Saturday, February 4, 2012

சனீஸ்வரர்

சனீஸ்வரர் பொதுவாக ஒரு ராசியில் இரண்டே கால் முதல் இரண்டரை ஆண்டுகள் வரையே இருப்பார். ஆனால், இம்முறை அவருக்கு பிடித்த துலாம் வீட்டில் மூன்றாண்டுகள் வாசம் செய்ய உள்ளார். 2011 டிசம்பர் 21 முதல், 2014 டிசம்பர் 16 வரை இவர் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். இதில் ஆறுமாத காலம் (2012 மார்ச் 26 முதல் செப்.10 வரை) வக்ரமாகி, மீண்டும் முந்தைய ராசிக்கே செல்வார். இந்த காலத்தில் நற்பலன் பெறுபவர்கள் கவனமாகவும், கெடுபலன் பெறுபவர்கள் மூச்சு விடுவதற்கும் வாய்ப்பு கொடுப்பார். இந்த காலகட்டத்தை அனைத்து ராசியினரும் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்காக, ஒருவருக்கு பணக்கஷ்டம் என்றால், இந்த காலகட்டத்தில் சுதாரிப்பாக இருந்து, எதிர்காலத்தில் கஷ்டம் வரும் போது பயன்படுத்தும் அளவுக்கு சேமித்துக் கொள்ள வேண்டும். பணம் தாராளமாக கிடைக்கிறதே என செலவழித்து விட்டால், சிரமம் தான்.



சாப்பாடு போடுபவர்
ஒரு மனிதனின் வாழ்நாளை நிர்ணயம் செய்வதும், அவரவர் தகுதிக்கேற்ப சாப்பாடை வழங்குபவரும் சனி பகவானே. எனவே அவரை ஆயுள்காரகன் என்றும், ஜீவனகாரகன் என்றும் சொல்வர். அவர் தர்மப்பிரபு. தர்மத்துக்கு மிக மிக கட்டுப்படுபவர். பூஜைக்குச் சென்ற நளன், தன் காலில் சரியாக தண்ணீர் ஊற்றிக் கழுவவில்லை என்பதைக் கூட அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பூஜா தர்மத்தை மீறியதாக ஏழரை ஆண்டுகள், அவனது குடும்பத்தையே பாடாய் படுத்தியவர். எல்லாம் "பர்பெக்ட்'ஆக இருக்க வேண்டும் என்று அதிகம் எதிர்பார்ப்பார். இது சற்று தவறினாலும், அவரது கோபக்கனலுக்கு ஆளாகி விடுவோம். அவரவர் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் சாப்பாடு கிடைக்கும். அதுபோல, ஆயுளை நிர்ணயம் செய்பவராகவும் திகழ்கிறார். .


திருநள்ளாறுக்கும் சனிக்கும் என்ன தொடர்பு
பூமத்திய ரேகையில் சூரியனுடைய கதிர்வீச்சு எப்படி அதிகமாகவும், அருகிலும் இருக்கிறதோ, அதேபோல் சனி கிரகத்தினுடைய நீள் வட்ட பாதையில் உச்சமான கதிர்வீச்சு இத்தலத்தில் அதிகம் என்பது விஞ்ஞான உண்மை. இதனை ஞான திருஷ்டியில் உணர்ந்த முன்னோர் சனிபகவானுக்கு இத்தலத்தில் கோயில் அமைத்தார் கள். சனி கிரகம் தினமும் தன் கதிர்களை இப்பகுதியில் வாரி இறைக்கிறது. அதனால் ஒருநாள் இங்கு தங்கினால் சனிக்கிரகத்தின் கதிர்வீச்சுக்கள் நம் உடலில் பட்டு நமக்கு நன்மையான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். குறைந்தபட்சம் ஒரு இரவு மட்டுமாவது தங்கி காலையில் சனி பகவானை வழிபடுவது நல்ல பயன் தரும். 

No comments:

Post a Comment