Saturday, February 18, 2012

ஆன்மீக விடய ங்கள்




திருஅண்ணாமலை கிரிவலம் செல்லும் முறைகளில் மட்டும் ஒரு லட்சத்து எட்டு விதமான முறைகள் இருக்கின்றன.இதில் ஒரு சில மட்டுமே நமது முன் ஜன்மபுண்ணியத்துக்கு ஏற்ப நமக்குத் தெரியும்.

திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாளில் கிரிவலம் சென்றால்,மற்ற நாட்களில் கிரிவலம் செல்லும் நாளை விட அதிகமான புண்ணியம் கிடைக்கும்.அப்படி கிரிவலம் செல்லும் போது,அன்னதானம் செய்தால்,அதை விட பெரும் பேறு வேறில்லை; (சிவபெருமானின் ஜன்ம நட்சத்திரம் திருவாதிரை என்பதை இப்போது நினைவில் கொள்ளவும்)

துவாதசி திதியன்று ஒருவன் அண்ணாமலையில் ஒரு நாளுக்கு அன்னதானம் செய்தால்,அவன் தனது வாழ்நாள் முழுக்க அன்னதானம் செய்த புண்ணியத்தை அடைகிறான்.மேலும்,அவன் மீண்டும் பிறவாத நிலையை அடைகிறான் என அருணாச்சல புராணம் சொல்லுகிறது.ஆக,துவாதசி திதியன்று கிரிவலம் சென்றவாறு அன்னதானம் செய்தால்?

கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரியன்று இரவு 7 மணியளவில் குபேரலிங்கத்திலிருந்து கிரிவலம் சென்றால் குபேரபகவானது அருளும் சேர்ந்து நமக்குக் கிட்டும்.இதனால்,செல்வச் செழிப்பும் நம்மை வந்தடையும்.


ஒரு முக்கிய வேலையாக நாம் நமது இடத்திலிருந்து புறப்படுகிறோம்.வீட்டின் வாசலில்/வாசலுக்கு வெளியே முதல் காலடி எடுத்து வைக்கும் போது,நமது மூக்கில் எந்த துவாரத்திலிருந்து மட்டும் சுவாசம் அப்போது வருகிறதோ,அந்த காலை எடுத்துவைத்து புறப்பட்டால்,காரிய வெற்றி உண்டாகும்.
உதாரணமாக,நான் ஒரு வேலைக்கு நேர்காணலுக்கு இன்று காலையில் எனது வீட்டிலிருந்து புறப்படுகிறேன்.வாசலுக்கருகில் வந்ததும்,எனது ஆள்காட்டிவிரலை வைத்து,எனது மூக்குத்துவாரங்கள் ஒவ்வொன்றிலும் வைத்துப் பார்க்கிறேன்.அப்போது,எனது இடது மூக்குத் துவாரம் வழியாக சுவாசம் நடக்கிறது.நான் எனது வீட்டின் வாசலில் வைக்கும் முதல் அடி,எனது இடது காலை வைத்து! எனக்கு வேலை கிடைத்துவிடுகிறது.
(சரக்கலையின் அடிப்படை ரகசியம் இதுதான்)

பெண்களின் மாத விலக்கு சமயத்தில் உருவாகும் கழிவு இரும்பையே உருக்கும் என எனது ஜோதிட குருநாதர்களில் ஒருவர் சொன்னார்.இதை முறைப்படி ஆராய்ச்சி செய்ய முடியவில்லை;உங்களில் யாராவது இதை இதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து எமக்கு மின்னஞ்சல் அனுப்பினால் நல்லது.

கி.பி.1971 ஆம் ஆண்டில் திருநெல்வேலியிலிருந்து ஒரு புத்தகம் அகமதியா முஸ்லீம்களால் வெளியிடப்பட்டது.அந்த புத்தகத்தின் பெயர் ஏசுவின் மரணம் காஷ்மீரிலே! இதில் கிறிஸ்தவ மதத்தின் ஸ்தாபகர் ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட நிஜங்களை விரிவாகவும்,உலகம் முழுக்கவும் இருக்கும் நாடுகளின் ரகசிய ஆவணங்களினை ஆராய்ந்தும் எழுதப்பட்டதாம்.மொத்தம் ஆயிரம் பிரதிகள் வெளியிடப்பட்டதாம்.உங்களில் யாரிடமாவது இருக்குமா?


