Monday, June 27, 2011

ஆன்மிக கதைகள்»27- உன் சுகமே என் சுகம்

ராமகிருஷ்ண பரமஹம்சர் கடுமையான நோய்வாய்ப் பட்டிருந்தார். படுத்த படுக்கை...எழவே முடியவில்லை. படுக்கையிலேயே கழிவெல்லாம் போய்க்கொண்டிருந்தது. அதை ஒரு கலயத்தில் சேகரிப்பார் சசிபூஷணர் என்ற சீடர். ஒரு சமயம், அவர் கலயத்தைச் சுத்தம் செய்ய வெளியே சென்றார். தூரத்தில் இருந்து பார்த்தபோது, ராமகிருஷ்ணர் எழுந்து தட்டுத்தடுமாறி நடப்பதைக் கண்டார். சற்று தூரத்தில் கிடந்த போர்வையை எடுக்கத்தான் அவர் செல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார். ஓட்டமாக ஓடிவந்தார்.""குருவே! தங்களுக்கு போர்வையை எடுத்துக் கொடுக்காமல் போனது என் தவறு தான்! நான் வெளியே செல்லும் முன், "அந்தப் போர்வையை எடுத்து கொடுத்துவிட்டு போ' என தாங்களாவது என்னிடம் சொல்லியிருக்கலாமே! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்,'' என்றார்.
அப்போது, ராமகிருஷ்ணர் அவரிடம், ""சசி! நான் எனக்காக அந்தப் போர்வையை எடுக்க போகவில்லை. வெளியே எப்படி குளிர் அடிக்கிறது பார்த்தாயா! நீ என் கழிவு கலயத்தை கழுவச்சென்றாய். குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பாய். எனவே. உன் உடலில் போர்த்துவதற்காகவே அதை எடுக்கச் சென்றேன்,'' என்றார். பிறர் சுகத்தைத் தன் சுகமாகக் கொண்ட புண்ணியபுருஷர்கள் வாழ்ந்த இந்த பூமியில், நாமும்
வாழ்கிறோம் என்பது பெருமைக்குரிய விஷயம் தானே!

No comments:

Post a Comment