அடைகிறார்கள்.திருமணத்தடை விலகும்.