வாழ்க வளமுடன் என்பதும் ஒருவித மந்திரமே! இதை அடிக்கடி நினைத்தாலோ,பேசினாலோ நமது நரம்புகளில் இறுக்கம் குறைகிறது.

உங்களது பாவங்கள்,உங்களது முன்னோர்களின் பாவங்கள் தீர ஒரு சுலப வழி இருப்பதாக போன வாரம் எனது குருநாதர்களில் ஒருவர் உபதேசம் செய்தார்.
அது என்னவென்றால்,நீங்கள் எந்த ராசி,லக்னம்,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி.ஒவ்வொரு பவுர்ணமியன்றும் உங்கள் தெரு/வீட்டருகில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றுக்கொண்டிருக்கும்.
அங்கே,பவுர்ணமிபூஜை இரவு பத்துமணிக்குமேல் நள்ளிரவு இரண்டுமணிக்குள் நடைபெறவேண்டும் என்பது மட்டும் கட்டாயம்.(பெரும்பாலான இடங்களில் இரவு ஒன்பது மணிக்கே பவுர்ணமிபூஜையை முடித்துவிடுகிறார்கள்)அப்படி நடக்கும் இடங்களுக்குச் சென்று அந்த பவுர்ணமிபூஜை நடைபெறும்போது,காயத்ரி மந்திரத்தை கிழக்கு நோக்கி,அம்மன் சன்னிதியில் அமர்ந்து பவுர்ணமி பூஜை முடியும் வரை ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.இப்படி 12 பவுர்ணமிகளுக்கு ஜபித்தால் போதும்.பெரும்பாலான பாவங்கள் தீர்ந்துவிடும்.

ராகு மகாதிசை அல்லது ஜன்ம ராகு நடப்பவர்களுக்கு மட்டுமே மாந்திரீக பாதிப்பை வேறு ஒருவரால் உருவாக்கமுடியும்.வேறு எப்போதும் எல்லோருக்கும் மாந்திரீகம் வைக்க முடியாது.தற்போது,தனுசு ராசியில் ராகு பகவான் ஆகஸ்டு 2011 வரை இருக்கிறார்.இதனால்,தனுசு ராசிக்காரர்கள் மாந்திரீகபாதிப்பிற்கு ஆளாக வாய்ப்பிருக்கிறது.

இதுதவிர,மாந்திரீகம் முழுமையாகத் தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றனர்.கம்பளத்து நாயக்கர்கள்,புரதை வண்ணான் மற்றும் சில ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு மாந்திரீகம் கைகூடிவரும்.முழுமையான மாந்திரீக வித்தகர்கள் கேரளமாநிலத்தில் வாழ்கின்றனர்.


மாந்திரீகத்தை ஒருவர் மீது ஏவுவதற்கு காளியே துணை செய்கிறாள்.அதே மாந்திரீகப் பாதிப்பை நீக்கவும் காளியே துணை புரிகிறாள்.எனவே,ராகு மகாதிசை நடப்பவர்கள் மட்டுமல்ல;யார் வேண்டுமானாலும் காளியை தினசரி வழிபட்டுவருவது நல்லது;
அல்லது குலதெய்வ வழிபாடு செய்வதன் மூலமாக மாந்திரீக பாதிப்பிலிருந்து முழுமையாகத் தப்பிக்கலாம்.

ஜோதிடம் கற்பதற்கே முன்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.வெறும் ஒன்பது கிரகங்கள்,27 நட்சத்திரங்கள்,12 ராசிகள் தான் என பெரும்பாலானவர்கள் எண்ணுகிறார்கள்.அதையும் கடந்து, அதில் ஏராளமான சூட்சுமங்கள் ஒளிந்திருக்கின்றன.அவற்றினை நேரடியாக உணரும்போது நாம் திகைத்துப்போவோம்.

No comments:

Post a Comment