Thursday, February 9, 2012

பொறாமை கூடவே கூடாது-பெரியவர்

குழந்தைகளின் மனதில் சுலபத்தில் சேர்கிற அழுக்கு பொறாமை குணம். இன்னொரு பையன் படிப்பிலோ, விளையாட்டிலோ நம்மை விடக் கெட்டிக்காரனாக இருந்தால் அல்லது சில்க் சட்டை போட்டுக் கொண்டு வந்தால், காரில் வந்து இறங்கினால், முதல் கிளாஸில் சினிமாவுக்குப் போனால், உடனே அவனைப் பார்த்துப் பொறாமை உண்டாகி விடுகிறது. அது அழுக்கு மாதிரி மனத்தை ரொம்பவும் கெடுத்துவிடும். பலவிதமான சண்டைகளில் நம்மைக் கொண்டு தள்ளிவிடும். அவனைச் சண்டை போட்டுக் கொண்டு ஜயிக்க முடியவில்லை என்றால், கோள் சொல்லிக் கெடுக்கத் தோன்றும். இம்மாதிரி ஓர் அழுக்கில் இருந்து இன்னோர் அழுக்கு என்று வளர்ந்து கொண்டே போகும். இந்த அழுக்குகள் எண்ணங்களால் படிப்பிலே கவனம் குறையும். விளையாட்டில் உற்சாகம் குன்றும். இவ்வாறு அறிவு, உடம்பு இரண்டையும் பாழாக்கிவிடும். பொறாமையால், நம்மை நாமே கெடுத்துக் கொள்வதைத் தவிர, வேறு எந்தப் பயனும் இல்லை. ஒன்றே ஒன்றில் மட்டும் தான் போட்டியிருக்க வேண்டும். ஆசையுடன், ஊக்கமாகப் படிப்பதில் போட்டி போட வேண்டும். அறிவாளியாக, நல்லவனாக இருப்பதற்குப் போட்டி போடலாமே தவிர, பொறாமை கூடவே கூடாது. விளையாட்டிலும் அப்படியே! 

No comments:

Post a Comment