Friday, April 1, 2011

வாழை மரம் குறிப்பிட்ட திசையில் குலை தள்ளினால் ஆகாது எனக் கூறுவது உண்மையா?

வாழை மரம் குறிப்பிட்ட திசையில் குலை தள்ளினால் ஆகாது எனக் கூறுவது உண்மையா? நமது முன்னோர்கள் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தனர். அதனால்தான் அவர்களுக்கு மரங்கள், பறவைகள் கூறும் சமிஞ்சைகளை அறிந்து கொள்ள முடிந்தது. பட்சி சாஸ்திரத்தைப் போல் வாழை மரம் குலை தள்ளுவதை வைத்தும் தங்களுக்கு ஏற்படப் போகும் பலன்களை அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.
நிலத்துடன் (வயல்வெளியில்) வீடு கட்டி வாழ்பவர்கள் தோட்டத்தில் வாழை எந்தப் பக்கம் குலை தள்ளினாலும் அதனால் அந்த வீட்டுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படாது. பொதுவாக வாழை மரம் வடதிசை நோக்கி குலை தள்ளுவது நல்லது. மண்ணின் தன்மை, அந்த வீட்டின் தன்மை ஆகியவற்றை அங்குள்ள செடி, கொடிகள் பிரதிபலிக்கும். அந்த வகையில் வாழையும் குறிப்பிட்ட திசையில் குலை தள்ளி அந்த வீட்டின் தன்மையை உணர்த்துகிறது. கிழக்குப் பக்கம் குலை தள்ளினாலும் பாதிப்பில்லை.
வடக்கு, கிழக்கு திசைகளில் வாழை மரம் குலை தள்ளாமல் போனாலும் கூட அந்த வீட்டில் உள்ளவர்கள் அதிகம் கவலையடையத் தேவையில்லை. தங்களது ஏற்படப் போகும் இன்னல்களை முன்கூட்டியே திட்டமிட்டு தவிர்த்துவிட்டால் போதும்.

No comments:

Post a Comment